Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjirkoru Vanchikkodi
Nenjirkoru Vanchikkodi
Nenjirkoru Vanchikkodi
Ebook134 pages1 hour

Nenjirkoru Vanchikkodi

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466190
Nenjirkoru Vanchikkodi

Read more from Usha

Related to Nenjirkoru Vanchikkodi

Related ebooks

Reviews for Nenjirkoru Vanchikkodi

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjirkoru Vanchikkodi - Usha

    27

    1

    "ஒரு நகர்ப்புறத்துல எலியும் நத்தையும் விளையாடிகிட்டிருந்ததாம். கொஞ்சம் கொஞ்சமா ரெண்டும் நண்பர்களா மாறிகிட்டிருந்தாலும், எலிக்கு நத்தையைப் பார்த்தால் கொஞ்சம் இளக்காரம். ஏன் தெரியுமா? நத்தை தன் முதுகுல கூடு ஒண்ணை சுமந்துகிட்டே இருக்கில்லே? அதைப் பார்த்து சிரிக்கும் இந்த எலி. ஒரு நாள், ரெண்டும் களத்துமேட்டுல விளையாடிக்கிட்டிருக்கும் போது, வானத்துல வட்டமடிச்சிகிட்டிருந்த கருடனோட நிழலைக் கவனிச்சுது ரெண்டும். கருடன் பார்வை, தரைல இந்த ரெண்டு மேலயும் உன்னிப்பா விழத் தொடங்கிச்சு... ‘அடேய் ஆபத்துடா, இன்னும் கொஞ்ச நேரத்துல விர்ருனு அம்பு போல பாஞ்சு நம்மளைக் கொத்தித் தின்னுடும்டா இந்த கருடன்’னு ரெண்டும் புரிஞ்சுகிச்சு... எலி... ஒரே தாவா தாவி புதருக்குள்ளே ஓடி, தரைல ஓடி, ஒரு மறைவான இடத்தல பதுங்கிடுச்சு. அதுக்கு மனசு அடிச்சுக்குது. ‘நாம ஒல்லியா இருக்கோம், சரசரன்னு சுலபமா ஓடி ஒளிஞ்சுட்டோம்... ஆனா பாவம், இந்த நத்தையால எப்படி முடியும். இடத்தை விட்டு அசையவே அதுக்கு ஒரு மணி நேரம் ஆகுமே, அய்யோ கருடன் அதை சாப்பிட்டிருக்குமே’ன்னு கவலைப்பட்டுச்சு.

    அரைமணி நேரம் பொறுத்திருந்து, கருடன் மறைஞ்சதும் வெளில வந்து நத்தையை தேடினா. அது அதே இடத்துல ஜம்முனு இருக்கு... எனக்குதான் கூடு இருக்கே, நான் ஏன் ஓடணும், என் உடம்பை சுருக்கி கூட்டுக்குள்ளேயே இருந்து தப்பிச்சுட்டேன்னு சிரிச்சிச்சு... எலிக்கு ஆச்சரியமா போச்சு... அப்பதான் அதுக்கு இயற்கையோட புத்திசாலித்தனம் புரிஞ்சது... ‘எவ்வளவு அற்புதமான இயற்கை, லேசான உடல் கொண்ட எனக்கு ஓடற திறமை, வலுவான உடல் கொண்ட நத்தைக்கு இருக்கிற இடத்திலேயே பாதுகாப்பை தேடிக் கொள்கிற திறமைன்னு உண்டாக்கியிருக்கு, இனிமேல் யாரையும் எதற்காகவும் குறைச்சு மதிப்பிடக்கூடாது’ன்னு புரிஞ்சுகிட்டது... குழந்தைகளே, நல்லா இருக்குதா நான் சொன்ன விஷயம்? புடிச்சிருக்கா உங்களுக்கெல்லாம்?"

    பூமிகா புன்னகையுடன் தரையில் இறங்கி அவர்களுடன் இணைந்து உட்கார்ந்தாள். அந்த எளிய முகங்கள் ஆர்வத்துடன் கதை கேட்டன. விழிகளில் பரவசமும் உடல்மொழியில் பரபரப்பும் காட்டின.

    வேலு அட்டகாசமான கதை டீச்சர்... நத்தைங்க கூட்டம் கூட்டமா வரும் இல்லே டீச்சர், மழைக்காலத்துல? நிறைய பாத்திருக்கேன் டீச்சர் என்றான் வேகமாக.

    எனக்கு பாட்டு கூட தெரியும் டீச்சர்... நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமா, அத்தை வீடு பயணம் போக முதுகில் மூட்டை வேணுமா? எப்படி, சூப்பர் இல்லே டீச்சர்? சங்கீதா சிரித்தாள்.

    இது ஈசாய் கதையா டீச்சர்?

    நீங்க சொல்ற கதைங்களெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு டீச்சர்... ரொம்ப ரொம்ப நல்லா...

    நாளைக்கும் பாடம் முடிஞ்சதும் கதை சொல்லுவீங்கதானே டீச்சர்?

    சிரித்துக் கொண்டே அவள் அந்தச் சிறு மனிதர்களின் தலையைத் தடவினாள்.

    நிச்சயமா குட்டீஸ்... இதைவிட அழகான வேலை வேற என்ன இருக்கு, உலகத்துல?

    அப்போது தான் வகிதாவைப் பார்த்தாள். தனித்து உட்கார்ந்து, இறுக்கமான பார்வையும் இறுகிய உதடுகளுமாக, அவள் தரையை பார்த்தபடி இருந்தாள்.

    வகிதா... ஏய் வகிதாகுட்டி... என்ன ஆச்சு? பசிக்குதா? ஏன் டல்லா இருக்குற? என்று கை நீட்டி அவள் கன்னத்தை வருடினாள் பூமிகா.

    ம்... என்று முனகல் மட்டுமே பதிலாக வந்தது.

    ஏய்... குட்டி... என்ன பிரச்சனை உனக்கு? உம்மா உனக்கு சேமியா பாயசம் செய்து தரலையா? நான் செஞ்சு கொண்டு வரட்டுமா? என்று அந்தப் பிஞ்சு சிறுமியை அவள் அணைத்துக் கொண்டு சிரித்தாள்.

    ம்... ம்...

    சொல்லு... என்ன வருத்தம் உனக்கு?

    டீச்சர்... என்றாள். நிமிர்ந்தபொழுது அந்த பெரிய விழிகளில் குளம் கட்டியிருந்தது கண்டு பூமிகா திடுக்கிட்டாள்.

    வகிதா... அழறியா என்ன? ஏம்மா?

    டீச்சர்... வந்து... வந்து நாங்க வீடு... இல்லே... ஊரு... காலி பண்ணப்போறோம் டீச்சர்... இனிமே... உங்களை, இவங்களை... பாக்க முடியாது டீச்சர்... என்று வகிதா தழுதழுத்தாள்.

    ஏம்மா...? யார் சொன்னது அப்படி?

    உம்மாதான். தண்ணி பிடிக்கப்போனா, காய் வாங்கப் போனா, முட்டை வாங்கப் போனா எல்லாரும் உம்மாவை திட்டுறாங்களாம்... ‘உம் புருசன் தீவிரவாதி, குண்டு தயார் செஞ்சவன், ஊரை விட்டு ஓடு’ன்னு பேசுறாங்களாம்... உம்மா சொன்னாங்க, இந்த பெருமாள் கோவில் தெரு வீட்டை விட்டு, மசூதி தெரு வீட்டுக்குப் போயிடலாம். உன் படிப்பு நின்னாலும் பரவாயில்லே, இந்த ஏச்சுப் பேச்சைக் கேக்க முடியலேன்னு அழுதாங்க உம்மா

    அப்படியா? சரி வகிதா... உம்மாகிட்ட நான் பேசறேன்... நீ கவலைப்படாதே... உனக்காக இன்னொரு கதை சொல்லட்டுமா? என்று வகிதாவை சமாதானப்படுத்தினாள்.

    ஆனால், உள்ளே வலித்தது.

    வகிதாவின் தாயின் வலி, உண்மையானது.

    இன, மத, மொழி வேறுபாடின்றி ஒற்றுமையும் மகிழ்ச்சியுமான இந்தியா இல்லை, இது துவேஷம், வெறுப்பு, வன்மம் என்ற மத சைத்தானின் பிடியில் இருக்கும் தேசம் இது.

    வகிதாவை அவள் இறுக அணைத்துக் கொண்டாள்.

    2

    வீடு வந்து சேர்ந்தபொழுது அமர் மனம் முழுக்க உற்சாகத்தை சுமந்திருந்தான்.

    ஐ.ஐ. டி. வளாகத்தை விட்டுப் பிரியும் போது மனம் கனக்கத்தான் செய்தது. நான்கு வருட ஹைட்ரோலிக் என்ஜினீயரிங் படிப்பைக் கொடுத்த அந்தக் கோவிலை விட்டு எப்படி வெளியில் வருவது என்று உணர்வுபூர்வமான வருத்தம் கடைசி வாரங்களில் ரொம்பவே தொல்லைப்படுத்தியது. ஆனால் நான்கு வருடங்களும் முதல் மாணவனாக நின்றது, கடைசி செமஸ்டரில் ஒழுக்கு ஆறில் தங்கப்பதக்கங்கள் வாங்கியது, லெக்சரர்களும், ஹெச்.ஓ.டி.களும் மனநிறைவுடன் கைகுலுக்கி வாழ்த்தியது, நண்பர்கள் பட்டாளம் அவனை தூக்கிக் கொண்டு மரங்களுக்கு நடுவே ஊர்வலம் போனது என்று எல்லா நிகழ்வுகளும் மனதை மிகவும் இளக்கிவிட்டன.

    கல்விக் கண்திறந்து கல்லூரிக்கு இதுவரை சரியான நன்றியைக்காட்டி விட்டோம், இனிமேல் இதற்குமேல், இதற்குமேல் என்று நம் பொறுப்பைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று பொறி பொறியாய் உண்டாகி, அக்னிக்குஞ்சாக நெஞ்சில் மலர்ந்து விட்டது.

    அம்மா வாசலில் காத்திருந்தாள்.

    வாடா என் தங்கம் என்று கையால் இந்தபக்கமும் அந்தப்பக்கமும் சுற்றி திருஷ்டி கழித்தாள். இமைகள் ஈரம் கோத்திருந்தன. உதடுகளில் படபடப்பு.

    டாப்ல வந்துட்டான் என் பையன். இதைவிட வேற என்ன வேணும் எனக்கு? என்று அவன் தலையை வருடி சிரித்தாள்.

    கணவனின் புகைப்படம் முன்னால் ஊதுபத்தி ஏற்றி வைத்து, பாருங்க... அமர் இப்போ பெரிய என்ஜினீயராகப் போறான். ஐ.ஐ.டி. ல முதல் மாணவனா எவ்வளவு பெருமையா வந்து நிக்கிறான் பாருங்க... என்ன அவசரம்னு அப்படி போய் சேர்ந்தீங்க, முப்பது வயசுல? என்று பெருமிதமாக ஆரம்பித்து அழுகையில் போய் நிறுத்தினாள்.

    தாயை அணைத்துக் கொண்டு அவன் அவள் நெற்றியை வருடினான்.

    "அப்பாவோட ஜீன்மா இது... கோயம்புத்தூர் என்ஜினீயரிங் காலேஜ்ல அப்பா கலக்கலான ஸ்டூடன்ட்டா இருந்தப்பதானே, இந்த மாதிரி ஐஸ்வர்யா ராய் அழகியை சந்திச்சிருக்கார்? உன் அழகு, அப்பாவோட

    Enjoying the preview?
    Page 1 of 1