Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poomazhai Thoovi
Poomazhai Thoovi
Poomazhai Thoovi
Ebook122 pages1 hour

Poomazhai Thoovi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466244
Poomazhai Thoovi

Read more from Geetharani

Related to Poomazhai Thoovi

Related ebooks

Related categories

Reviews for Poomazhai Thoovi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poomazhai Thoovi - Geetharani

    10

    1

    "என்னுயிரே...!

    ஏனிந்த மௌனம்

    எந்தன் யௌவனம் தடுமாறுதே...?

    உந்தன் மௌனம் ஞானிகளுக்கு புதிய தேடல் - எனில்

    எனக்கு ஒரு வரப்பிரசாதத்தின் வாசற்கதவு...!"

    அதிகாலை ஐந்து மணி. பட்சிகளின் டிர் டிர் டிர் ரக்குகள். இருளும், விடியலும் இணை பிரியாத ஆலிங்கணத்தில் மேகப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கிடந்தன இளம் தம்பதிகளாய். மேற்கின் அடி வானத்தில் வெள்ளரிப்பழக் கீற்றாய் நிலவு. சற்றே உற்று நோக்கினால் மினுக் மினுக் என்று மங்கலாய் ஏழைத் தாயின் எண்ணெய் இறங்கிய கல் தோடாய் ஒளிரும் நட்சத்திரங்கள். வேண்டாத மருமகளை சூட்டுக் கோலால் தட்டி எழுப்பிய மாமியாரின் கை விரல்களாய் சூரியனின் ஒளிக் கிரணங்கள் கிழக்கில்.

    ஊரின் தென்கிழக்கை பார்த்தாற் போன்றிருந்த கற்பக விநாயகரின் சன்னதிக்கு அருகம்புல், ஒரு சொம்புத் தண்ணீர், ஒரு வில்லை கற்பூரக் கட்டி தீப்பெட்டி சகிதமாக சின்ன மூங்கில் தூக்குக் கூடையைத் தெய்வானை அம்மாச்சி எடுத்துக் கொண்டு டாணென்று கிளம்பி விடுவார், ஐந்து மணிக்கு எல்லாம். வயசு எழுபதைத் தொட்டுக்கொண்டிருந்தது. தும்பைச் சருகாய் கரைத்து விட்டிருந்த தலை சின்ன பிச்சோடாவாக அள்ளி முடியப்பட்டிருந்தது. சாதாரண கைத்தறி நூல் சேலை - வெள்ளை மல்துணி ரவிக்கை. நரம்புக் கிளைகளின் விலாசத்தை விஸ்தாரமாக காண்பிக்கும் வெளேர் திரேகம். சற்றே வெளுத்து வயோதிகத்தினால் சுருக்கமடைந்து எலும்பினின்று இறுக்கம் தளர்ந்து கிடந்தது என்றாலும், அழகழகான பச்சைக்குத்தல்கள் கனிந்த திரேகத்திற்கு கூட ஒரு தெளிவையும், பொலிவையும் தரத் தக்கதாயிருந்தது.

    அம்மாச்சி கோவிலுக்கு நடந்து சென்று வணங்கி வீடு திரும்பினதே பெருத்த ஆயாசமாக இருந்தது.

    முழங்கால் மூட்டெல்லாம் ஒருவித வலி, கணகணவென்று கண்டுக் கால்களின் ஊறல்களாய். வீட்டுத் திண்ணையில் வயர் கூடையை வைத்துவிட்டு, இடது கை உள்ளங்கையால் முழங்காலை நீவிவிட்டுக் கொண்டார்.

    மருமகள் சகுந்தலா வாசற் தெளித்துக் கொண்டிருந்த சாணிப் பாலின் நெடி அதிகாலை இளங்காற்றில் நாசி வருட, எழுபது வருட காலமாக சுவாசித்த மண்ணின் மணம் இன்னும் கூட மனதை மயக்கும் சுகாந்தமாகத் தானிருந்தது. கொல்லையில் கட்டியிருந்த பேச்சியும், முத்துக் கண்ணாவும் ‘ம்மா... அ’ என்று குரல் கொடுத்தது.

    மூத்தவன் அய்யாக்கண்ணு இடது புறமிருந்த சிறிய கம்பந்தடியில் கட்டியிருந்த கன்றுக் குட்டியின் கயிரவிழ்த்து விட அது ‘ம்மா... அ’ என்ற செல்லச் சிணுங்கலுடனும், ஒருவித ஆதாளியுடனும் ஓடிச் சென்று பேச்சியின் வயிற்றை முட்டி முட்டிப் பாலருந்த அருகிலிருந்த முத்துக் கண்ணு வைக்கோல் மேய்வதை விடுத்து ஒருவிதத் தாய்மையுணர்வு பொங்கும் வாஞ்சையுடன் கன்றுக் குட்டியை நெருங்கி நாவால் நக்கிக் கொடுத்தது.

    அய்யாக்கண்ணு தவிடு, புண்ணாக்கு கலந்து புது கழுநீர் தயாரித்து தொட்டியில் கொட்டின வேகத்திலேயே வைக்கோல் போரிலிருந்து பிரியாது ஒரு கற்றை இழுத்துப் போட்ட வேகத்திலேயே கன்றுக் குட்டியை இழுத்து கம்பந்தடியில் கட்டிவிட்டு, பால் பீய்ச்சும் பித்தளை செம்பும், வாகாய் உட்கார என்று இரும்பு மோடாவும் எடுத்துப் போட்டு பாலைப் பீய்ச்ச கன்றுக் குட்டி எரிச்சல் மேலிடக் குரல் கொடுத்தது.

    அய்யாக்கண்ணு எதையும் காதில் வாங்கவில்லை.

    அய்யா... க்கண்ணு... சிறுசு... கொரலு கொடுத்தது. சித்த முத்துகிட்டே தான் அவுத்து விடறது...

    அம்மாச்சி குரல் கொடுத்தாள்.

    ம்... மொத்தத்தையும் கன்னுக்குட்டிக்கு விட்டுப்போட்டு வாடிக்கைக்காரவுகளுக்கு கழநித் தண்ணீரை அள்ளி ஊத்தறதாமா...?

    சகுந்தலா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வார்த்தைகளை உதிர்த்த வாக்கிலேயே புள்ளிகளைக் கோலத்திற்குள் சிறை வைத்து வாசற்படிக்கு இந்தண்டை அந்தண்டை இரண்டிரண்டு கோடுகளைப் பிசிறு பிசிறாய் இழுத்து உள்ளே விரைந்தாள்.

    ‘ச்சேய்... ஒரு வயசுக்கு மேலே உசுரோட இருக்குறதும் தப்புத்தான். போய் சேந்தாத்தான் மத்தவுகளுக்கும் நிம்மதி நமக்கும் நிம்மதி. உசுரே ஒரு பாரமாயிருது. கிடந்து, பாடாய் படுத்துது... நோவு, நோக்கானென்று கட்டை பாயோட கிடையாக் கிடந்து நாறலைன்னாலும் மேலுக்கு மூட்டு வலி, மூச்சு விட சிரமம், நாலெட்டு சேர்ந்தாப்புல வெய்யிலுல பொடி நடையா நடந்தாலும் ‘தஸ்சு... புஸ்சுன்னு’ மூச்சு வாங்கி கண்ணை இருட்டிக்கிட்டு இடமோ வலமோன்னு எங்கிட்டோ கொண்டு தள்ளுது... தான்! ஆனா... என்ன செய்ய...? எந்தலையில் எழுதுனவன் ஏடெடுத்து படிக்கக் காணலியே? இன்னும் எம்முட்டு தலையெழுத்து எழுதின ஓலையெல்லாம் மொளகாப் பானைக்குள்ளே கொண்டு போட்டுட்டானோ... இந்த வத்துக்கள்ளன்...! எமனை நோகவா... இல்லை எவனை நோகவா...? ம்... ஒருக்கா திடும்ன்னு ஓலை கிழிச்சாலும் நான் போக மாட்டேன்... சடுதியிலே... எம்முட்டுப் பேரனைப் பார்க்காமல்..."

    தெய்வானை அம்மாச்சி மனசிற்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் சுடச்சுட டீ கமகமத்ததை நாசியின் உணர்திறன் அறிந்து கொண்டது.

    ஆறி பூனை மூத்திரம் கணக்கா ஆவறதுக்குள்ளே... எடுத்துக் குடிச்சுப்போட்டு... இந்த வெங்காயத்தை உரிச்சு வைங்க...

    மருமகள் சகுந்தலா சின்ன வெங்காயத்தை முறத்தில் அள்ளி வந்து வைத்து அருகாமனையையும் அருகில் வைத்துவிட்டு அடுப்படிக்கு விரைந்தாள்.

    தெய்வானை டீயை ருசித்து மிடறு மிடறாய் விழுங்கினாள்.

    ஏந்தாயி... சீனி கூடக்கொஞ்சம் போட்டிருக்கப்படாது. சுடு தண்ணி கணக்கா இருக்கு டீத் தண்ணி...

    வெற்று டம்ளரை வலது பக்கவாட்டில் வைத்துவிட்டு முறத்தையும் அருகாமனையையும் வாகாய் பக்கத்தில் இழுத்து வைத்தவாறே பேசினாள் தெய்வானை அம்மாச்சி.

    கட்டை காடு போய் சேருற நேரந் தண்ணியும் வவுத்துக்கு வார்க்கறதுல துளி நாக்கு ருசி சொணங்கக்கூடாது மவராசிக்கு... ம்... நொடிப்புடன் சகுந்தலா வெற்று டீ டம்ளரை எடுத்துப் போனாள்.

    அய்யாக்கண்ணு ஆள் சத்தத்தையே காணோம்.

    ம்... இருந்தால் மட்டும் என்னத்தை பெரிசாய் மனசை மயிலிறகால் வருடுகிறாற் போன்று மகராசன் பேசிப் பாசத்தைக் கொட்டப் போகிறான். எப்பொழுதாவது போனால் போகிறதென்று ‘ஆத்தா... சாப்புட்டியா... ஏ... சகுந்தலா... ஆத்தாவுக்கு வேண்டியதை கவுனி மொதல்லே...’ என்று எக்கி ஒரு குரல் கொடுப்பான். அன்று முழுக்க பூனை கருவாட்டுச் சட்டியை உருட்டினாற் போல் தெய்வானையின் தலை சகுந்தலாவின் வாய்க்குள் கிடந்து முக்கலும், காந்தலுமாய் உருளும்.

    ஏந்தாயி... டவுனு போனியன்னா... சீவல் இம்புட்டுண்டுனாச்சும் வாங்கியா... மறக்காமல்... இந்தப் பாக்குச் சனியை அதக்க முடியலை...

    என்றோ ஒலித்த குரலுக்கு எதிரொலியாய் சகுந்தலாவின் பிறந்த கத்தில், தம்பி சம்சாரத்துக்கு வளைகாப்பு, இல்லை தங்கை மகளுக்கு காதுகுத்து வைபவத்தில் தெய்வானை அம்மாச்சியின், கரங்களிலும் சுருக்குப் பையிலும் புத்தம் புதிய கும்பகோணத்து சீவல் சுருள்கள் நிறைந்து மணக்கும்.

    தெய்வானை அம்மாச்சி வெற்றிலை சீவல் அதக்கினவுடன் மனதில் பலதையும் சேர்த்து அதக்குவாள். அடிக்கடி மனசிற்குள் ஒரு சம்பாஷணைத் துரத்தல்.

    ‘அட... பேசறது முச்சூடையும் யாரு உட்கார்ந்து கேட்க ஆளிருக்கா... கொறைக்காலத்தையும் நெஞ்சுக் குழிக்குள்ளேயே பேசிப் பேசி போக்கிக்கிட வேண்டியது தான். வயசு தான் ஏழு கழுதை சொமந்தாலும் மனசுக்குள்ளே

    Enjoying the preview?
    Page 1 of 1