Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siragu Mulaitha Pinnar
Siragu Mulaitha Pinnar
Siragu Mulaitha Pinnar
Ebook179 pages1 hour

Siragu Mulaitha Pinnar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் தினந்தோறும் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அதில் சிலவற்றிற்கு தீர்வு காண்கிறோம், சிலவற்றிற்கு காலம்தான் பதில் சொல்லணும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை கடக்கின்றோம். அதுபோல் அமராவிற்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதையும், இதுபோல் இன்னும் சில சிறுகதைகளையும் வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580155608893
Siragu Mulaitha Pinnar

Read more from Lakshmi

Related to Siragu Mulaitha Pinnar

Related ebooks

Reviews for Siragu Mulaitha Pinnar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siragu Mulaitha Pinnar - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிறகு முளைத்த பின்னர்

    (சிறுகதைகள்)

    Siragu Mulaitha Pinnar

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    1. சிறகு முளைத்த பின்னர்

    2. அம்...மா...

    3. ஆயிரங் காலத்துப் பயிர்

    4. ஆயிரம் மலர்கள்

    5. அடுத்த வீட்டுப் பெண்

    6. ஆடிக்கூழ்

    7. அவளும் ஒரு தாய்

    8. சந்தேகம் என்பது

    9. இது தேவையா?

    10. அன்பைத் தேடி

    11. இருதலைப் பட்சம்!

    12. ஒருத்திக்கு ஒருவன்

    13. தங்கக் குடம்

    14. பிரச்சனைகள் ஓய்வதில்லை

    15. கவர்ச்சிக் கன்னி

    16. இந்த அம்மா!

    1. சிறகு முளைத்த பின்னர்

    தபால்காரர் கையில் வெளிநாட்டு விமானத் தபாலைக் கண்டதும் நான் கைவேலையைப் போட்டுவிட்டு வாயிலுக்கு விரைந்தேன்.

    குவைத்திலிருந்து என் கணவர் கடிதம் எழுதியிருந்தார். இரண்டு மாத லீவில் வரப்போவதாகவும்... வரும்பொழுது எனக்கு என்ன வாங்கி வரவேண்டும் என்றும் கேட்டு எழுதியிருந்த கடிதத்தைப் பலமுறை மகிழ்ச்சியுடன் படித்துக்கொண்டு வாயிலிலேயே நின்றுவிட்டேன்.

    கல்யாணமாகி சில மாதங்களுக்குப் பின்னர் என்னைப் பிரிந்து போனவர்... இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரப்போகிறார்! எனக்கு கட்டுக்கொள்ளாத மகிழ்ச்சி.

    என்ன அக்கா? அங்கேயே நின்னுட்டீங்க? கோயிலுக்குப் போயிருக்கிற மாமனார் - மாமியார் திரும்பி விடுவாங்க... இன்னும் சமையல் தயாராகலை? வேடிக்கையாகக் கேட்டபடி என் ஓரகத்தி ஷீலா... சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

    ஷீலாவுக்கும் என் மைத்துனருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அதற்குக்கூட என் கணவரால் வர இயலவில்லை. தன் தம்பிக்கும் என் கணவர் குவைத்திலேயே வேலை தேடிக்கொடுத்துவிட்டார். அதனால் தேன்நிலவு முடிந்தவுடன் என் மைத்துனர் ஷீலாவை எங்களுடன் விட்டுவிட்டு அண்ணனுடன் கலந்து வசிக்க அரபு நாட்டுக்குப் பயணமாகிவிட்டார்.

    படிப்பும் திறமையும் உள்ள நம்ப பசங்களுக்கு நம் நாட்டிலேயே நல்ல வேலைவாய்ப்பு இருந்தா... பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிக்க விட்டுவிட்டு இப்படி வெளிநாடுகளுக்குபோய் பரதேசிகளாட்டம் பாடுபடுவான்களா?... எப்போ நம் நாட்டில் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியப் போகுதோ தெரியவில்லை... என் மாமனார் நித்தமும் புலம்பிக் கொண்டிருந்தார்...

    தமது வயது காலத்தில் கண்ணின் கருமணிகளைப் போன்ற தமது இரு மகன்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு... அவர்கள் நல்லபடியாகத் திரும்பிவர ஊரில் உள்ள கோயில்களையெல்லாம் சுத்திக் கொண்டிருக்கிறோமே என்ற அங்கலாய்ப்பு என் மாமியாருக்கு.

    நம்ப ஊர்லியே ஒரு வேலை தேடிக்கிட்டு கஞ்சியோ கூழோ குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிடறதை விட்டுட்டு என்னவோ வெளிதேசத்து வேலைமேலே மோகம்... காசு சம்பாதிக்கலாம். ஆனால் காலத்தை சம்பாதிக்க முடியாதே? எங்கள் காதுபட அடிக்கடி முணுமுணுத்தார் மாமியார்.

    எனக்கும் என் கணவரின் பிரிவு... தாளமாட்டாத துயரமாகத்தானிருந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் என் தனிமையின் கொடுமையை குறிப்பிட்டுத்தான் எழுதிக் கொண்டிருந்தேன்.

    கொஞ்சம் பொறுத்துக்கோ. பிறகு வீடும், காரும் சொந்த நிலமும், வங்கியில் பணமுமாக நாம் சுகமாக வாழலாம்...! அடிக்கடி தைரியம் சொல்லி என் கணவர் எழுதிக்கொண்டிருந்தார்... நானும் பொறுமையாகத்தான் காத்திருந்தேன். இப்போது அவர் கடிதத்தைப் படித்துவிட்டு நான் மகிழ்ச்சியில் திளைத்துப்போனேன்...

    என் வீட்டுக்காரர்... இன்னும் இரண்டு வாரத்தில் இங்கே வரப்போறார்... இரண்டுமாச லீவில் வந்து தங்கப்போகிறார்... ஆர்ப்பரித்தேன். என் ஓரகத்தியின் முகம் வெளிறடைந்துப் போனது.

    தன் கணவன் அங்கே குவைத்திலேயே தங்கியிருக்க மூத்தார் மட்டும் புறப்பட்டு மனைவியைப் பார்க்க பறந்து வரப்போகிறார் என்ற மனக்குறை, பொறாமை போலும்... இயற்கைதானே... சில நாட்கள்தான் தன் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறாள். இளம் வயது மனம் வேதனைப்படுவது இயல்புதானே... பாவம் ஷீலா?... அவளுக்காக மனம் இரக்கத்தில் கரைந்தது.

    நாங்கள் கூட்டுக் குடித்தனமாக வாழ்கிறவர்கள். மாமியார், மாமனார், ஓரகத்திகள், அவ்வப்போது பிறந்தகத்திற்கு சீராட வரும் நாத்தனார்கள் என்று வீட்டில் எப்பொழுதும் நாலு பேருக்கு மேலானதொரு கும்பல் இருந்து கொண்டேயிருக்கும்.

    ஷீலா எனது கணவரின் சொந்த மாமாவின் மகள். சிறு வயதிலிருந்தே அவளை என் கணவர்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று இரு குடும்பமும் தீர்மானித்து விட்டிருந்தது. பட்டணத்திலேயே பல ஆண்டுகள் படிப்பிற்காக தங்கிவிட்டுத் திரும்பிய என் கணவர் மாமன் மகளை மணந்துகொள்ள மறுத்துவிட்டார். உறவில்லாத அந்நியத்திலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்து முடித்துக்கொள்ள ஒப்பினார். பின்னர் குவைத்துக்கு வேலை தேடிக்கொண்டு போய்விட்டிருந்தார்.

    என் மாமியார் தமது தம்பியின் உறவை முறித்துக்கொள்ள விரும்பாது தமது இளைய மகனுக்கு ஷீலாவைத் திருமணம் செய்து வைத்துவிட்டார். என் மைத்துனர் திருமணமான சில தினங்களிலேயே அண்ணன் தேடிக்கொடுத்த வேலையைப் பிடித்துக்கொள்ள இளம் மனைவியை விட்டுவிட்டு குவைத்துக்கு கிளம்பிவிட்டார்.

    நாங்கள் இருவரும் ஓரகத்திகள். ஆனால் நெருங்கின தோழிகளாக, சகோதரிகள்போல பாசத்துடன் பழகி வந்தோம்.

    உனக்கு ஏதாச்சும் வேணுமா, அரபு நாடுகளில்... நைலான் புடவை, பவுடர்... செண்ட் இதெல்லாம் எக்கச்சக்கமாக கிடைக்கும்... வாங்கி வரச்சொல்லவா...? என்று நான் கேட்டபோது ஷீலா சுள்ளென்று எரிந்து விழுந்தாள்.

    என் வீட்டுக்காரரும் அந்த ஊரில்தானே வேலை பார்க்கிறார். மனைவிக்கு ஏதாவது கொடுத்தனுப்ப வேணும்னு ஆசையிருந்தா அனுப்பி வைக்கட்டும். இல்லாட்டி எனக்கொண்ணும் வேணாம் சுடச்சுட பதிலளித்தாள்.

    அதற்குப் பின் அந்த சில நாட்களில் அவள் மிகவும் மாறிவிட்டிருந்தாள். கலகலப்பாக என்னுடன் பேசாது... மவுனமாக... எங்கேயோ வெறித்தபடி முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு இருந்தாள். ஏன் இப்படி? எனக்கே விளங்காத புதிராகத்தான் இருந்தது. ஆனால் நான் கவலைப்படவில்லை... என் கணவர் வரப்போகும் நாட்களை ஆவலுடன் எண்ணிக் கொண்டிருந்தேன்.

    ஒரு நாள் காலை எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற டாக்சியிலிருந்து என் கணவர்... பல பெட்டிகளுடன் இறங்கியபோது... வீடு இரண்டுபட்டு போயிற்று.

    உனக்கு டிஜிட்டல் வாட்ச், ஃபாரின் செண்ட், அமெரிக்கன் ஷிபான், யார்ட்லி பவுடர்... எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்... எங்கள் அறையில் பெட்டியைத் திறந்து கொண்டுவந்த பொருட்களை ரகசியமாக முதலில் எனக்குத்தான் அள்ளிக் கொடுத்தார். எனக்கு ஏற்பட்ட ஆனந்தம்?

    ஷீலாவுக்கு ஏதாச்சும் கொண்டு வந்தீங்களா? நான் கேட்டதும் அவர் முகம் சுருங்கிப்போனது.

    அவளுக்கு அவள் கணவன் கொடுத்த பொருட்களைத் தனியே ஒரு பெட்டியில் கொண்டுவந்திருக்கேன். அம்மா, அப்பா, தங்கச்சிகள்! அவங்க வீட்டுக்காரங்களுக்கு சாமான் வாங்கவே என் பணம் தீர்ந்து போச்சு... ஷீலாவைப் பத்தின நினைப்பு இருக்கலை. அதை விடு. உனக்கு ஒரு டேப்ரிகார்டர் வாங்கிட்டு வந்திருக்கேன். உன் குரலை டேப்பில் பிடிச்சு எடுத்திட்டுப் போகப்போறேன். உன்னை நினைச்சு தனிமையில் நான் அங்கே தவிக்கிறபோது... உன் குரலை கேட்டாவது மனதில் நிம்மதி ஏற்படுமில்லையா?... என் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினார்.

    அப்பப்பா! என் கணவருக்குத்தான் என்மேல் எத்தனை ஆசை? நான் பூரித்துப் போய்விட்டேன்.

    சாப்பாடு பரிமாறும்போதுதான் தமது தம்பி மனைவி ஷீலாவை அவர் முதல் முதலாய்ப் பார்த்தார். சின்ன வயதில்தான் அவர் அவளைப் பார்த்தது... அவர் முகத்திலே ஒரே திகைப்பு. பின்னர் தலையைக் குனிந்துகொண்டு சாப்பிடத் துவங்கியவர்... நிமிரவேயில்லை. அதற்குப்பிறகு வீட்டில் ஒரு புதிய சூழ்நிலை உருவாகிவிட்டது.

    ஷீலா மாடியில் துணிகளைக் காயவைக்க சென்றால், என் கணவர் அங்கிருந்து பரபரப்பாக இறங்கி கீழே ஓடி வந்துவிடுவார்.

    சமையலறையில் அவள் இருந்தால், அவர் வாசலுக்குள்ளிருந்து விடுவார். எல்லோருடன் வேடிக்கையாக சிரித்துப்பேசிய என் கணவர் ஷீலாவுடன் பேசாது இருப்பதை நான் கவனித்து மனம் வருந்தினேன்.

    ‘ஏன் இப்படி விரோதம்? அவர் மணம் முடிப்பதாக இருந்த மாமன் மகள் என்ற உறவு இருந்தபோது ஷீலாவை ஏன் உதாசீனம் செய்யவேண்டும்?’ என் மனம் மிகவும் சங்கடப்பட்டது. தனியாக நாங்கள் இருந்தபோது ஷீலாவுக்காகப் பரிந்துகொண்டு நான் என் கணவரைச் சாடினேன்.

    நீங்க நடந்துக்கிறது நல்லாவேயில்லை. தம்பி மனைவியைப் பார்த்து முகத்தை திருப்பிக்கிறீங்க. அவ உங்களை என்ன செஞ்சா. பாவம் ஷீலா... நலமா இருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்டா தேஞ்சா போய்விடுவீங்க? அதட்டினேன். இருவரையும் வற்புறுத்திப் பேசவைத்தேன். என் தலையிலேயே நான் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்கிறேன் என்று அப்போது உணரவில்லை.

    முதலில் ரொம்ப கண்டிப்பாக இருந்த என் கணவர் சில நாட்களில் ஷீலாவுடன் பேசுவதும், சிரிப்பதுமாக... மிகவும் நெருக்கமாகவே பழக ஆரம்பித்துவிட்டார். அவள் சமைத்தால் சாம்பாருக்கே தனி ருசி என்று எல்லோர் முன்னிலையிலும் புகழ்ந்தார். கிணற்றடியில் நின்றுகொண்டு அவளுக்கு குடம் குடமாக நீர் இரைத்துக் கொடுத்து உதவினார்... நான் இதை ஆரம்பத்தில் தப்பாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மாமன் மகள் என்கிற உறவில் ஏற்பட்ட பரிவு என்று நினைத்து ஏமாந்தேன்.

    அன்று இரவு... அயர்ந்து உறங்கிப்போன நான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். படுக்கையில் என் பக்கத்தில் இருந்த இவரைக் காணவில்லை. தாகத்துக்கு தண்ணீர் தேட சமையலறைக்குப் போயிருக்கிறாரா... வியப்புடன் எழுந்து நான் வெளியே வந்தபோது திடுக்கிட்டுப் போனேன்.

    மோகத்தைத் தணித்துக்கொள்ள என் கணவர் ஷீலாவின் அறைக்கதவை மெல்ல தட்டிக் கொண்டிருந்தார்.

    முன் ஏற்பாடு போலும்... ஒரே தட்டலில் அவள் திறந்தாள். என் கணவர் உள்ளே சென்றார். நான் விடுவேனோ? ஆவேசமாக ஒரே பாய்ச்சலில் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளேபோய் நின்றேன். இருவரும் திடுக்கிட்டுப் போய்விட்டனர்.

    தண்ணீர் குடிக்க வந்தேன்...! என் கணவர் தடுமாறினார்.

    தம்பி மனைவியின் அறையிலா தண்ணீர் குடம் இருக்கு... இந்த வெட்கக்கேட்டை வீடு முழுக்க தெரியும்படி நான் கூச்சலிட்டுச் சொல்லட்டுமா...? ஆத்திரமாக அடிக்குரலில் சீறினேன் நான்.

    ஷீலா என்னைக் கையெடுத்துக் கும்பிட்டாள். அவளைத் திரும்பிப் பார்க்கவும் பிடிக்காது என் கணவர் கையைப் பற்றிக்கொண்டு எங்கள் அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டுக் கொண்டேன். அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாது... சுவற்றில் சாய்ந்துகொண்டு விம்மி விம்மி அழுதேன்.

    மன்னிச்சுக்கோ, மாமன் மகள் ஷீலாவை எனக்குத்தான் முதலில் மணமுடிக்க பேசியிருந்தாங்க. அவ இத்தனை அழகியா வளர்ந்திருப்பான்னு தெரியாது... சின்ன வயசில பார்த்தது மயங்கிப்போய்... திணறியபடி என் கணவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு என்னை சமாதானப்படுத்த முயன்றார்.

    அதற்குப் பின்னர் எனக்கு உறக்கம் ஏது...? அவரது அருகாமை இன்பத்தை கொடுப்பதற்கு பதில்... சதா திகிலைக் கொடுத்து என்னைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

    ‘அண்ணன் மனைவி ஒரு சகோதரிக்கும், பெற்ற தாய்க்கும் சமம். தம்பி மனைவி...

    Enjoying the preview?
    Page 1 of 1