Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aval Oru Sittu
Aval Oru Sittu
Aval Oru Sittu
Ebook139 pages2 hours

Aval Oru Sittu

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466190
Aval Oru Sittu

Read more from Usha

Related to Aval Oru Sittu

Related ebooks

Reviews for Aval Oru Sittu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aval Oru Sittu - Usha

    27

    1

    ஒரு கணம் நம்பத்தான் முடியவில்லை.

    தாமரை, சிலை போல் சமைந்து நின்றாள். இதயத் துடிப்புகூட நின்று விட்டதோ எனும்படி உணர்வு. பாவம்... எதிலும் பிடிபடாத முகத்துடன் நின்றாள்.

    நீதிபதி வாசித்த தீர்ப்பின் வாசகங்கள், திரைப்படம் போல ஓடின.

    இருபத்தோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த பின்னாலும்கூட இப்படிப்பட்ட வக்கிர மனமும், மிருக உணர்வும் கொண்ட கணவன்மார்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். பெண்களும் உயர்ந்துவர தலைப்பட்டு விட்டார்கள். இத்தனை நூற்றாண்டுகளாக கட்டிப்போட்டிருந்த இரும்புச் சங்கிலியைத் தகர்த்துக்கொண்டு யானையைப் போல எழுந்து நின்றுவிட்டார்கள். யானையின் வலிமையை நாம் உணர்ந்தே தீரவேண்டும். சர்க்கஸ் யானை போல கால்களை மடக்கி நாற்காலி மேல் நின்று தன் சக்தியை விரயமாக்கிய பழைய வரலாறு, பெண்களுக்கு இனி ஒத்து வராது. சரியான அங்கீகாரத்துக்காக சுயசார்புடன் வாழ தலைப்பட்டதற்காகவும் மவுனப் போராட்டம் தொடங்கிவிட்ட மகளிரை நாம் வாழ்த்தி வரவேற்போம். பசுபதி போன்ற தீய நோய்களுக்கு மருந்தும் கொடுப்போம். சந்தேகத்துக்கு இடமின்றி தாமரையால் நிரூபிக்கப்பட்ட உடல் சிதைவு, மனச்சிதைவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நீதிமன்றம் அவர்களுக்கு, விவாகரத்து வழங்குகிறது. மேலும்...

    தன் மென்னுடல் நடுங்கியது அவளுக்கு.

    உண்மைதானா இது? என்கிற கேள்வி திரும்பத் திரும்ப ஓடிவந்தது.

    விடுதலை பெற்று விட்டேனா? நானா? இனி என் வாழ்க்கையில் நான் மட்டும்தானா? நல்லதோ... கெட்டதோ... எல்லாவித முடிவுகளையும் நானே எடுக்கப் போகிறேனா...?

    தை மாதக் குளிர்காற்று, கடற்கரையை விட்டு ஓடி வந்து நேரே அவள் மீது மோத, மேலும் வெடவெடத்த உடலை குறுக்கிக் கொண்டு அவள் நிமிர்ந்தாள்.

    எதிர் வரிசை உப்பரிகையில் வக்கீலுடன் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்த பசுபதியின் பார்வை இவள் மேல் பட்டது. பட்டை தீட்டப்பட்ட கூர்மையான கத்தியைப் போல் இறங்கியது.

    ‘அய்யோ!’ தாமரை உடனே தலையைத் திருப்பிக் கொண்டாள். இதயம் தாறுமாறாக அடித்தது.

    மெல்ல இரண்டடி வைத்தாள்.

    பிரபாவதி தீவிரமாக வழக்கறிஞரிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். கையில் இருந்த தீர்ப்பின் நகலை சரிபார்த்தபடி சந்தேகங்கள் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டிருந்தாள்.

    தாமரை நகர்ந்தாள்.

    மாடம் போல் கட்டப்பட்டிருந்த அந்த நீதிமன்ற வளாகத்து வெளிப்புற நிலை அருகே வந்து நின்று கீழே பார்த்தாள்.

    மனுநீதிச் சோழனின் சிலை தெரிந்தது.

    ஒரு கணம் நெகிழ்ந்தது உள்ளம்.

    காவல் மணி அடித்துக் கவலை தெரிவித்த பசுவின் வேதனை உணர்ந்து, நீதி வழுவாது. தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற சோழ மன்னன்!

    பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்பவையெல்லாம் சரியான தீர்வுதானா? என்கிற விமர்சனங்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, பாசம் அன்பு போன்ற உணர்ச்சிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உடனே நீதியைக் கையில் எடுத்துக்கொண்டு நிறைவேற்றிய அந்த மகா மனிதனின் முகத்தைப் பார்த்தபோது, அவளின் இமைகள் நனைந்தன.

    காலங்கள் சுழன்று சுழன்று இன்று மனித குலம் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து சந்திரமண்டலத்தில் தனிக்குடித்தனம் அமைக்கிற அளவுக்கு வந்து விட்ட போதிலும், நீதியின் கவுரவம் இன்னும் கப்பாற்றப்பட்டு தான் வருகிறது, மனுநீதிச் சோழனின் வாரிசுகளாக இன்னும் நீதிபதிகள் இருக்கிறார்கள். தீர விசாரிக்கிறார்கள். நியாயம் வழங்குகிறார்கள். அவளுக்கு வழங்கியதைப் போல...

    இமைகளை அழுத்தமாகத் துடைத்துக்கொண்டு கண்களை உயர்த்திப் பார்த்தாள்.

    பரபரப்பான பாரிமுனை, தனக்கே உரிய உற்சாகத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் இங்கும் அங்கும் எதையோ தேடி அலைபாய்வதைப் பார்த்தபடி அப்படியே நின்றாள் அவள்.

    முல்லாவின் கதை நினைவுக்கு வந்தது. ஓரிடத்தில் தொலைத்து விட்டு, வேறிடத்தில் தேடுவார்கள் என்பாரே முல்லா! அதைப் போல் மக்களும் எங்கோ தொலைத்த வாழ்க்கையை இங்கே பரபரப்பாகத் தேடுகிறார்களோ?

    இங்கே இருக்கியா நீ?

    பிரபாவதியின் குரல் கேட்க, அவள் திரும்பிப் பார்த்தாள்.

    புன்னகைக்க நினைத்து இதழ்களை விரித்தபோது அவை துடித்துக் கொண்டு நடுங்கின.

    ஓ! தாமரை! என்ன இது? பிரபாவதி மென்மையாகத் தோள்களில் கை வைத்தாள். மகிழ வேண்டிய நேரமிது... வாழ்க்கையின் பொன்னான நிமிடம்... எப்பேர்ப்பட்ட நரகத்தில் இருந்து விடுதலை கிடைச்சிருக்கு உனக்கு! மகிழ்ச்சியா இரும்மா.

    அக்கா... என்றாள். வார்த்தைகள் நழுவிக்கொண்டு வரமறுத்தன.

    புரியுதும்மா... உனக்கு என்ன மனநிலை இருக்கும்னு புரியுது. என்ன செய்யறது? மண வாழ்க்கை என்கிறதுல அதிருஷ்டம் என்ற விஷயத்திற்கு ரொம்ப முக்கியமான பங்கு இருக்கு. நம்முடைய நல்ல மனசு, புத்திசாலித்தனம், அந்தஸ்து எல்லாத்தையும்விட அதிருஷ்டம் நல்லா இருக்கணும். அப்பதான் வாழ்க்கைத் துணை நல்லபடியா கிடைக்கும். எல்லோருமேவா அதிருஷ்டசாலியா இருந்துடமுடியும்? பெரும்பான்மை துரதிருஷ்டசாலிகள்தான். நாம் பெரும்பான்மையா இருக்கோம்னு புரிஞ்சுகிட்டா மனசு சமாதானம் ஆகிடும் தாமரை பிரபாவதி, ஆதரவு நிறைந்த குரலில் பேசினாள்.

    நம்ப முடியலே அக்கா என்று சொல்கையில் அவள் உடல் மறுபடி நடுங்கியது.

    இத்தனை நன நாளா தப்பிச்சுடணும் தப்பிச்சுடணும்னு துடிச்சுகிட்டிருந்தேன். இப்ப தப்பிச்சுட்டேன்னு தெரிஞ்ச பிறகு மனசு இறுகிப் போயிருக்கு அக்கா... நடந்தது உண்மையான்னு கேட்டுகிட்டிருக்கு... நம்ப முடியலே...

    எதிர் கடையில் போய் இனிப்பு வாங்கி உன் வாய் நிறைய அடைக்கிறேன். சாப்பிட முடியாமல் திணறும்போது நம்பு. சரியா? - பிரபாவதி சிரித்தாள்.

    பதிலுக்குப் புன்னகைக்கத்தான் அவளும் நினைத்தாள். ஆனால், முடியவில்லை.

    ரெண்டு பேரையும் வக்கீல் கூப்பிடறார் இளம் வக்கீல் அழைக்க, விரைந்தார்கள்.

    பளிச்சென்ற முகத்தில் திருமண் இட்டுக்கொண்டு மலர்ந்த முகத்துடன் இருந்த ராமானுஜம் தலையை அசைத்து, வாங்கோ... உக்காருங்கோ என்று இரண்டு நாற்காலிகளைக் காட்டினார்.

    உட்கார்ந்தார்கள்.

    திருப்தியாம்மா தாமரை? என்றார் கனிவுடன்.

    நிமிர்ந்தவளின், தலை குனிந்தது. மெல்ல அசைந்தது.

    ரொம்ப படபடப்பா இருக்கிறா, சார்.

    பிரபாவதி நிதானமாகப் பேசினாள். பாவம்... பாசம்னா அப்படி ஒரு பாசத்தைக் கொட்டி வளர்த்திருக்கார் அப்பா... தாயில்லாப் பொண்ணுன்னு ரொம்ப அன்பு... பசுபதி மாதிரி ராட்சசன்கிட்ட மாட்டிகிட்டு சித்திரவதை பட்டுட்டா... பழசை மறக்கிறது அவ்வளவு சுலபமில்லையே சார்?

    மறக்கணும்மா தாமரை. பார்வை முழுக்க கருணை பரவ ராமானுஜம் பேசினார். மறக்க முயற்சி பண்ணு. கட்டாயம் முடியும். கெட்ட கனவை ஞாபகம் வைச்சிருக்கிறதுல என்ன லாபம் சொல்லு? ஆசிரியர் பயிற்சி முடிச்சவ நீ. படிச்சதை வீணாக்காமல் பயன்படுத்து. ஆக்கப்பூர்வமான எந்த வேலையும் மனசைச் சுத்தப்படுத்தி உற்சாகத்தையும் கொடுக்கும். இன்னொரு விசயம்மா...

    நிமிர்ந்தாள்.

    தைரியமா இருக்கணும். அதுதான் முக்கியம்... ரொம்ப ரொம்ப முக்கியம். எல்லாரும் நம்மை மாதிரி மனுசங்கதாம்மா... அவங்களை எப்படி சமாளிக்கிறதுன்னு நமக்குத் தெரியணும். சரியா?

    மேலும் மேலும் அவர் சொன்ன அறிவுரைகளைக்

    Enjoying the preview?
    Page 1 of 1