Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayanizhal
Mayanizhal
Mayanizhal
Ebook123 pages47 minutes

Mayanizhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வைரவியாபாரியான நீலகண்டனின் மகள் திருமணத்திற்கு நாள் குறித்திருக்கும் நிலையில் கடத்தப்படுகிறாள். ரகசிய விசாரணைக்கு இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். நீலகண்டனின் கடந்த கால சிக்கல் ஒன்றுஅவளைப் பின்தொடர்கிறது. ஜாதி என்னும் மாயப்பிசாசு நிகழ்த்திய ஆணவக் கொலை ஒன்றைப் பற்றிய கதை

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580126908424
Mayanizhal

Read more from Latha Saravanan

Related to Mayanizhal

Related ebooks

Reviews for Mayanizhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayanizhal - Latha Saravanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாயநிழல்

    Mayanizhal

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    சூலமங்களம் சகோதரிகளின் கந்தர் ஷஷ்டி கவசத்தில் நனைந்தபடியே கற்பூர ஆரத்தியை கண்களில் தொட்டுக் கொண்ட நீலகண்டன் தங்க பிரேமிட்ட கண்ணாடிக்கு மேல் இருந்த நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டார்.

    பட்டுசேலை சரசரக்க குங்கும வகிட்டோடும், புன்னகை சிரிப்போடும் அந்த கால புன்னகை அரசியின் சாயலில் வந்த மனைவியின் கைகளில் இருந்த பார்சலை வாங்கியபடியே, போனமா வந்தமான்னு சுருக்க வந்திடுங்க. பத்து நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்போ அந்த ஊர்ல இருக்கிற கோவிலுக்குப் போயே தீரணுமா? அது நம்ம குலதெய்வமும் இல்லையே?!

    குலதெய்வமா இருந்தாத்தான் கும்பிடணுமா வசந்தா. நான் பிறந்து வளர்ந்த ஊர், உன்னைப் பார்த்தது நம்ம கல்யாணம் நிச்சயமானது ஏன் என் வாழ்நாளின் ஒட்டுமொத்த நல்லதும் கெட்டதும் அந்த கோவிலின் வாசலில்தான். நியாயப்படி இந்த கல்யாண நிச்சயம் ஆனதுமே நான் அங்கே போயிருக்கணும் ஆனா முடியலை. உறுத்திட்டே இருந்தது. அதான் கிளம்பிட்டேன்.

    சரிங்க நான் சொன்னா நீங்க கேட்கவா போறீங்க பத்திரமா போயிட்டு வாங்க. காரைத் துடைத்துக் கொண்டிருந்தவன் அவசரமாய் நீலகண்டன் கையிலிருந்த பார்சலை வாங்கி பின்சீட்டில் திணித்தான். உள்ளே இரண்டு பிளாஸ்க்குள் பிஸ்கெட் பாக்கெட்டுகள் இத்தியாதிகள் முளைத்திருந்தது. காரின் இருக்கை அவரை உள்வாங்கியதும் கார் சீறிப் புறப்பட்டது.

    காதலிக்க ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால் ... என கோராஸாகப் பாடலாம் போல அழகில் ரோஜாக்குவியலைப் போல் உறங்கிக்கொண்டு இருந்தாள் ஜெயா.

    வைரவியாபாரி நீலகண்டனின் ஒரே மகள்.

    மணி எட்டாச்சு போற இடத்திலே இத்தனை நேரம் தூங்கிட்டு இருந்தா என்ன பிள்ளையை வளர்த்திருக்காங்கன்னு என்னைத்தான் குறை சொல்லுவாங்க. நான்காம் முறையாக அம்மாவின் குரல் காதை துளைக்க, அடித்தொண்டையில் போர்வைக்கடியில் லோகேஷ்ஷிடம் பேசியபடி, அம்மா வந்தாச்சு நான் தூங்கிகிட்டு இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்காங்க கட் பண்ணிடறேன். என்று அவன் பதிலுக்கு எதிர்பாராமல் வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு பல் தேய்த்து வந்தவளிடம் நுரை ததும்ப காபி நீட்டப்பட்டது. உன் செல்லம் எல்லாம் என்கிட்டேதான்டி அங்கே உன் பருப்பு வேகாது.

    அதெல்லாம் குக்கரில் எக்ஸ்ட்ரா விசில் வைத்து வேக வைச்சிடுவேன். என்று சிரித்து தலையில் ஒரு கொட்டு வாங்கினாள். காலையிலே நமக்கு முன்னாடியே எழுந்து வாசல்பெருக்கி கோலமிட்டு தலையிலே ஈரடவல் சுற்றி மருமக காப்பி கொண்டு வரணுமின்னு எல்லாம் அவங்க வீட்டுலே நினைக்க மாட்டாங்களாம். இன்பேக்ட் அவங்க வீட்டுலே எல்லாத்துக்கும் வேலைக்காரி உண்டு. தமிழ்நாட்டுலேயே பெரிய வைர வியாபாரி ஆனா வீட்டுலே கட்டின பொண்டாட்டி கையிலே கரண்டியைக் கொடுத்து உன்னை அடுப்படிக்குத் துரத்திட்ட அப்பா மாதிரியில்லை.

    என்னடி வாய் நீளுது ? கட்டின புருஷனுக்கு நம்ம கையால பச்சைத்தண்ணி பரிமாறினா கூட அது அமிர்தம்டி. நம்ம குடும்பத்து மனுஷங்க மேல நமக்கு இல்லாத அக்கறையா அடுத்தவங்களுக்கு வந்திடப்போகுது.

    ஊர்லே பாதிபேர் கேன் தண்ணிதான் அதைக்கூட அவங்களே எடுத்து குடிக்கணும். அப்பாவும் நீயும் இன்னமும் அப்டேட் ஆகாமயே இருக்கீங்கம்மா. நீ பதிபக்தியை நிறுத்திட்டு தப்பட் படத்தைப் பாரு. என்று கண்ணடித்தாள்

    ஏன் ?! தாலிகட்டின பொண்டாட்டியை ஒரே அறை உடனே அந்த பொண்ணு டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடறாங்க, ஆணோ பொண்ணோ தாலி கட்டினதால மட்டும் அடிமையாகிட முடியாதே வாழுறது ஒரு வாழ்க்கை அதை நம்ம விருப்பப்படி பார்க்கணும். மக்கு அவர் உன் பத்திரிக்கையை எடுத்துட்டு கோவில் கோவிலா சுத்தறார். நீ இப்பவே அபசகுணமா டைவர்ஸ் பத்தியா பேசறே? மறுபடியும் ஒரு கொட்டு வாங்கியவள்.

    நீ இப்படி கொட்டி கொட்டியே, என் மண்டை பழைய ஒனிடா டிவி பூதம் மாதிரி ஆகப்போகுது பாரு... என்றாள் தலையைத் தடவியபடியே...

    சம்பந்தி வீட்டுலேயிருந்து போன் பண்ணியிருக்காங்க இன்னும் அரைமணியில் வர்றாங்களாம். நான் உன்கூட அரட்டையில் அதை மறந்திட்டேன். போய் குளிச்சிட்டு நல்லதா ஒரு புடவையைக் கட்டிக்கிட்டு லட்சணமா வா. என்று அம்மா அவசரமாய் அவளை கிளம்ப சொல்லும் போதே வாசலில் கார் ஹாரன் சப்தம்.

    ‘இத்தனை நேரம் போனில் பேசிக்கொண்டிருந்தாரே வருகிறேன் என்று சொல்லவே இல்லையே’ என்ற மில்லியன் டாலர் கேள்விகளைச் சுமந்தபடி ஷவரைத் திருகினாள் ஜெயா.

    அவள் கீழே இறங்கி வருவதற்குள் வசந்தா அவர்கள் வயிற்றை குளிர்வித்தற்கு அடையாளமாய் கண்ணாடித் தம்ளர்கள் பாதி காலியாகி இருந்தது. ‘ஏன் போனில் வருவதை தெரிவிக்கவில்லை’ என்று செல்லமாக கோபமும், ‘எல்லாம் ஒரு சஸ்பென்ஸ்தான்’ என்று மாப்பிள்ளையின் கண்களில் ஒரு குறும்பும் எட்டிப்பார்க்க, அம்மா ஏதோ மறுப்பது காதில் விழுந்தது.

    அட என்னங்க அண்ணி, கல்யாணம் நிச்சயமாகி இரண்டு மாசத்திலே அந்த பிள்ளைங்க இதுவரையில் வெளியே போகணுன்னு கேட்டதே இல்லை, இப்போ அவனோட பிரண்டுங்க கொடுக்கிற பார்ட்டிக்கு போய் அப்படியே பத்திரிக்கை கொடுத்துட்டு வரணுன்னு ஆசைப்படறான். லோகேஷின் தாய் கறுப்புகவுன் மாட்டாத குறையாய் மகனுக்காய் வாதிட்டாள்.

    உங்களுக்கே தெரியும் அண்ணி அவருக்கு இதிலெல்லாம் அத்தனை பிடித்தம் இல்லை. தெரிந்தா கோவிச்சிப்பார். சொல்லும்போதே இளசுகளின் கண்களில் தெரிந்த நிராசையில் மனம் கசந்தது. ‘அவர்தான் ஊரில் இல்லையே போயிட்டு வரச்சொல்லலாமா?’ என்று மனதின் ஓரம் ஒரு மூலையில் இருந்து சாத்தானின் குரல். ‘ஆனால் நீலகண்டன் கோபம் வந்தால் ருத்தரமூர்த்தி ஆகிவிடுவாரே... எதுவும் சம்பிரதாயப்படி நடக்கவேண்டும் என்பது அவரின் எழுதப்படாத விதியும் ஆயிற்றே’ எனவே இருமனதோடு, அது வந்து..... என்று தயங்க...

    இப்ப என்ன அண்ணன்கிட்டே லோகேஷின் அப்பாவைப் பேச சொல்றேன் சரியா? என்று தன் கணவருக்கு தந்தியைப் போல சுருக்கமான வார்த்தைகளை கொட்டி விட்டு, பிரச்சனை முடிஞ்சாச்சு நீ கிளம்பு ஜெயா இந்த உடையே பிரமாதம் தான். என்று எதிர்கால மருமகளை கிளப்ப அவளும் அம்மாவை பயப்பார்வை பார்த்தாள். அப்பாவின் கோபம் அவளறியாததா? உடைமாற்றி வருவதற்குள் எங்கே அவங்க

    Enjoying the preview?
    Page 1 of 1