Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannithuvidu Maayaa
Mannithuvidu Maayaa
Mannithuvidu Maayaa
Ebook139 pages1 hour

Mannithuvidu Maayaa

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466190
Mannithuvidu Maayaa

Read more from Usha

Related authors

Related to Mannithuvidu Maayaa

Related ebooks

Reviews for Mannithuvidu Maayaa

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannithuvidu Maayaa - Usha

    26

    1

    "அம்மா... ஒரு நிமிஷம் வாயேன்... ப்ளீஸ்" - மாயா அறைக்கதவை மெல்லத் திறந்து தலையை மட்டும் நீட்டி தாயை அழைத்தாள்.

    இருடி வரேன்... என்று வழக்கமான பதில் உடனே வந்தது.

    ப்ளீஸ்மா... ஜஸ்ட் ஒரே ஒரு நிமிஷம்தான்... அதுக்கு மேலே இல்லே... டயமாகுதும்மா காலேஜ்க்கு. ப்ளீஸ்... என் தங்க அம்மால்ல? - இப்போது அவள் கெஞ்சினாள்.

    அப்படி என்னடி தலை போகிற அவசரம்? சட்னிக்கு அரைச்சுக்கிட்டிருக்கேன்ல? கரண்ட் கிரண்ட் போய் தொலைச்சுதுன்னா? என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தாள் ஜகதா.

    கொஞ்சம் ப்ளீட்ஸ் சரி பண்ணும்மா... இன்னிக்கு ‘கல்ச்சுரல் டே’ மா காலேஜ்ல... புடவை கட்டிட்டுப் போகணும், அதான்... என்று புடவை மடிப்புகளை சீராக வைக்கத் தெரியாமல் தவித்தபடி அம்மாவிடம் கொஞ்சினாள் மகள்.

    சரி... சரி... சரியா நிமிர்ந்து நில்லு... பெட்டிக்கோட்டை இன்னும் டைட்டா கட்டு. கால்களை தளர்வா வெச்சுக்கோ...

    சரி... சரி...

    இளம் ஆரஞ்சும் இளம் ரோஜா வர்ணமும் கலந்த மிக ரம்மியமான கிரேப் துணியில் நெய்யப்பட்ட டிஸைனர் புடவை. அதற்குத் தோதான முழங்கைவரை தைக்கப்பட்ட டிஸைனர் சோளி. இமிடேஷன் நகைக் கடைகளை இன்டர்நெட்டில் தேடித்தேடி, ஆன்லைனில் வாங்கிய கழுத்தை ஒட்டிய சோக்கர் நெக்லஸ்... காதணிகள்... தெரிந்தும் தெரியாமலும் அந்த நகைகளில் ஜொலித்த சின்னஞ்சிறு ரோஸ் வர்ண ஜர்கான் கற்கள்... எண்ணெய்ப் பற்று இல்லாத நெகிழ்ந்த கூந்தல். அடக்கியும் அடக்காமலும் அடக்கமாகப் பளபளத்த பட்டாம்பூச்சி கிளிப். மையிட்டாற்போல் பிறவியிலேயே வந்த விழிகளுக்கு மேலும் ஒரே ஒரு மெல்லிய வரியாக இடப்பட்ட கண்மை. கடுகு அளவில் ஒரு கரும்பொட்டு.

    ஜகதா வாய்பிளந்து மகளைப் பார்த்தாள். எதையோ தேடுவதுபோல மேலும் கீழும், பிறகு கீழும் மேலுமாக பார்வையை ஓட்டினாள்.

    ம்... என்று பெரிய மூச்சு விட்டாள்.

    தாங்க்ஸ்மா... ஸாரி டு ட்ரபிள் யூ... மொதல் தடவையா நானே புடவை கட்டறேனா? தடுமாறிட்டேன். நான் வேணா ஹெல்ப் பண்ணவா சட்னிக்கு? என்று தாயை அணைத்துக் கொண்டு புன்னகைத்தாள் மாயா.

    என்னடி இது, இப்படி இருக்கே... கல்யாணப் பொண்ணு மாதிரி? சூடிதார்ல தெரியலேடி மாயா. இப்பிடி புடவையில பாக்குறப்ப, வயிறு கலங்குதடி... பொறுப்புன்னா என்னன்னே தெரியாத உங்கப்பாவை வெச்சுக்கிட்டு என்னடி செய்யப் போறேன்? என்று ஜகதா திகைப்புடன் மறுபடி மகளையே பார்த்தாள்.

    அய்யோ... ஏம்மா இப்பிடி? அப்பாவை எதுவும் சொல்லாதே. ப்ளீஸ்... சரி... எப்படி நல்லா இருக்கா புடவை எனக்கு?

    அழகு அள்ளிட்டுப் போகுதுடி மாயா... யாரது, ‘பத்மாவத்’ படத்துல பாட்டுக்கு ஆடறாளே ஒருத்தி, தீபிகா. அவளை மாதிரி இருக்கே, இந்த வடஇந்திய சேலைல! பாரு, காலேஜ்ல எல்லா பொண்ணுங்களும் ஒன்னையே சுத்தப் போகுதுங்க! என்று ஜகதா விரல்களால் மகளுக்கு திருஷ்டி சுற்றினாள்.

    அப்படியா? தாங்க்ஸ்மா... நான் கொஞ்சம் சீக்கிரம் கெளம்பறேன். ஸ்கிட் ஒண்ணு போடறோம், எங்க எம்.ஏ. சோஷியாலஜி க்ரூப் சார்பா. ரிகர்சல் பார்க்கணும்... தங்கச்சிங்க போயாச்சா, கராத்தேக்கும் கோச்சிங்குக்கும்...?

    நித்யா இப்ப வந்துடுவா... கராத்தே கிளாஸ் முடிஞ்சு ஆரண்யா வர இன்னும் பத்து நிமிஷமாகும்.

    சரிம்மா... என்று முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பார்த்து விட்டுக் கிளம்பும்போது நித்யா சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினாள்.

    வாவ்! மாயாக்கா! இதென்ன ஏஞ்சலினா ஜோலி மாதிரி இருக்க! செம்ம. செம்ம! வெரி பியூட்டிஃபுல் என்றாள் வியப்புடன்.

    ஏய் நித்தூ... ஏஞ்சலினா என்னிக்குடி புடவை கட்டியிருக்கா? பொய் சொல்றே, பொருந்த சொல்லுடி கண்ணு... என்று சிரித்தாள் மாயா.

    இல்லக்கா... ஆனஸ்ட்லீ. அகலமான உதடும் ஷார்ப்பான மூக்கும் அதே மாதிரி இருக்கும் உனக்கு லைட் மேக்கப் போட்டிருக்கே. அதனால எடுப்பா தெரியுது. பார்ட்டியா காலேஜ்ல?

    கல்ச்சுரல்ஸ்டி நித்யா... வரட்டுமா?

    இருக்கா, ஒரே ஒரு செல்ஃபி... என்று மாயாவின் செல்போன் எடுத்து கிளிக் செய்துவிட்டு ஹாவ் எ நைஸ் டே... என்று கையில் கொடுத்துவிட்டு நித்யா ஓடினாள்.

    தாங்க் யூ... என்று போர்ட்டிகோவில் நின்றிருந்த ஸ்கூட்டியை எடுத்தாள் அவள். வெளியில் வந்து கதவை மூடிக் கொண்டு வண்டியை இயக்கும்போது, குப்பென்று நித்திய மல்லிகை வாசம் மூக்கைத் துளைத்தது. உலகின் அழகான விஷயங்களில் ஒன்று இந்த மல்லிகைக்கொடி என்று நினைத்துக் கொண்டாள்.

    அம்மா சொன்னது உண்மைதான்! தோழிகள் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

    பிரமிளா, மாயா. எங்க வாங்கின இந்த ஸாரிய? சௌகார்பேட்டையா? ரொம்ப அழகுடி... என்று தொட்டுத் தொட்டுப் பார்க்க, எந்த ஷாப்டி இந்த சோக்கர்? ஜஸ்ட் அமேஸிங்... என்று கீர்த்தி வியக்க, நீ மை கூட போடமாட்டே... இன்னிக்கு ஐ லைனர், லிப் கிளாஸ்னு கலக்கறே. மாயா, சீஃப் கெஸ்ட் இன்னிக்கு யார் தெரியுமா? மிஷ்கின்... பாரு நடிக்கக் கூப்பிடப் போறாரு என்று காத்ரீன் படபடக்க, அவள் தோழிகளை அணைத்தபடியே கல்லூரியின் மைதானம் ஊடாக நடந்தாள்.

    கலையரங்கம் வர்ண ரிப்பன்கள், வர்ண விளக்குகளால் ஜொலித்தது. இருக்கைகளில் இப்போதே கூட்டம் தெரிந்தது. மாணவர்களின் முகங்கள் இந்தப் பக்கம் பெண்களின் வகுப்பறைகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தன. ஓ... இது இன்டர் காலேஜ் கலைச்சங்கமம் என்பது இப்போதுதான் நினைவுக்கு வந்தது.

    பிரசாத் வந்திருப்பான். ‘எங்கள் கல்லூரியும் ஒரு நாடகம் போடுகிறது’ என்றானே.

    ரிகர்சல் பாத்துடலாம் மாயா... வா. என்று தேன்மொழி அழைத்தாள்.

    அரைமணி நேரம் ஒத்திகையில் கடந்தது. அது ஆன்டனி - கிளியோபாட்ராவின் காதல் நாடகம். மாயாதான் கிளியோபாட்ரா!

    நைல் நதிக்கரையின் நாயகியான அவளின் வாழ்க்கை மிக ரசனையானதாக, போராட்டமானதாக, பழிவாங்குதலாக என்று பலவித உணர்வுகளின் ரகளையாக இருந்தது. மாயாவுக்கு இந்த பாத்திரத்தை மிகவும் பிடித்து இருந்தது. அடக்கி வைக்கப்பட்ட பெண், தளையிலிருந்து வெளியில் வரும்போது காட்டாற்று வெள்ளமாகத்தான் பாய்வாள் என்று புதிதாகப் புரிந்தது. கலைச்சங்கமத்தில் அந்த நாடகம்தான் முதல் பரிசு பெற்றது. பாராட்டுக்கள் குவிந்தன. கை குலுக்கிக் குலுக்கி ரேகைகள் வலித்தன. ஆங்கிலத் துறைத் தலைவர் பிரபாகர் ஸார் வந்து வாழ்த்தியது பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ஹாய்... மாயா... என்று பிரசாத் வந்து நின்றான். அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

    ஹாய்... பிரசாத்... எப்போ வந்தே? நாடகம் பாத்தியா? என்றாள் அவள், சிறுமி போல ஆர்வத்துடன்.

    பாத்தேன்... பாத்தேன்! வேற கதையே கிடைக்கலையா உனக்கு? கர்மம்! காதலாம், கன்றாவியாம்... என்றான் முகம் சுருக்கி. மொதல்ல ஜூலியஸ் சீஸர், அப்புறம் ஆன்டனி. கடைசில யார் யாரோ... அந்த கிளியோபாட்ரா ரோல்ல யாரைக் கேட்டு நீ நடிச்சே? என்றான், சன்னமான குரலில் துப்பாக்கி ரவைகள் போல் வார்த்தைகள் வெடித்தன.

    ஏன்? யாரைக் கேட்கணும்?

    என்னைக் கேட்கணும்.

    எதுக்கு?

    இதென்ன கேள்வி? நான் உன் அத்தை மகன். நாளைக்கே நமக்கு கல்யாணம் நடக்கப் போகுது... தெரியாதா உனக்கு? என்னைக் கேக்காம எப்படி இந்த கேவலமான நாடகத்துல நீ நடிச்சே?

    என்ன சொல்றே பிரசாத்? உலகப் புகழ்பெற்ற இலக்கியம் இது. ஷேக்ஸ்பியரோட பெஸ்ட் நாடகம். ரொம்ப விரும்பி, ரசிச்சு நடிச்சேன். ஸாரி... இதுக்கு நான் யார்கிட்டயும் அனுமதி வாங்க வேண்டியதில்லே... ஏன்னா, இதுல எந்த விதிமீறலும் இல்லே... என்று பொறுமையாகச் சொன்னாள் மாயா.

    ஓகோ... அப்படின்னா நம்ம கல்யாணம் பத்தி நான் யோசிக்க வேண்டியிருக்கும்! என்று சொல்லிவிட்டு அவன் சரேலென்று நகர்ந்தான்.

    2

    அப்பா இன்னும் வரவில்லை.

    சாதாரணமாக ஒன்பதரைக்கு அவருடைய பழைய வெஸ்பா ஸ்கூட்டரின்

    Enjoying the preview?
    Page 1 of 1