Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bramma Mudichu
Bramma Mudichu
Bramma Mudichu
Ebook152 pages1 hour

Bramma Mudichu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580115704861
Bramma Mudichu

Read more from Lakshmi Rajarathnam

Related to Bramma Mudichu

Related ebooks

Reviews for Bramma Mudichu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bramma Mudichu - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    பிரம்ம முடிச்சு

    Bramma Mudichu

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    கண்ணாடி முன்பு நின்று படியப்படிய தலைமுடியை வாரி கொண்டான் குமரேஷ். சற்றுத் தள்ளி நின்று பார்த்தான். இன்று பெண் பார்க்கப் போகிறான். இது எப்படி இருக்கு?

    ச்சீ... பள்ளிக்கூடப் பையன் மாதிரி இருக்கு, மனசுக்குள் அவன் கற்பனை பண்ணி வைத்திருந்த வஞ்சிக் கொடியாள் ஒரு பையை மாட்டி பள்ளிக்கூடம் அனுப்பி வைத்து விடுவாளோ?

    கொஞ்ச நாள் பொறு தலைவா வஞ்சிக் கொடி இங்கு வருவா. கண்ணி ரெண்டில் போர் தொடுப்பா என்று மனசு மந்தமாருதப் பண்பாடியது.

    தலையைக் கலைத்துக் கொண்டான். மேல் புறமாக முடிகளைத் தள்ளி வாரிக் கொண்டான். நெற்றி விரிந்து பரந்து கிடந்தது. 'தோட்டம் போடலாமோ? ஊஹூம் இதுவும் சரியில்லே. ஜிப்பாமாட்டிக் கொண்டு ஜோல்னா பையை தோளில் தொங்க விட்டுக் கொண்டால் ஒரு எழுத்தாளன் தான்'. வஞ்சிக் கொடியாள் மனதில் வந்தாள்.

    போடா போய் பேட்டி எடுத்துக்கிட்டு வா என்று விரட்டி விட்டாள்.

    என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

    தலையைக் கலைத்துக் கொண்டான். மேல் நோக்கி வாரிய முடியில் நடுத்தலை வகிடில் படிய வாரிக் கொண்டான். முன் பக்கத் தலைமுடி பம்மென்று நின்று கம்பீரத்தைக் கொடுத்தது.

    இளமை தெரிகிறதா வஞ்சிக் கொடியே? என்று இன்னும் பார்த்தறியாதவளைக் கேட்டான்.

    காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதையை எண்ணிக் களிக்கின்றேன் என்று பாடினான்.

    பாரதி கண்ணம்மாவைக் காதலியாக வைத்துப் பாடிய பாட்டு. நேற்று பாடினார்கள். இன்று பாடுகிறான். நாளையும் பாடுவார்கள். காலத்திற்கும் நிற்கும் பாட்டு. காலத்தால் அழிக்க முடியாத வர்ணனைகள். பார்க்கப் போகிறவளின் விழிகளில் நில ஒளித்ததும்புமோ? இவனுடைய சேஷ்டைகளை அண்ணா கணேஷ் அறையின் வாசலிலேயே நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.

    போதும்டா முடி கொட்டிப் போகுது என்று கேலி செய்ய குமரேசன் முகம் சிவந்தது.

    பாட்டு அலங்காரம் எல்லாம் தூள் பறக்குது

    போண்ணே

    பெண் பார்க்கத் தானே போறோம். நேரமாச்சு. பெண் பார்க்கவே இப்படி அலங்காரத்தை ரெண்டு நாள் முன்னாடியே ஆரம்பிச்சுட வேண்டியது தான்.

    வெளி ஹாலுக்கு வந்தான் கணேஷ். அவள் மனைவி மாலினி தயாராகி சோபாவில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். உருவத்திற்குப் பொருந்தாத அலங்காரம். நேற்றே ப்யூட்டி பார்லர் போய் விட்டாள். என்ன ப்ளீச் பண்ணினாலும் தெனாலிராமன் கருப்பு நாயை வெள்ளை நாயாக ஆக்கிய கதைதான்.

    மாலினி அட்டைக் கருப்பு இல்லை. ஆனாலும் வெளுப்போ செந்தாமரை வண்ணமோ இல்லை. என்ன அலங்காரம் பண்ணிக் கொண்டாலும் வெளுப்பாகவோ பொருத்தமாகவோ தெரிய மாட்டாள். அவள் அப்பாவின் பணத்தில் வாங்கப்பட்டவன் இந்த கணேஷ். தன்னுடைய அழகுக்கும் கம்பீரத்திற்கும் இவள் பொருத்தமானவள் இல்லை என்ற மனக்குறை அவனுக்கு நிறையவே உண்டு.

    மாமனார் பெரிய கோடீஸ்வரர். கணேஷின் குடும்பம் மிகவும் சுமாரான குடும்பம். தந்தை வேணுவால் குடும்பத்திற்கு எந்த வித உபயோகமும் இல்லை. ஏதேதோ வேலைகளில் இருந்து சம்பாதித்தாலும் பெரிய வருமானம் ஒன்றுமில்லை. கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டே ஆயிரம் தடவை கணக்குக் கேட்பார். முன் கோபம் அதிகம். முரட்டுத்தனமும் அதிகம்.

    அம்மா சண்பகத்திற்கு பிறந்த வீட்டு உதவிகள் உண்டு. வேணுகோபால் சண்பகத்தைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் சமயம் தனக்கு ஏக்கர் ஏக்கராக நிலம் இருப்பதாகக் கூறி கொண்டார். சண்பகாவின் பிறந்த வீட்டினரும் அந்த கிராமத்திற்குப் போய்தான் பார்த்தார்கள். வேணுகோபாலின் பெரியப்பா சித்தப்பா குடும்பங்கள் வரவேற்று ஆகார உபசாரங்கள் செய்தார்கள்.

    எங்க மாப்பிள்ளைக்கு எவ்வளவு சொத்து இருக்குது?

    பொதுவாக இரண்டு மூன்று பேர்களிடம் கேட்ட பொழுது பேச்சு கௌரவமாகவே வந்தது. இவர்கள் தாத்தா காலத்தைப் பற்றி எல்லாம் புகழ்ந்து சொன்னார்கள்.

    இந்த கிராமத்துல அம்புட்டு நிலங்களும் இவங்களுக்குச் சொந்தமானவைதாங்க பெரிய பணக்காரவங்க என்றார்கள்.

    சண்பகத்தின் குடும்பத்தினர் நம்பினார்கள். கல்யாண பந்தலிலேயே வேணுவின் சித்தப்பா, பெரியப்பா குடும்பங்கள் தங்கள் குடும்பப் பெருமையைப் பேசினார்கள். வேணுகோபாலின் ஒருகுலப் பெருமையோ குடும்பப் பெருமையோ இருப்பதாகவே தெரியவில்லை. குடும்பம் நடத்தும் பொழுதுதான் தன் கணவன் ஒன்றும் பெரிய வேலையில் இல்லை என்பதையும் வெறும் வாய்ச்சவுடால் பேர்வழி என்பதையும் கண்டுபிடித்தாள்.

    கல்யாணமான மூன்றாவது மாதம் குலதெய்வம் அம்மனுக்குத் தீமிதி திருவிழா என்று வேணு சண்பகத்தை அழைத்துப் போனான். கிராமத்து வீடுகளில் வழக்கமான உபசரிப்பும் விருந்தும் தடபுடலாகவே இருந்தன. விழா அமளி ஓய்ந்த பின்பு சண்பகம் தன் பெரிய மாமனாரிடம் வந்தாள்.

    தட்டு நிறைய அதிரசம், முறுக்கு, வடை என்று வைத்துத் தின்று விட்டு வெற்றிலையைத் துடைத்துத் துடைத்துப் போட்டுக் கொண்டவர் சண்பகத்தைப் பார்த்துவிட்டார். சண்பகம் ஓரளவு படித்தவள் தானே? அந்த மரியாதை பெரியவர்களின் கண்களில் தெரிந்தது. அத்துடன் அவள் குடும்பத்துடன் ஒட்டி உறவாடிய விதமும் பிடித்தது.

    படிச்சபுள்ள படிச்ச புள்ளதான் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போனார்.

    வந்தவளைப் பார்த்து வாம்மா... என்ன எங்க ஊரு பிடிச்சிருக்குதாம்மா? என்று கேட்டார்.

    புன் சிரிப்பைத் தவழவிட்ட சண்பகம் நம்ம ஊருனு சொல்லுங்க மாமா என்றாள்.

    ஆங்... நல்லாச் சொன்னம்மா. படிச்சபுள்ள... பட்டணத்துப்புள்ள... நல்ல குடும்பத்துலேர்ந்து வந்த புள்ளங்கறது இது தான் என்றார்.

    சண்பகத்துக்குத் தன்னுடைய பெரிய மாமனார் புகழ்ந்து பேசிய சொற்கள் கிறக்கத்தை உண்டு பண்ணியது.

    எங்கப்பா வேதம், சாஸ்திரம், ஸ்லோகங்கள்னு படிச்சவர் மாமா. நாம தமிழ் தானே பாடமா எடுத்துப்போம் எங்கப்பா சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்துக் கொண்டார். அதுலேயே பேசற அளவுக்குப் பாண்டித்யம் உள்ளவர் மாமா என்று தன் வீட்டுப் பெருமையை எடுத்து விட்டாள்.

    நமக்கு இதெல்லாம் எங்கம்மா புரியுது. நம்ம படிப்பு வயலும், காடும், கழனியும் தான். இந்த இயற்கை சூழ்நிலை எங்கிட்டாவது கிடைக்குமாம்மா. சொல்லு. நீ படிச்ச புள்ள... புரிஞ்சுக்குவே. உங்க நகரத்துல இப்படி ஒரு காற்றை வாங்க முடியுமா? நகரத்துல பதினைஞ்சு மாடி இருபது மாடினு கட்டி கண்ணாடி சுவர்களை வச்சு அடைக்கறாங்க. ஏ.ஸி., பேன்னு ஓடுது. போர்டு மட்டும் மின்சாரத்தை சேமியுங்கள்னு எழுதிப் போட்டு வச்சுடறாங்க என்றவர் தண்ணீரைக் குடித்தார்.

    அவள் ஏதாவது பேசுவது தான் மரியாதை என்று நினைத்தவளாக உண்மைதான் மாமா என்றாள்.

    மீண்டும் வெற்றிலையை சுண்ணாம்பு தடவி வாயில் திணித்துக் கொண்டவர். அந்தக் காலத்துல ராஜாக்கள் பெரிய பெரிய அரண்மனைகளைக் கட்டலையா? உயர உயரமா சாரளம், பலகைனு வச்சுக் கட்டினான். சுற்றிலும் மண்டபத்தைக் கட்டினாலும் மரங்களை வளர்த்தான். நாங்க படிக்கற காலத்துல ராஜாக்கள் செய்த பணிகளை எழுதுங்கன்னா முதல்ல சாலையோரங்கள்ல நிழல் தரும் மரங்களை நட்டார்ன்னுதான் எழுதுவோம்.

    சண்பகத்துக்கும் சரித்திரப் பாடம் நினைவுக்கு வந்தது. இப்ப சாலையோரம் நிழல் தரும் மரங்களும் இல்லை. நடக்கற பயணிகளும் இல்ல. வீட்டுக்கு வீடு கார், ஸ்கூட்டர். பக்கத்துக் கடையில கருவேப்பிலை வாங்கறதுனாகூட காரையில்ல எடுத்துட்டு போறாங்க. என்றாள்.

    பெரியவரின் பேச்சு சண்பகத்துக்குப் பிடித்தது. அதையும்விட தன்னைப் படித்த பிள்ளை என்று வாய்க்கு வாய் சொன்னதும் ரொம்பவே பிடித்தது. இவர்களுக்கு எல்லாவற்றையும் உற்று நோக்கி எடைபோடும் திறன் இருப்பதையும் புரிந்து கொண்டாள்.

    உங்க அனுபவம் பெரிய அனுபவம். மற்றவர்களுக்குப் பயன்படக்கூடிய அனுபவம் மாமா

    நீ வந்ததுலேர்ந்து பண்டிகை விழானு போயிடுச்சு. இந்த வேணுப்பய இன்னும் பொறுப்பு இல்லாம அப்படியே தான் இருக்கான் போல தெரியுது. நான்தான் இந்த ஒரு வாரமா கவனிச்சுட்டு வரேனே... நீ படிச்ச புள்ள. அவனைப் பொறுப்பு உள்ளவனா மாத்திடும்மா... என்றார்.

    மாமா, உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்.

    "என்னம்மா, நீ என் மகமாதிரி... மாதிரி என்ன... மகதான். உன்னோட குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்மா. உங்க அப்பா அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1