Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanmeega Amudham Part - 2
Aanmeega Amudham Part - 2
Aanmeega Amudham Part - 2
Ebook419 pages2 hours

Aanmeega Amudham Part - 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580115704574
Aanmeega Amudham Part - 2

Read more from Lakshmi Rajarathnam

Related to Aanmeega Amudham Part - 2

Related ebooks

Reviews for Aanmeega Amudham Part - 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanmeega Amudham Part - 2 - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    ஆன்மீக அமுதம் பாகம் – 2

    Aanmeega Amudham Part - 2

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நலம் தரும் நள்ளாற்று சனிபகவான்

    ஓணம்

    வழித்துணை

    மகர சங்கராந்தி

    தாண்டவராஜன்

    பூமிசுதன்

    குறுமுனிவர்

    பூ(மா)வராகன் புதல்வன்

    கபாலியும் மருந்தீசரும்

    ‘திருமால் பெருமைக்கு நிகரேது?’

    இசை கேட்டால்...

    பங்குனிப் பெருவிழா

    ஒப்பில்லா பரம்பொருள்

    மாசி மகிமை

    வழி பிறக்கும் தை

    சுடரே சுடர்கொடியே!

    மலேசிய தமிழர்களின் கண்கண்ட தெய்வம் பத்துமலை முருகன்

    ஆனித் திருமஞ்சனம்

    அம்மன் மாதம்

    வினாயக கல்யாண வைபோகமே!

    ராம தூதன்

    ‘விஷ்ணு மாயா’

    ஆணைக்குக் கட்டுப்பட்ட ஆதவன்

    ஏழு குதிரை நாயகனுக்கு படையலிடுவோம்

    இளவேனிற் விழாக்கள்

    அபிஷேகத் தாண்டவன்

    கண்ணனின் காதலி

    மாசியின் மகத்துவங்கள்

    நவ சுப ராத்திரி

    முப்பெரும் விழா

    அன்னையின் அருளே வா வா!

    ஞான பண்டிதன்

    ஆயர்பாடிச் செல்வன்

    பேறு தரும் பிள்ளையார்பட்டி வினாயகர்

    அற்புத அய்யனார்

    ஷண்மத மாதம்

    சூரியனார் கோவில்

    மாசி மகமும் சிவராத்திரியும்

    வசந்த மகளே வா வா

    சீர் நல்கும் சித்திரை

    நலம் தரும் நள்ளாற்று சனிபகவான்

    கைலாயம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. கைலை நாதனின் மூத்த குமாரனான வினாயகனுக்கு பெயரிடும் வைபவம் என்றால் சும்மாவா?

    அம்மா சிருதகர்மா அழைத்தான்.

    என்னப்பா? அம்மா சாயாதேவி மகனின் தலையை வருடிக் கொடுத்தாள்.

    அம்மா, என்னைத் தவிர எல்லோரும் கைலாயம் போகிறார்களே. எனக்கும் வினாயகரின் அவதார பெயர் சூட்டும் வைபவத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறதம்மா.

    எல்லோரும் போகட்டும். நீ மட்டும் போக வேண்டாம்.

    நான் கூடத்தான் போகவில்லை சிருதகர்மா. எல்லோரும் போகட்டும். நீ மட்டும் போக வேண்டாம். என் கண்ணில்லையா?

    கண்ணிருந்தால் தானே பார்க்கப் போக முடியும்? அதான் பார்க்கப் போகிறேன் என்று சொல்லுகிறேன்.

    என் கண்ணில்லையா? என்று அன்பாகச் சொன்னேன். உண்மையில் உன் கண் தான் பிரச்சினை. மகனைத் தாய் அணைத்து உச்சி முகர்ந்தாள்.

    சும்மா சொல்லாதே அம்மா.

    விளையாட்டு இல்லையடா சிருதகர்மா. உண்மை இது தான். உன் பார்வை பட்டால் வெம்மையாகி விடுகிறதே மகனே. அதனால் தான் உன்னை என் கண்காணிப்பிலேயே நான் வளர்த்து வருகிறேன். உனக்கு ஏதேனும் ஒன்றென்றால் என்னால் தாங்க முடியாதப்பா.

    அம்மா, யார் கண்களிலும் படாமல் கைலை மலையின் ஓர் ஓரமாக நின்று பார்த்து விட்டு வந்து விடுகிறேன். அனுமதி தாருங்கள் அம்மா.

    அனுமதித்தாள் அன்னை சாயாதேவி.

    பரமனின் இடத்துக்கு செல்பவனைப் பரமன் பார்த்துக் கொள்ள மாட்டாரா?

    ஆயிரம் முறைகள் எச்சரித்து அரை மனத்துடன் மகனை அனுப்பினாள் தாயார்.

    இந்த சிருதகர்மா, சாயாதேவி இவர்கள் யார்?

    சூரிய பகவானின் இளைய மனைவி தான் சாயாதேவி.

    சூரியனின் மூத்த மனைவி சுவர்ச்சலா. இவளால் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அதனால் தந்தை திவிஷ்டாவின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தாள்.

    தந்தை வீட்டிற்குச் செல்லும் முன் சுவர்ச்சலா தேவி தன்னுடைய நிழலைக் கொண்டு தன்னைப் போலவே அழகிய பெண்ணைப் படைத்தாள். அவளுக்கு சாயாதேவி என்ற பெயரை இட்டாள்.

    நான் வரும் வரையில் என் வடிவிலேயே நீ இருக்க வேண்டும். என் குழந்தைகள் வைவஸ்தமனு, யமதர்ம ராஜன், யமுனை என்ற மூன்று குழந்தைகளையும் உன் குழந்தைகளாகவே கருத வேண்டாம். இது ஆணை இல்லை. வேண்டுகோள். என்று கூறி விட்டுப் போய் விட்டாள்.

    சூரிய மூர்த்தியும் சுவர்ச்சலாவாகவே எண்ணி அன்பு செலுத்தினார். சாயாதேவிக்கு சிருதஸ்ரவஸு, சிருத கர்மா என்று இரு மகன்களும், தபதீ என்ற மகளும் இருந்தார்கள்.

    எல்லா குழந்தைகளையும் ஒன்றாகத்தான் கருதினாள் சாயாதேவி. யமதர்மன் மட்டும் அன்னையின் அன்பில் வித்தியாசம் கண்டான்.

    தன் தாயின் உருவில் வேறு பெண் இருக்கிறாள் என்று யமதர்மராஜன் சந்தேகித்தான். இதை தந்தை சூரிய தேவனிடம் கூறினான்.

    சாயாதேவி நடந்ததை மறைக்காமல் கணவனான சூரிய தேவனிடம் கூறினாள்.

    சூரியதேவனும், யமதர்மனும் சாயாதேவியை மன்னித்து விட்டார்கள். சூரியதேவன் தன் மனைவி சுவர்ச்சலா தேவியை அழைத்துக் கொண்டு வந்தான். சுவர்ச்சலா தேவியுடன் குடும்பம் நடத்தினான். மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அசுவினி குமாரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    இருவரின் குழந்தைகளும் ஒன்றாகவே வளர்ந்தனர். சிருத கர்மாவுக்கு மட்டும் ஒரு பிரச்சினை. அவன் பார்வையின் வெம்மை தாங்க முடியாமல் மற்றவர்கள் தவித்தார்கள். அவள் அவனை மட்டும் ஒதுக்கினார்கள்.

    சாயாதேவி அன்னையாயிற்றே? சிருத கர்மாவை எப்பொழுதும் தன் பாதுகாப்பிலேயே வைத்திருந்தாள். அதனால் தான் தனியே கைலாசத்திற்கு அனுப்ப மறுத்தாள். கடைசியில் மகனின் பிடிவாதம் வென்றது.

    அன்னையின் அறிவுரைகளை ஏற்றுத்தான் சிருத கர்மா கைலாயத்திற்கு சென்றான். கோலாகலமான ஏற்பாடுகள் அவனைக் கவர மெல்ல காலடி வைத்தான்.

    அவன் காலடி வைத்த கணமே கைலைமலை குலுங்கியது. வினாயகனை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதிபராசக்தி இந்த அதிர்வை உணர்ந்தாள். எம்பெருமானை ஏறிட்டாள்.

    தேவி, சூர்ய குமாரன் சிருதகர்மா கைலையில் காலடி வைத்து விட்டான். அவன் பார்வையில் வீர்யம் அதிகம். அவன் பார்வை படாவண்ணம் உன் மகனைப் பார்த்துக் கொள் என்றார்.

    சக்திக்கு மீறிய கவசம் உள்ளதா? ஓரமாக சிருதகர்மா நின்றாலும் அவன் பார்வை வினாயகனின் மீது பட்டது.

    'இவர்தான் இன்றைய விழா நாயகன் வினாயகனா?'

    என்ன நடந்தது?

    சிருதகர்மாவின் பார்வை பட்ட மாத்திரத்தில் வினாயகரின் தலை காணாமல் போயிற்று. மலைமகள் பதறிப் போனாள்.

    என்னாயிற்று? என் மகனின் தலை எங்கே? என்று பதறினாள்.

    பரிதவித்துப் போகிறாள். கதறுகிறாள். கண்ணீர் வடிக்கிறாள்.

    ஐயனே, என்ன நடக்கிறது? என்று முக்கண்ணனைப் போட்டு உலுக்குகிறாள்.

    தேவி, நம் மகன் வினாயகனால் அசுர சம்ஹாரம் நடைபெற வேண்டியுள்ளது. நம்மைப் போன்ற முகம் உதவாது என்ற சிவபெருமான் பைரவனை அழைக்கிறார்.

    பைரவா, வடக்கு திக்கில் தலைவைத்துப் படுத்துக் கிடக்கும் யானையின் தலையைக் கொண்டு வா என்று ஆணையிடுகிறார்.

    ஆணையைச் சிரமேற் கொண்ட பைரவர் வட திசையில் தலை வைத்துப் படுத்திருந்த யானையின் சிரசைக் கொண்டு வர...

    சிவபெருமான் வினாயகருக்குப் பொருத்த, அன்று முதல் வினாயகர் கஜமுகன் ஆனார்.

    மகனுக்கு இந்த நிலை ஏற்பட்டதால் கடும் கோபம் கொண்ட பார்வதி இன்று முதல் உனது கால் ஊனமாகட்டும் என்று சாபம் கொடுத்தாள்.

    அன்று முதல் ஊன பாதன் சனைச்சரன் ஆனார். சிருதகர்மா ஊனமான காலுடன் விந்தி விந்தி வந்ததைக் கண்ட சாயாதேவி கோபம் கொண்டாள்.

    வினாயகப் பெருமானை லம்போதரனாகட்டும் என்று சபித்தாள். கணபதியும் வயிறு பெருத்தவனானான்.

    சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்ய விரும்பினான் சிருதகர்மா. சாயாதேவியும் ஆசி கூறி அனுப்பி வைத்தாள்.

    சிருதகர்மாவும் காசி சென்று லிங்கம் ஒன்றை செய்து அதனை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். பக்தி மெச்சிய காசிநாதர் காட்சி தந்தார்.

    உன் பக்தியை மெச்சினோம் என்ற எம்பெருமானை வணங்கித் தொழுது நின்றார்.

    சிருதகர்மா, இன்று முதல் எனக்கு அடுத்த ஸ்தானத்தை நீ அடைவாயாக. சனி என்று இதுவரையில் அழைக்கப்பட்ட நீ இனிமேல் 'சனீஸ்வரன்' என்று அழைக்கப்படுவாய். நீ பிரதிஷ்டை பண்ணி பூஜை செய்த லிங்கம் சனீஸ்வர லிங்கம் என்ற பெயரைப் பெறும். நவக்கிரக நிலையில் உமக்கு ஒப்புயர்வற்ற சனிபகவான் என்ற ஸ்தானத்தை அளித்தோம் என்று கூறி மறைந்தார்.

    இதுதான் சனீஸ்வர பகவானின் சரித்திரமாகும்.

    இங்கு இன்னும் ஒன்றையும் கூற வேண்டும்.

    ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் இரண்டே இரண்டு பேர்கள்தான்.

    ஒருவர் சனி பகவானான சனீஸ்வரன். இன்னொருவர் சாம கானத்தால் இறைவனையே கட்டுப்படுத்தி வைத்த ராவணேஸ்வரன் ஆகும்.

    திருநள்ளாறு என்னும் ஸ்தலத்தில் மட்டும் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து பூஜைகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுமாறனுக்கு வெப்பு நோய் கண்டது. மன்னன் சமண சமயத்தினன். ராணி மங்கையர்க்கரசியார் சைவ சமயத்தினாள். அமைச்சர் குலச்சிறையாரும் சைவ சமயத்தினான்.

    மன்னரின் நோயைத் தீர்க்க திருஞான சம்பந்தர் வந்தார். 'மந்திரமாவது நீறு' என்ற பதிகத்தைப்பாடி திருநீறு பூச மன்னனின் வெப்பு நோய் தீருகிறது.

    அங்கு சைவ சமயம் சிறந்ததா? சமண சமயம் சிறந்ததா? என்ற சர்ச்சை எழுகிறது. அனல் வாதம், புனல் வாதம் செய்கின்றனர்.

    ஞான சம்பந்தர் ஒரு பதிகம் எழுதுகிறார். சமணர்களும் ஒரு பதிகம் எழுதுகிறார்கள்.

    இரண்டையும் அனலிலிட சமணர்கள் ஏடு தீக்கு இரையாகிறது.

    ஞான சம்பந்தரின் ஏடு மெருகு அழியாமல் புத்தம் புதிதாக இருக்கிறது.

    அந்த ஏட்டில் ஞானசம்பந்தப் பெருமான் எந்த பதிகத்தை எழுதி இருந்தார் தெரியுமா?

    திருநள்ளாற்றுப் பதிகமான 'போகமார்த்த பூண்முலையாள்' என்ற பதிகம்தான்.

    இந்திரனுக்கு கொடிய அசுரனை அழிக்கத் துணை புரிந்தான் முசுகுந்த சக்ரவர்த்தி. தன் ராஜ்ஜியத்தைக் காப்பாற்றிய முசுகுந்த சக்ரவர்த்திக்கு கைமாறு செய்ய ஆசைப்பட்டான் தேவேந்திரன்.

    தேவேந்திரா, எனக்குப் பொன் பொருள் எதுவும் வேண்டாம். தாங்கள் பூஜிக்கும் சோமசுந்தரரை எனக்கு பூஜிக்கத் தர முடியுமா? என்று கேட்கிறான்.

    இந்திரனுக்கு அதைத் தர மனமில்லை. மயனை அழைத்து ஆறு சோமசுந்தரப் படிமங்களைச் செய்யச் சொல்கிறான். தன்னுடைய சோமசுந்தரரையும் வைத்து இதில் எது வேண்டுமோ எடுத்துக் கொள் என்றான் இந்திரன்.

    முசுகுந்தன் பரமசிவ பக்தன். எது உண்மை மூர்த்தி என சிவபெருமானே உணர்த்துகிறார். இந்திரன் ஏழு உருவங்களையும் முசுகுந்தனுக்கே அளித்து விடுகிறான்.

    பூலோகத்தில் ஏழு இடங்களில் ஏழு மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்தான் முசுகுந்த சக்ரவர்த்தி.

    அந்த ஏழு தலத்தில் மிக முக்கியமானது இந்த திருநள்ளாறு தலம்.

    நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்று பொருள். இத்தலத்தின் தெற்கிலும் வடக்கிலும் இரண்டு ஆறுகள் ஓட நடுவில் இருப்பதால் திருநள்ளாறு என்று பெயர் பெற்றது என்று கூறலாம்.

    திருமுறைகளில் நளன் + ஆறு = நள்ளாறு என்று குறிக்கப்பட்டுள்ளது.

    இங்கு பிரம்ம தேவர் பூஜித்ததால் ஆதிபுரி என்பார்கள். தர்ப்பைக் காடாக இருந்ததினால் தர்ப்பாரண்யம் என்றும், நகவிடங்கராகிய தியாகேசப் பெருமான் எழுந்தருளிய காரணத்தால் நக விடங்கபுரம் என்றும், நள மகாராஜன் இத்தலத்தில் வழிபட்டு கலி நீங்கியதால் நாளேச்சுரம் என்றும் பெயர்கள் பல உள்ளன.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோயிலைச் சுற்றிலும் ஒரு காலத்தில் அகழ் அமைந்திருக்க வேண்டும். இன்று நள்ளாற்றுப் பெருமான் சந்நிதியிலும், கோயிலின் மேற்கு பக்கத்தும் அகழி தூர்ந்து நிலப்பரப்பாக இருக்கின்றது. அகழின் உட்பக்கத்தில் நாற்புறமும் உயர்ந்த மதில்கள் உள்ளன. கோயிலின் திருமுற்றவெளி மிகப்பெரியது, அகலமானது.

    முற்றவெளியை அடுத்திருப்பது இடபவாயில். முற்றவெளிக்கு வடபக்கத்தில் திருக்கோயில் அலுவலகம் உள்ளது. அதனை அடுத்து வாகன மண்டபமும் அதனையடுத்து பசுமடமும் உள்ளன. அலுவலகத்திற்கு எதிரில் சந்நிதியின் வடபுறத்தில் இடையனார்கோயில் உள்ளது. இதில் இடையன், கணக்கன் உருவங்கள் உள்ளன. தியாகேசப் பெருமான் இவர்கள் இருவருக்கும் காட்சி வழங்கியதாக வரலாறு.

    முற்றவெளியை அடுத்துள்ளது இராஜகோபுரம். இது ஐந்து நிலை மாடங்களை உடையது. அழகான சுதைச் சிற்பங்களோடு கூடியது. இதனைக் கடந்து உள்ளே சென்றால் இரண்டாவது சுற்றலை தொடங்குகிறது.

    இச்சுற்றலையின் தெற்குப் பகுதியில் சிறிய நந்தவனம் உள்ளது. இச்சுற்றின் வடமேற்கு கோடியில் தெற்கு பார்க்க தியாகேசப் பெருமான் வசந்த விழாக் கொண்டருளும் வசந்த மண்டபம் உள்ளது. இதன் வட கீழ்க்கோடியில் காளத்தி நாதர் கோயிலும் அதன் பின்புறம் யாகசாலையும் உள்ளன. அனைத்தையும் கண்டு இதனை வலமாகக் கீழ்ப்புறம் சந்நிதிக்கு வந்தால் உட்கோபுரமாகிய கட்டைக் கோபுரத்தை அடையலாம். கோபுர வாயிலின் தென்பால் கற்பக விநாயகரை வழிபடலாம்.

    இதன் உள்ளே நுழைந்ததும் உட்பிரகாரமாகிய மூன்றாம் பிரகாரத்தை அடையலாம். இதை வலம் வந்தால் கட்டைக் கோபுரத்தின் தென்பாலுள்ள திருமாளிகைப் பக்தி மண்டபத்தில் முதலில் காட்சி வழங்குபவர் தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் எழுந்தருளும் திருமேனியாக நகவிடங்கப் பெருமானை வணங்கிய வண்ணம் மேற்கு நோக்கிய நிலையில் இருப்பார்.

    அடுத்து தெற்கு திருமாளிகைப் பக்தியின் தொடக்கத்தில் சமயாசாரியர் நால்வர் திருவுருவங்களும் உள்ளன. அதனையடுத்து விநாயகர், தர்ப்பாரண்யச் சிவலிங்கம், நந்தி இவ்வுருவங்கள் உள்ளன. அவற்றை அடுத்து அறுபத்துமூவர் திருவுருவங்கள் உள்ளன.

    அறுபத்து மூவர் வரிசையில் தர்ப்பாரண்யர் எழுந்தருளியிருப்பது அறுபத்து மூவரும் நள்ளாறனையே அனவரதமும் கண்டிருப்பதாக ஐதீகம் எனக் கூறப்படுகின்றது. அறுபத்து மூவர்க்கும் கடைசியில் தனித்த சிறிய மண்டபம் ஒன்றில் கலி நீங்கிய நளனும் சிவலிங்கத் திருமேனியும் இருக்கின்றன. நளன் இத்தலத்திற்கு தனிச்சிறப்புடையவன். ஆதலால் அடியார்கள் வரிசையில் இடம் பெற்றான். மேற்கு திருமாளிகைப் பக்தியின் தென்மேற்குக் கோடியில் அதாவது கோயிலின் கன்னி மூலையில் தலவிநாயகர் இருக்கிறார். அவருக்கு சொர்ண விநாயகர் என்று திருநாமம்.

    விநாயகரை அடுத்து சோமாஸ்கந்தர், அம்மை இவர்கள் திருவுருவங்கள் கருங்கற் சிற்பமாக மிக அழகாக அமைந்துள்ளன. சோமாஸ்கந்தரின் எதிரில் முனிவரைப் போன்று உருவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அரையில் உடைவாளோடு இருப்பதால் சோழ மன்னரின் உருவமாகலாமோ என்று நினைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நிருத்த சபையின் வாயிலில் உள்ள ராஜராஜன் திரு உருவம் போல இது இருத்தல் எண்ணி ஆராய்வதற்குரியது. சோமாஸ்கந்தரை அடுத்து சப்தவிடங்க தலங்களில் உள்ள விடங்க லிங்கங்கள் இடம் பெற்று உள்ளன.

    அடுத்து அம்மண்டபத்திலேயே நின்ற திருக்கோலத்தில் திருமால் திருஉருவம் உள்ளது. அதனைச் சார்ந்த பைரவர் திருக்கோலங்கள் மூன்று உள்ளன. அடுத்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தனி ஆலயமாகத் திருமாளிகை பக்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயே வடமேற்குக் கோடியில் திருமகள் சுதைவடிவிலும் சிலை வடிவிலும் காட்சி வழங்குகிறார்.

    வடக்குத் திருமாளிகைப் பக்தியின் வடமேற்குக் கோடியில் தியாகராஜப் பெருமான் எண்ணெய்க்காப்புக் கொண்டருளும் எண்ணெய்க்காப்பு மண்டபம் இருக்கிறது. இதன் தூண்கள் பல்லவர் காலச் சிற்பத்திறமும், அழகும் சொறிந்தவை. அம்மண்டபத்திற்கு கீழ்பால் திருமாளிகைப் பக்தியும் அதன் கீழ்க்கோடியில் சேத்திரபாலர் ஆகிய பைரவர் ஆலயமும் இருக்கின்றன. வடகீழ்க்கோடியில் ஈசான மூலையில் சபாநாயகராகிய நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையாரோடு எழுந்தருளி இருக்கிறார். வடபக்கத்து கிழக்கு திருமாளிகைப் பக்தியில் சூரியன் இருக்கிறார். அன்றாடம் சூரிய பூசையை முடித்துக் கொண்டு தான் திருக்கோயில் திருப்பள்ளி எழுச்சி முதலிய நாட்கால பூசையைத் தொடங்குவது வழக்கம். முறையாக இவை அனைத்தையும் வணங்கிக் கொண்டு இரண்டாம் கோபுரத்தின் உள் புறத்தில் உள்ள சந்நிதியை அடைந்தால் கொடிமரம் காணப்படும். கொடி மரத்தையும் கடந்து தியாகேசப் பெருமான் சந்நிதி மண்டபத்தில் ஏறிப் பக்க வாயில் வழியாக திரு அணுக்கன் திருவாயிலை அணுக வேண்டும்.

    நள்ளாறர் திருமுன்பு மகா மண்டபத்தில் நந்தி பல்லவ காலச் சிற்பமாக அமைந்து இருப்பதும், சந்நிதியில் துவாரபாலகர் இருவரும் இரண்டு கைகளை மட்டும் உடையவராகக் காலைத் தூக்கி கதைமேல் வைத்துக் கொண்டு ஒரு கையில் அதட்டுகின்ற முத்திரை தோன்ற அமைந்து இருப்பதும் பல்லவர் காலப் பாணி என்பதனைக் காட்டுகிறது. இவற்றைக் கண்டு பெருமானை வணங்கிக் கொண்டு தெற்கு பக்க வாயிலின் வழியாகவே தியாகராஜப் பெருமான் சந்நிதியை அடைய வேண்டும். வரும் வழியில் நள்ளாறன் கர்ப்பக்கிரகத்துச் சுவரில் அர்த்தநாரீஸ்வரர் சுதைச் சிற்பம் ஒன்று தெற்கு நோக்கி இருக்கிறது. அதனையும் கண்டு தியாகேசப் பெருமான் சந்நிதியில் வணங்குதல் முறை. அச்சந்நிதியில் இத்தலத்திற்குச் சிறப்பான மரகதவிடங்கர் பெட்டகத்தில் எழுந்தருளி இருக்கிறார். சாதிப் பச்சை இரத்தினத்திலான சிவலிங்கத் திருமேனி இது. இதற்கு உஷக்காலம், காலசந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, இரண்டாங்காலம் ஆகிய ஐந்து காலங்களிலும் அபிஷேகமும் அர்த்தஜாமத்தில் தீபாராதனையும் நடைபெறும்.

    தீபாராதனை நடக்கும்போது ஒளிவடிவான இறைவனைத் தரிசித்தல் மிக வியப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று. திருநள்ளாற்றுப் பெருமான் சந்நிதியில் பலிபீடம் சிறிது விலகி இருப்பது விசேஷமானது. கர்ப்பக்கிரகத்தின் வடபக்கச் சுவரில் கோமுகிக்குக் கீழ்பால் உள்ள துர்க்கை மிகச் சிறந்த கருணைத் தெய்வம். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளிலும் நவராத்திரி, பவுர்ணமி தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. துர்க்கைக்கு அருகில் பிக்ஷாடனர் திருவுருவம் உள்ளது. இவ்வண்ணம் பெருமானை வழிபட்டு மூன்று முறையாக வலம் வந்து சுவாமிக்கு வடபால் உள்ள சண்டேஸ்வரரை வணங்கி வெளியே வந்தால் சந்நிதிக்கு வலப்பக்கத்தில் இத்தலத்திற்கு சிறப்பான சனீஸ்வர பகவான் கட்டைக்கோபுரச் சுவரில் உள்ள சிறிய மாடத்தில் எழுந்தருளியிருக்கிறார். அவருடைய சந்நிதி மிகச் சிறப்பானது. மகிமை வாய்ந்தது. எப்பொழுதும் மக்கள் கூட்டமும் வழிபாடும் கொண்டு விளங்கும்.

    சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக இருப்பது சிறப்பு. அவரை வணங்கிக் கொண்டு அம்பிகையின் சந்நிதியை அடைய வேண்டும். அம்மை அருளே வடிவாய்க் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். அவர் சந்நிதி தெற்குப் பார்த்து உள்ளது. இக்கோயிலை வழிபாடு செய்யும் முறை இதுவேயாகும்.

    இங்கு வேறு கிரகங்கள் வைக்கப்படவில்லை. அர்த்தாஷ்டமச் சனி, கண்ட சனி, ஏழரை நாட்டு சனி என்று எது வந்தாலும் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், போகமார்த்த பூண்முலை அம்மனையும் வணங்கி விட்டு சனீஸ்வரர் சந்நிதியை அடைந்து வணங்க வேண்டும். எள் எண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும். வீடுகளில் எள் அன்னம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

    *****

    ஓணம்

    திருவோணம் என்பது 27 நட்சத்திரங்களுள் ஒன்று. 22-வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. மகர ராசியில் உள்ளது. தேங்காய் கண் போன்று மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது என்று முன்னோர் சொல்வார்கள். ஆனால் இவற்றுள் ஒன்றே ஒன்று தான் பிரகாசமானது. இதை மேனாட்டார் லத்தீன் மொழியில் ‘ஆக்விலா' என்று கூறுவார்கள். இதற்குப் பொருள் கழுகு என்பதாகும். இந்த நட்சத்திரக் கூட்டம் கழுகு பறவை போல் இருப்பதாகக் கூறுவார்கள்.

    இது வட அர்த்த கோளத்தில் உள்ள நட்சத்திரம். இதன் வழியில் ஆகாச கங்கையின் பிரகாசமான பகுதி செல்கிறது. திருவோண நாளில் சங்ககாலத்தில் விழா கொண்டாடுவதும், அன்று மறவச்சேரிப் போர் நடத்துவதுண்டு என்று பத்துப்பாட்டு தெரிவிக்கிறது.

    இதுவே விஷ்ணுவின் நட்சத்திரம். இதை வடமொழியில் 'சிரவணம்' என்று குறிப்பிடுவர். வைணவ தலங்களில் திருவோண நட்சத்திரத்தன்று கோவில்களில் விசேஷமான பூஜைகள் செய்வார்கள். உப்பிலியப்பன் - இவர் ஒப்பில்லாத அப்பன். இவர் மார்க்கண்டேயரின் மகளை ஆசைப்பட்டு மணக்க முன் வருகிறார். அவளோ, சின்னக்குழந்தை சமைக்கத் தெரியாதவள் என்று மார்க்கண்டேயர் சொல்லுகிறார்

    பரவாயில்லை என்று மணக்கிறார் திருமால். அக்குழந்தைப் பெண்ணோ உப்பில்லாமல் சமைக்க, அதையே திருமாலான உப்பிலியப்பன் சுவைத்து மகிழ்கிறார். உப்பிலியப்பன் கோவிலில் உப்பு இல்லாமல் தான் நைவேத்தியம் பொருள்கள் செய்யப்படுகின்றன. கோவிலின் உள்ளே அமர்ந்து சாப்பிட்டால் உப்பு இல்லாத குறையே தெரியாது. கோவிலுக்கு வெளியே வந்து உண்டால் உப்பு இல்லை என்பது தெரியும்.

    ஒப்பிலியப்பனை நினைத்து திருவோணத்தன்று தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள ஊர்மக்கள் உப்பில்லாத பத்தியம் இருப்பார்கள்.

    திருமாலின் திருவோண நட்சத்திரம் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கினையும் தரக்கூடியது. திருமாலின் தசாவதாரங்களுக்கும் முந்தைய அவதாரம் ஹயக்ரீவ அவதாரம். ஹயக்ரீவரின் நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணமேயாகும்.

    வாமன அவதாரம் சிரவண தினத்திலேயே நடந்துள்ளது. கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருமலை ஸ்ரீநிவாஸன். இவரின் நட்சத்திரமும் சிரவணம் என்னும் திருவோணமாகும். இதனால் தான் சிரவண நட்சத்திரத்தைப் பெருமை வாய்ந்ததாக எண்ணி பக்தர்கள் விரத தினமாகக் கருதி விரதம் மேற்கொள்கிறார்கள்.

    ஒப்பில்லாத அப்பன் கோவிலில் சிரவண தீபம் ஏற்றிப் பெருமானை வழிபாடு செய்கிறார்கள். இந்தத் திருவோண நட்சத்திரம் வைணவர்களுக்கு மிகவும் சிறப்பானது. இதுபோல, திருவாதிரைத் திருநாள் சைவர்களுக்கு மிகவும் உகந்தது. திருவோணம் வைணவர்களுக்குச் சிறந்த தினம் என்றாலும் இன்னொரு வகையில் இதன் சிறப்பைக் காணலாம். இதை ஓணம் என்று கேரள மக்கள் கொண்டாடுவார்கள். இது ஒரு பொதுப் பண்டிகையாகும். இவ்விழா சாதிமத பேதமின்றி கேரளாவில் கொண்டாடப்படுகிறது.

    ஆவணி மாதம் திருவோண நட்சத்திரம் இவ்விழா கொண்டாடுவதற்கு மிகவும் முக்கியமான நாள். திருவோண நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு - அதாவது அஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி சதயம் வரையிலும், புரட்டாசி மாதத்தில் ஆயில்யத்திலும் மகத்திலும் கேரள நாட்டில் இது கொண்டாடப்படுகிறது.

    வைகாசி பிற்பகுதியில் தொடங்கும் பெருமழை ஆவணியில் நின்று விடும். இயற்கை வளம் பெருகும். மக்கள் மகிழ்வார்கள். இதுவே முதல் அறுவடை காலமாதலால் ஓணத்தை அறுவடை கால விழாவென்றும் கூறுவார்கள்.

    மகாபலி என்பவன் ஒரு அசுரன். பிரகலாதனுக்குப் பேரன். விரோசனன் என்பவனுக்கும் தேவி என்பவளுக்கும் பிறந்தவன். இவன் தவத்தின் சிறப்பால் மூவுலகங்களுக்கும் அரசனானான். இவனுடைய முன்பிறப்பைப் பற்றி சிறு சம்பவக் குறிப்பு உண்டு.

    ஒரு கோவில், அக்கோவிலில் ஒரு எலி வங்கு கொண்டு வாழ்ந்து வந்தது. அந்த எலி யாரும் இல்லாத வேளையில் வெளியே வந்து கீழே சிந்தியுள்ள நைவேத்திய பிரசாதங்களை தின்று கொண்டிருக்கும். இதை ஒரு பூனை பார்த்துவிட்டது. இதை எப்படிப் பிடிக்கலாம் என்று அலைந்து கொண்டிருந்தது.

    பூனைத் தன்னைப் பிடிக்க வருவதை எலியும் உணர்ந்து கொண்டது. அதனால் பயத்துடனேயே நைவேத்திய சிந்தல்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அந்தப் பூனை எலியைப் பிடிக்க வந்து விட்டது. எலி பூனையிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று துள்ளி ஓடியது. அப்படி ஓடும் பொழுது எலியின் கால் பட்டு ஒரு தீபம் - அணையும் தருவாயில் இருந்த அத்தீபம் திரி மேலே வரப்பட்டு நன்றாக எரிந்தது.

    எலி, எண்ணெயின் உள்ளே போய் அணையும் தறுவாயில் இருந்த திரியை தன்னையறியாமல் இழுத்து விட்டதற்கே கடவுள் பலன் கொடுத்து விட்டான். முற்பிறப்பில் எலியான அந்த ஜீவன் தான் மகாபலி சக்ரவர்த்தி என்று வரலாறுகள் சொல்லுகின்றன.

    மகாபலியிடம் அளவற்ற அசுரபலம் இருந்தது. பரம பாகவதன் என்பதால் தர்மத்தின் பாதுகாப்பும் இருந்தது. அசுர குருவான சுக்ராச்சாரியாரின் ஆலோசனைப்படி தான் பெற்ற வெற்றியை வேள்வியின் மூலமாகவும், தான் தர்மத்தின் மூலமாகவும் நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள ஆசைப்பட்டான்.

    அப்பொழுது தேவர்கள் உய்யும் பொருட்டு திருமாலே வாமனராக - குள்ளமான வடிவம் உள்ளவராக அவதாரம் செய்து வந்தார் தந்தை காச்யப்பர் கொடுத்த மேகலை, பூமாதேவி கொடுத்த மான் தோல், மார்பினில் முப்புரி நூல், பிரம்மா கொடுத்த கமண்டலம், சந்திரன் கொடுத்த தண்டம், சரஸ்வதி கொடுத்த ஜபமாலை, கையில் குபேரன் கொடுத்த பிட்சா பாத்திரம், அதில் அன்னபூரணி அளித்த பிச்சை, தாழங்குடை ஒன்றையும் பிடித்தபடி

    இந்தக் கோலத்துடன் - கொள்ளை அழகுடன் வந்த வாமனர் எதைக் கேட்டாலும் கொடுக்க மகாபலி பார்த்த மாத்திரத்தில் முன் வந்தான். அந்த அளவிற்கு வாமனரின் உருவம் மயக்கக் கூடியதாக இருந்தது.

    ஐயனே, தாங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்க, வாமனர் என்ன கேட்டார்? மன்னா, எனக்கு மூன்றடி மண் வேண்டும்?

    "வாய் மொழிந்து வாமனனாய் மூவடி மண்- நீ

    யளந்து கொண்ட நெடுமாலே" என்று ஆழ்வார் பாடினார். வாமனர் மூவடி மண் மட்டும்தான் கேட்டார்.

    இதைக் கேட்டு அசுர குரு சுக்ராச்சாரியார் விழித்துக் கொண்டார். வந்தவன் வேறு யாருமல்ல. இந்த உலகை அளக்கப் போகும் மகாவிஷ்ணு தான் என்று புரிந்து கொண்டார்.

    மகாபலி, வந்திருக்கும். மனிதர் சாமான்யப்பட்டவரல்ல. ஜாக்கிரதையாக இரு. என்று எச்சரித்தார்.

    மகாபலி, நீ வறிஞனாகி விடுவாய் என்று கூறினார்.

    மகாபலி அஞ்சவில்லை. அசுர குரு விடாமல் மகாபலி, வந்திருப்பவன் நாராயணன். அசுர குலமே அழிந்து போய் விடும் என்று பயமுறுத்தினார்.

    மகாபலியோ "குலகுருவே, அந்த ஸ்ரீமன் நாராயணனே என்னிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1