Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meera Yathirai
Meera Yathirai
Meera Yathirai
Ebook100 pages35 minutes

Meera Yathirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kalki was the pen name of R. Krishnamurthy (September 9, 1899 to December 5, 1954), a noted Tamil writer, film & music critic, Indian independence activist and journalist from Tamil Nadu, India. Krishnamurthy's first attempt at writing fiction also came during that period. In 1923 he became a sub-editor on Navasakthi, a Tamil periodical edited by Tamil scholar and freedom fighter V. Kalyanasundaram, known as Thiru Vi. Ka. Krishnamurthy's first book was published in 1927.In 1941 he left Ananda Vikatan and rejoined the freedom struggle and courted arrest. On his release after three months he and Sadasivam started the weekly, Kalki. He was its editor until his death on December 5, 1954. In 1956, he was awarded the Sahitya Akademi Award posthumously for his novel Alai Osai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101704030
Meera Yathirai

Read more from Kalki

Related to Meera Yathirai

Related ebooks

Reviews for Meera Yathirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meera Yathirai - Kalki

    http://www.pustaka.co.in

    மீரா யாத்திரை

    Meera Yathirai

    Author:

    கல்கி

    Kalki

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalki-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பதிப்புரை

    மீரா யாத்திரை

    மீரா - திரைப்படக் கதை

    1. கண்ணன் காதல்

    2. கல்யாணம்

    3. ஆலய நிர்மாணம்

    4. விஜயதசமி

    5. அன்பு வலை

    6. முத்து மாலை

    7. விடுதலை

    8. ஜீவ யாத்திரை

    9. இதயக்கோவில்

    மீரா கீதங்கள்

    ஹிந்தி மீரா

    புது டில்லியில் மீரா கவியரசி சரோஜினி தேவியின் வாழ்த்து

    காற்றினிலே வரும் கீதம்!

    பதிப்புரை

    தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான சாதனைகளை உருவாக்கிய திரைப் படங்கள் இரண்டு, ஒன்று டைரக்டர் கே. சுப்பிரமணியம் உருவாக்கிய 'தியாக பூமி', இன்னொன்று கல்கி டி. சதாசிவம் உருவாக்கிய 'மீரா', இரண்டுமே அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான கதைகள்.

    'மீரா' திரைப்படம் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எம். எஸ். என்கிற தென்னகத்து இசை வாணியை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய பெருமை பெற்றது. இதை ஹிந்தியிலும் தயாரித்தார்கள். கவிக்குயில் சரோஜினி தேவி, எம். எஸ் .ஸின் இசையிலும் நடிப்பேயில்லாத தடிப்பிலும் மனம் பறி கொடுத்து, படத்தின் முன்னுரையாகத் தாமே தோன்றிப் பேசும் பெருமை பெற்ற படம் இது.

    பண்டித ஜவாஹர்லால் நேரு. ராஜாஜி, அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்டு மவுண்ட் பாட்டன் தம்பதியர் என்று பலம் பெருமக்களின் பாராட்டுதல்களையும் பெற்ற மகத்தான திரைப்படம் அது. இன்றைக்கும் 'மீரா' திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரங்களில் பார்ப்போரை பிரமிப்படையச் செய்யும் தயாரிப்பாகக் காலம் கடந்தும் விளங்குகிறது. புகழ் பெற்ற காற்றினிலே வரும் கீதம் போன்ற அருமையான பாடல்களால் தமிழ் மக்கள் உள்ளத்தில் நீங்காத இடம் பெற்றார். இன்றைக்கு அகில உலகமும் மதித்து வணங்கிப் பாராட்டி மகிழும் இசையரசி எம்.எஸ். அவர்கள்,

    இந்தத் திரைப்படம் உருவான வரலாறு, பெற்ற பெருமைகள், இசை நுட்பம் - இவற்றோடு 'மீரா' படத்தின் முழுமையான திரைக்கதை வடிவத்தையும் தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறது.

    வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆய்வு மேற் கொள்கிறவர் களுக்கும், அமரர் கல்கியின் எழுத்துக் களை விரும்பிப் படிக்கும் வாசக அன்பர்களுக்கும் இச்சிறு நூல் பெரு விருந்தாக அமையும் என நம்புகிறேன்.

    அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    மீரா யாத்திரை

    சினிமா சக்தி வாய்ந்த சாதனம் என்று புரிந்து கொண்டு செயல்பட்டவர் 'கல்கி'. சினிமா பார்க்கப் போக வேண்டாம் என்று ராஜாஜி மக்களைக் கேட்டுக் கொண்டபோது, ராஜாஜியாலும் முடியாது என்று தலைப்புத் தந்து, அவரது வேண்டுகோளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதைக் குறிப்பிட்டு எழுதினார்.

    கூடவே படாதிபதிகளைப் பார்த்து, ராஜாஜி இப்படிச் சொல்கிறாரே என்று கோபப்படாதீர்கள். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று யோசியுங்கள். 'சினிமா பார்க்கப் போங்கள்' என்று ராஜாஜியே சொல்கிற மாதிரி படங்களைத் தயாரியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

    கல்கியின் கதைகள் பல திரைப்படங்களாயின என்றாலும் 1930களின் இறுதியில் கல்கி அவர்களே திரைக்கதை, வசனம் எழுதி நேரடி ஒத்துழைப்பு தந்த 'தியாகபூமி' மட்டுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வெற்றியும் அடைந்தது.

    அதே போன்று 1940 தொடக்கத்தில் 'கல்கி' பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட பிறகு, நண்பர் சதாசிவம் தயாரித்த 'மீரா' படத்துக்குப் பூரண ஒத்துழைப்புத் தந்தார்.

    ‘கல்கி' மீராவாக நடித்த மாறிய பார்வதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, மீரா யாத்திரை சென்ற இடங்களுக்கெல்லாம் தாமும் போனார். அவர் பின்னோடு படப்பிடிப்புக் குழுவும் சென்றது. குழுவில் ஒருவராகக் கல்கியும் சென்றார்.

    'மீரா' படத்தில் ஒலித்த மறக்க முடியாத பாடல்கள் பல 'கல்கி' இயற்றியவை. வசனமோ, கல்கி - சதாசிவம் ஒத்துழைப்பில் மலர்ந்த இலக்கியம்.

    'மீரா', அமோக வெற்றி பெற்றதுமில்லாமல், ஹிந்தியிலும் தயாராகி அகில இந்தியப் புகழ் அடைந்தது. நேருஜி, சரோஜினி நாயுடு, ராஜாஜி போன்ற பெருந்தலைவர்களின் ஏகோபித்த பாராட்டையும் மக்களின் மெய்சிலிர்ப்புடன் கூடிய பேராதரவையும் பெற்றது.

    1992, கல்கி பொன்விழா மலரில் இக்கட்டுரை மறுபிரசுரம் ஆன போது எழுதப்பட்ட முன்னோட்டக்குறிப்பு

    மீரா யாத்திரை

    இராஜகுமாரி மீரா தன் குழந்தை உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மாயக் கண்ணனை மணக்க விரும்பினாள். அவளுடைய விருப்பத்துக்கு மாறாகச் சித்தரர் ராணாவுக்கு அவள் மாலையிட நேர்ந்தது.

    ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் எற்படவில்லை . இரண்டு மூன்று கதைகனள அவருக்குச் சொல்லி,

    Enjoying the preview?
    Page 1 of 1