Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malathi Oru Athirchi
Malathi Oru Athirchi
Malathi Oru Athirchi
Ebook64 pages25 minutes

Malathi Oru Athirchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வயலின் இசை மீது ஆர்வம் கொண்டவள் மாலதி. அனைவருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவள். இவளின் இக்குணத்தை சங்கரன் குடும்பமும் சரவணன் குடும்பமும் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள்? அவர்களுக்கு மாலதி கொடுத்த அதிர்ச்சி என்ன? என வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580155609625
Malathi Oru Athirchi

Read more from Lakshmi

Related to Malathi Oru Athirchi

Related ebooks

Reviews for Malathi Oru Athirchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malathi Oru Athirchi - Lakshmi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மாலதி ஒரு அதிர்ச்சி

    Malathi Oru Athirchi

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    கொஞ்சம் இப்படித் திரும்பிப் படுக்குறீங்களா? அந்தக் குரல் கிணற்றுக்குள்ளிருப்பது போல் கேட்டது. கஞ்சியில் மொட மொடத்த சீருடை தரித்த நர்ஸின் நெஞ்சின்மீது, தான் சாய்ந்திருப்பதை உணர்ந்தாள் மாலதி. மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள். சங்கிலித் தொடராக நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன.

    ஆமாம்! அது ஒரு பிரபல தனியார் மருத்துவமனை. அதில் அவள் அந்த ஏ.சி. அறையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குமேல் ஆகிவிட்டனவே. நீலமலர்கள் போல் மிருதுவாக விழித்து மென்மையாகச் சிரித்த அந்த நர்ஸ்கூட அவளுக்குப் பழக்கமாகிவிட்டிருந்தாள்.

    இன்னிக்கு என்ன கிழமை... இப்ப மணி என்ன? மெல்ல விசாரித்தாள்.

    செவ்வாய்க்கிழமை காலை ஆறுமணி ஐம்பத்தைந்து நிமிஷம். நீங்கள் ராத்திரி நல்லாத் தூங்கினீங்களா? கேட்டபடி அவளை மெல்லக் கட்டிலின் ஓரத்தில் நகர்த்தினாள் நர்ஸ்.

    டாக்டர் வர ஒரு மணி நேரமிருக்கு, அதுக்குள்ளே நீங்க பல் துலக்கி உடம்பு துடைச்சுக்கிடுங்க. சுத்தமா வேற உடை மாத்திக்கிட்டு ரெடியாயிடனும். கொஞ்சம் வாயைத் திறக்கிறீங்களா?

    அந்த பிரஷ்ஷை என்கிட்டயே குடு. என்னால் தேச்சுக்க முடியும் மாலதி பிரஷ்ஷை வாங்கிக் கொண்டாள். சிரமத்துடன் மெல்ல நிமிர்ந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள். அந்த அறை குளிர்சாதன வசதியுடைய தனிப்பட்ட, விஷேச அறை. அறை வாடகை, நர்ஸ் கவனிப்பு, டாக்டர் பீஸ், ஸ்பெஷலிஸ்டுகள் வந்து பார்க்க மருத்துவச் செலவு என எதைப் பற்றியுமே அவள் கவலைப்படவில்லை. அவளது வசதிகளுக்கு மிஞ்சித்தானே பணம்’ என்ற விரக்தி மனப்பான்மை மனதில்.

    பல் துலக்கியதும், நர்ஸ் அவளது உடலை மெல்ல வெந்நீர் பிழிந்த துண்டால் துடைத்து விட்டாள். வெள்ளைத் துவாலையால் ஈரம் போக ஒற்றி எடுத்து வாசனைப் பவுடர் பூசி அலமாரியில் அவள் பெட்டியிலிருந்த நைட் கவுனை எடுத்துப் போட்டுவிட்டாள்.

    இந்த இரவு ஆடையிலேயே படுத்திருங்க, புடவை தேவையில்லை. இப்ப ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்க்கப்போறார். கொஞ்சம் காப்பியும், இந்த பிஸ்கட்டும் சாப்பிடுங்கள் உபசரித்தபடி தலையணைகளை அடுக்கி வைத்து அவளை மெல்ல படுக்கைமீது சாய்த்து அமர்த்தினாள் நர்ஸ்.

    'காப்பி, பிஸ்கட்..." மாலதிக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

    வேண்டாம் நர்ஸ் எங்க வீட்டு சமையல்காரம்மாவை கொஞ்சம் மோர்க்கூழ் கொண்டுவரச் சொல்லியிருக்கேன். அத்தோட கொஞ்சம் காரமா மிளகாய்த் துவையல் எடுத்துவரச் சொல்லியிருக்கேன்.

    டாக்டர் உத்திரவு இல்லாமல் கண்டதை வரவழைச்சு சாப்பிடக் கூடாதம்மா

    "உனக்குத் தெரியாதா. நேத்து டாக்டரே சொல்லிட்டாரே, எது வேணுமானாலும் நான் சாப்பிடலாம்னு. ஆனால் எதையுந்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1