Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mithila Vilas
Mithila Vilas
Mithila Vilas
Ebook564 pages2 hours

Mithila Vilas

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேவகி என்னும் இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை அழகாய் எடுத்துரைக்கும் கதை.

வாழ்வில் பணத்தை பெரிதாக எண்ணி மிடுக்காக வாழ்ந்த மிதிலா விலாசின் மனிதர்களின் அகம்பாவத்தையும், பணத்தை தவிர மனிதர்களும் தேவை என்பதை உணர்த்தும் வகையில் நிகழும் நிகழ்வையும் தெளிவுற எடுத்துரைக்கும் இக்கதையின் சுவாரஸ்யங்களை கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம்....

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580155607293
Mithila Vilas

Read more from Lakshmi

Related to Mithila Vilas

Related ebooks

Reviews for Mithila Vilas

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mithila Vilas - Lakshmi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மிதிலா விலாஸ்

    Mithila Vilas

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    1

    கோடி அறையிலிருந்த ‘அலாரம்’ கடிகாரம் கணகணவென்று ஒலிக்க ஆரம்பித்ததும் தேவகி திடுக்கிட்டுப் படுக்கையினின்று எழுந்து உட்கார்ந்தாள். ‘மிதிலா விலாஸ்’ முழுவதும் வியாபித்து நின்ற கம்பீரமானதொரு நிசப்தத்தைக் கர்ண கடூரமான தனது கண்டத் துவனியினால் கடிகாரம் மேலும் நாசப்படுத்துமுன், தேவகியின் மென்மையான வலதுகரம் அதன் தலைமீது அழுத்தமாகப் படிந்ததும் மறுகணம் ‘கிளிக்’ என்ற நாதத்துடன் அலாரக் கடிகாரம் தனது அலறலை நிறுத்திக் கொண்டுவிட்டது.

    படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு அறையிலிருந்து தேவகி மெல்ல வெளியே வந்தாள். வராந்தாவில் மறுகோடியில் எரிந்து கொண்டிருந்த விடிவிளக்கின் மங்கிய ஒளியில் சப்தமிடாது சென்று எதிர்ப்புறமிருந்த அந்த விஸ்தாரமான ஹாலுக்குள் நுழைந்தாள். வழக்கம் போல் ஹாலில் பளிச்சென்று ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அடிமேல் அடி வைத்து நடந்து சென்ற அவள், ஹாலின் முடிவிலிருந்த அறையின் வாயிற்படியருகில் வந்ததும் தயங்கியபடி சற்றுநேரம் நின்றுவிட்டாள். என்றும் போல் அறையின் கதவு திறந்தபடியே இருந்தது என்றாலும், உள்ளே நிலவி நின்ற நிசப்தம் அவளுக்கு ஒருவித அச்சத்தையேதான் கொடுத்தது. பசுபதி அய்யர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா? அல்லது, ஒவ்வொரு நாளும் அந்த அறைக்குள்ளே விடியற்காலை வேளையில் முதல் முதலாக நுழையுமுன் தேவகியின் மனத்தில் காரணமற்ற இத்தகைய ஒருவித பீதி ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

    அறைக்குள்ளே நிறைந்திருந்த இருட்டையும் லட்சியம் செய்யாது மெல்ல நடந்து சென்று படுக்கையின் எதிர்ப்பக்கத்திலிருந்த மேஜையருகில் வந்து நின்றாள். அதன்மீது வைத்திருந்த பாத்திரங்களைச் சப்தமிடாது எடுக்கக் கையை மெதுவாக நீட்டிய அவள், தேவகி என்று தன்னைக் கூப்பிடும் குரல் கேட்டுத் திடுக்கிட்டு, என்ன மாமா? என்று வினவினாள்.

    விளக்கைப் போட்டுக் கொள்வதுதானே! இருட்டிலே ஏன் தடுமாறுகிறாய்? என்றார் பசுபதி அய்யர்.

    தூங்கிக் கொண்டிருக்கிறீர்களோன்னு விளக்கை ஏற்றவில்லை. இப்பத்தான் முழிச்சிண்டேளா மாமா! என்று கேட்டவண்ணம் தேவகி மின்சார விளக்கை ஏற்றினாள். பளிச்சென்று வீசிய விளக்கொளியில் கட்டிலின்மீது சாய்ந்தவாக்கில் பசுபதி அய்யர் உட்கார்ந்திருப்பதைக் கண்ட அவளுக்கு வியப்புத் தாங்க முடியவில்லை.

    இப்படியே உட்கார்ந்து கொண்டா இருந்தீர்கள்? என்று வினவிய வண்ணம் நோயாளியின் கட்டிலின் அருகே ஓடிவந்து நின்று கொண்டாள்.

    ராத்திரி இரண்டு மணியிலிருந்து தூக்கமே இல்லை. மூச்சுவிடக்கூட சிரமமாய் இருந்தது. உட்கார்ந்துண்டே இருந்தா, கொஞ்சம் சௌகர்யமாக இருந்தது. மணி ஒண்ணுமே தெரியலையேன்னு யோசனை செய்துண்டு இருந்தேன். உன் அலாரம் கடிகாரம் அடித்த சப்தம் கேட்டது. சரி, மணி ஐந்தடித்துவிட்டது. தேவகி இப்ப இங்கே வருவாள்னு எதிர்பார்த்திண்டே இருந்தேன் என்று மெல்லிய குரலில் கூறிய பசுபதி அய்யர், பரிவுடன் அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.

    உங்களுக்குத் தூக்கம் வரலைன்னா என்னை முன்னமேயே கூப்பிட்டிருக்கக் கூடாதா மாமா! என்று வினவிய அவள், பசுபதி அய்யரின் நெற்றிமீது அரும்பி நின்ற வியர்வையைத் துண்டால் மெல்லத் துடைத்துவிட்டாள்.

    எதுக்காகக் கூப்பிடவேணும்? நீ வந்து உட்கார்ந்துண்டு கதை சொல்லி என்னைத் தூங்க வைக்கப் போறியா என்ன? அசடே, வயசானா மனுஷாளுக்குத் தூக்கம் சரியாகவே வராது. அதுவும் சீக்கு வேறே என்றால் கேட்கணுமா? என்று பெருமூச்செறிந்தார்.

    தேவகி பதில் சொல்லவில்லை. படுக்கையைச் சுற்றிலும் தட்டிச் சுத்தப்படுத்தி, தலையணைகளைச் சௌகர்யமாகத் திருப்பிப் போட்டுவிட்டு, நன்றாகப் படுத்துக் கொள்ளும்படி அவருக்கு உதவி செய்தாள். பிறகு மேஜைமீது நோயாளி உபயோகித்து வைத்திருந்த பாத்திரங்களைச் சேகரித்து எடுத்துக்கொண்டு வெளியே போகும் முன், மாமா! உங்களுக்கு ஏதாவது வேணுமா? என்று கேட்டாள்.

    எனக்கு இப்ப சத்தியமாக ஒண்ணும் வேண்டாம். விளக்கை அணைத்துவிட்டுப் போ. தூக்கம் வருகிறதான்னு முயற்சி செய்து பார்க்கிறேன்! என்றார் அவர்.

    தாழ்வாரத்தின் மறுகோடியில்தான் பின்கட்டிற்குச் செல்லும் மாடிப்படிகள் இருந்தன. அதை அடையுமுன் தேவகி தினமும் மூன்று பேர்களுடைய அறை வாசல்களைக் கடந்து செல்ல வேண்டி வந்தது.

    புலியின் குகை வாயிலைக் கடந்து செல்ல வேண்டுமென்றால்கூட அவளுடைய நெஞ்சம் அத்தனை வேகத்தில் துடிக்காது என்பது திண்ணம். ஆனால் தாழ்வாரத்தின் எதிர்ப்புறத்தை ஒட்டினாற் போல் அமைந்திருந்த அந்தப் பெரிய அறையின் வாயிற்படியைத் தாண்டிச் செல்லும்வரை தினசரி ஒருவித திகிலையே அவள் அனுபவித்தாள்.

    அதிக வேகமாக நடந்தால் காலடி ஓசையினால் பசுபதி அய்யரின் தர்மபத்தினி ஸ்ரீமதி தர்மாம்பாள் அவர்களின் தூக்கம் கெட்டு, அதனால் எங்கே அவள் தன்னைக் கோபித்துக் கொள்வாளோ என்றதொரு அச்சமானது. அவளது அந்தராத்மாவிலே சதா குடியிருந்ததனால், தேவகி தாழ்வாரத்திலே மெல்ல பூனையைப் போல் நடந்தாள். ஆனால், அன்று காலையில் அந்த அறைக்குள்ளிருந்து எழுப்பிய குறட்டையின் பலத்த ஓசை தர்மாம்பாள் ஆனந்தமயமானதொரு நித்திரையில் லயித்திருப்தை அறிவுறுத்தவே, தேவகி பயம் கொஞ்சம் குறைந்தவளாகச் சற்று வேகமாகவே நடந்தாள்.

    தர்மாம்பாளின் அறைக்கு அடுத்தாற்போலிருந்த ஹாலையும், அதைத் தொடர்ந்து இரண்டு அறைகளையும் அவளது இரண்டாவது புத்திரன் சந்திரசேகரனும் அவனது மனைவி மைதிலியும் தங்களது வாசஸ்தலமாக உபயோகித்துக் கொண்டிருந்தனர். வழக்கம்போல் அந்த ஹாலில் கதவு இறுக்கிச் சாத்தப்பட்டிருப்பதைக் கண்ட தேவகி நிர்ப்பயமாக நடந்து மாடிப்படிகளை அடைந்தாள்.

    கீழே செல்வதற்கு அடியெடுத்து வைத்த அவள், தனது பெயரை உச்சரித்து யாரோ மெல்லக் கூப்பிடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவளது அதரங்களிலே லேசானதொரு புன்னகை அரும்பியது. மாடிப் படியருகிலிருந்த பெரிய அறையின் வாயிற்படியருகில் இருட்டிலே நின்று கொண்டிருந்தாள், தர்மாம்பாளின் மூத்த நாட்டுப் பெண் சியாமளா.

    தேவகி! அதற்குள்ளேயே எழுந்து விட்டாயே! இப்ப என்ன அவசரம்? என்று கேட்டாள் மிகவும் தாழ்ந்த குரலில் சியாமளா.

    இப்ப எழுந்திருக்காட்டா, எப்படி மன்னி அத்தனை வேலைகளையும் கவனிக்க முடியும்? என்று பதிலளித்த தேவகி மாடிப்படிகளில் இறங்கி வேகமாக முன்னேறினாள்.

    சித்த இரு, தேவகி நானும் வருகிறேன். பாவம், நீ மட்டும் தனியாக இருட்டிலே ஏன் கஷ்டப்படணும்? என்று கூறிய சியாமளா, அவளைப் பின்தொடர்ந்தபடி மாடிப் படிகளில் இறங்கி வந்தாள். மேலே செல்லாது தேவகி நின்று கொண்டாள். மன்னி! நீங்கள் இப்பொழுது என்னுடன் வரக்கூடாது. ராத்திரி பதினோரு மணிவரை எனக்கு உதவி செய்தேளே, அதுவே போதும். இப்பவாவது சித்த போய்ப் படுத்து தூங்குங்கள். ராவும் பகலும் இப்படிக் கண்விழிச்சா உடம்பு என்னத்திற்காகுமாம்? என்று கேட்டாள் உரிமை நிறைந்த குரலில்.

    வளர்கின்ற வயசில் அதிகமாக உடலைப் போட்டு வாட்டினால் அது என்னத்திற்காகுமாம்? என்று கேட்ட சியாமளா அவள் அருகில் வந்து நின்றாள்.

    நீங்களும் நானும் ஒன்றாகி விடுவோமா, மன்னி? யோசித்துப் பாருங்கள். எது எப்படியானாலும் நீங்கள் என்னுடன் இப்பொழுது வரக்கூடாது. அவ்வளவுதான். சொல்லிவிட்டேன் எனப் பிடிவாதமாகக் கூறிவிட்டு, தேவகி மேலே விவாதிக்க இஷ்டப்படாதவள் போல் வேகமாகப் படிகளைக் கடந்து கீழே சென்றுவிட்டாள்.

    கீழே எங்கும் ஒரே இருள். ‘மிதிலா விலாஸ’த்தின் மூலை முடுக்குகள் ஒவ்வொன்றையும் நன்றாக அறிந்திருந்த தேவகிக்கு அந்த இருளில் நிதானமாக நடந்து செல்லச் சிரமமாகவே இல்லை.

    சமையற்கட்டை அடைந்த அவள் கையில் சுமந்து வந்த பாத்திரங்களை முற்றத்தில் வைத்துவிட்டுக் கதவைத் திறந்தாள். அதற்குள் நுழைந்து விளக்கை ஏற்றிய பின், தோட்டத்துப்பக்கமிருந்த பெரிய ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டுச் சிறிதுநேரம் தோட்டத்தையே பார்த்தபடி நின்றாள். அறையிலே அதுவரை தேங்கி நின்ற புழுங்கிய வாடையை அப்புறப்படுத்துவது போன்று ஜன்னல் அருகாமையிலிருந்த பன்னீர் மரத்திலிருந்து குளிர்ந்த காற்று மலரின் மணத்துடன் அவளது முகத்தின்மீது குப்பென்று வீசியது. முதல் நாள் இரவு முழுவதும் பெய்த மழை இன்னும் ஓய்வு கொள்ளாமல் மெல்லத் தூறிக் கொண்டிருந்தது. விடியற்காலை மணி ஐந்தரையாகியும் ஆகாயத்தில் கவிழ்ந்து நின்ற கருமேகக் கூட்டத்தினால் வானம் இருண்டு மிகக் கருமையாக விளங்கியது. சிறிதுநேரம் தன்னை மறந்து வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தேவகி சட்டென உணர்வு பெற்றவள் போல் மேலே காரியங்களைக் கவனிக்கலானாள்.

    அடுப்பிலே காய்ந்து கொண்டிருந்த பாலைக் கிளறிவிட்டுக் கொண்டு நின்ற தேவகி, திடீரென அறைக்குள் புயல் வீசியதைப் போன்றதொரு சத்தம் உண்டாவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

    என்ன மழை வேண்டிக்கிடக்கிறது! ராத்திரியெல்லாம் ஒரே முட்டாகக் கொட்டி மனுஷாள் பிராணனை வாட்டுகிறது. பகலெல்லாம் ஒரே வெயில், மழை நிக்கும்னு காத்துண்டு இருந்தா நின்னாத்தானே! என முணுமுணுத்த வண்ணம் உள்ளே வேகமாக வந்தாள் மிதிலா விலாஸத்தின் சமையற்கார அம்மா சௌபாக்கியம்.

    தான் சற்றுத் தாமதமாக வந்ததைப் பற்றி யாரும் எதுவும் கேட்குமுன்னே தாமதத்தின் காரணத்தைச் சரியாக அவளாகவே கூறிவிடுவது அவளது வழக்கமாகையினால் தேவகி அதைப் பற்றிப் பேசவேயில்லை.

    அதுவரை அமைதி நிலவியிருந்த சமையற்கட்டில் சௌபாக்கியம் நுழைந்த பின்பு நானாவிதமான சப்த ஜாலங்கள் எழும்பலாயின. ‘கிளிக்’ என்று கரண்டிகளின் ஓசையும் டக்கென்று பாத்திரங்கள் கீழே வைக்கப்டும் போது ஏற்படும் சத்தமும், பிறகு ஏககாலத்தில் பல பாத்திரங்கள் உருட்டப்படும் கடபுடா சத்தமும் கலந்து மூடியிருக்கும் சமையலறைக்குள்ளே இருட்டிலே புகுந்து வெளியேறத் தெரியாது திண்டாடும் பூனையொன்று செய்யும் அட்டகாசத்தைப் போன்றிருந்தது.

    என்னம்மா தேவகி! நீ ஏன் இத்தனை சுருக்கா எழுந்திருந்து காரியம் செய்யறே! காப்பிக்கு என்ன அவசரமா? இந்த பங்களாவிலே எல்லோரும் எழுந்திருக்க மணி எட்டாகுமே! என்று கேட்டபடி கெட்டிலை எடுத்து அடுப்பின்மீது டக்கென்ற ஓசையுடன் வைத்தாள் சௌபாக்கியம்.

    காலை சமையலுக்குக் காய்கறிகளை ஆய்ந்து கொண்டிருந்த தேவகி, தலையை நிமிர்த்தி ஒரு தடவை அவளைப் பார்த்துவிட்டு மறுபடியும் தனது வேலையில் தீவிரமாக முனைந்தாள்.

    அவளது மௌனத்தைச் சட்டை செய்யாது மேலே தொடர்ந்தாற்போல் பேசிக் கொண்டு போனாள் சௌபாக்கியம். நீ சின்னக் குழந்தை. இளங்கன்று. பயமறியாதுங்கறபடி உனக்கு ஒண்ணுமே தெரியல்லை. விடியாத காலை வேளையிலே ஒரு நாளைப் போல் இருட்டிலே தனியா நீ கீழே இறங்கி வரது தப்பு என்றாள்.

    தேவகி தனது கை வேலையை நிறுத்திவிட்டு சமையற்காரியின் முகத்தை உற்றுப் பார்த்தாள். என்ன சொல்வதற்கு இத்தனை பூர்வ பீடிகைகள் போடுகிறாள் அவள் என்பதை, தேவகியினால் ஊகிக்கவே முடியவில்லை.

    உன் மாமா இந்த வீட்டை விலைக்கு வாங்கிக் கட்டி எப்படியோ துணிச்சலோடு இங்கேயே வருஷக்கணக்காகக் குடியும் இருக்கார். ஆனால், இதை அவருக்கு முன்னாடி ஒருத்தர்கூட வாங்கத் துணியலே. ஏன் தெரியுமா? சுமார் இருநூறு வருஷத்துக்கு முந்தி ‘தேவிகுளம்’ என்கிற இந்த ஊரை எஜங்காராஜன் புஜங்கராஜன்னு அண்ணன் தம்பி ரெண்டு பேர் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்த ‘மிதிலா விலாஸ்’ பங்களா இருக்கிற இடத்திலேதான் அவர்களுடைய அரண்மனை இருந்ததாம். அண்ணன் தம்பி இரண்டு பேர்களும் ரொம்ப ஒற்றுமையுடையவர்களாம். ஆனால், அவர்களுடைய பெண்ஜாதிகள் இருவரும் ரொம்பப் பொறாமைக்காரிகள். ஒரு சமயம் ராஜாக்களிருவரும் வேட்டைக்குப் போயிருக்கச்சே பொறாமையினால் ஏக காலத்தில் இரண்டு பேர்களுடைய சாப்பாட்டிலும் ஒருவருக்கொருவர் தெரியாமல் விஷத்தைக் கலந்துவிட்டார்களாம். வேட்டையிலிருந்து திரும்பி வந்த ராஜாக்கள் இரண்டு பேரும் தங்களுடைய மனைவிகள் இரண்டு பேரும் இறந்து கிடப்பதைக்கண்டு ஆச்சர்யமடைந்து போனார்களாம். வருஷங்கள் பல ஆனாலும் அவர்களுடைய ஆவிகள் சுத்திக் கொண்டு அலைவதினால் இந்த இடம் உருப்படவே இல்லையாம் என்று கூறிவிட்டு, பீதி நிறைந்த கண்களால் தேவகியை வெறித்துப் பார்த்தாள் சௌபாக்கியம்.

    பழங்காலத்து அரசர்களுடைய இளம் மனைவிகளின் கோர மரணத்தைக் கேட்டும் தேவகி கொஞ்சம்கூட அசங்கவேயில்லை. நிதானமாகக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

    சௌபாக்கியம் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உன் மாமாவுக்கும் முன்னாடி இந்த இடத்தை முருங்கபுரம் ஜமீன்தார் வாங்கி அழகான இந்த வீட்டைக் கட்டினார். ஆனால் அவருக்கு இந்த இடம் ராசிக்கு வரலை. அவருடைய ஒரே பெண் புருஷனுடன் கோபித்துக் கொண்டு பிறந்தகம் வந்தவள், நம்ம தோட்டத்து வாசலில் சுவர் ஓரமாக இருக்கிற அந்த பெரிய மரத்திலேதான் தூக்குப்போட்டுக் கொண்டாளாம். முந்தாநாள் நான் இங்கே அவசரமா வரும்பொழுது, அப்பப்பா! நினைச்சாலும் மயிர் கூச்சலெடுக்கிறது. ஒரு கருப்பு உருவம் அந்த மரத்துகிட்ட நின்னுண்டு இருந்தது என்று கதையை முடித்துவிட்டுத் தனது உடலை ஒரு தடவை குலுக்கிக் கொண்டாள். குளிரில் அடிபட்டவள் போல், தேவகி இத்தனைக்கும் வாய் திறந்து பதில் சொல்லாவிடினும், சலனமற்ற அவளது கண்களில் கேலிக் குறிகள் நிறைந்து நின்றன.

    வாயிற்புறத்திலே சுவரின் ஓரமாக வளர்ந்து ஆகாயத்தை நோக்கியபடி நின்று கொண்டிருந்த அந்தக் கொன்றை மரத்தைப் பற்றி தேவகியின் உள்ளத்திலே இன்பமானதொரு நினைவுதான் குடிகொண்டிருந்தது. அந்திவானத்தின் செம்மையுடன் போட்டியிடுவது போல் கிளைகள் தெரியாமல் பூத்து நிற்கும் சிவந்த புஷ்பங்களைக் கொண்ட அந்தக் கொன்றை மரத்து நிழலில், தான் சிறுமியாக இருக்கையில், முதன்முதலாக ஈஸ்வரன் அவளுக்கு மணல்மீது ‘அ’ என்று எழுதிப் போதித்தான்.

    தேவகியின் இன்ப நினைவுக்கு இருப்பிடமாயிருந்த அந்தக் கொன்றை மரம் பாவம், ஏனோ இந்த சௌபாக்கியத்தின் பயங்கரக் களஞ்சியமாக விளங்கியது.

    அழகும் கம்பீரமும் நிறைந்த மிதிலா விலாஸத்தின்மீது ஏனோ சௌபாக்கியத்திற்கு இத்தனை வர்மம்? முருங்கபுரம் ஜமீந்தாரிடமிருந்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு வாங்கிய அந்தப் பழைய கட்டடத்தை மாமா செப்பனிட்டு அழகாக விஸ்தரித்துக் கட்டினார் என்றும், முருங்கபுரம் ஜமீந்தாரின் புத்திரி தூக்கிலிட்டுக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் அந்தக் கொன்றை மரம், கிரகப்பிரவேசத்தின் போது பசுபதி அய்யர் தமது கையினால் நட்டுப் பயிரிட்ட செடி என்பதையும் தேவகி நன்றாக அறிவாள். எனவே சௌபாக்கியத்தின் அற்புதக் கற்பனை அவளுக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்கியது.

    ‘இதே கதையை வேறு யாரிடமாவது கூறியிருந்தால் இத்தனை நேரம் பயத்தினால் மூர்ச்சித்து விழுந்திருப்பார்கள். ஆனால், நெஞ்சழுத்தக்காரியான தேவகி கேலியாகச் சிரிக்கவல்லவோ செய்கிறாள்!’ என மனதிற்குள்ளேயே எண்ணிய சௌபாக்கியத்திற்கு, தேவகியின் தைரியத்தின்மீது எரிச்சல் ஏற்பட்டது.

    பதினேழு வயதுதான் இருக்கும். அதற்குள் எத்தனை நெஞ்சழுத்தம்! ‘பேசினால் வாய் முத்து உதிர்ந்துவிடும் போன்றதொரு அழுத்தம்’ என எண்ணிக் கோபமடைந்த சௌபாக்கியம், தேவகி, நீ என் பேச்சை நம்பாவிட்டால் போ! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் உன் கண்ணாலேயே பார்க்கப் போகிறாய், உலகம் தெரியாத சிறு பெண். உனக்கு நான் சொன்னால் சிரிப்பாகத்தான் இருக்கும். உன் மாமா இந்த வீட்டை விலைக்கு வாங்கி, அதிலே குடியிருக்கிற ரகசியம் எல்லோருக்கும் தெரியும். முன்கட்டிற்கு அஸ்திவாரம் பறிக்கறச்சே ஒரு வெந்நீர்த் தவலை நிறைய பவுனும் நகையுமாகப் புதையல் கிடைத்ததாம். அதிலேயிருந்து இன்னும் எங்கேயெல்லாம் புதையல் இருக்குமோன்னு பேயடைந்த இந்த வீட்டிலே பேராசையோட குடியிருக்கிறார் என்றாள். உரத்துப் பேசியதால் வேட்டையிலிருந்து திரும்பிய நாயைப் போன்று அடுக்கடுக்காகப் பெருமூச்சு விட்டாள் சௌபாக்கியம்.

    என் மாமா புதையல் ஒன்றும் எடுக்கவில்லை. பல வருஷங்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துத்தான் ‘மிதிலா விலாஸ்’ என்ற மோட்டார் கம்பெனியின் முதலாளியானார்! என்று பதில் கூற வேண்டும் போல் தேவகியின் நாக்குத் துடித்ததென்றாலும், சௌபாக்கியத்தின் முகத்திலே தாண்டவமாடிக் கொண்டிருந்த கோபக் குறிகளைக் கண்டு மௌனமாகி விட்டாள்.

    இத்தனை பேச்சிற்கும் ஒரு தடவைகூட வாயைத் திறக்காத தேவகிமீது சௌபாக்கியத்திற்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘காலை வேளையில் வேலையின் சிரமம் தெரியாது ஏதாவது சம்பாஷிக்கலாமே என்றால், இந்தப் பெண் ஏன் இப்படி மௌனம் சாதிக்க வேண்டுமாம்? தர்மாம்பாளிடமும் வீட்டிலுள்ள எல்லோரிடமும் தினமும் நன்றாக வசவுகள் வாங்கிக்கொண்டு, திமிர் அடங்கவில்லையே இந்தப் பெண்ணுக்கு…!’ என்று மனதிற்குள்ளே உறுமிய அவள், ஏ! பேசா மடந்தை! காப்பி தயாராகிவிட்டது. மேலே என்ன செய்யணுமாம்? உன் மாமியைக் கேட்டுச் சீக்கிரம் வந்து சொல்லிவிடு, அப்புறம் என்னாலே அரை நாழி இந்த வீட்டிலே காத்துக்கொண்டு நிற்க முடியாது! என்று ஆத்திரமான குரலில் கூறினாள்.

    அது சமயம் கீழே திடீரென ஒரு பரபரப்பு எங்கும் ஏற்படுவதை தேவகி கவனித்துவிட்டுக் கைவேலையைப் போட்டுவிட்டு எழுந்திருந்தாள். வெண்கலக் கடையில் யானை புகுந்துகொண்டு செய்த அட்டகாசத்தை ஒருவரும் நேரில் பார்த்ததில்லை என்பது நிச்சயம். ஆனால் அதைப் பார்க்க வேண்டுமானால் ஸ்ரீமதி தர்மாம்பாள் அம்மாள் காலை வேலையில் மாடியிலிருந்து எழுந்திருந்து இறங்கி வரும்போது ‘மிதிலா விலா’சத்தின் எட்டுத் திக்குகளிலும் ஏற்படும் பரபரப்பைக் கண்டு வெண்கலக் கடையில் புகுந்த யானையே வெட்கித் தலை குனிந்துவிடும்.

    2

    முனியம்மா! சனியனே! எங்கே தொலைஞ்சுட்டே? மாடிப்படியெல்லாம் ஒரே குப்பை! நன்னா பெருக்கக்கூடக் கண் அவிஞ்சு போச்சா! எங்கே அந்தத் தடித்தாண்டவராயன் கந்தசாமி? முற்றத்திலே காயவச்ச விறகை எடுத்து அடுக்கவில்லை. மழையிலே நனைஞ்சு கிடக்கு என உச்சஸ்தாயியில் இரைந்து கொண்டு பின்கட்டுக்குச் செல்லும் மாடிப் படிகள்மீது வேகமாக இறங்கி வந்து கொண்டிருந்தாள் தர்மாம்பாள். அவளது பாதங்களின் வேகத்தைத் தாளாதது போன்று, அந்த மர மாடிப் படிகளில் ஒவ்வொன்றும் கிறீச்கிறீச்சென்ற சப்தத்துடன் ஓலமிட்டது.

    காலை வேளையில் உயரத்திலிருந்து கீழே இறங்கி வந்த களைப்பைத் தாங்க முடியாத தர்மாம்பாள் பெருமூச்சு விட்டுக் கொண்டே, ஏண்டி தேவகி முற்றத்திலே கிடக்கும் விறகுகளை நீயாவது பார்த்து அடுக்கி வச்சிருக்கப்படாதோ? ராத்திரி முழுவதும் மழையிலே நனைஞ்சு கொண்டிருந்திருக்கே என்று அதட்டியபடி சமையலறைக்குள்ளே எட்டிப் பார்த்தாள்.

    நான் அவைகளை ராத்திரி கவனிக்கவேயில்லை மாமி! அதனால், வந்து… என்று தேவகி வார்த்தைகளைப் பயத்துடன் மென்று விழுங்கினாள். நீ ஏன் கவனிக்கப் போகிறாய்? நீ நாளைக்கு இன்னொருத்தன் வீட்டுக்குப் போகிற பெண். இந்த வீடு எக்கேடுகெட்டால் உனக்கென்ன? என்று அதிருப்தியுடன் பதில் அளித்துவிட்டு தர்மாம்பாள், சௌபாக்கியத்தின் பக்கம் திரும்பி, ஏனம்மா! அந்த வெங்கலப் பானைக்கு மாவு தடவாமல் அடுப்பிலே போட்டுவிட்டேளா? உங்க அவசரம் உங்களுக்குன்னா பின்னாடி அதைத் தேய்க்கிற வேலைக்காரிக்குன்னா தெரிகிறது அதன் சிரமம்? என்று குரலைக் கொஞ்சம் தாழ்த்திக் கொண்டு முகத்தைச் சுளித்த வண்ணம் வினவினாள். வெங்கலப் பானைக்கு மாவு பூசலேங்கறதை நீங்க நேரிலே பார்த்தேளா என்று சௌபாக்கியம் கோபத்துடன் முணுமுணுத்து, தர்மாம்பாளைப் பார்த்துப் பேச பிடிக்காதவள் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    தர்மாம்பாள் அதற்குமேல் விவாதிக்கப் பிரியமில்லாதவள் போல், தேவகி பக்கம் திரும்பி, பூஜையறையிலே எல்லாம் ‘ரெடி’யாக எடுத்து வை. நான் ஸ்நானம் பண்ணிவிட்டு வருகிறேன் என்று அவசரமாகக் கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

    தகுந்த உயரமும் உயரத்திற்கேற்ப பருமனும் கொண்டிருந்த தர்மாம்பாளுக்கு வயது ஐம்பத்தெட்டாகிக் கொண்டிருந்தது. காலணா அளவு வியாபித்து நிற்கும் குங்குமப்பொட்டு துலங்கும் தனது பரந்த நெற்றியைச் சற்றுச் சுளித்த வண்ணம் அவள் வேலைக்காரர்கள் யாரையேனும் வெறித்துப் பார்த்தாலே போதும். அந்த ஆசாமி மிதிலா விலாஸத்திலே வகித்து வந்த வேலையிலிருந்து அப்பொழுதே தள்ளப்பட்டான் என்று அர்த்தம்.

    தர்மாம்பாளை நேரிடையாகப் பார்க்கக்கூட வேண்டாம்; பெயரைக் கேட்டாலே போதும். மிதிலா விலாஸத்திலே வேலை செய்து வந்த வேலைக்காரர்கள் எல்லோரும் பயத்தில் கிடுகிடுவென்று நடுங்குவார்கள். எஜமானி அம்மாளின் அதிருப்திக்கு ஆளாவதைவிட மரண தண்டனையேமேல் என்று எண்ணும்படியானதொரு கிலி அவர்களுக்கு.

    தர்மாம்பாளைக் கண்டு பங்களா வேலைக்காரர்கள் மட்டும் அஞ்சவில்லையென்றும்; தேவிகுளத்தில் வசித்து வந்த அநேகம் பேர்கள் அந்த அம்பாளுடைய கூரிய நாக்கினின்றும் எழும் விஷம் கலந்த வசைமொழிகளுக்குப் பயந்து, ஆஹா! உங்களைப் போன்று உண்டா என்று வீண் முகஸ்துதி செய்து கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு தப்பி வாழ்ந்தனர் என்றதொரு வதந்திகூட உலாவிக் கொண்டிருந்தது.

    இத்தனை பிரக்யாதி பெற்ற ஸ்ரீமதி தர்மாம்பாளைக் கண்டு கிஞ்சித்தும் அஞ்சாத ஆசாமி ஒருத்தி இருக்கத்தான் இருந்தாள். அவள்தான் சௌபாக்கியம் என்னும் அந்த பங்களாவின் சமையற்காரம்மா!

    அதுவரை மிதிலா விலாஸத்தில் சமையல் வேலைக்கு வந்து சொல்லிக் கொள்ளாமல் ஓடின பதினான்கு சமையற்காரர்களையும் போலில்லாமல், சௌபாக்கியம் கடந்த மூன்று வருஷங்களாக அந்த வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தாள். நீடித்து அங்கே அவள் தங்கியிருந்ததின் ரகசியம் அவள் ஒருத்திக்குத்தான் தெரியும்.

    மிதிலா விலாஸத்திற்கு வேலைக்கு வருமுன், தர்மாம்பாளின் பிரசித்தி பெற்ற முன்கோபத்தைப் பற்றிய பல கதைகளையும் சௌபாக்கியம் கேள்விப்பட்டிருந்தாள். ஒரு தடவை கோபத்தில் தர்மாம்பாள், கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரைச் சமையற்காரிமீது வீசிவிட்டாள் என்றும் காயமடைந்த சமையற்காரி தர்மாம்பாளை நீதிமன்றம்வரைக்கும் இழுத்துப் பழிவாங்கத் தீர்மானித்து, உடனே வெளியே புறப்பட்டுவிட்டாள் என்றும், மானத்திற்கு அஞ்சிய பசுபதி அய்யர் அந்த அம்மாள் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக வேண்டிக்கொண்டு, பணத்தை வாரிக் கொடுத்து சங்கதியை வெளிவரா வண்ணம் அமுக்கிவிட்டார் என்றும் ஒரு கதை, தேவிகுளத்தில் பலருடைய வாய்களில் பல வகையாகத் திரிந்து நாளாவித ரூபத்துடன் உலாவிக் கொண்டிருந்தது.

    தர்மாம்பாளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு வந்திருந்த சௌபாக்கியம், வீட்டு வாசற்படிக்குள் காலை எடுத்து வைக்குமுன்பே தன் மனத்திற்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டுவிட்டாள். கோபத்தில் விஷ்ணு பகவானின் சக்ராயுதத்தைப் போல், சிப்பல் தட்டைச் சமையற்காரிமீது தர்மாம்பாள் வீசினாள் என்றால், சமையற்காரியின் கைகள் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பானேன்? திருப்பி எதிரியின்மீது வீசுவதற்கு அத்தனை பெரிய பங்களாவில் ஒரு அண்டாவாவது, தம்ளராவது அகப்படாமலா போய்விடும்?

    தர்மாம்பாளுடைய முன்கோபத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய நெஞ்சழுத்தத்துடன்தான் சௌபாக்கியம் அந்தப் பங்களாவில் வேலைக்கு அமர்ந்தாள். தர்மாம்பாளுடைய நாவை கூரிய வாளிற்கு ஒப்பிடலாம் என்றால், சௌபாக்கியத்தின் நாக்கை பெருங்கோடலிக்கு ஒப்பிடலாம் என்று கூறும்படி அவள் நிர்ப்பயமாக அந்தப் பங்களாவில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

    பத்து வருஷங்களுக்கு முன்பு என்றிருந்தால், தர்மாம்பாள் சௌபாக்கியத்தின் திமிரை அடக்கி அவளுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பித்திருப்பாள். வாலிபம் ஒடுங்கி வயோதிகம் ஏறிக்கொண்டு போகும் இந்த வயதில் அவளுக்கு சமையற்காரியுடன் சண்டையிட்டுக் கொண்டு தனது அதிகாரத்தைக் காட்ட ஆசை ஏற்படவில்லை. பதினைந்தாவது சமையற்காரியான அவள் கோபித்துக் கொண்டு வேலையை விட்டுச் சென்றுவிட்டால், பங்களாவில் உள்ள அத்தனை பேருக்கும் யார் சமைத்துக் கொட்ட முடியும்? என்னத்திற்கு வீண் வம்பு என்றதொரு எண்ணத்திலே, சௌபாக்கியத்தின் கொட்டத்தைச் சற்று துளிர்க்கவிட்டு அசட்டையாக இருந்து வந்தாள் தர்மாம்பாள்.

    எஜமானியம்மாள் ஸ்நான அறைக்குச் சென்றுவிட்டாள் என்பதை அறிந்த சௌபாக்கியம், தேவகி, நீ கேட்டுச் சொல்லிவிடு, இன்னிக்குத் தயாராக வேண்டிய சமையல் விவரத்தை முதல்லேயே சொல்லாட்டா, அப்புறம் என்னால் ஆகாது, திடீரென்று அதைச் செய்னு உன் மாமி உத்தரவு போட்டா, நீதான் செய்துகொள்ள வேணும். ஆமாம், சொல்லிவிட்டேன்! என்று படபடப்பாகப் பேசிவிட்டுத் தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

    நோயாளி பசுபதி அய்யருக்குக் காலை வேளையில் செய்ய வேண்டிய சிசுருக்ஷைகளை முடித்துக்கொண்டு, தேவகி மாடியிலிருந்து திரும்ப இறங்கி வருவதற்கும், தர்மாம்பாள் பூஜையறையிலிருந்து வெளிப்படுவதற்கும் சரியாக இருந்தது.

    ஏண்டி தேவகி! அந்த சௌபாக்கியம் கார்த்தாலே பிடிச்சு என்னத்துக்கு முணுமுணுத்துக் கொண்டேயிருக்கா? சித்த வெறுமனே இருக்க முடியலையா அவளுக்கு? சௌபாக்கியம்! பெயரைப் பார், பெயரை என்று அதட்டலாக வினவியவண்ணம், கூடத்து ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டாள் தர்மாம்பாள்.

    மாமிக்கு நேரிடையாகப் பதில் ஒன்றும் கூறாது மௌனமாகச் சமையலறைக்குள் சென்ற தேவகி, அங்கே சௌபாக்கியம் கோபவேசத்துடன் ஒரு மூச்சு சண்டைக்குத் தயாராக நிற்பதைக் கண்டாள். அதுசமயம் அவளிடம் பேச்சுக் கொடுப்பதே ஆபத்து என்று உணர்ந்த அவள் குனிந்த தலையை நிமிராமல் தனது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால், சௌபாக்கியத்தின் வாய் என்னவோ சும்மா இருக்கவில்லை. என் பெயருக்கு என்ன குறைச்சல் வந்துவிட்டதாம்! தர்மாம்பாள் என்ற பெயர் இந்தம்மாளுக்கு எந் விதத்தில் பொருத்தமாம்? உம்! தர்மத்திற்கும் இந்த அம்மாளுக்கும் எத்தனை தூரம்? என்று சினத்துடன் தாழ்ந்த குரலில் தேவகியைப் பார்த்து உறுமிவிட்டு, ஆத்திரத்துடன் தன் கையிலிருந்த பாத்திரத்தை டக்கென்று அடுப்பின்மீது வைத்தாள்.

    சமையற்காரிக்கும், எஜமானிக்கும் இடையே கிடந்து பேச முடியாது தவிக்க வேண்டியதொரு உத்தியோகத்தை தினமும் ஏற்றுப் பழகிப் போயிருந்த தேவகி, தர்மாம்பாளின் கோபத்தையும் லட்சியம் செய்யவில்லை. சௌபாக்கியத்தின் முணுமுணுப்பைக் கண்டும் அதிசயிக்கவில்லை.

    ஊஞ்சலிலே சாய்ந்துகொண்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பவள் போல் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்த தர்மாம்பாள், திடீரென நினைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். தேவகி; நாழியாச்சி! சந்துரு எழுந்திருப்பான். அவனுக்கும் மைதிலிக்கும் காப்பியை எடுத்துக்கொண்டு போய்க் கொடு. அப்படியே மாமா என்ன பண்றார்னு எட்டிப் பார்த்து வா என்று அதிகாரமான குரலில் இரைந்து உத்தரவிட்டாள்.

    மாமியின் உத்தரவுப்படியே தேவகி பசுபதி அய்யரின் இரண்டாவது புத்திரன் சந்திரசேகரனின் வாசஸ்தலமாகிய அந்தப் பெரிய ஹாலுக்குள் சென்றபொழுது, சந்திரசேகரன் சாய்வு நாற்காலி ஒன்றில் சாய்ந்த வண்ணம் எதிரே வீற்றிருந்த மனைவியின் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அலையெனச் சரிந்த கூந்தலும் வட்டவடிவமான அழகிய முகத்தின்மீது மிதக்கும் கருவண்டை நிகர்த்த இருபெரு விழிகளும் கொண்ட மைதிலி, தங்கப்பதுமை போன்று மிகவும் ஒயிலாக எதிரே இருந்த சோபாவின்மீது உட்கார்ந்திருந்தாள்.

    கடிதம் ரொம்பப் பெரியதல்ல, சிறியதுதான். வாசித்து முடித்துவிடுகிறேன். அப்புறம் நீங்கள் அந்தப் பேப்பரைப் படிக்க ஆரம்பிக்கலாம் என்று கொஞ்சலாகக் கூறிய அவள், முத்துக்களை நிகர்த்த பற்களின் வரிசை தெரிய சிரித்தாள்!

    பேசுகின்ற பொற்சித்திரம் போன்ற அழகானதொரு மனைவியை அடைந்தோம்! என்று தனக்குள்ளே இறுமாந்து மகிழ்ந்து கொள்பவன் போல் சந்திரசேகரன் மைதிலியின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய பதில் ஒன்றும் கூறவில்லை. மைதிலியின் கரத்திலிருந்த கடிதத்தைக் கடைக்கண்ணால் கவனித்தபடி மேஜைமீது தான் கொண்டு வந்த காப்பிப் பாத்திரங்களை வைத்த தேவகி ஒருகணம் துணுக்குற்றாள். ஈஸ்வரன் தகப்பனாருக்கு எழுதிய அந்தக் கடிதம் மைதிலிக்கு எப்படிக் கிடைத்தது என்று வியப்படைந்த அவள், மேலே யோசிக்குமுன், தேவகி! மேலண்டை ரூமிலே எல்லாம் தாறுமாறாகக் கிடக்கிறது. சித்த எடுத்து வைத்துவிட்டுப் போ என்று புன்னகை ததும்பும் முகத்துடன் உத்தரவிட்டாள் மைதிலி.

    மைதிலியின் பிரத்தியேக அறை மிக்க அலங்கோலமான நிலையிலிருந்தது. முதல் நாள் வெளியே போவதற்காகத் தன்னைச் சிங்காரித்துக் கொண்ட அவள், வெறுப்புடன் களைந்து போட்டிருந்த பல புடவைகள் தரைமீது மூலைக்கொன்றாகச் சுருட்டி வீசப்பட்டுக் கிடந்தன. கண்ணாடிக்கு எதிரேயிருந்த மேஜைமீது தைலப் புட்டிகளும், வாசனைத் திரவியக் கிண்ணங்களும் தாறுமாறாகக் கிடந்தன. அறையைச் சுத்தப்படுத்தி, அவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தேவகியின் காதுகளில் மைதிலியும் சந்திரசேகரனும் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நன்றாகக் கேட்டது.

    இந்தக் கடிதம் உங்கள் தம்பி அப்பாவுக்கு இரண்டு வருஷங்களுக்கு முன் அமெரிக்காவுக்குப் போன புதிதில் எழுதியதாக்கும். நேற்று ‘லைப்ரரி’ புத்தகமொன்றைப் பிரிக்கும்பொழுது அதில் கிடந்தது. நான் படித்துப் பார்த்தேன். கடிதத்தின் போக்கைப் பார்த்தால் உங்கள் தம்பியை இன்ஜினியர் பரீக்ஷைக்குப் படிக்க அனுப்பியதைவிட, பத்திரிகைத் தொழிலுக்கு அனுப்பியிருக்கலாம் என்று தோன்றுகிறது என்று கூறிய மைதிலி, ‘க்ளுக்’கென்று சிரித்தாள்.

    கொஞ்சம் சுவாரஸ்யமான கடிதம் போலிருக்கிறது. எங்கே, படி பார்க்கலாம் என்றான் சந்திரசேகரன் ஆவலுடன்.

    கொஞ்சமென்ன! ரொம்ப சுவாரஸ்யமான கடிதம். குறுக்கே பேசாமல் கேளுங்கள் என்று முகத்தைக் கொஞ்சலாக ஒரு தடவை குலுக்கிவிட்டு, மைதிலி கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.

    "அன்புள்ள அப்பாவுக்கு,

    ஈஸ்வரன் அநேக நமஸ்காரம். இங்கே வந்து சேர்ந்து பல நாட்களாகியும் எனக்கு ஓய்வு ஒழிச்சலின்றி வேலை இருந்ததனால் உடனே கடிதம் எழுதக் கூடவில்லை. மன்னிக்கவும்.

    சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட எங்களது கப்பல் ஹாங்காங் துறைமுகத்திலே வந்து ஒரு நாள் முழுவதும் தங்கிவிட்டது. அருமையான அந்தச் சந்தர்ப்பத்தை வீணாக்காது நானும் என்னுடன் வந்த சிலரும் கப்பலைவிட்டு இறங்கி ஊருக்குள்ளே சென்று நன்றாகச் சுற்றிப் பார்த்தோம். மறுநாள் காலை புறப்பட்ட எங்களது கப்பல் எங்குமே நிற்கவில்லை. நீல அலை வீசும் பசிபிக் மகாசமுத்தரத்தின் நீரைக் கிழித்துக் கொண்டு பதினான்கு நாட்கள் ஒரே ஓட்டமாகப் புதிய உலகை நோக்கி ஓடியது. பதினான்காம் நாள் காலை நாங்கள் கலிபோர்னியாவில் ஸான்பிரான்ஸிஸ்கோவை அடைந்தோம். ஒருநாள் முழுவதும் துறைமுகத்திலேயே காத்துக்கிடக்க நேர்ந்தது. இந்த அமெரிக்கர்கள் இருக்கிறார்களே, ரொம்பக் கண்டிப்பானவர்கள். எல்லாப் பரிசோதனைகளையும் முடிக்காமல் லேசில் அன்னியர்களை உள்ளே அனுமதிப்பதில்லை.

    கலிபோர்னியாவின் பல்கலைக்கழகம், ஸான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து ஏழு மைல் தூரத்திலேயே பார்ஸி என்னுமிடத்தில் இருப்பதனால் அதன் அருகிலேயே இருக்கும் இண்டர்நாஷனல் ஹவுஸிலே நாங்கள் தங்கியிருக்கிறோம். இங்கே என்னுடன் கூட சுமார் அறுநூறு மாணவர்கள் இதில் வசிக்கின்றனர். அதில் நானூறு பேர் பையன்கள்; மீதியுள்ளவர்கள் மாணவிகள். உலகத்தின் பல திக்குகளின்றும், பலவிதக் கலைகளையும் கற்க வந்து குவிந்திருக்கும் இந்த மாணவர் குழாம், பார்ப்பதற்கு விசித்திரமாகத்தான் இருக்கின்றது.

    சாப்பாட்டு விஷயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டதைப் போன்று எனக்குச் சிரமம் ஏற்படவில்லை. பாலும் பழங்களும் மிக மலிவாகவும் யதேஷ்டமாகவும் கிடைக்கிறதனால் நமது ஆச்சாரத்திற்குப் பாதகமின்றி வாழ வசதியாக இருக்கின்றது. ஸான்பிரான்ஸிஸ்கோ நகரில் சுமார் ஆயிரத்தொண்ணூறு ஹோட்டல்கள் இருக்கின்றன. அவ்வளவு இருந்தும்கூட இங்கே ‘ரேஷன்’ பேச்சே கிடையாது.

    உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றால்தான் என்ன? மனிதனை மனிதனின்று பிரிக்கும் ஜாதி, மத வித்தியாச உணர்ச்சி, கடலைக் கடந்து வந்துள்ள இந்த மாணவர்களையும் விட்டபாடில்லை என்பதைக் காண எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்திய மாணவருடன் ஜப்பானிய மாணவன் உறவுடன் பழகுவதில்லை. எகிப்தியன், சீனா தேசத்தவனுடன் உறவாடுவதை விரும்புவதில்லை. ஒவ்வொருவரும் தனது தேசத்தவனுடனேயே கூடி, மற்ற வகுப்பினரிடையேயிருந்து பிரிந்து வாழ்வதிலே இங்கேயும் ஆர்வம் காட்டுகின்றனர். மனித வேற்றுமை உணர்ச்சியை அகற்ற காலத்தைத் தவிர, மார்க்கமே இல்லை என்பது திண்ணம்.

    காலேஜுக்கு இந்த வருஷத்துப் படிப்பிற்கு முந்நூறு டாலர்களும் புத்தகங்களுக்கு நூறு டாலர்களும் செலவழிக்க நேர்கின்றது. இங்கே தங்குவதற்கு மாதம் குறைந்தது இருநூறு டாலர்களாவது செலவழிக்க வேண்டிவரும். மற்றபடி நான் மிகவும் சிக்கனமாகத்தான் இருக்கிறேன். ஒரு டாலர் என்பது சுமார் மூன்றரை ரூபாய்க்குச் சமம் என்று வைத்துக்கொண்டு கணக்கு போட்டால்தான் உங்களுக்குப் புரியும்."

    கடிதத்தைப் படிப்பதை இத்துடன் நிறுத்திவிட்டு மைதிலி தனது கணவன் முகத்தை யோசனைமிக்கவளாக நிமிர்ந்து பார்த்தாள்.

    அப்படியானால் மாதம் ஒன்றுக்கு எழுநூற்றைம்பது ரூபாய்களா செலவாகிறது? இந்த இரண்டு வருஷப் படிப்பிற்குச் சுமார் இருபதினாயிரம்வரை செலவாயிருக்கும் போலிருக்கிறதே! போக்குவரத்துச் செலவுகளையும் சேர்த்துப் பார்த்தால், ஏதேது, அரை லட்சத்திற்குக் கணக்கு ஓடிவிடும் போலிருக்கிறதே என்ற பிரமிப்புடன் கண்களை அகல விரித்து நோக்கினாள்.

    வெளிநாட்டுப் படிப்பு என்றால் சும்மாவா? என்று சூள் கொட்டினான் அவள் கணவன்.

    ஒரு பக்கத்தில் சின்னவருடைய வெளிநாட்டுப் படிப்புக்குப் பணம் ஜலமாக உபயோகப்படுகிறது. இன்னொரு பக்கத்திலே பெரியவர் பாட்டில் ரேஸில் பணத்தைக் கொண்டு போய் வாரி இறைக்கிறார். இப்படியே போனால் வீடு என்ன கதியில் முடியப் போகிறதோ தெரியவில்லை என்று பெருமூச்செறிந்தாள் அவள்.

    சந்திரசேகரனுக்கு அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது. கம்பெனி விஷயமாக வெளியூருக்குச் சென்ற அண்ணன் ஜெயராமன், பல தினங்கள் ஆகியும் திரும்பி வரவேயில்லை.

    இந்த வாரம் வந்துவிட வேண்டியவன் ஜெயராமன். ஏனோ தெரியலை, கடிதங்கூடப் போடாமல் அங்கேயே தங்கிவிட்டான் என்றான் கவலை நிறைந்த குரலில் அவன்.

    அங்கே ‘ஸீஸன்’ முடிய வேண்டாமோ? கம்பெனி காரியமாகப் போயிருந்தால்தானே சீக்கிரம் திரும்புவதற்கு? என்று விஷமமாகச் சிரித்தாள் மைதிலி.

    சந்திரசேகரன் உதட்டை வெறுப்புடன் கடித்துக் கொண்டான். "சரி; மேலே வாசி, கேட்போம். ஈஸ்வரன் அங்கே இன்னும் எப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1