Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maamiyaar Veettu Seethanam
Maamiyaar Veettu Seethanam
Maamiyaar Veettu Seethanam
Ebook125 pages46 minutes

Maamiyaar Veettu Seethanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466268
Maamiyaar Veettu Seethanam

Read more from Geetharani

Related to Maamiyaar Veettu Seethanam

Related ebooks

Related categories

Reviews for Maamiyaar Veettu Seethanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maamiyaar Veettu Seethanam - Geetharani

    10

    1

    விடிந்தும், விடியாததுமான மெல்லிய இளங்காலைப் பொழுது. ஈரப்பதமான வாசலில் புள்ளிகளை கோலத்திற்குள் சிறைவைத்து சிங்காரத் தோரணங்களாக்கின திருப்தியில் வைதேகி கோலப்பொடி மினுங்கும் விரல்களை உதறி சற்று நேரம் நின்று பார்த்து ரசித்துவிட்டு உள்ளே விரைந்தாள்.

    பாய்லரில் நீர் கொதித்துக் கொண்டிருந்ததை ஆவிப்படலம் சேதி சொன்னது. பாய்லரின் தணலை குனிந்து மட்டுப்படுத்தி விட்டு வைதேகி சமையற்கட்டிற்குள் நுழைந்தாள்.

    ‘அட்க்ஷயா’ பால் கவர் வெள்ளை வெளேரென்று ஐஸ் துண்டத்தில் கிடந்த சில்லிப்பை கவரின் மீது சின்ன பனித்துளிப் படலமாகச் காட்டிக் கொண்டிருந்தது.

    வைதேகி ஜில்லிப்பான கவரை கன்னத்தில் வைத்து சற்று நேரம் சிலிர்த்தாள்.

    ‘அம்மா... டி...’

    மாமியாரம்மாளின் பிசிறடித்த குரல் அவரின் விழிப்பை சேதி சொன்னது.

    காபி டபராவை மெல்லிய நுரை ததும்ப மாமியாரம்மாளிடம் கொண்டு வந்து நீட்டினாள்.

    வைதேகி... இந்தக் கொடுமையைப் பாரேன்... மும்பையில நல்ல மழையாம். எண்ணெய்க் கிணறு தீப்பிடிச்சு வேலையாட்கள் கருகி செத்துட்டாங்களாம். வேலை பார்த்துட்டிருந்த பாதிப்பேரைக் காணலையாம். பாக்கறப்பவே பகீர்ன்றது. வர... வர... உலகத்துல ரொம்ப பரிதாபங்கள் நிகழறதும்மா... இத்தனை சாவு, கொலை, கொள்ளை, வன்முறைன்னு எங்க காலத்துல கேள்விப்பட்டது கூட இல்லை. படிக்கிறப்பவே வயிறு கண கணன்றது. பாதிக்கப்பட்டவர்களும், பறிகொடுத்தவர்களும் என்னமா கலங்கி நிற்பாங்க...! மாமியாரம்மாள் கண்களில் ஒருவித பரிதாபம் படர பேசிக் கொண்டே போனார்.

    காபி... ஆறிடும்... அம்மா... முதல்ல காபியைச் சாப்பிடுங்க. நியூஸ் பேப்பர் விற்க வேண்டாமா... வர்ற செய்திகள்ல நூற்றுக்கு ஐம்பது சதம் நிஜம் இருக்கும். எப்படி நடந்தாலும் பாதிக்கப்பட்டவங்களுக்கு வேதனைதான்ம்மா...!

    ம்... ஹ்... கலி முத்திப் போயிட்டதுன்னு காது பட கேட்கறேன். ஆனால், பத்திரிகையில் தினம் போட்டோ பாக்கறப்போ உண்மைதான்னு தோணறதும்மா வைதேகி...

    அதுக்கு என்ன பண்றதும்மா... இட்லிக்கு தேங்காய் சட்னி வைக்கட்டுமா... இல்லை கொத்துமல்லி சட்னி வைக்கட்டுமா...

    வைதேகி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வீட்டுக் கூடத்தின் இடது பக்க வாட்டு ஷெல்பிலிருந்த டெலிபோன் குழந்தை என்னையும் கொஞ்சம் கவனி வைதேகி என்பது போல் சிணுங்கிற்று.

    போன்ல யாருன்னு பாரும்மா... வைதேகி...

    வைதேகி ஈரக்கையை டவலினால் துடைத்துக்கொண்டு, தொலைபேசி ரிசீவரை எடுத்து காதிற்குக் கொடுத்தாள்.

    ஹலோ... மிஸஸ்... வைதேகி ரகுராமன் வீடுதானே...?

    யெஸ்...! நான் வைதேகி தான் பேசறேன்... நீங்க...?

    நாங்க ரயில்வே பிராஞ்ச் ஆஃபீஸ்ல இருந்து பேசறோம்மா. ஒருத்தர் மயங்கி விழுந்து கிடக்கறார். பேக் செக் பண்ணினதுல உங்க பேர் போன் நெம்பர் எல்லாம் இருந்தது... அதனால தான் மெஸேஜ் பாஸ் பண்ணலாம்ன்னு...

    இல்லைங்களே... ஸார்... எனக்குத் தெரிஞ்ச எங்க ரிலேட்டீவ்ஸ் யாரும் அப்படி இல்லை...

    ஐ திங்க் தட் யு ஆர் எ எஜிகேட்டட் மெம்பர். ஒரு பொது சேவையா நினைச்சாவது நீங்க இரயில்வே பிராஞ்ச் ஆஃபீஸ்க்கு நேர்ல வந்து சொன்னீங்கன்னா நாங்க அடுத்த ஸ்டெப் எடுக்கறதுக்கு ஈஸியா இருக்கும். ப்ளீஸ்... ட்ரை ட்டு அண்டர்ஸ்டாண்ட் அவர் பொஸிஷன்... மேடம்...!

    ஸார்... எந்த ரயில்வே பிராஞ்ச் ஆபீஸ்... என்ன... ஏதுன்னு புரியாமல் நான் எங்கே வந்து நிற்கறது...?

    ம்... மதுரை ரயில்வே ஸ்டேஷன் எண்ட்ரன்ஸ்க்குள்ளே ப்ரிட்ஜ் தாண்டி லெஃப்ட்ல கட் பண்ணி வந்தீங்கன்னா ரயில்வே கமர்சியல் ஆஃபீஸ் இருக்கும். எண்ட்ரன்ஸ்ல வந்து விசாரிச்சீங்கன்னாலே கண்டு பிடிச்சிடலாம்... திஸ் இஸ் த கைண்ட் இன்ஃபர்மேஷன் ஃபார் யுவர் குட் அரைவல்... வீ ஆர் ஈகர்லி எக்ஸ்பெக்ட்டிங் மேடம்... பை... வெக்கட்டுமா...?

    ம்...

    என்று ரிசீவரை அதனிடத்தில் வைத்துவிட்டு நகர்ந்த... வளின் முகத்தில் குழப்ப ரேகைகள்.

    என்ன... வைதேகி...? போன்ல யாரு...ம்மா...?

    ம்... யாரோ... தெரியலைம்மா... மாமியாரிடம் விபரம் சொல்வதா வேண்டாமா என்று குழம்பிப்போய் கூடத்தை நோக்கி நடந்தாள். இட்லி குக்கர் ‘புஸ்...’ என்று குரல் கொடுத்து தன் அலுவல் முடிந்து விட்டதை சேதி சொன்னது.

    வைதேகி அடுப்படிக்குள் நுழைந்தாள்.

    இட்லிகளை எடுத்து ஹாட் பேக்கினுள் அடுக்கி வைத்து விட்டு தேங்காய் திருகுவதில் ஆழ்ந்து போனாள்.

    என்ன... வைதேகிம்மா... போன் வந்தது... யாருன்னு கேட்டேன். யாரோ தெரியலைன்னே... அப்புறம் பேசாமல் அடுக்களை வேலைகளை கவனிக்க வந்து உட்கார்ந்துட்டே... மாமியாரம்மாள் தெரிந்து கொள்ளாது போனால் தலை வெடித்துவிடும் என்கின்ற ரீதியில் வெற்று காபி டபரா செட்டும் கையுமாக வீட்டுச் சுவற்றினை பற்றினவாறே கடந்து அடுக்களைக்கு வந்து விட்டிருந்தாள்.

    என்னம்மா... நான் தான் ஹாலுக்கு வந்துடுவேனில்லே... எதுக்காக காபி டபராவை எடுத்துட்டு கிச்சனுக்கு வர்றீங்க... ம்... என்று எழுந்தவள், கிரிஜாவின் கையிலிருந்த காபி டபராவை வாங்கி ஷிங்க்கில் அலம்பப் போட்டுவிட்டு தேங்காய்த் துருவலை மிக்ஸியில் போட்டு ஓடவிட்டாள்.

    நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலை வைதேகி...?

    அதுவாம்மா... சும்மா ராங் நம்பர்... ஏதோ தகவல் விசாரிச்சாங்க... நம்மளுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை... அதான் வெச்சுட்டேன்...

    ம்... போன் பில் லாஸ்ட் டேட் வந்துட்டதா... வைதேகி...? போன முறையே டேட் எக்ஸஸ் ஆகி ஃபைன் சேர்த்து கட்டினோம் இல்லையா...? மறந்துடாதே வைதேகி...

    ஆங்... நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்கம்மா... இன்னைக்கு மதியமே கொண்டு பில் செட்டில் பண்ணிட்டு வந்துடறேன்...

    சரி... சரி... உனக்கு ரொம்ப லேட்டாயிடப் போறதும்மா ஆபீஸ்க்கு...! நான் வேணா எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமாம்மா...?

    உடம்புக்கு முடியாதவங்க பேசாமல் போய் உட்காருங்கம்மா... வேலை முடிஞ்சுட்டது... தோ... அஞ்சே நிமிஷம்...

    கிரிஜா மெல்லிய இருமலுடன் கூடத்து மூங்கில் நாற்காலியில் வந்தமர்ந்து மீண்டும் செய்தித்தாளில் பார்வை பதித்தாள்.

    கிரிஜாவிற்கு நல்ல கல்வித்திறன். அந்தக்காலத்திய இண்ட்டர் மீடியட்டில் கோல்ட் மெடலிஸ்ட்டாக தேறிய பெண்மணி. தன்னுடைய கல்வியறிவின் விசாலத்தை மேம்படுத்திக்கொள்ள நூலகத்தில் பெரும் பொழுதைக் கழித்தவர். இன்றும்... இந்த அறுபத்தி ஆறு வயதிலும் உடல்நிலை சற்று நலிவடைந்த நிலையிலும் நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் அதிசயமான பெண்மணி.

    மாமியார், மருமகள் என்கின்ற பிணக்கோ, கணக்கோ எதுவும் அந்த வீட்டில் எழுந்ததில்லை. வைதேகி மாமியார் மெச்சும் அழகு மருமகள். என்ன... காலம் தன் கோலங்களை வீட்டிற்கு வீடு வித்தியாசப்படுத்தி விளையாடாது போனால் மனித வாழ்விற்கே அர்த்தம் இராதே...!

    அம்மா... இப்போ சாப்டறீங்களா... இல்லை டைனிங் டேபிள்ல எடுத்து வெச்சுட்டுப் போகட்டுமா...?

    ம்... சிரமம் வேண்டாம் வைதேகிம்மா... நானே பார்த்துக்கிறேன். இன்னைக்கு கமலியோட மாமியார் வர்றேன்னிருக்காங்க. சித்த நேரம் பொழுது போகும் எனக்கும்...

    சரிம்மா... மறக்காமல் மாத்திரையைப் போட்டுக்கோங்க. நான் மதியம் போன் பண்றேன்... என்ன...

    பேச்சு வாக்கிலேயே வைதேகி வேறு உடைக்கு மாறி வெளியே வந்து நின்றாள்.

    "வைதேகி... எத்தனை நாள் சொல்றதும்மா... நெத்திக்கு நல்லா மங்களகரமா பொட்டு வெச்சு, குங்குமம் வைன்னு. நெத்தியில் பொட்டு எங்கேன்னு தேடறாப்ல இருக்கு... ம்... அப்படியே தோட்டத்து செடியில இருக்கிற ரோஜாப்பூவை பறிச்சு வெச்சுக்கிட்டு போம்மா... தினம்

    Enjoying the preview?
    Page 1 of 1