Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilagatha Sirakugal
Vilagatha Sirakugal
Vilagatha Sirakugal
Ebook131 pages1 hour

Vilagatha Sirakugal

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466299
Vilagatha Sirakugal

Read more from Usha

Related authors

Related to Vilagatha Sirakugal

Related ebooks

Reviews for Vilagatha Sirakugal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilagatha Sirakugal - Usha

    24

    1

    உற்சாகத்துடன் விரைந்து கொண்டிருந்தது, ரெயில். கொஞ்சம் விசேஷமான ரெயில்தான், அது.

    உஷ்ணப் பிரதேசத்தில் இருந்து குளிர்ப்பிரதேசம் நோக்கி விரைந்துகொண்டிருந்தது.

    சென்னையில் இருந்து ஊட்டிக்கு என்றால் சற்று விசேஷமானதுதானே?

    உதயா ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்தாள். கையிலிருந்த ஏதோ ஒரு புத்தகத்தின் பக்கத்தை இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அச்சடித்த எழுத்துகளின் மேல் விழிகள் ஊர்ந்தனவே தவிர, ஒரு வார்த்தையைக் கூட அவள் இதயம் ஊன்றிப் படிக்கவில்லை.

    புதிய ஊர்.

    புதிய பயணம்.

    வாழ்க்கையும் புதியதாக இருக்குமோ?

    இருக்க வேண்டும். இருக்கத்தான் வேண்டும்.

    போதும்! இதுவரையிலான நாட்கள். காற்றில்லாத அறைக்குள் அவளைத் தங்கவைத்து, மூச்சுவிட முடியாமல் அழுத்தி சுவாசத்திற்காக தவிக்கவிட்டு சித்திரவதையால் சூழ்ந்திருந்த அந்த நாட்கள் போகட்டும், இனி!

    காற்று வேகமாக அடிக்கத் தொடங்கியது. இதோ பகல் மறையப் போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு அடி வானத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அடுத்த பன்னிரண்டு மணி நேரங்களும் அந்த மாபெரும் இருள் தன் முழு வலிமையுடன் பூமியைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துவிடப் போகிறது. பெண்ணை எப்படி தனது ஆளுமைக்குள் ஆண் வைத்துக்கொள்ளப் பார்க்கிறானோ, அப்படி.

    உதயா தலையை உதறிக்கொண்டாள். போதும், இந்த எதிர்மறை சிந்தனைகளுக்கு இனிமேல் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். செயல்களைவிட ஆபத்தானவை இந்தச் சிந்தனைகள். உணர்வுகளைக் காயப்படுத்தி, கடைசியில் குருதி கொட்ட வைத்துவிடும். மனதை மாற்றுப் பாதையில் செலுத்தலாம்.

    பெட்டிக்குள் பார்த்தாள்.

    எதிர்வரிசையில் மூன்று முதியவர்கள் இருந்தார்கள். இரண்டு பெண்மணிகள், மிடுக்கான ஒரு பெரியவர். அந்தப் பெண்கள், சகோதரிகளாக இருக்கலாம் என்று ஜாடையில் தெரிந்தது. நல்ல அழுத்தமான நிறத்தில் சரிகைப் பருத்திச் சேலை அணிந்திருந்தாலும், மெலிதாகவே தோற்றமளித்தார்கள். கருமணிச் சரங்கள், கண்ணாடி வளையல்கள், கல் தோடுகள், பளீரென்ற சிரிப்புடன் இருந்தார்கள்.

    கர்நாடகத்துப் பெண்களோ என்று அவள் நினைத்துக் கொண்டாள். முக அமைப்பு அப்படித்தான் இருந்தது. அந்த முதியவரும் ஒற்றைநாடியாக, சற்று வெகுளித்தனமான முகத்துடன் தெரிகிறார் என்று நினைத்தபோது அதில் ஒரு பெண்மணி ஹசுவி... ஊட்டா மாடதீரா... என்று கேட்க, உதயா தனக்குத்தானே ஒரு பாராட்டுப் பத்திரத்தை வழங்கிக்கொண்டாள். அவர்கள் கன்னடக்காரர்கள்தான். இயல்பாக முகம் இளகி, ஒரு மென்மையான புன்னகை முகத்தில் உருவாயிற்று.

    பெரும்பான்மை கன்னடர்கள் வெகுளியானவர்கள். சூதுவாது அதிகம் அறியாதவர்கள். நல்ல சாப்பாடு, வீடு, குடும்பம் போதும் என்று நினைக்கிற நடுத்தர மனதுக்காரர்கள். ஆனால், மொழி விஷயத்திலும், காவிரி விஷயத்திலும் எங்கிருந்து வருகிறது அப்படியோர் பிடிவாதம் இவர்களுக்கு என்றுதான் புரியவே இல்லை.

    புளியஞ்சாதம் சாப்பிடுறியாம்மா? என்று கன்னடத் தமிழில் பச்சைச் சேலை பெண்மணி அவளைப் பார்த்துக் கேட்டாள்.

    ‘இல்லேம்மா... ராத்திரியில் நான் சோறு சாப்பிடுறதில்லே... பாலும் பழமும்தான் இன்னிக்கு... நீங்க சாப்பிடுங்கம்மா’ சொல்லிவிட்டு, உதயா புன்னகைத்தாள்.

    நாங்க மூணு பேரும் ‘சர்க்கரை’ ஆட்கள். நேரப்படி சாப்பிட்டாத்தான் தூக்கம் வரும். அதுலேயும் இவர் இருக்காரே ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சரியான சாப்பாடு. தூக்கம் இல்லாமலே ராணுவத்துக்காக ஒழைச்சு ஒழைச்சு சர்க்கரை நோயை வரவழைச்சுகிட்டவர் என்று கணவரை பெருமிதத்துடனும், செல்லமான கோபத்துடனும் காட்டிவிட்டுச் சிரித்தாள்.

    உதயா முகம் மலர ஓ... சார் ராணுவ வீரரா? ரொம்ப மகிழ்ச்சி. ராணுவம்னாலே எனக்கு தனி மரியாதை உண்டு சார்... ஆணா பொறந்திருந்தா கண்டிப்பா நான் ராணுவத்துல தான் சேர்ந்திருப்பேன் சார் என்றபோது, அந்தப் பெரியவரின் முக இறுக்கம் சடாரென்று தளர்ந்து, மலர்ந்தது.

    தயவுசெய்து நீங்க நேரத்துக்கு சாப்பிட்டுட்டு மாத்திரை எடுத்துக்குங்க. எனக்கு ஒன்பது மணி ஆகட்டும்.

    புளியஞ்சாதத்தின் மணம், பெட்டியை நிறைத்தது. சற்று வெட்கத்துடனே அவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். மற்றவர் எதிரில் உணவு உண்ணுதல் என்பது எந்த வயதிலுமே சற்று சங்கடமான விஷயமாகத்தான் இருக்கிறது என்று தோன்றியது, அவளுக்கு.

    பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரை சரியாக கவனித்துப் பார்த்தாள்.

    ஐம்பது வயதிருக்கலாம். ஆனால், பத்து வயதைக் கூட்டி இருந்தன - முகச்சுருக்கங்களும், வழுக்கையும். கையில் இருந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தாள்.

    ‘வாழ்வும் தமிழ்த் தொண்டும் - உ.வே.சா.’ என்று இருந்தது. இவளுக்கு சற்று ஆச்சரியமாகவே தெரிந்தது. ரெயில் பயணத்திற்கு பொதுவாக சுலபமான வாராந்தரப் பத்திரிகைகள், துப்பறியும் நாவல்கள் இவைகள் தான் எடுத்துவரப்படும் என்று அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். முதல் தடவையாக அழகான புத்தகம் ஒன்றை அவள் பார்க்கிறாள்.

    வணக்கம்மா.... என் பேர் திருநாவுக்கரசு. அரசுன்னு கூப்பிடுவாங்க. புத்தகம் வேணுமா, படிக்கிறீங்களா? என்றார், அவர் திடீரென்று.

    வணக்கம் சார்... என் பேர் உதயா. இவ்வளவு தீவிரமான புத்தகங்களை நான் இதுவரை படிச்சதில்லே. ரெயில் பயணத்துல பார்க்கும்போது வியப்பா இருக்கு என்றாள், புன்னகைத்து.

    கல்லூரி தமிழாசிரியரும்மா... அரசினர் கல்லூரியில் இருக்கேன். நீங்க ஆசிரியரா? என்றார், அவர். குரல் மிக மெலிதாக இருந்தது.

    இல்லே சார்... நான் அரசு ஊழியர். தோட்டப் பயிர் அலுவலகம். இப்போ ஊட்டிக்கு மாற்றிப் போட்டிருக்காங்க. அரசினர் பூங்கா சம்பந்தப்பட்ட அலுவலகத்துல வேலை.

    உற்சாகமான வேலை. பொதுவா வேலைக்கு நடுவுல மக்கள் ஆசுவாசத்துக்கு மலைக்காடுகளைப் பார்க்கப் போவாங்க. நீங்க மலைத்தோட்டத்துல வேலை பார்க்கப் போறீங்க என்று சிரித்தார்.

    நீங்க படிப்பைத் தொடருங்கய்யா என்று அவள் சொன்னதும், காத்திருந்தவராக அவர் புத்தகத்தினுள் போய்விட்டார்.

    மனிதர்களில் எத்தனை வகை என்று எப்போதும் போல தோன்றியது. எதிரில் ஒரு முன்னாள் ராணுவ வீரர். அருகில் ஒரு தமிழாசிரியர். அது உடல் சம்பந்தப்பட்ட வேலை. இது உணர்வு சம்பந்தப்பட்டது.

    ‘தொழில் எதுவானால் என்ன? சிரத்தைதான் முக்கியம்’ என்று அம்மா அவ்வப்போது சொல்வது நினைவுக்கு வந்தது.

    அவள் உடல்நிலை எப்படி இருக்கிறதோ? என்று மெல்லிய கவலை ஏற்பட்டது. ஆனால், அம்மா தைரியமானவள். தற்காப்பு கலை அறிந்தவள். தன்னை பாதுகாத்துக் கொள்ள அவளுக்குத் தெரியும். கடைசியாக அமர்ந்திருப்பவன் யார் என்று பார்த்தாள். அதேநேரத்தில் அவனும் சடாரென்று தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான்.

    பார்த்தவன் தன் விழிகளை அசைக்காமல் பசை போட்டது போல இருந்தான்.

    சரேலென்று அவள் முகத்தை மாற்றிக்கொண்டாள்.

    இதென்ன, ஏதாவது தப்பாகிவிடப்போகிறது! தன்னோடு வரும் பயணிகள் பற்றி அறிந்துகொள்ளத்தான் ஒரு பார்வை பார்த்தாளே தவிர, வேறெந்த பிரத்தியேக விசேஷமும் இல்லை. ஆனால், என்னவோ காத்திருந்தவன் போல பார்த்தானே... சேச்சே!

    முப்பது வயதிருக்கும் என்று தோன்றியது. நல்ல உயரம். மாநிறம். அவனுக்கு கம்பீரமாக இருந்தது. நல்ல தெளிவான முகம். தேர்ந்தெடுத்த வெளிர்நீல சட்டை. அழுத்தமான நீலத்தில் ஜீன்ஸ். அந்தக் கண்கள் மேல்தான் கோபமாக வந்தது. ஏன் அப்படி அழுத்தமாகப் பார்த்தான்? முட்டாள்!

    நேரம் ஓடிவிட்டது.

    முதியவர்கள் படுத்துவிட்டார்கள்.

    ஆசிரியர் கீழ்படுக்கையில் படுத்தார். அந்த இளைஞன் நடுப்படுக்கையில் படுக்க, அவள் ஏணியில் ஏறி மூன்றாவது படுக்கையில் சாய்ந்துகொண்டாள்.

    தூக்கம்

    Enjoying the preview?
    Page 1 of 1