Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Venkakalap Paravai
Venkakalap Paravai
Venkakalap Paravai
Ebook132 pages45 minutes

Venkakalap Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466428
Venkakalap Paravai

Read more from Geetharani

Related to Venkakalap Paravai

Related ebooks

Related categories

Reviews for Venkakalap Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Venkakalap Paravai - Geetharani

    20

    1

    துபாய் நகரத்தின் நெரிசல் மிக்க தேரா பகுதி. வெள்ளிக்கிழமை என்பதால் ஸப்கா பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் ஜன வெள்ளம் பிரவாகமெடுத்திருந்தது. வார விடுமுறை தின வெள்ளிக்கிழமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து மக்கள் துபாய்க்குப் படையெடுப்பது வழக்கமான ஒன்று.

    ஸத்வாவிலிருந்து ஷேரிங் டேக்சி பிடித்து பிளாசா சினிமா தியேட்டருக்குப் பக்கத்திலிருக்கும் அல்குபைபா பஸ் நிலையத்தில் இறங்கிக்கொண்ட சுந்தரமூர்த்தி, அங்கிருந்து பொடி நடையாக அப்ராவை அடைந்தார்.

    துபாய் நகரத்தை க்ரீக் எனப்படும் கால்வாய் இரண்டாகப் பிரித்திருந்தது. வடபகுதி தேரா என்றும், தென் பகுதி பர்துபாய் எனவும் அழைக்கப்பட்டன. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் போக மூன்று வழிகள். ஒன்று டேக்சி பிடித்து ஷிந்தகா டனல் வழியாகப் போகலாம். அடுத்து பஸ் மூலம் மக்தூம் பிரிட்ஜ் தாண்டிப் போகும் வழி. மூன்றாவதுதான் அப்ரா என்கிற படகு மூலம் கால்வாயைக் கடக்கும் மார்க்கம்.

    வரிசையாக நின்றிருந்த படகுகளில் கூட்டம் கூட்டமாய்ப் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தார்கள். ஒரு படகில் இருபது பேருக்கு மேல் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்.

    சுந்தரமூர்த்தி. ஒரு படகில் ஏறி அமர்ந்து நிதானமாய்ச் சட்டைப் பாக்கெட்டிலிருந்து தேடி எடுத்து ஐம்பது ஃபில்ஸ் நாணயத்தை ஓட்டுநரிடம் கொடுத்தார்.

    இருபது பேர் சேர்ந்ததும் ஓட்டுநர் இஞ்சினை உசுப்ப படகைச் செலுத்தினார்: ஐந்து நிமிடப் பயணத்தில் அக்கரையைத் தொட்டு நின்றது படகு.

    படகிலிருந்து இறங்கிய சுந்தரமூர்த்தி நேரே நைஃப் ரோடை நோக்கி நடந்தார்.

    டீக்கடை ஒன்றின் வெளியே போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்து சுந்தரமூர்த்தியின் வருகைக்காகக் காத்திருந்த ஹனீஃப், அவரைக் கண்டதும், வாப்பா, ஏன் இவ்வளவு லேட்டு? என்று வரவேற்றார்.

    அவருடன் கைகுலுக்கிய சுந்தரமூர்த்தி, ஸத்வாவிலிருந்து வர்றதுக்குள்ளே லேட்டாயிடுச்சு, ஹனீஃப்! என்றவாறு அவரெதில் அமர்ந்தார்.

    இரண்டு டீக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, அவர் பக்கம் திரும்பிய ஹனீஃப், என்ன சுந்தரா, டல்லா இருக்கே? என்ன விஷயம்? என்று கேட்டார்.

    வீட்லேர்ந்து லெட்டர் வந்திருக்கு. ரெண்டாவது பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு.

    அட, சந்தோஷமான சேதி ஆச்சேப்பா. இதுக்குப் போய் ஏன் இடிஞ்சு போயிட்டே?

    அதில்லே ஹனீஃப்! முதல் பொண்ணோட கல்யாணத்தை நான் இருந்து நடத்தி முடிச்சேன். இப்ப நான் இல்லாமே என் அடுத்த பொண்ணோட கல்யாணம் நடக்கப்போகுது. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு.

    இதோ பாரு சுந்தரா! நீ மட்டும் இல்லை. இங்கே இருக்கிற லட்சக்கணக்கான இந்தியர்களோட நிலைமையே இதுதான். பெண்டாட்டி, பிள்ளைங்களை விட்டுட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நாம எல்லோரும் வந்திருக்கோம். எதுக்கு? நாலு காசு சம்பாதிக்க. வருங்காலத்தை வளப்படுத்த ஒரு பொருளை அடைய இன்னொரு பொருளை விட்டுக் கொடுத்துத்தான் ஆகணும். இப்படி கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை வெச்சிருந்தா எப்படி? நீயாவது பரவாயில்லை. மூத்த பொண்ணோட கல்யாணத்தை உன் கையால நடத்தி வெச்சிருக்கே. அதுக்காக சந்தோஷப்படு. எனக்கு மூணு பொண்ணுங்க. ஒரு பொண்ணோட கல்யாணத்துக்கும் என்னால போக முடியலை. எப்படியிருக்கும் எனக்கு? துணிஞ்சு இவ்வளவு தூரம் வந்துட்ட பிறகு எல்லாத்தையும் சகிச்சுக்கணும் சுந்தரா!

    நண்பர் சொல்வதில் இருந்த உண்மையை உணர்ந்துகொண்ட சுந்தரமூர்த்தி, ‘ஹூம்’ எனப் பெருமூச்சொன்றை வெளிப்படுத்தினார்.

    டீ வந்தது. உறிஞ்சிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்கள்.

    சரி... அதையெல்லாம் விடு. கல்யாணத்துக்கான ஏற்பாடெல்லாம் ஒழுங்கா நடக்குதா? என்று ஹனீஃப் கேட்கவும், ம்... நடக்குது. என் தம்பிதான் எல்லாத்தையும் கவனிக்கிறான். துணைக்கு என் பையன் யோகேஷ் இருக்கான், என்றார்.

    பிறகென்ன? கவலையை விட்டுத் தள்ளு. செலவுக்கு வேண்டிய பணத்தை அனுப்பி வை. முகூர்த்தம் எப்ப வெச்சிருக்காங்க?

    ரெண்டு மாசம் கழிச்சிதான்.

    அதுக்குள்ளாற ஒரு கணிசமான தொகையை அனுப்பமுடியுமா?

    முதலாளிகிட்ட கொஞ்சம் கடன் கேட்டிருக்கேன். அது கிடைச்சதும் அதோடு என் ரெண்டு மாசச் சம்பளத்தையும் சேர்த்து அனுப்பிட வேண்டியதுதான்.

    பத்துமா?

    நகை நட்டெல்லாம் ஏற்கெனவே செஞ்சு வெச்சாங்க. சீர் செனத்திக்கான சாமான்கள் சிறுகச் சிறுக வீட்டிலேயே சேர்ந்துடுச்சு. இப்ப மத்தச் செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பணும்.

    பரவாயில்லையே... இந்த அளவுக்கு நீ முன்கூட்டியே திட்டம் போட்டு வெச்சிருக்கியே, கில்லாடிதான்! எனச் சொல்லிச் சிரித்தார் ஹனீஃப்.

    என்ன பண்றது? பொண்ணைப் பெத்துட்டா எல்லாத்தையும் ஒழுங்கா காலாகாலத்துல செய்ய வேண்டி இருக்கே! என்ற சுந்தரமூர்த்தி மணிக்கட்டை உயர்த்தி வாட்சைப் பார்த்தார்.

    அப்ப நான் கிளம்பட்டுமா? என்றவாறு எழுந்து நின்ற சுந்தரமூர்த்தியை பார்த்து, என்ன அவசரம்? என்று கேட்டார் ஹனீஃப்.

    புஜைராவிலிருந்து என் மச்சான் வர்றார். துபாய் அவருக்குப் புதுசு. தனியா வரத் தடுமாறுவார். தேரா டேக்சி ஸ்டேண்டுக்குப் போய் அவரை அழைச்சுக்கிட்டு வரணும்.

    அப்படியா? அப்ப புறப்படுப்பா! என்று அவரை அனுப்பி வைத்தார் ஹனீஃப்.

    பஸ்ஸைப் பிடிக்க ஸப்கா பஸ் ஸ்டேண்டை நோக்கி நடந்தார் சுந்தரமூர்த்தி.

    2

    வாசலில் அரவம் கேட்டு அரிசி களைந்து கொண்டிருந்த தேவிகா எழுந்து வந்து எட்டிப் பார்த்தாள்.

    ஆட்டோவிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர் மகள் பவானியும், அவள் கணவன் காளிதாசும்.

    வாம்மா, வாங்க மாப்பிள்ளை! என்று வரவேற்றாள் தேவிகா.

    மணப் பெண் எங்கே? என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் பவானி.

    அதற்குள் அங்கு அந்த அஞ்சலி, ச்சீ... போக்கா! என வெட்கப்பட்டாள். அவள் கொண்டு வந்து போட்ட சேரில் அமர்ந்தான் காளிதாஸ்.

    கல்யாணக் களை இப்பவே வந்திடுச்சி பார்த்தியா பவானி? என்று காளிதாசும் தன் பங்கிற்குக் கிண்டலடிக்க, என்ன மாமா, நீங்களுமா? என்று சிணுங்கினாள் அஞ்சலி.

    வீடே கலகலத்தது.

    அஞ்சலி! அரிசி மூட்டையிலிருந்து இன்னும் கொஞ்சம் அரிசி எடுத்துக்கிட்டு வா, என்றாள் தேவிகா.

    எதுக்கு மாமி? நான் இப்ப கிளம்பப் போறேன், என்றான் காளிதாஸ்.

    அதெப்படிப் போவீங்க? இருந்து சாப்பிடுட்டுப் போங்க! என்றாள் தேவிகா...

    இல்லேம்மா... அவர் என்னை விட்டுட்டுப் போகத்தான் வந்திருக்கார். அஞ்சலியோட முகூர்த்தத்துக்கு இன்னும் பத்து நாள்தானே இருக்கு! ‘வீட்டு வேலைங்க நிறைய இருக்கும். நீ ஒத்தாசையா இரு,’ன்னு இவருதான் என்னைக் கட்டாயப்படுத்தி அழைச்சுகிட்டு வந்தார். இவருக்கு ஆபீஸ்ல ஏகப்பட்ட வேலை. இப்ப வந்ததே பெரிய விஷயம், என்று விளக்கினாள் பவானி.

    பரவாயில்லை. பத்து நிமிஷத்துல சாப்பாடு ரெடியாயிடும்.

    மாமி! இதென்ன அந்நியர் வீடா? ஃபார்மாலிடிஸ் எல்லாம் எதுக்கு? ஆபீஸ்ல ஆடிட்டிங் நடக்குது. தவிர்க்கவே முடியாது. முகூர்த்தத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்திடறேன். கவலைப்படாதீங்க. இப்ப நான் போயாகணும். ஜெனரல் மேனேஜர்கிட்ட இப்ப கிடைச்ச பெர்மிஷனே அபூர்வம். நீங்க ஒண்ணும் நினைச்சுக்காதீங்க, என்றான் காளிதாஸ்.

    நிலைமையை உணர்ந்து ஓடிப்போய்ச் சில பதார்த்தங்களைக் கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1