Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee En Nila
Nee En Nila
Nee En Nila
Ebook122 pages57 minutes

Nee En Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுமித்ரா என்கிற அழகு நிலாவின் வாழ்வில் ஏற்பட இருக்கும் துன்ப நிலையை அறியாமல் அனைவருக்கும் ஒளி தரும் நிலா. சுமித்ரா தான் ஒரு அனாதை எனவும் தன்னை வளர்ப்பது வளர்ப்பு பெற்றோர் எனவும் அறியும் நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்பட போகும் இருளை நாம் கதையோடு பயணித்து காண்போம்... இருளாகிய சுமியின் வாழ்வில் நீ என் நிலா என கைகோர்க்க வரும் அந்த கரம் யார் என்பதை தொடர்ந்து காண்போம்.....

Languageதமிழ்
Release dateJul 18, 2022
ISBN6580140608580
Nee En Nila

Read more from R. Manimala

Related to Nee En Nila

Related ebooks

Reviews for Nee En Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee En Nila - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ என் நிலா

    Nee En Nila

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அதிகாலைப் பொழுது!

    உடலை இதமாய் வருடும் குளிர்காற்று திறந்திருந்த ஜன்னல் வழியே அனுமதி இன்றியே குபுகுபுவென உள்ளே நுழைந்திருந்தது. மேல் பெர்த்தில் படுத்திருந்த சுமித்ரா கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். குளிரை, உடம்பில் ஊசியாய் துளைத்து இதமான அவஸ்தையை ஏற்படுத்தும் விதத்தை, நாற்று நட்டு வைத்த பயிரைப் போல குத்திட்டு நிற்கும் மயிர்க்கால்களை... ஒவ்வொன்றையும் அணு அணுவாக ரசிப்பவள்தான் சுமித்ரா. மார்கழி குளிரில் வெடவெடத்தபடி போர்வையை பயன்படுத்தாமல், கைகளை தொடைகளுக்கிடையில் பதுக்கி கேள்விக்குறி போல் சுருண்டு படுத்திருப்பது அவளுக்கு பிடித்தமான ஒன்று!

    ஆனால், இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியவில்லை. உடம்பு அவள் விருப்பத்திற்கு தோதாய் ஒத்துழைப்பதில்லை. அவ்வளவு ஏன்? குளிரை ரசிக்கும் மனோபாவமே அகன்று போய்... ச்சே என்ற சலிப்புதான் எட்டிப் பார்க்கிறது.

    தூக்கம் வராமல் புரண்டு படுத்த சுமித்ராவுக்கு ரயிலைப் போலவே நெஞ்சமும் தடதடத்துக் கொண்டிருந்தது. இருள் பிரியாத அந்த அதிகாலைப் பொழுது வெளிச்சத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவே... அவள் மனமும் ஏதோ ஒன்றிற்காய் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது.

    மணி என்னயிருக்கும்?

    கொஞ்சமாய் போர்வையை விலக்கி, தலையை உயர்த்தி மங்கலான இரவு விளக்கின் வெளிச்சத்தில் கையை உயர்த்தி வாட்சைப் பார்த்தாள்.

    நாலரையைத் தாண்டியிருந்தது.

    இன்னும் நான்குமணி நேரமிருக்கிறது... ரயில் சென்னையைத் தொட...!

    முழுதாய் மூன்று வருடம் கழித்து, சென்னை மண்ணில் காலடி எடுத்து வைக்கப் போகிறாள்.

    நினைத்தாலே உடம்பை ஒரு முறை தூக்கிப் போட வைத்தது.

    வரவேற்பு எப்படியிருக்கும்?

    வெள்ளத்தோடு வந்ததெல்லாம் அது வடிந்து போகும் போது அதனோடு போய் விடுவது போல... அந்த துவேஷமெல்லாம் போயிருக்குமா?

    அல்லது கடலில் கிடக்கும் பாறையைப் போல் அப்படியே இருக்குமா?

    புரியவில்லை!

    அந்த மனிதர்களைச்... சட்டென மாறிவிடும் அவர்களை எளிதில் எடைபோட்டு விட முடியாது.

    பிறகெப்படி... எந்த நம்பிக்கையில், தைரியத்தில் அவர்களை நோக்கிப் போகிறேன்?

    சுமித்ரா நம்பிக்கையில்லாமல்தான் ரயில் ஏறினாள். அதுவும் அவளாக ஏறவில்லை. ஏற்றப்பட்டாள்.

    மூணு வருட காலத்தில் ஒரே ஒரு லெட்டர் மட்டும்தான் அம்மா போட்டாள்.

    சந்திரன் ஃபாரினுக்குப் போயிட்டான். நீ ஒருமுறை இங்கே வந்து விட்டுப்போ... உன்னைப் பார்க்கணும் போலிருக்கு என்று எழுதியிருந்தாள்.

    அதில் கூட வந்துவிட்டுப்போ... என்று தான் இருந்ததே தவிர, நிரந்தரமாய் வந்துவிடு என்றிருக்கவில்லை.

    ‘பரவாயில்லை... அம்மாவிற்கு தன் மீதுள்ள பாசம் இன்னும் செத்துவிடவில்லை’ என்று சந்தோஷப்பட்டாள். நூறு முறையேனும் படித்து கண்ணீர் வடித்திருப்பாள்.

    ‘அம்மாவே எழுதிட்டாங்கயில்லே... போய் தான் பார்த்துட்டு வாயேன்’ என்று அவள் உடன் பணிபுரிந்த ஒரே அறையில் தங்கியிருந்த சங்கரி சொன்னபோது சிரித்தபடி மறுத்தாள்.

    இல்லே சங்கரி... என்னால இயல்பா யாரோடவும் பழக முடியாது. போலித்தனமா மரியாதைக்காக உறவை வளர்க்கிறதை விட இப்படி விலகியிருப்பதே நல்லது என்றாள்.

    ஆனால், ஒரு கட்டத்தில் போயே ஆக வேண்டும் என்று ஒருசூழல், மனமும் கூட அவர்களைக் காண ஆசைப்பட்டது. ஆனாலும் ஒரு தயக்கம். இப்போதும் சங்கரிதான் அவளைக் கட்டாயப்படுத்தினாள்.

    போலித்தனம், மரியாதைங்கற உன்... ஃபார்முலாவை ஒதுக்கி வச்சிட்டு போய்ட்டு வா சுமி! இப்போ நீ இருக்கிற நிலைமையில் அந்த சூழல் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஒரு நல்ல மாறுதலை, தேறுதலை தரும். டாக்டர் சொன்னதை மறந்து விட்டாயா? போய்ட்டு வா... அதான் அம்மாவே வரச்சொல்லி லெட்டர் போட்டிருந்தாங்கயில்லே?

    அது ஒரு ஆறு மாசத்துக்கு முன்பு!

    அன்புக்கு... வருஷக் கணக்கில்லை சுமி! பிரிவுதான் அன்பை வளர்க்கும்னு சொல்வாங்க!

    அப்படீங்கறியா?

    ப்ச்... சஜஷன் கேட்கிற விஷயமில்லே இது! தைரியமா போய்ட்டு வா! என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாய் தள்ளி தரதரவென இழுத்து வந்து ரிசர்வ் செய்த சீட்டில் அமரவைத்து நெற்றியில் முத்தமிட்டாள் சங்கரி.

    அத்தனை விரட்டலும் சுமித்ராவின் நன்மைக்காக!

    சரி... ஆனது ஆகட்டும் என்று இவளும் புறப்பட்டு விட்டாள்.

    ஆனால், சென்னை நெருங்க... நெருங்க... பயம், தொண்டையை இறுக்கிப் பிடித்தது.

    பெருமூச்சுடன் மெல்ல அந்தக் கம்பார்ட்மென்ட்டைக் கண்களால் துழாவினாள்.

    ரயிலின் சீரான தாலாட்டலில் உடம்பு ஆட, அவளைத் தவிர அத்தனை பேரும் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். இவளுக்கு நேர் எதிர் பதத்தில் ஐம்பது வயதான அம்மா லேசாய் வாய் பிளந்தபடி கறுப்பு பெட்ஷீட்டை கழுத்து வரை போர்த்திக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள்.

    நல்ல கலையான முகம் அந்தம்மாவிற்கு. நாலணாவுக்கு ஒரு சுற்று குறைவான சைஸில் குங்குமப் பொட்டு சிவந்தநிற முகத்திற்கு... மிக அழகாக, மங்களகரமாக இருந்தது.

    சுமித்ரா அவளையே விடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றது.

    சூடான காபி, இட்லி, சாம்பார், வடை, என்று குரல்கள் எல்லோரையும் சேவல் கூவாமலே எழுப்பியது.

    சரசரவென சுறுசுறுப்பாய் போர்வை உதறி, கொட்டாவியை அலட்சியம் செய்து பாத்ரூமில் இடம் பிடிக்க முதல் ஆளாய் ஓடுவதில் பரபரப்பாய் செயல்பட்டனர்.

    ஒரு சிலர் முகம் கழுவாமல், வாய் கூட கொப்புளிக்காமல், அப்படியே காபியை வாங்கிக் குடிப்பதைப் பார்த்து சுமித்ராவுக்கு குமட்டியது.

    கேட்டால் ‘பெட்காபி’ என்பார்கள். இதை இப்படித்தான் குடிக்க வேண்டும் என்று விளக்கம் வேறு கூறுவார்கள்.

    கர்மம்டா சாமி!

    எப்படித்தான் குடிக்கிறார்களோ?

    சுமித்ராவுக்கு பல் விளக்கி குளித்தபின்தான் காபி குடித்துப்பழக்கம்.

    இங்கு அது முடியாது! ஆனால் கொஞ்சமாவது கருணை வைத்து காபியை தொடேன் என்று வறண்ட தொண்டை கெஞ்ச ஆரம்பித்தது.

    சுமித்ரா கீழே இறங்கி தன் பேகிலிருந்து பிரஷையும் பேஸ்ட்டையும் கூடவே கையோடு கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு பிரஷ் செய்ய ஆரம்பித்தாள்.

    வாயைக் கொப்புளித்து முகத்தையும் கழுவி துடைத்துக் கொண்டு ஒரு காபியை வாங்கிக்

    Enjoying the preview?
    Page 1 of 1