Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thamirabarani Karaiyinile
Thamirabarani Karaiyinile
Thamirabarani Karaiyinile
Ebook102 pages41 minutes

Thamirabarani Karaiyinile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் 68 வயதான நுண் கருவியியல் ஆலோசகன். (instrumentation consultant).

அமரர் திரு. அப்துல்கலாம் அவர்களும், அமரர் திரு சுஜாதா அவர்களும் படித்த சென்னை தொழில் நுட்பக்கல்லூரியில் (MIT) தொழில் நுட்பம் பயின்ற பாக்கியவான்.

பல்லாண்டுகளாக தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் படைப்புகள் பல படித்து நானும் எழுத ஆசைப்பட்டு, சில வருஷங்களாக சமூக தளங்களில் சிறு கதைகள் பல எழுதியுள்ளேன்.

என் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய நண்பர்கள் இக்கதைகளைப் புத்தகமாக வெளியிடும்படி வற்புறுத்தியதால் இந்த முயற்சி.

என் பிறந்த ஊரான திருநெல்வேலியின் பக்கத்தில் தாமிரபரணிக் கரையில் அமைந்த கோடகநல்லூரின் பின்புலத்திலும் சில கதைகள் எழுதியுள்ளேன். இதனால் இச்சிறுகதைத் தொகுப்புக்கு "தாமிரபரணிக் கரையினிலே" என்று பெயரிட்டுள்ளேன்.

- கி. ரமணி

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580138006180
Thamirabarani Karaiyinile

Related to Thamirabarani Karaiyinile

Related ebooks

Reviews for Thamirabarani Karaiyinile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thamirabarani Karaiyinile - K. Ramani

    http://www.pustaka.co.in

    தாமிரபரணிக் கரையினிலே

    ஒரு சிறுகதைத் தொகுப்பு

    Thamirabarani Karaiyinile

    Short Stories

    Author:

    கி.ரமணி

    K. Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/k-ramani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. விருச்சிகம்

    2. தன்னம்பிக்கை

    3. காந்திஜியும் தாத்தாவும்

    4. யார் மணமகன்?

    5. வைதவ்யம்

    6. துரோகம்

    7. விதி

    8. குப்பு

    9. இரு கோடுகள்

    10. ஒரு வேப்ப மரத்தின் கதை

    11. ஹிட்லர் மாமா

    12. கொலையா கொள்ளையா

    முக உரை

    நான் 68 வயதான நுண் கருவியியல் ஆலோசகன். (instrumentation consultant).

    அமரர் திரு. அப்துல்கலாம் அவர்களும், அமரர் திரு சுஜாதா அவர்களும் படித்த சென்னை தொழில் நுட்பக்கல்லூரியில் (MIT) தொழில் நுட்பம் பயின்ற பாக்கியவான்.

    பல்லாண்டுகளாக தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் படைப்புகள் பல படித்து நானும் எழுத ஆசைப்பட்டு, சில வருஷங்களாக சமூக தளங்களில் சிறு கதைகள் பல எழுதியுள்ளேன்.

    என் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய நண்பர்கள் இக்கதைகளைப் புத்தகமாக வெளியிடும்படி வற்புறுத்தியதால் இந்த முயற்சி.

    என் பிறந்த ஊரான திருநெல்வேலியின் பக்கத்தில் தாமிரபரணிக் கரையில் அமைந்த கோடகநல்லூரின் பின்புலத்திலும் சில கதைகள் எழுதியுள்ளேன். இதனால் இச்சிறுகதைத் தொகுப்புக்கு தாமிரபரணிக் கரையினிலே என்று பெயரிட்டுள்ளேன்.

    இத்தொகுப்பில் அமைந்த கதைகளில் வரும் எல்லாப் பாத்திரங்களும் கற்பனையே. இவை எந்த உயிருடன் இருப்பவரையோ, மறைந்தவரையோ குறிப்பிடுபவை அல்ல.

    இக்கதைத் தொகுப்பை வெளியிட ஊக்கமளித்த எல்லோருக்கும் நன்றி.

    கி. ரமணி

    *****

    1. விருச்சிகம்

    திருநெல்வேலிக்கு தெற்கே 17 கிமீ தொலைவில், பொருணை எனும் தாமிரபரணித்தாய் தன் கருணை நிறைந்த அலைக்கரங்களால் அன்புடன் வருடும் புல் அடர்ந்த கரைகள் கொண்ட பல அழகுமிகு கிராமங்களில் கோடக நல்லூர் முக்கியமானது.

    திருமாலும், ஈசனும், கோயில்கள் கொண்டு, பல நூற்றாண்டுகளாக அருள் புரியும், உன்னதமான புண்ணிய ஸ்தலம்.

    தொலைநோக்கிக்கு எட்டும் தூரத்துக்கு நெல் வயலின் பசுமைக் கம்பளங்கள், அடர்த்தியான வாழை தென்னை, மேற்கில் தொடர்ச்சியான மலைச்சங்கிலி, இவற்றுக்கு நடுவே உருக்கிய வெள்ளியாக நெளிந்து வளைந்து சர்ப்பம் போல் தவழும் தாமிரபரணி நதி, நதியில் காலை வருடும் மீன்கள், நதிக்கரை நாணல், புல் தரை, பூவரசம் பூக்கள் குலுங்கும் மரங்கள். விநோதப் பறவைகள், மேயும் ஆடுமாடுகள், புற்றில் பாம்புகள், கோவில்கள், திருவிக்ரமன் போல உயர்ந்து பரந்து நிற்கும் ஆலமரம், துடைக்கப்பட்டது போன்ற தெருக்கள், வரிசை ஓட்டு வீடுகள், வீட்டுத் திண்ணைகள், கம்பியிட்ட ரேழிகள், வாசலில் கோலங்கள், பக்கத்தில் வாடாமல்லி பூச்செடிகள், வீட்டுக்கூரையில் சில வேளையில் கூவும் மயில்கள்...

    இயற்கையின் சிம்ஃபனி.

    கோடக நல்லூர் மிகச்சிறிய ஊர். கூகுள் புண்ணியத்தில் இன்று கண்டுபிடிப்பது மிக எளிது.

    கொஞ்சும் நெல்லைத்தமிழுடனும், பாரம்பர்யத்துடனும், இன்றும் கிட்டத்தட்ட பழய களையோடு அமைந்த ஒரு சில கிராமங்களில் கோடக நல்லூரும் ஒன்று.

    இன்றைக்கு அறுபது வருஷங்கள் முன்னர் மேலும் கூடிய எழிலுடன், உயிரோட்டத்துடன், ஊர் நிறைய மனிதர்களுடன், அவர்களின் உணர்ச்சிகளுடன், பண்புகளுடன், பழக்கங்களுடன், சோதனைகளுடன், சாதனைகளுடன், உன்னதமாக இருந்த சமயம்.

    1959 ம் வருஷம் கோடக நல்லூரில் என் தாத்தா வீட்டில் இருந்து கொண்டு நான் நாலாப்பு (4ம் வகுப்பு) படித்த சமயம் தான் இச்சம்பவம் நடந்தது.

    கோதைப்பாட்டி ஒரு கோடகநல்லூர் வாசி. வயது எழுபதிலிருந்து எழுபத்தைந்துக்குள் இருக்கலாம். நிச்சயமாக யாருக்கும் தெரியாது. என் கொள்ளுப்பாட்டி (தாத்தாவின் அம்மா)யின் தமக்கை. விதவை.

    பிள்ளை குட்டி இல்லை. ஒல்லியான கூன் விழுந்த, முக்காடிட்ட உருவம். கண் பார்வை கொஞ்சம் மந்தம். ஊரில் வீடும் கொஞ்சம் நிலமும் இருந்ததால் தினசரி வாழ்க்கைக்குப் பஞ்சமில்லை. கடிவாளம் கட்டியது போல ஒரே சீரான மாற்றமில்லாத, அலுக்காத, வாழ்க்கைப் பயணம்.

    காலை நாலரை மணிக்கு எழுந்திருப்பாள். அஞ்சு மணிக்கு கொல்லைப்புறத்திலுள்ள தாமிரபரணி ஆத்தங்கரை சென்று குளிப்பாள். வீட்டுக்கு வந்து ஈரத்துணியுடன் வீட்டு வாசலைப் பெருக்கிப் பின் செப்புச் சொம்பிலிருந்து தண்ணீர் தெளிப்பாள். பிறகு அரைகுறை வெளிச்சத்தில் சற்று எம்பி, வாசல் கதவின் மேல் உள்ள பிறையைத் துழாவி, கோல மாவு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து எடுப்பாள்.

    பின் வீட்டு வாசலில் கலிடாஸ்கோப் பிம்பம் போல ஒரு அழகான கோலம் போடுவாள்.

    அடுத்த ஒரு மணி நேரம் பூஜை, பின் கோவில், அப்புறம் சமையல். பத்து மணிக்கு சாப்பிட்டுவிட்டு மீதி சாதத்தில் நீர் விட்டுவிட்டு (இரவுக்கு) வாசலுக்கு வந்து திண்ணையில் அமர்ந்து விட்டாள் என்றால் அவளுடைய ராஜ்ய பரிபாலனம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.

    தெருவில் போகும் ஒவ்வொருவரையும் கூப்பிட்டு விசாரித்து, (ஏண்டி, காமு! ஆத்துக்காரன் கோச்சுண்டு பத்தமடை போய்ட்டான்னு சொன்னியே. வந்துட்டானா?) வம்புகேட்டு, அனுதாபப்பட்டு, அறிவுரை சொல்லி முடிப்பதற்குள் சாயங்காலம் ஆகிவிடும். பிறகு கோவில், பின் நீராகாரம், மரக்கட்டைத் தலையணையுடன் தரையில் படுக்கை என்று நாள் முடியும்.

    இப்படி அழகாத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை - அந்த ஒரு நாள் வரை.

    கோடகநல்லூர் நல்ல பாம்புக்கும், தேளுக்கும் பேர் பெற்றது. நல்ல பாம்பு சர்வ சாதாரணமாக கண்ணில் படும். ஆனால் பெருமாளுக்கும் சத்தியத்துக்கும் கட்டுப்பட்டது என்பதால் இதுவரையில் யாரையும் அந்த ஊரில் கடித்ததில்லை என்பது ஊர் வரலாறு மற்றும் நம்பிக்கை.

    ஆனால் தேள் அப்படிப்பட்ட ஜந்து அல்ல.

    Enjoying the preview?
    Page 1 of 1