Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திருக்குமரனடியார்கள்
திருக்குமரனடியார்கள்
திருக்குமரனடியார்கள்
Ebook273 pages3 hours

திருக்குமரனடியார்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘மாசில்லாத அடியவர்கள் வாழ்கின்ற இடத்திற்கு தேடிச் சென்று அங்கு வாழ்பவன் முருகன்’ என்பதற்கேற்ப அருணகிரிக்கு, ‘முத்தைத்தரு....’ என்று அடி எடுத்துக் கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததும், கச்சியப்பருக்கு, ‘திகடச்சக்கர....’ என்று அடி எடுத்துக் கொடுத்து கந்த புராணம் பாட வைத்ததும், ‘கோழியை பாடும் வாயால் குஞ்சை பாட மாட்டேன்’, அதாவது சிவனை பாடிய வாயால் அவரது குமாரனை பாட மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பொய்யாமொழி நாயனாரிடமிருந்து பாடலைப் பெற விரும்பி திருவிளையாடல் புரிந்து, அவரை தமது அடியாராக்கிக் கொண்டதும், தனது அத்யந்த பக்தனான முசுகுந்த சக்ரவர்த்திக்கு தனது நவவீரர்களை அனுப்பியதும் என முருகனின் அருட்திறம் இப்புத்தகம் முழுவதும் விரவியிருக்கிறது.
பெரிய புராணத்தில் சுந்தரர் எவ்வாறு பாட்டுடைத் தலைவனாக சித்தரிக்கப்பட்டாரோ அவ்வாறே சேய்த்தொண்டர் புராணத்தில் அருணகிரிநாதர் பாட்டுடைத் தலைவனாக கொள்ளப்பட்டு, அவர் பிறந்தது, முருகன் அவரை ஆட்கொண்டது, தலம் தலமாக சென்று அவர் திருப்புகழ் பாடிய விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateDec 24, 2020
ISBN9788179507124
திருக்குமரனடியார்கள்

Related to திருக்குமரனடியார்கள்

Related ebooks

Related categories

Reviews for திருக்குமரனடியார்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திருக்குமரனடியார்கள் - புலவர் M.S.சுப்பிரமணியம்

    1. செந்தில் வாழ் அந்தணர்

    ஒரு சமயம் தேவர்கள் சூரபத்மனால் படும் துயர் குறித்து கயிலை நாதனிடம் முறையிட, உடனே சிவபிரான் அவர் தம் துயர் தீர, கந்தனை படையுடன் புறப்பட ஆணையிட்டனன். முருகனும் புறப்பட்டார். கயிலையில் இருந்து வந்தவர் முதலில் சேய்ஞலூர் (காவிரிக்கரைத் தலம்) வந்ததாய் குறிப்பிடுகிறார் ஆசிரியர். காவியத் தலைவன் ‘சேய்’ என்பதால் சேய்ஞலூரை முதலில் குறிப்பிட்டார் போலும்!

    பின்னர் முருகக் கடவுள் சூரனை வென்று வெற்றி வேலனாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார்.

    தில்லையில் கூத்தப் பெருமான் தனது பூசைக்கென்று மூவாயிரம் அந்தணர்களை அமர்த்தினான். அதேபோல் இருபதிற்று நூறு (இரண்டாயிரம் பேர்) அந்தணர்களை செந்திலாண்டவன் தனது பூசைக்கென்று அமர்த்தினான்!

    ‘அரிசுமந்திடு தவிசமர்ந்த செந்திலங்

    குரிசில் அம்புயப்பதங்குளிர நாடொறும்

    பரசும் அந்தணர் இருபதிற்று நூற்றுவர்

    ‘திரிசுதந்திரர்’ எனத் திகழும் மேலவர்

    (சேய்த்தொண்டர் புராணம்)

    அவ்வந்தணர்கள் திரிசுதந்திரர் என அழைக்கப்பட்டனர்! இவர்களிடம் செந்திலாண்டவன் ‘உங்களில் ஒருவனாய் இங்குறைகுவன்’ என்று முன்னாள் செங்கைவேல் அமலன் சொற்ற திருமொழி சிரமேற்கொண்டு வாழ்ந்தனர் செந்தில் வாழ் அந்தணர். நடராசப் பெருமானும் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் தானே!

    செந்தில்வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்.

    ŸŸ×ŸŸ

    2. அகத்திய நாயனார்

    இமயமலையில் பார்வதி தேவியைத் திருமணம் புரிய பெருமான் வந்தபோது, தேவலோகத்தோரும் பிறரும் ஒரே சமயத்தில் கயிலையில் கூடிவிட்டனர்!

    ‘........ அந்தத் தருணம் தென்பால் உயர்ந்து தாழ்ந்தது வட பால் வையம்’

    (சேய்த்தொண்டர் புராணம்)

    அப்பொழுது சிவபெருமான் அகத்தியரிடம் நீரும் மனைவியும் தென்திசை செல்வீர்களானால் கயிலை சமநிலை அடையும். ஆகவே, செல்வீராக என்றார். அதற்கு, ஐயனே, நின் திருமணக் கோலம் காணும் பாக்கியம் எனக்கு மட்டும் இல்லையே என்று வருந்தினார் அகத்தியர்.

    அகத்தியனே நீ தென்னாடடைந்து பொதியமலை சேரும் நேரம் அங்கேயே எமது திருமணக் கோலம் காட்டியருள்வோம் என்றார் ஐயன். அப்பொழுது அகத்தியர் அரனிடம்

    "ஒழுகு முத்தமிழின் வாய்மை

    இன்னதென்றுணரேன் எந்தாய்

    எழுது முத்தமிழை நாயேற்கு இனிதருள் இறைவ"

    என்றார்.

    (சேய்த்தொண்டர் புராணம்)

    முத்தமிழை அறிந்து கொள்ளும் அறிவை அருளுமாறு அவர் வேண்டியதற்கு சிவபெருமான்,

    ‘குழந்தைவேல் முருகன் பாலடைந்து இனிது கோடி யென்றுத் திரவு இட்டான்"

    (சேய்த்தொண்டர் புராணம்)

    தமிழை முருகனிடம் அறிந்து கொள்ளுமாறு கூறினார்.

    திருவருளாணைப்படி அகத்தியரும் பொதியமலை அடைந்ததும், கயிலைநாதன் சொன்னபடி பொதிய மலையிலேயே தனது திருமணக் கோலம் காட்டியருளினார்! செந்தமிழகத்தியனும் உலோபாமுத்திரையும் அக்காட்சியைக் கண்டுகளித்தனர்.

    scan0004.jpg

    பின்னர் அகத்தியர் பொதியமலையிலிருந்து பாவநாசம் சென்று, அங்கிருந்து திருக்குற்றாலம் சென்றார். அங்கு திருமாலடியர் சிலர் ‘இது திருமாலவன் வசிக்கும் குன்று. சைவராகிய நீர் வரலாகாது என்றனர். உடனே, அகத்தியர் இது குறித்து அருகில் குடிகொண்டிருக்கும் இலஞ்சி முருகனிடம் சென்று வேண்டினார். முருகனோ, நாரணன் அடியார் திரு உருக் கொண்டு நடத்தி" என்று ஆணையிட்டார்! அவ்வாறே வைணவர் உருவத்துடன், நாமம் தரித்து திருமாலடியாராக வந்த அகத்தியரை அடையாளம் தெரிந்து கொள்ளாமல் வைணவர்கள் ஆலயத்துள் விட்டனர். அகத்தியர்,

    "பங்கயக் கண்ணன் சிலையினைக் குழைத்து

    பரசிவலிங்கமாய் சமைத்து" தொழுதார்!

    திருமாலின் சிரசில் கை வைத்து ‘குறுகு குறுகு’ என்று அழுத்தியதும் நெடிய உருவம் சிவலிங்கமளவு குறுகியதாம்.

    நாரணன் உருவை சிவலிங்கமாய் அகத்தியர் மாற்றி விட்டதை அறிந்த வைணவர்கள் அவருடன் வாதம் புரிந்தனர். அகத்தியரும் வாதத்தில் வென்று வைணவர்களையும் சைவராக்கினார்! பின்னர் அகத்தியர் அங்கிருந்து திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டு, பின்னர் பாண்டியன் வரவேற்க மதுரை மீனாட்சி சுந்தரரையும் தரிசித்து வணங்கினார். பிறகு சோழ நாட்டு முருகன் தலங்களை தரிசித்து தொண்டை நாட்டில் காஞ்சி குமரக் கோட்டத்தில் அருளும் குமரனையும் வணங்கினார். மேலும் பல தலங்களை தரிசித்து திருத்தணிகையை அடைந்தார்.

    தணிகையில் ஞானசக்தி தரனை (முருகனின் பதினாறு தோற்றங்களில் ஒன்று) வழிபட்டார் அகத்தியர். ஓராண்டு காலம் அங்கு தவமியற்றினார். தணிகாசலன் காட்சி தந்து ‘என்ன வரம் வேண்டும்?’ என்றான். ‘முத்தமிழும், ஐந்திலக்கணமும், கணிதமும் கற்பித்திடல் வேண்டும் என்றார் குறுமுனிவர். அவர் கேட்ட வரமும் தந்து மேலும் உனக்கு இரு நிலத்தின் உயிர்கட்கெல்லாம் வினைதீர்க்கும் மூலிகையின் விவரம் யாவும் ஏலும் வகை அருளினோம்’ என்றான் குமரன்.

    (சேய்த் தொண்டர் புராணம்)

    அகத்தியருக்கு மருத்துவ மூலிகைகள் பற்றிய விவரமும் தெரிவித்தான் குகன். பின்னர் அகத்தியர் பொதிகைமலை அடைந்து பன்னிரு மாணாக்கர்க்கு தமிழ் தந்து உதவினார். அதுமட்டுமல்ல, காவிரி நதியை தந்தருளியதும் அகத்தியரே.

    அகத்திய நாயனார்தம் அடியார்க்கும் அடியேன்.

    ŸŸ×ŸŸ

    3. பகீரத நாயனார்

    சூரிய குல மன்னவன் பகீரதன். கோரன் என்ற அண்டை நாட்டு அரசன் பகீரதனுடன் போரிட்டு ஆட்சியைக் கவர்ந்தான். பகீரதன் மனைவி மக்களுடன் சுக்கிரரை பணிந்து, தன் துயர் தீர வழி கேட்டான். அவரும் ‘கந்த வேளை வணங்கி வெள்ளிக் கிழமை விரதம் மேற்கொண்டால் ஆட்சியை மீண்டும் பெறலாம்’ என்றார்.

    அதன்படி கோடை நகரில் (இன்றைய வல்லக்கோட்டை) கோயில் கொண்ட குமரனை (ஏழடி உயரம்) நோக்கி மூன்றாண்டு தவமிருந்தான்! மீண்டும் கோரனுடன் போரிட்டு வெற்றி வேலாயுதன் துணையுடன் வென்று ஆட்சியை மீளப் பெற்றான். மிகப் பழமையான இத்தலம் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. திருப்புகழில் வரும் கோடை நகர்தான் வல்லக்கோட்டை என்பது இந்த நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த வாரியார் சுவாமிகள் சொல்லித்தான் மக்களுக்கு தெரியவந்தது! குளக்கரையில் சிதைந்த கருவறை மட்டுமே இருந்தது. இன்று முருகனடியார்கள் திருப்பணியால் அழகான ஆலயமாக உருவெடுத்துள்ளது.

    பகீரத நாயனார்தம் அடியார்க்கும் அடியேன்.

    ŸŸ×ŸŸ

    4. முசுகுந்த நாயனார்

    ஒரு சமயம் கயிலை மலையில் உமா தேவியும் ஈசனும் இன்பமாய் கூடி இருந்தபோது, அருகே ஓர் வில்வமரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு முசு (குரங்கு) இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தது. அம்பிகைக்கு யார் இப்படி செய்வது என்று சினம் எழுந்தது. சற்று கோபத்துடன் மேலே நோக்கினாள்! பயந்து நடுங்கிய குரங்கு இறங்கி வந்து, இருவரின் திருவடி பற்றியது. பிழை பொறுத்தருள்வீர் ஐயனே என்று கெஞ்சியது!

    குரங்கு அறியாமையில் செய்தது. ஆயினும் அது ஈசனுக்கு மகிழ்வு தந்தது! காரணம் வில்வ அர்ச்சனைக்கு மகிழ்பவன் அல்லவா மகேசன்? மேலும் அன்று சிவராத்திரி. எனவே குரங்கினிடம்

    "நறிய கூவிலாம் நீ நமக்கிட்டதால்

    ஞாலம் முற்றிலும் நீநல்

    நெறி செலுத்துமோர் வேந்தர் வேந்து ஆகு என்"...

    என்றார். (சே.தொ.பு. 148)

    எம்முளம் மகிழும் அர்ச்சனை செய்ததால் நீ பூவுலகில் பேரரசனாக ஆவாய் போ என்றார்.

    இவ்வாறாக வாழ்வில் உயர்வு பெற்ற குரங்கு தமிழகத்தில் அரிச்சந்திரன் வம்சத்தில் பிறந்தது. ஈசன் திருவடி மறவாதிருக்க தனக்கு முகம் மட்டும் குரங்கு முகமே இருத்தல் வேண்டுமென்ற வரமும் பெற்று, முசுகுந்த சக்ரவர்த்தியாக கருவூரை தலைநகராய்க் கொண்டு சோழநாட்டை நல்லாட்சி புரிந்து வந்தான்.

    அப்பொழுது திருப்பரங்குன்றத்தில் குமரவேள் தெய்வானை திருமணம் நிகழப்போவதை தூதுவர் மூலம் அறிந்தான். சிவனால் திடீர் பதவி உயர்வுப் பெற்றவனல்லவா? சிவகுமாரன் திருமணத்திற்கு முசுகுந்தன் தானே முதலில் செல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1