Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathai Nee Ena Kandean!
Devathai Nee Ena Kandean!
Devathai Nee Ena Kandean!
Ebook134 pages58 minutes

Devathai Nee Ena Kandean!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அஸ்வத்தாமனின் இதயத்தில் நிகிதா.அம்மாவின் வற்புறுத்தலால் சந்தனாவை மணககிறான்.ஆனால் ஒதுக்கியே வைக்கிறான்.ஒரு விபத்தில் அஸ்வத்தாமன் பழையதை மறக்க...மனைவியுடன் புதிய வாழ்க்கை...சான்றாக ஒரு பிள்ளை என்று நாட்கள் தென்றலாய் மாற அவனின் செக்ரட்டரியாக நிகிதா உள்ளே நுழைய நடக்காததெல்லாம் நடந்தேறுகிறது.அதன்பின்.....

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580140606467
Devathai Nee Ena Kandean!

Read more from R. Manimala

Related to Devathai Nee Ena Kandean!

Related ebooks

Reviews for Devathai Nee Ena Kandean!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devathai Nee Ena Kandean! - R. Manimala

    https://www.pustaka.co.in

    தேவதை நீ என கண்டேன்!

    Devathai Nee Ena Kandean!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    சந்தனாவிற்கு விழிப்பு வந்த போது... பொழுது நன்றாக விடிந்திருந்தது. காற்றுக்கு ஸ்க்ரீன் நடன மாடியபோது... ஜன்னலின் கண்ணாடிக் கதவு பளிச்சிட்டிருந்தது. கண்விழித்ததும் சுவற்றில் பெரிய சைஸ் 'ப்ளோஅப்'பில் இவளருகேத் திருமணக் கோலத்தில் நின்றிருந்த கணவனின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தாள்.

    எழுந்து சென்று ஜன்னலைத் திறந்தாள். பச்சைப் பசேல் என்று பூந்தோட்டம்! 'இரவு மழைப் பெய்ததா என்ன?'

    பூவிதழ், இலை நுனி என நீர் முத்தமிட்டுக் கொண்டிருக்க... தலைக் குளித்து விட்டு வந்த இளம் பெண் போல்... தோட்டம் அத்தனை ஃப்ரஷ்!

    பக்கத்துத் தெருவில் ஒரு அம்மன் கோவில் உண்டு. அந்த கோபுரத்தின் பின்புறம் நன்றாகத் தெரியும். இரண்டு இடுக்குகளில், மாடங்களில் புறாக்கள், அதன் அழகுக்கு சற்றும் பொருத்தமற்ற குரலில் கமறிக் கொண்டிருக்கும்.

    திடீரென ஆலயமணி ஒலிக்க, பயந்து, பதறி, அதிர்ந்து... சட்டென ஒரே நேரத்தில் விர்ரென பறந்த அந்த அழகை எப்போதும் போல் லயித்து ரசித்தாள். இங்கே வந்த நான்கைந்து மாதங்களில் அவள் தன்னை மறக்கிற கணங்களில் இதுவும் ஒன்று!

    இன்று கோவிலுக்குச் செல்ல வேண்டும் போல் ஓர் உந்துதல் ஏற்பட்டது. இன்று செவ்வாயோ, வெள்ளியோ அல்ல. பொதுவாய் அந்த நாட்களில் தவறாமல் செல்பவள். ஏதோ நெஞ்சின் மீது தலையணை வைத்து அழுத்துவதுப்போல்… மூச்சிற்கு தவிப்பவள் போல்... கனமாய் அழுத்திக் கொண்டிருப்பதுப் போல் ஓர் உணர்வு!

    சில்லென்ற காற்றிற்கு பூத்திருந்த பூக்களெல்லாம் நேர்த்தியற்று இஷ்டம் போல் ஆடிக்கொண்டிருந்தது சின்னஞ்சிறு சிறுமிகளைப் போல்!

    அதன் தலைகளை வருடி விடவேண்டும் போல் ஏற்பட்ட ஆவலை அடக்கிக் கொண்டாள்.

    'மாமாவுக்கு காபித் தரவேண்டும். குளித்து விட்டு பூஜையறையை சுத்தம் பண்ண வேண்டும்... அத்தை விழிப்பதற்குள்!'

    நேரத்தைக் கடத்தாமல் பாத்ரூமிற்குள் நுழைந்தவள்... ஐந்து நிமிடத்தில்... பல் விளக்கி, முகம் கழுவி... செம்பருத்திப் பூவைப் போல் பளிச்சென்று பூத்திருந்தாள்.

    அந்த வீட்டில் எல்லாவற்றிற்கும் பணியாளர்கள் உண்டு. அவள் இந்த வீட்டில் மருமகளாய் வந்தபின் அவளுக்கு முன் எந்த பணியாளரையும் சமையலறையில் அனுமதிப்பதில்லை காபி அவள்தான் போடுவாள்.

    சமையலறை நோக்கிச் சென்றாள் வீடெல்லாம் துடைக்கப்பட்டு பளிச்சிட்டிருந்தது.

    ஹாலை கடக்கும்போதே பூக்களும், ஊதுபத்தியின் மணமும் கலந்து நாசியை வருட... சந்தேகமாய் பூஜையறையை எட்டிப்பார்த்தாள்.

    பிரேமா கண்களை மூடி தெய்வ விக்கிரங்கள் முன் அமர்ந்திருந்தாள்.

    'எப்போ எந்திரிச்சாங்க? நான் தானே காபி போட்டுக் கொடுப்பேன்? வெறும் வயித்தோட பூஜையில உட்கார்ந்துட்டாங்களே... சுகரும், பிரஷரும் அவங்களைப் பாடாய்படுத்துமே! நான்லேட்டா எந்திரிச்சிட்டேனா? இல்லையே... எப்பவும் போல இதே டைம்லதானே எந்திரிச்சிருக்கேன்? அத்தைதான் சீக்கிரமா எந்திரிச்சிருக்காங்க!’

    பால் கவரை கட்பண்ணி பாத்திரத்தில் ஊற்றி... பொங்கியதும் ஐந்து நிமிடங்கள் கரண்டியால் கிளறி விட்டு காபியைத் தயாரித்தாள். எப்போதும் தன் மகனுக்கு பிரேமா தான் காபியை எடுத்துச் செல்வாள். சந்தனா தருவதை விரும்புவதில்லை. அதுவேறு விதமான கதை!

    பூஜையில் லயித்திருக்கும் வயதானவளைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

    'நாமே கொண்டு சென்றால் என்ன? என்ன ஆகிடப்போகுது? ரெண்டுத் திட்டு திட்டுவார். திட்டிட்டுப் போகட்டுமே! மாமாவை அருகில் பார்த்து எவ்வளவு நாளாகி விட்டது? எங்கே... என் உருவம் கண்ணில் பட்டாலே.... இரையைக் கண்டு விட்ட புலியைப் போல் பாய்ந்துக் குதற ரெடியாகற மாதிரி உறுமிக்கிட்டிருந்தா எப்படி? மனுஷன் எப்பவும் ஒரே மாதிரி இருந்துட முடியுமா? என்னதான் பண்ணிடுவார்? திட்டட்டும்... காபியை குடிச்சாப் போதும்!' புதிதாய் தைரியம் பிறக்க... காபியை எடுத்துக் கொண்டாள்.

    அவள் மாடியேறிச் செல்வதைப் பார்த்து விட்ட பிரேமா துணுக்குற்றாள். அவசரமாய் தீபாரதனைக் காட்டினாள்.

    ***

    முயலைப் போல் படிகளில் தாவி ஓடியவளை, குதிரையைப் போல் பின் தொடர்ந்து ஓடினான் அஸ்வத்தாமன்.

    கலரிங் செய்யப்பட்ட பொன்னிறக் கூந்தல் ஓட்டத்திற்கேற்ப எப்படி அலை கழிந்தாலும், கொஞ்சம் கூட கசங்காமல் அப்படியே எழுந்து அடங்கியது. குதிரை நாலே எட்டில் முயலைப் பிடித்தது.

    நோ... டோண்ட்ட ச்! நிகிதா பொய்யாய் சிணுங்கி உடம்பை குறுக்க... அஸ்வத் அவளை பூக்கூடையைப் போல் அலேக்காய் தூக்கிக் கொண்டான். அவன் நெஞ்சிற்கும் கைகளுக்குமான இடைவெளியில் நசுங்கினாள்.

    அவள் மீது தழுவியிருந்த செண்டின் நறுமணமும், ஷாம்பூ வாசமும் அஸ்வத்தை கிறங்கச் செய்ய... அறையினுள் நுழைந்து கட்டிலில் தொப்பெனப் போட்டான். மெத்தை அவளை உள்வாங்கி ரப்பர் பந்தாய் மேலே அனுப்பி மறுபடி அமிழ்த்திக் கொள்ள... கணமும் தாமதிக்காமல் அவள் மேல் விழாமல் விழுந்தான்.

    நோ... நோ… ப்ளீஸ்... என்று பொய்யாய் கெஞ்சியவளின் துடித்த கீழுதடை இரு விரல்களால் பட்டாம்பூச்சியைப் பிடிப்பதுப் போல் பற்றி தன் உதடுகளுக்குள் வைத்துக் கொண்டான்.

    'டூ... மச்...!" அவனைத் தள்ளினாள். நகர்ந்தால் தானே?'

    ஐ லவ் யூ சோ... மச்! அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்து மூச்சை இழுத்தான்.

    கழுத்தில் புதைந்திருந்த கூந்தலை எடுத்து பின் பக்கமாய் நகர்த்தியவள்... ''என்ன ஷாம்பூ வாசனையா இருக்கா?''

    ''நிகி... என் நிகியோட வாசனை!''

    முகத்தை இன்னும் போட்டு அழுத்த... அவன் அடர்ந்த மீசை கழுத்தைக்கிச்சு கிச்சுப் பண்ண...

    ''ஓ...ப்ளீஸ் அஸ்வத்... லீவ் மீ!''

    "கிஸ்...மீ!''

    "நோ...!''

    ப்ளீஸ்...!

    யோவ்... ராஸ்கல்... விடுய்யா…!

    அவ்வளவுதான்!

    சடக்கென தலை தூக்கி... களைத்துப் போகத் துவங்கியிருந்த அவள் முகத்தைப் பார்த்தான்.

    வெட்கமும், ஆசையும் கலந்திருந்த கண்களில் தென்பட்ட 'அழைப்பு!’

    அந்த யோவ் அவனுள் எந்தளவு காதலை உற்பத்திச் செய்யும் என்பதை நிகிதா அறியாததா?

    ''செம ஹாட்டா மச்சி?'' அவன் விளையாடத் துவங்கினான். அவன் விரல்கள் மேனியெங்கும் கோலம் போட…".

    யாரோ

    Enjoying the preview?
    Page 1 of 1