Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha Micro Nodigal
Antha Micro Nodigal
Antha Micro Nodigal
Ebook76 pages21 minutes

Antha Micro Nodigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொருவரின் மனதிற்குள் ஒளிந்திருக்கிறது சைக்கோ என்னும் மிருகம். இவர்களை அநேகம் வெளியே தேடிக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளை அடிப்பது கூட ஒருவித சைக்கோத்தனத்தின் உச்சியே! இந்த கதைகள் நெடுக உண்மைகளைச் சுமந்து தனக்குள் ஒளிந்திருக்கும் அந்த மிருகத்தை வெளிக்கொண்டு வந்த மனித மிருகங்களின் கதை. பதுமைபோல் பார்வை செலுத்து நேரம் வாய்க்கும் போது சட்டென்று பாய்ந்து குரல் வளையைக் கடிக்கும் ஐந்தறிவு மிருகத்திற்கும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580126908484
Antha Micro Nodigal

Read more from Latha Saravanan

Related to Antha Micro Nodigal

Related ebooks

Related categories

Reviews for Antha Micro Nodigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha Micro Nodigal - Latha Saravanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அந்த மைக்ரோ நொடிகள்

    Antha Micro Nodigal

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    வரலாற்றுக்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது..

    1

    அந்த அதிகாலை விடியலின் ஒளி கூட ஒட்டுமொத்த உலகிற்கும் நிரூபிப்பது முதல் மைக்ரோ நொடிக்குள் தான்! ரகசியங்களை ரகசியமாகவே சுமந்த உலகின் இருள் சொரிந்த பக்கங்கள் அனுபவித்த சுகங்களும், பாரங்களும், துயரங்களும் அந்தக் கணத்தில் நிகழ்ந்தவையே. நிறை சூல் பெண்ணின் அடிவயிற்றை முட்டி மோதி தன் பிறப்பை உறுதி செய்யும் அந்த மைக்ரோ நொடிகள் தான் ஒரு உயிரின் ஜனனம்.

    ஆகச் சிறந்த காதலின் பேரில் யாரோ ஒருவனின் மகளின் உன்னதத்தை ருசி பார்க்கும் அந்தக் காதலனின் அணைப்பில் அவள் மயங்குவதும் அந்த மைக்ரோ நொடிகளே! வாள் முனையைக் கூர் செய்து தன் எதிரியின் தலைசீவும் மாவீரனின் வெற்றிக் கனியும், இரவு முழுவதும் இலக்கியத்துடன் கலவி புரிந்த கவிஞன் அதிகாலையில் அவசர கதியின் கவிதைக் குழந்தையைப் பிரசவிப்பதும், ஒரு நொடிக்குள் தனக்கே நெருப்பு வைத்துக் கொள்ளும் மெழுகு வர்த்தியும்தான் இங்கே மைக்ரோ விநாடிகள், அதன் இருட்டைப் போக்கும்திறனே ஹாட்ரிக் முடிவுகள்.

    60 தினங்களின் தொடக்கத்தில் நாளைய விடியல் என்னும் கேள்விக்குறியைச் சுமந்த சாமானியனின் மூளையில் பிரேக்கிங் நியூஸூம் லூடோக்களும் நிறைந்த ஒரு வெறுமையான வாழ்க்கைக்கு நம்மைத் தள்ளிய ஹூவான் நகரின் கடல் வியாபார சந்தையின் இறால்களுக்கு இடையில் பிறந்த கரோனாவுக்கும் ஆழங்கள் தேடித் திரியும் அலைகளின் நுனியில் சிக்கிய நுரைகளைப் பின்தொடரும் மணல் துகள்களுக்குள் கண்ணாமூச்சு காட்டும் நண்டுகளின் மண் மறைவிலும் அந்த நொடிகளின் தாக்கம் இருந்திருக்கிறது. அந்த மைக்ரோ விநாடி சிந்தனைகளும் முடிவுகளும் மனிதன் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைதான் அந்த மைக்ரோ நொடிகள் சொல்லப் போகிறது."

    இதயக் கீழ் அறை நோக்கி தமனிகள் சுமந்து செல்லும் உயிர்வளிக் குருதியைப் போல பல தகவல்களையும் அது சுமந்து செல்கிறது. இள ரத்தம் அதான் இத்தனை சுறுசுறுப்பு என்று நம் தமிழ் சினிமாக்களில் டயலாக் கேட்டு இருப்போமே அதைப் போலத்தான். கட்டளைகளின் வீரியத்தை அதன் செயல்பாடுகளைச் சரியானது

    Enjoying the preview?
    Page 1 of 1