Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Soorya Thagangal
Soorya Thagangal
Soorya Thagangal
Ebook87 pages46 minutes

Soorya Thagangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 200 novels, 150 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466329
Soorya Thagangal

Read more from Manimala

Related to Soorya Thagangal

Related ebooks

Related categories

Reviews for Soorya Thagangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Soorya Thagangal - Manimala

    6

    1

    ‘தடக்... தடக்...’ என ரயில் தாலாட்டியபடி மதுரையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. எதிர்காலத்தை பற்றிய பயம் போல கற்றை முடிகள் மாதவியின் கண்களில் விழுந்து மறைத்தது.

    ‘சிறு துளி ஒளி கிடைத்தாலும் வழிதேடி நடந்து விடும் தைரியம் இருக்கிறது என்றாலும் அந்த ஒளி என் கண்ணுக்கு புலப்படுமா?’

    லெதர் பேகை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். மாதவியோடு ப்ளஸ் டூவில் படிக்கும் போது இணைபிரியா தோழியாக இருந்தவள் வசந்தி. பள்ளிபடிப்பு முடியுமுன்பே சென்னையில் இருந்து மதுரைக்கு அவள் அப்பாவுக்கு மாற்றல் வர... அவளும் இவளும் பிரியும் போது அழுகை... பார்ப்பவர் கண்களை எல்லாம் நனைத்தது. அதன் பிறகு நாலைந்து கடிதங்கள் பரிமாறிக் கொண்டார்கள். என்ன ஆனதோ, எது ஆனதோ? வசந்தியிடம் இருந்து கடிதங்கள் வருவது நின்றுப் போனது. அந்த வசந்தியுடைய அட்ரஸைதான் அவள் கையோடு எடுத்து வந்திருக்கிறாள். அவளின் அப்பா இன்ஸ்பெக்டர் என்பதால் எப்படியாவது அவர் மூலம் ஒரு வேலையை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் பயணப்பட்டாள்.

    ‘நினைத்தேனா? என் வாழ்வில் இப்படியெல்லாம் நடக்கும் என்று!’ ஒருவாறு மனதை திசை திருப்ப ஜன்னல் பக்கம் பார்வையை பதித்தாள்.

    வெளியே காரிருள். கண்களை கசக்கினாலும் எதுவும் புலப்படாத இருட்டு. மாதவி தூங்க முயற்சித்தாள். ‘இன்னும் சில மணி நேரங்களில் வசந்தியை பார்க்க போகிறோம்’ என்ற ஆவலோடு உறங்கிப் போனாள்.

    டமார்.... வானமே பெயர்ந்து பூமியை பதம் பார்த்தது போன்ற சத்தம்.

    ஐய்யோ.... அம்மா... என்ற அலறல்கள். வலியில் தீனமாய் முனகும் குரல்கள்.

    மாதவி இன்னதென்று உணரும் முன்பே மயங்கி போனாள்.

    மாதவிக்கு உணர்வு திரும்பியது. தலை வலித்தது. பார்வை மசமசப்பாய் தெரிந்தது. கண்களை ஒருமுறை அழுந்த மூடி திறந்த போது... பளிச்சென புலப்பட்டது.

    ஒரு இளைஞன் ஆர்வமாய் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    இவள் எழ முற்பட்ட போது....

    கஷ்டப்பட வேண்டாம். படுத்துக்குங்க என்றார்.

    நா... நான்.... ட்ரெய்ன்ல... நீங்க... அவன் மென்மையாய் புன்னகைத்தான்.

    நானும் அதே ட்ரெயின்ல, அதே கம்பார்ட்மென்ட்லதான் வந்தேன். யாரோ தீவிரவாதி தண்டவாளத்துல பாம் வச்சிட்டிருக்கான். இருநூறு பேர் இறந்திட்டாங்க. கடைசியில இருந்ததால நாம பிழைச்சிக்கிட்டோம். எனக்கு கால்ல மட்டும்தான் லேசா அடி. உங்களுக்கு நெத்தியில, நாலு ஸ்டிட்ச் போடற அளவுக்கு. கவர்ன்மென்ட் டாக்டர்ஸ் விபத்துல அடிபட்டவங்களுக்கு சிகிச்சை தந்துக்கிட்ருக்காங்க. நிறைய பேருக்கு படுக்க கூட இடமில்லாம தரையில துணியை விரிச்சி... மோசமா ட்ரீட்மென்ட் தர்றாங்க. இடிபாடுகள்ல சிக்கியிருந்த உங்களை நான் மீட்டப்ப காயம் அதிகம் இல்லேங்கறதால நானே ஆட்டோவுல தூக்கி, பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டேன். ரெண்டு மணி நேரத்துல என் வீட்டுக்கும் அழைச்சிட்டு வந்துட்டேன். வலி தெரியாம இருக்க தூங்கறதுக்கு ஊசி போட்டாங்க. அதனால தான் கண் விழிக்க நேரமாய்டுச்சு. எனவே தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க. பொறுமையாய், கனிவாய் அவன் பேசி முடித்த போது... வசீகரமாய் தெரிந்த அவனின் முகம் அவளை ஈர்த்தது.

    மன்னிக்கறதா? என்னை காப்பாத்தி கொண்டு வந்திருக்கீங்க... அதுக்காக... நான் உங்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கேன்

    எங்கேர்ந்து வர்றீங்க?

    மெ... மெட்ராஸ்....

    மதுரையில ரிலேடிவ்ஸ் இருக்காங்களா?

    இ... இல்லே.... என் ஃப்ரண்ட் ஒருத்தி...

    சரி... ரொம்ப டயர்டா இருக்கீங்க... உடனே போக வேண்டாம்னு நான் நினைக்கிறேன். ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளை காலைல புறப்படலாம்

    வந்து.... உங்களுக்கு... என்னால கஷ்டம்...

    ம்ஹும். இந்த வீடு கொஞ்சம் பெரிசுங்க. ஏழெட்டு அறைகள் கொண்டது. வீட்டோட வேலை செய்ய ஒரு அம்மாவும் இருக்காங்க. ஸோ... எதுக்கும் பயப்பட வேணாம்

    தன் மனதை படித்தது போல் அவன் சொல்லவும் குற்ற உணர்வோடு தலைகுனிந்தாள்.

    நோ... நோ.... இப்படி இருக்கக் கூடாது. பெண்கள் இந்தளவாவது எச்சரிக்கை உணர்வோட இல்லேன்னா... நாட்ல நடமாட முடியாதுங்க. அப்புறம், டாக்டர் உங்களுக்கு டெம்ப்ரேச்சர் இருக்குன்னு சொன்னார். ஸோ, ரைஸ் வேண்டாம். ப்ரெட்டும், பாலும் சாப்பிடறீங்களா ?

    அவள் வாழ்நாளில் இப்படியொரு கரிசனமான உபசரிப்பை கேட்டதில்லை என்றதால் கண்கள் உடனே உடைத்துக் கொண்டன. அவன் எதிரே தன் கண்ணீரை வெளிப்படுத்த வெட்கப்பட்டுக் கொண்டு தலைகுனிந்தபடி ‘சரி’ என்றாள்.

    அப்போதுதான் நினைவுக்கு வந்தவளாய்... சுற்றும் முற்றும் பார்த்தாள்.

    ‘பேக் எங்கே?’

    என்ன தேடறீங்க?

    லெதர்பேக்.... என்னோட பேக்...

    ஓ... மிஸ்ஸாயிடுச்சா? சாரி... உங்களை காப்பாத்தணுங்கற அவசரத்துல நான் அதையெல்லாம் கவனிக்கல. அதில் ரொம்ப முக்கியமான பொருள் ஏதாவது?...

    அப்படி ஏதுமில்லே.... அஞ்சாயிரம் ரூபாய். துணிமணி சர்ட்டிஃபிகேட், இதெல்லாம்தான்...

    இது முக்கியமானதில்லையா? கவலைப்படாதீங்க... நான் விசாரிக்கிறேன்.... ஆமா... சொல்லவே இல்லையே....?

    என்னது?

    உங்க பேரை?

    ஓ... சாரி...

    அப்படியொரு பேரா?

    அவன் கேட்கவும்

    Enjoying the preview?
    Page 1 of 1