Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marumagal
Marumagal
Marumagal
Ebook118 pages1 hour

Marumagal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்று மருமகள்களை கொண்ட அழகிய வீட்டில் இரண்டாவது மருமகளின் குரூர புத்தியால் புதிதாய் திருமணமாகி வரும் மூன்றாவது மருமகளின் வாழ்க்கையை சீரழிக்க நடக்கும் சம்பவங்கள்.... அனைத்தை தடங்களையும் மீறி அந்த வீட்டின் மருகளாக நிலைத்து இருந்தாரா தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்....

Languageதமிழ்
Release dateAug 9, 2022
ISBN6580155608698
Marumagal

Read more from Lakshmi

Related to Marumagal

Related ebooks

Reviews for Marumagal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marumagal - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மருமகள்

    Marumagal

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    வாயிற்படியில் விரிவாகப் பாவப்பட்டிருந்த சிமெண்டுத் தரைமீது செம்மண் கரைகட்டிய பெரிய மாக்கோலம். வாயிற்படி முகப்பில் மாவிலைத் தோரணம் என்ற அலங்காரத்தில் அபிராமி இல்லம், அந்த வீட்டின் மூன்றாவது மருமகளுக்கு வரவேற்பு தரத் தயாராகி விட்டிருந்தது.

    முன்னறை இருக்கையில் இருந்து எழுந்த சரவணன், சன்னல் அருகே வந்தார். திரைச் சீலையை மெல்ல விலக்கி முன்பக்கம் பார்த்தார்.

    கூர்க்கா கேட்டை அகலமாகத் திறந்து வைக்க பரபரப்பதைக் கண்டார்.

    அவர்கள் வீட்டு அம்பாசிடர் மலர் மாலை அலங்காரத்துடன் தேன் நிலவுக்கு போயிருந்த மணமக்களை சுமந்து கொண்டு விமான நிலையத்தில் இருந்து வந்து நின்றது.

    சமையலறையில் மேற்பார்வை செய்து கொண்டிருந்த கமலா ஈரமாகிவிட்டிருந்த தன் கைகளைத் துவாலையில் அவசரமாகத் துடைத்துக் கொண்டாள். பூஜை அறையில் தயாராக இருந்த குத்துவிளக்கின் திரியை நிமிண்டி சரி செய்து விட்டு, ஒரு கத்தை ஊதுபத்தியைக் கொளுத்தி, வெண்கல பானையின் தலையில் சொருகிவிட்டு வெளியே ஓடி வந்தாள்.

    அனு ஆரத்தி தட்டை எடுத்துகிட்டு வாசல் பக்கம் வா, அவங்கள்ளாம் வந்துட்டாங்க! ஓங்கி குரல் கொடுத்தாள்.

    கைகழுவும் பீங்கான் மேல் சுவற்றில் தொங்கிய கண்ணாடியில், கடைசி முறையாகத் தனது ஒப்பனையை சீராக்கிக் கொண்டு நின்ற அனு, கோபத்துடன் பற்களைக் கடித்தாள்.

    தான்தான் வீட்டுக்கே ராணி என்று வந்தவளுக்குக் காட்ட வேண்டாமா? அதான் காலையிலிருந்து அதிகாரம் தூள் பறக்குது! தனக்குள் முணுமுணுத்தபடி முக்காலி மீது தயாராக வைக்கப்பட்டிருந்த ஆரத்தித் தட்டை எடுத்துக் கொண்டு வாயில் பக்கம் வந்தாள்.

    ஒரு வெற்றிலைமீது கற்பூரத்தைக் கொளுத்தி, ஆரத்தி நீரில் மிதக்கவிட்ட கமலா, உள்ளே வர முயன்ற புதுமணத் தம்பதியரை சற்று நிற்க வைத்து, ஆரத்தியைச் சுற்றி மஞ்சள் நீரை விரலால் தொட்டு புது மருமகள் நெற்றியிலும் தன் மைத்துனன் நெற்றியிலும் பொட்டு வைத்து திருஷ்டி கழித்தாள்.

    வலது காலை உள்ளே வச்சு வாம்மா! பற்கள் அனைத்தும் தெரிய மெல்லச் சிரித்தபடி உத்தரவு கொடுத்தாள்.

    அலங்காரத்தில் கழுத்தை மறைத்த பூமாலைகளுடன், மணவறையிலிருந்த போது சுகந்தியின் முழு அழகையும் அனுவால் கண்டு கொள்ள இயலவில்லை. மேலும் மூத்த மருமகள் கமலா அவளை நாள் முழுவதும் வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.

    அனு! வந்தவங்களை கவனி. எல்லாருக்கும் சாதம் வந்ததான்னு பெண்கள் பந்தியை கவனிச்சுட்டு வா. வெற்றிலைபாக்குத் தட்டை எடுத்து மேசை மேலே எல்லார் கண்களிலும் படும்படி வை. வரவேற்க வந்தவங்க எல்லாருக்கும் மறக்காமல் தேங்காய் பழம் கொடுத்து அனுப்பு. சின்னத் தவறைக் கூடப் பின்னாலே பெரியதாக்கி பேசிடுவாங்க என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள் கமலா. அதனால், அந்த அமர்க்களத்தில் மணப்பெண்ணைத் தூண்டித் துருவிப் பார்த்து அவளால் தன்னுள் கணிப்புச் செய்து கொள்ள இயலவில்லை.

    பட்டுச் சேலையும், கழுத்துக் கொள்ளாத நகையும், தலை அலங்காரமும், பூமாலையுமாக குழல் விளக்கிலே எல்லா மணப்பெண்களும் அழகாகத்தான் தெரிவாங்க. பகல் வேளையிலே, சாதாரண சேலையிலே, ஒப்பனை இல்லாதபோது தானே உண்மை வேஷம் தெரியும் என்ற அசட்டை அவளுக்கு.

    இதுவரை அந்த வீட்டில் அவள்தான் அழகான மருமகளாக வளைய வந்து கொண்டிருந்தாள்.

    மூத்தவள் கமலா மாநிறம். கொஞ்சம் லேசாகத் தடித்து விட்ட உடல்வாகு. எஸ்.எஸ்.எல்.சி. வரைகூட எட்டிப் பார்க்காதவள். ஒப்பனைகள் செய்து கொண்டு மினுக்கத் தெரியாத பத்தாம்பசலி.

    இளைய மருமகளாக அந்த வீட்டுக்குள் அனு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவளுக்கு தன் அழகைப்பற்றி உள்ளூர ரொம்பவே பெருமை.

    பெரிய மனிதர் வீட்டுப்பெண் என்ற அகந்தையோடு தான் ஒரு பட்டதாரி என்ற கர்வம் வேறு.

    நகத்தில் அழுக்குப் பட்டுவிடக் கூடாது என்று, வீட்டு வேலைகளைச் செய்ய அஞ்சி, வேலைக்காரர்களை ஏவியபடி மேற்பார்வை செய்துகொண்டு அவள் வளைய வருவது வழக்கம். வேலைக்காரர்களை நம்பிக்கிட்டு நாம இருக்கக் கூடாது. சமையலறையில் சேலைத் தலைப்பை இழுத்துக் கட்டிக்கிட்டு நாமும் ஒரு கைகொடுத்து உதவத் தெரிஞ்சுக்கணும். நம்ப மாமனாருக்கு வீட்டுப் பெண்கள் சோம்பேறியாகக் காரில் கடைத் தெருவுக்குப் போவதும், சிநேகிதிகளுடன் தொலைபேசியில் மணிக்கணக்கா வம்பு பேசுவதும் பிடிக்காத சங்கதிகள் அவர் ரொம்ப கோபக்காரர். மாமியார் மறைவுக்குப் பிறகு இந்த வீட்டின் நிர்வாகத்திலே அவர் ரொம்பவும் கருத்தா இருக்கார் அனு மருமகளாக அங்கு வந்த அன்றே ஓரகத்தி உபதேசித்து விட்டிருந்தாள்.

    வீட்டின் மூத்த மருமகள் என்ற மதிப்பை சரவணன் அவளுக்குப் பூரணமாகத் தந்துவிட்டிருந்தார்.

    இரும்புப் பெட்டி சாவிக்கொத்து அவளது இடுப்பில் தொங்கியது.

    வீட்டு நிர்வாகத்திற்கு ஆலோசனை கொடுப்பவர் மாமனார்தான் என்றாலும், அதிகாரம் கமலாவின் கையிலிருந்ததை அனு வெறுத்தாள். ஆனால், வெளிப் பார்வைக்கு ஓரகத்தியுடன் ஒத்துப் போவதுபோல நடித்துக் கொண்டு இருந்தாள். உள்ளூரக் கமலாமீது மட்டற்ற கசப்பு; பொறாமை.

    அதே நேரம், தன் முன்பு அவளது அதிகாரம் செல்லுபடியாகாது என்று மனதிற்குள் ஒரு குரூரமான திருப்தி.

    தனது அழகையும், படிப்பையும் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த அனுவுக்கு ஒரு பெரும் திகைப்பு.

    மணவறையில் புகைமண்டலத்திலே மாலைகளுடன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த சுகந்தியா இவள்.

    வலது காலை உள்ளே எடுத்து வைத்து கணவனுடன் வீட்டுக்குள் புகுந்த புது மருமகளைப் பார்த்துப் பிரமித்துப் போனாள்.

    கணவனை விட உயரத்தில் சிறிது குறைவாக, கொடி போன்ற தோற்றத்தில் தங்க நிறத்திலே... மேனியில் துவண்ட அமெரிக்கன் நைலான் புடவையில்... கனவுக் கன்னிபோல பார்க்க வெகு அழகாக இருந்தாள் சுகந்தி.

    எல்லாரைக் காட்டிலும், வீட்டுக்கு வந்திருக்கும் புது மருமகள்தான் ரொம்ப அழகு. பச்சைக்கிளிபோல ஒரு பெண்ணை சின்னய்யா பிடிச்சுட்டாரே!

    இது சின்ன ஐயா பிடிச்ச கிளி இல்லேப்பா... பெரியவர் பல இடங்களில், பெண்களைப்பற்றி விசாரித்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து, குல தெய்வத்துக்கிட்ட பூ கட்டி வைச்சு தேர்ந்து எடுத்த மருமகள். சின்ன அய்யாவின் யோகம், அப்படி ஒரு பச்சைக் கிளியா பெண்டாட்டி அமைஞ்சி போச்சு

    தன் பின்னால் நின்ற வேலையாட்கள் கிசுகிசுத்ததை கேட்ட அனு, கோபத்தில் பொங்கிப்

    Enjoying the preview?
    Page 1 of 1