Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayil Pola Ponnu Onnu
Mayil Pola Ponnu Onnu
Mayil Pola Ponnu Onnu
Ebook127 pages2 hours

Mayil Pola Ponnu Onnu

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466282
Mayil Pola Ponnu Onnu

Read more from Usha

Related to Mayil Pola Ponnu Onnu

Related ebooks

Reviews for Mayil Pola Ponnu Onnu

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayil Pola Ponnu Onnu - Usha

    21

    1

    விழிப்பு வந்து விட்டது.

    ஸ்நேகா எழுந்தாள்.

    இருள் இன்னும் கனமான போர்வையாகவேதான் பூமியைப் பற்றியிருந்தது.

    மணி பார்த்தாள்.

    எதிர்பார்த்தது போலவே நாலரைதான்.

    வலது பக்கச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தின் எதிரில் வந்து நின்றாள்.

    விவேகானந்தரின் அருமையான படம் அது. தீர்க்கமான விழிகள் வெளிப்படுத்தும் அறிவும் அன்பும் கலந்த அந்தப் பார்வை எப்போதும் போல் இப்போதும் அவள் முகத்தில் பட்டது.

    ‘வணக்கம்!’ இதழ்களுக்குள் முணுமுணுத்தபடி அவள் வீரத் துறவியை நோக்கிக் கைகுவித்தாள். ‘இன்றைய விடியல் எல்லா உயிர்களுக்கும் இன்பத்தை அள்ளிக் கொடுப்பதாக இருக்கட்டும்.’

    ‘அப்படியே ஆகட்டும்!’ என்பது போல் அவர் வலது கை உயர்ந்து ஆசீர்வதிப்பது போல் தோன்றியது.

    புன்னகையுடன் குளியலறைக்குள் நுழைந்து வெளிப்பட்டபோது புத்துணர்வு வந்திருந்தது.

    படுக்கையைத் தட்டுத் தட்டி மடித்து வைத்துவிட்டு அறையைக் கூட்டினாள். புத்தகங்கள் அடுக்கப்பட்டவைதான் என்றாலும் இன்னொரு தடவை அட்டைகளை நீவிச் சரியாக்கினாள். மத்தியானம் நேரம் கிடைத்தால் ‘புத்துயிர்ப்பு’ புத்தகத்தை முடித்துவிட வேண்டும். அப்போதுதான் அடுத்த புத்தகம் எடுக்க முடியும்.

    அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு தடவை மனதிற்குள் ஓடவிட்டாள்.

    செல்விக்கு வாக்ஸினேஷன் போட வேண்டும். டாக்டர் வரும்போது நினைவு படுத்த வேண்டும்.

    அஷோக் இரண்டு நாட்களாகச் சரியாகச் சாப்பிடாமல் அடம் பிடிக்கிறான். வயிற்றில் பிரச்சினையா என்று பார்க்க வேண்டும்.

    பாங்க் ஸ்டேட்மென்ட்டில் ஏதோ வித்தியாசம் இருக்கிறது. வெளியூர் செக்குகள் எவையேனும் பாஸாகி வந்திருக்கிறதா, அப்படியானால் அதற்கான அட்வைஸ் என்று விசாரிக்க வேண்டும்.

    அடாப்ஷனுக்காக ஜெர்மனி தம்பதியர் வரப்போவதாகச் சாரதா மேடம் சொல்லியிருந்தார். அதைப் பற்றி விரிவாகக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

    தவிர,

    மின் கட்டணம், மளிகைப்பட்டியல், காய்கறி வரவு, சமையல் என்று தினப்படிக் காரியங்களை மேற்பார்வையிடுகிற வேலை.

    அறையை மூடிக்கொண்டு வெளியே வந்தாள். தாழ்வாரம் நீண்டிருந்தது. எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருக்க, வழக்கம்போல் சாரதா மேடம் அறைக் கதவு மட்டும் திறந்திருந்தது.

    குட் மார்னிங் மேடம்.

    சாரதா திரும்பினாள். புன்னகைத்தாள்.

    குட் மார்னிங் ஸ்நேகா... வா... எழுந்துட்டியா, வழக்கம் போல? ராத்திரி ரொம்ப நேரம் லைட் எரிஞ்சிட்டிருந்ததே உன் அறைல...? சரி, எழுந்திருக்க லேட்டாகும்னு நினைச்சேன்.

    எவ்வளவு லேட்டா படுக்கைக்குப் போனாலும் காலைல நாலரை மணிக்கெல்லாம் எழுந்துக்கறதுன்னு நான் இல்லே மேடம், இந்திரா காந்தி அம்மாவே பழக்கமா வெச்சிருந்தாங்களாம். நாட்டுக்கே பிரைம் மினிஸ்டர்... எத்தனை ஸ்டேட்ஸ், எத்தனை பிராப்ளம்ஸ் இருக்கும்! அவங்களே மூணு மணி நேரத் தூக்கத்தோடு முடிச்சுக்கிட்டாங்க. நானெல்லாம் எந்த மூலைக்கு மேடம்?

    என்னது... என்னது? சாரதா மெல்ல அவள் எதிரில் வந்து நின்றாள்.

    அவங்க நாட்டுக்கு பி.எம். நீ இந்தக் கருணாலயாவுக்கு பி.எம். அவ்வளவுதானே? மந்திரி சபை, காபினெட், கட்சி ஆட்கள், உறவு, நட்புன்னு பரிவாரங்களோட ஆட்சி பண்ணவங்க அவங்க... பண பலம், உடல் பலம், ஈகோ பலம்னு நாலுவகைப் படைகளோட ஆட்சி புரியற யாரையும் விட, எளிமையான தோழிகள் துணையோட, பம்பரம் மாதிரிச் சுத்தி வந்து இந்த எட்டு கிரவுண்ட் ஆஸ்ரமத்தைப் பராமரிக்கிறியே ஸ்நேகா... நீதாம்மா உசத்தி எனக்கு...

    ஓ மேடம், ரொம்ப குளிருது... என்றாள் அவள்.

    குளிரா? இந்த ஸம்மர்லயா?

    ஐஸ் தூவிட்டே இருந்தா குளிராதா?

    ஓ ஸ்நேகா, பாத்தியா, காலை வாரிட்டே!

    இல்லே மேடம்... அவள் சாரதாவின் மெல்லிய விரல்களை ஆதரவுடன் பற்றிக் கொண்டாள். எந்தப் புகழுமே எனக்கு மட்டும் உரியதில்லே... இது ஒரு டீம் ஒர்க்... இல்லையா? வளர்மதியோட பொறுமை, கீதாவோட அக்கறை, யாமினியோட கட்டுக்கோப்பு, முத்து நகையோட கண்டிப்பு, மீனாட்சியோட அமைதின்னு எல்லாரும் கூட்டு முயற்சில செய்யற விஷயமில்லையா? எனக்கு மட்டும் தான்னு கிரீடத்தைச் சுமக்க நினைக்கிறது அயோக்கியத்தனம் தானே!

    ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருது ஸ்நேகா.

    பழமொழியா?

    வெற்றிக்குப் பிறகு எளிமையாக இருப்பது இரண்டாவது வெற்றி.

    புரியலையே, இது எதுக்கு நினைவுக்கு வந்தது?

    ரெண்டு வெற்றிகளுக்குச் சொந்தக்காரியா இருக்கியே. நீ அதனால... சாரதாவின் முகத்தில் பெருமிதம் படர்ந்தது. பொறுப்போட கருணாலயாவை நிர்வாகம் பண்றது முதல் வெற்றின்னா, அந்தக் கனம் தலைக்கு ஏறிடாம அமைதியா இருக்கியே, அந்த எளிமை இரண்டாவது வெற்றிதானே!

    அவள் தலை மெல்லக் குனிந்தது.

    சாரதாவின் வார்த்தைகள் மெல்லிய சந்தன ஊதுவத்தியை ஏற்றி வைத்த காலைப் பொழுது போல் மனதுக்கு இதம் சேர்த்தன. இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற எப்போதும் உழைத்துப் பாடுபடுவேன் என்று இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டன.

    காஃபி... என்று குரல் கேட்டது.

    சிவகாமி ட்ரேயில் காஃபி தம்ளர்களை வைத்து நீட்டினாள். அப்போதுதான் குளித்திருந்த தலையிலிருந்து ஈரம் சொட்டியது.

    குளிச்சுட்டியா சிவகாமி அதுக்குள்ள? என்றாள் சிநேகா ஆச்சரியத்துடன். உன் அறைல கெய்ஸர் வேலை செய்யவே இல்லையே! எப்படி?

    பச்சைத் தண்ணிதான்...

    அப்படி என்ன அவசரம்?

    அமாவாசை ஆச்சே இன்னிக்கு! என்கையில் சிவகாமியின் குரல் உணர்ச்சியுடன் ஒலித்தது. வீடும் உறவும் நம்பளைக் கைவிட்டாலும் ரத்தத்துல ஏறிட்ட பழக்கங்கள் நம்மை விட்டுப் போயிடறதில்லையே... அமாவாசைன்னா குளிச்சு தலைமுழுகிச் சாமி கும்பிட்டு சுத்தபத்தமா அடுப்பைப் பத்த வைக்கிறதுதான் முறைன்னு ஆகிப் போச்சே...

    கடைசியா சொன்னியே, அது கரெக்ட் சிவகாமி! என்றாள் அவள். சுத்தபத்தமா அடுப்பைப் பத்தவெக்கிறது... வெரிகுட்...

    அமாவாசை?

    அது வான மண்டலம், இயற்கை சம்பந்தப்பட்டது.

    அவ்வளவுதானா?

    சரி... நிலா வராத அன்னிக்கு... போதுமா? சிநேகா சிரித்தாள்.

    நாளு, கிழமை, அமாவாசை, கிருத்திகைன்னு நான் தலைக்கு ஊத்திகிட்டா போதுமே, கிண்டல் தாங்காதே உனக்கு... ம்... என் நேரம்... சிவகாமி புலம்பியபடி சென்றபோதுதான் வளர்மதி ஓடிவந்தாள்.

    மேடம்... சிநேகா...

    மூச்சிரைக்க வந்து பரபரப்பாய் நிற்பவளை நிமிர்ந்து பார்த்தார்கள்.

    என்னம்மா வளர்? என்ன விஷயம்? என்றாள் சாரதா.

    வாசல்ல... குழந்தை மேடம்... வாசல்... அதற்கு மேல் பேச முடியாமல் வளர்மதி அப்படியே நின்றாள்.

    ஸ்நேகா உள்ளே ஏதோ நெகிழ்வதை உணர்ந்தாள்.

    குழந்தை...

    இன்னொரு ஆதரவற்ற குழந்தை...

    அவளைப் போல்...

    அவர்களைப் போல்.

    இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் அவள் கிடத்தப்பட்டிருந்த அதே அனாதை இல்லத்து வாசலில்...

    ஸ்நேகா விரைந்தாள்.

    2

    வழவழப்பான அந்தப் பளிங்குத் தரையில் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது.

    ஸ்நேகா ஓடிப்போய் அதன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அதன் முகத்தையே பார்த்தாள். செக்கச் செவேலென்ற அழகிய குழந்தை. பெண் குழந்தை. கீழ் உதட்டின் கீழே கடுகு மாதிரி மச்சம் தாங்கி மிக ரம்மியமான முகத்துடன் குழந்தை சிரித்தது.

    சட்டென்று தூக்கினாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1