Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deivam Thantha Poove!
Deivam Thantha Poove!
Deivam Thantha Poove!
Ebook125 pages1 hour

Deivam Thantha Poove!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704219
Deivam Thantha Poove!

Read more from Lakshmi Rajarathnam

Related to Deivam Thantha Poove!

Related ebooks

Reviews for Deivam Thantha Poove!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deivam Thantha Poove! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    தெய்வம் தந்த பூவே!

    Deivam Thantha Poove!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    புறநகர் பகுதியில் இருந்தது அந்த பங்களா. அதை சரவணப் பெருமாள் வாங்கும் பொழுது அருகில் எதுவுமே கிடையாது. விலை மலிவான இடம்தான். அவர் வாங்கியதும், மளமளவென்று விற்பனை ஆகின.

    சரவணப் பெருமாள், நீர் ரொம்ப ராசிக்காரர்தானய்யா என்றார் இடத்தை விற்றவர்.

    வீடு தோட்டமும் துரவுமாக நன்றாகத்தான் அமைந்தது. இவரிடம் கார் இருந்தது. பார்த்துப் பார்த்துக் கட்டினார். மூன்று மகன்கள். இரண்டு மகள்கள். வீடு கட்டி பதினைந்து வருடங்களாகி விட்டன. இங்கு வருவதற்கு முன்பே பெண்கள் இருவருக்கும் கல்யாணமாகி குழந்தைகளையும் பெற்று விட்டனர்.

    இந்தப் பதினைந்து வருடத்தில் அந்த இடம் அழகான வசதியான காலனியாகி விட்டது. சாலைகள் அமைக்கப்பட்டு மின்சார விளக்குகள் ஒளிர பளிச்சென்று இருந்தது. பங்களாக்கள் பெரிது பெரிதாக இருந்தன. தள்ளித் தள்ளித்தான் கட்டப்பட்டு இருந்தது. காரணம் அவரவர்கள் தங்களுக்குத் தேவையான அளவில் வாங்கி வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்துக் கொண்டு விட்டனர்.

    தென்னை, மா, பலா, கொய்யா, சப்போட்டா, வாழை என்று செழுமை. குத்தகைக்கு விட்டு வருமானம் கண்டனர். முதன் முதலில் சரவணப் பெருமாள் தான் வாங்கினார் என்பதால், அக்காலனிக்கு சரவணா காலனி என்றே பெயர் சூட்டப்பட்டது.

    மூத்த மகன் ரமணன். அப்பாவுடன் அவருடைய பிஸினஸில் இணைந்து கொண்டான். இந்த சரவணா காலனிக்கு வந்த பின்பு தான் திருமணமாயிற்று. இருபத்திரண்டு வயதிலேயே திருமணம். திருமணமாகி பதிமூன்று வருடங்கள் ஓடியும் குழந்தை பேறு இல்லை. அடுத்த மகன்கள் சங்கர், கணேசன்.

    இளையவன் சங்கர். டெல்லியில் செட்டிலாகி பஞ்சாபி பெண்ணை மணந்து கொண்டான். சரவணப் பெருமாளுக்கு கொஞ்சம் வருத்தம் தான். சங்கருடன் வேலை பார்ப்பவள். சோனா.

    கடைசி மகன் கணேசன் எம்.பி.ஏ. முடித்து வெளியே வேலைக்குப் போவதா அப்பாவுடன் இணைவதா என்று சீட்டுப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    இரண்டாவது மகனின் திருமணத்தில் ஏற்பட்ட வருத்தத்தில் சரவண பெருமாள் கடைசி மகனிடம் கேட்டே விட்டார். காரணம் அவரின் அத்தை பேத்தி சாருமதியை சங்கருக்கு முடிக்க எண்ணி இருந்தார். சாருமதி தஞ்சைக்கு அருகில் கிராமத்தில் வளர்ந்திருந்தான். எம்.ஏ. ஆங்கில இலக்கிய பட்டதாரி. தஞ்சை கல்லூரியில் படித்து பட்டம் பெற்றாள். அக்கல்லூரியிலேயே வேலைக்கும் சேர்ந்து விட்டாள்.

    சங்கர் ஆணழகன். சரவண பெருமாளின் பண வசதியும், பங்களாவின் செழுமையும் சாருமதியின் பாட்டி நீலாவை ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிட வைத்தது. சொல்லிச் சொல்லி பேத்தியை வளர்த்து விட்டாள்.

    ஏன் பாட்டி நம்ம கிட்ட இல்லாத சொத்தா என்று சாருமதி பாட்டியைச் சீண்டுவாள்.

    பேத்தி கண் நிறைந்த கணவனைப் பார்த்தாள். பாட்டியோ கண்ணுக்கு எட்டிய வரை உள்ள சொத்துக்களைப் பார்த்தாள்.

    பிறந்த வீட்டின் வளர்ப்பும் நீ வளர்ந்த வரை தாண்டி. சீர்னு சொல்லி உங்க அண்ணன், தம்பிக அனுப்பி வச்சுடுவாங்க புகுந்த வீட்டு சொத்துதான் உனக்கு நிரந்தரம் சரவணப் பெருமாள் சொத்து நிறைய... என்று உதட்டைப் பிதுக்கி கண்கள் விரிய ஆச்சர்யம் காட்டுவாள்.

    எல்லாம் கனவாகிப் போனதில் இரண்டு குடும்பத்திற்கும் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தினால் தான் சரவண பெருமாள் கடைசி மகன் கணேசனிடம் சொல் தூண்டில் போட்டார்.

    என்னடா கணேசா, நீ என்ன நேபாளியா பெங்காலியா?

    நேபாளிகள் எல்லாம் கூர்கா வேலை பார்ப்பாங்க. நேர்மையானவங்கனு கேள்விப்பட்டிருக்கேன். வங்காள இலக்கியம் எனக்குப் பிடிக்கும். சரத் சந்தரர் பக்கிம் சந்த்ரர் நாவல்கள் படிச்சிருக்கேன். இவ்வளவு ஏன்? தாகூரோட கீதாஞ்சலி. அவருடைய கதை ஒண்ணு சுபானு. சூப்பர். பெயரே அழகு. மூணு பெண்கள் பெயர்களுக்கு விளக்கம் இருக்கு பாருங்க

    கேட்கத்தாண்டா முடியும். பார்க்க முடியாது

    ஜோக் அடிக்கணும்னு அடிக்கிறீங்க, சிரிச்சுட்டேன்

    பெயரழகை சொல்லேன். நானும்தான் தெரிஞ்சுக்கறேன்.

    வாழ்க்கையில் நிறைய தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இருக்குப்பா. நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை ஆண்டவன் கொட்டிக் கொட்டி வச்சிருக்கான்.

    நல்லா தத்துவம் பேசறே. விஷயத்துக்கு வா.

    ஒருத்தி பேர் சுபாஷிணி. அதாவது இனிமையா பேசக் கூடியவள். இன்னொருத்தி பேர் சுகேசினி. அதாவது அழகான கூந்தலைப் உடையவள். இன்னொருத்தியோட பேர் சுஹாஸினி. அதாவது இனிமையா புன்னகை பூப்பவள்.

    குட் நம்ம நடிகை சுஹாஸினியோட புன்னகைகூட இனிமையா இருக்கும்.

    ஒத்துக்கறேன். தாகூர் கதையில சுபாஷினினு இனிமையா பேசுவானு பேர் வச்ச பெண் ஊமை, செவிடு. இது எப்படி இருக்கு? இலக்கியம் மலர்ந்த அந்த பூமியிலதான் ராமகிருஷ்ண பரமஹம்ஸராலேயும், அன்னை சாரதா தேவியாலேயும் ஆன்மீகப் பயிர் தழைத்தது.

    மகனின் அறிவாற்றல் வியக்க வைத்தது.

    நீ நிறையத் தெரிஞ்சு வச்சுண்டு இருக்கே

    நீங்க என்னைத் தெரிஞ்சு வச்சுக்கல்ல

    மகனின் சொல்லில் அடிபட்டுப் போனார் சரவணப் பெருமாள்.

    பெத்து வளர்த்த நான் உன்னைப் பத்தித் தெரிஞ்சுக்கலையா? என்னடா உளர்றே

    உண்மை அதுதான்

    என்ன புரிஞ்சுக்கல? நீ விரும்பின டிரஸ்கைப் வாங்கித் தரலையா? ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க வைக்கலையா?

    மகனின் பேச்சு வலியைத் தர நொந்து போய் விட்டார். கடமையை சரியா பண்ணலையா!

    என் மனசை புரிஞ்சுக்கல்ல

    ஃபாரீன் போகணும்னு ஆசைப்படறியா?

    மகனின் முகத்தையே பார்த்தார். ஏதாவது புரியுமா?

    அது ஒரு நாளும் கிடையாது. பீ இண்டியன்; பை இண்டியன் தான் நம்ம பாலிஸி

    வேற என்ன புரிஞ்சுக்கல?

    என் மனசுல யார் இருக்கானு புரிஞ்சுக்கல்ல.

    சுரீர் என்று ஒரு அடி தான் நினைத்தது சரியே, யாரையோ பய மனசுல வச்சுண்டு இருக்கான்.

    வங்காளியா நேபாளியானு கேட்டீங்களே?

    சொல்லித் தொலையேண்டா

    சாருமதி

    அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    எப்படி, எப்படிடா...?

    அப்படித்தான் எங்க கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆனது.

    ஏண்டா இத்தனை நாளா சொல்லலே?

    எங்க ரெண்டு பேருக்கும் ஒன்னரை வயசுதான் வித்தியாசம். சங்கர்க்கு கட்டலேனு வருத்தப்பட்டுகிட்டு கிடந்தீங்க.

    உண்மைதான். அத்தைகிட்ட பேசி முடிவு பண்றேன்

    மனதுல் விசில் அடித்தான் கணேஷ்.

    Enjoying the preview?
    Page 1 of 1