Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனசே... மனசே!
மனசே... மனசே!
மனசே... மனசே!
Ebook120 pages40 minutes

மனசே... மனசே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“டேய்... மகிமாடா...!”
“சரி... இப்படி குடு!”
“அவளுக்கு நிச்சயமாய்டுச்சில்லே?”
“ப்ச்... அதப்பத்தி அப்புறம் பேசலாமே... முதல்ல அவகிட்டே பேசிடறேன்!” ரிஷியிடமிருந்து செல்ஃபோனை பறித்து காதில் ஒட்டவைத்துக் கொண்டான்.
“ஹாய் டியர்...!”
“.....”
“பேசாதே... நான் ரொம்ப கோபமாயிருக்கிறேன்!”
“.....”
“பின்னே என்ன? ரெண்டு நாளாய்டுச்சி... நீ என்கிட்டே பேசி. நான் ட்ரை பண்ணும்போதெல்லாம் செல் ஆஃப் பண்ணியிருக்கு. என்னை ரொம்ப துடிக்க வைக்கிறே மகிமா!”
“.....”
“சும்மா... ஃபோன்லே கிஸ் பண்ணிட்டா சமாதானமாய்டுவேனா? நேர்ல வா!”
“.....”
“ஓக்கே... பிரார்த்தனாவா? நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன். ஈவ்னிங் ஸ்பென்சர் வாசல்ல நில்லு... ஓக்கே... ஓக்கேடா செல்லம்!”
ரிஷி கண்கள் சுருங்கப் பார்த்தான்“மாப்பிள்ளே... எனக்கு இப்பவே ஒண்ணு தெரிஞ்சாகணும்!”
“என்ன?”
“டூ யூ லவ் ஹர்?”
“யாரைப் பத்தி கேக்கறே?”
“மகிமா!”
“சேச்சே...! லவ்வாவது மண்ணாவது. அதுக்கெல்லாம் ஏதுடா நேரம்? ரிஸ்க்! லவ் பண்ணா..., அவ கூப்பிடறப்பவெல்லாம் ஓடணும். கொஞ்சம் லேட்டாப் போனாலும் சண்டை வரும். சமாதானப்படுத்த நிறைய பொய் சொல்லி கொஞ்சணும். அவளுக்கு என்னப் பிடிக்கும்னு தெரிஞ்சு கடை கடையா ஏறி இறங்கி வாங்கித்தரணும். எதுக்கிந்த டென்ஷன்?”
“அப்ப மகிமாவை லவ் பண்ணலே!”
“நிச்சயமா இல்லே! அவளுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணமாகப் போகுது!”
“அப்புறம் எப்படி மாப்பிள்ளே... அவ இன்னமும் உன்னோட சுத்திக்கிட்டிருக்கா? - கட்டிக்கப்போறவனுக்கு தெரிஞ்சா பிரச்சனையாச்சே?”
“என்னைப் பிடிச்சிருக்கு. என் அப்ரோச் பிடிச்சிருக்கு. விட மனசு வரமாட்டேங்குது அவளுக்கு. இன்னொரு விஷயம் தெரியுமா? கட்டிக்கப் போறவன் கல்ஃப்ல இருக்கான். லவ் மேரேஜ். இன்டர்நெட்ல சாட்டிங் பண்ணி வளைச்சுப்போட்டிருக்கா... மேரேஜுக்குப் பிறகு கல்ஃப்லேயே செட்டிலாய்டப்போறா...”
“அப்புறம் எப்படிடா உன்கூட...!”
“டேய்... டேய்... இது உனக்கே ரொம்ப அதிகமா தெரியலே? நாம் பழகறதே இப்படிப்பட்ட அல்ட்ரா மாடர்ன் கேர்ள்ஸோடதானே? இப்ப என்ன புதுசா ஆச்சர்யப்படறே?”
“உனக்கு உடம்பெல்லாம் மச்சம்டா மாப்பிள்ளே!”
“இருந்துட்டுப் போகட்டும்!“அப்புறம்... இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே...”
“என்ன?”,
“வீட்லே எனக்கு மூக்கணாங்கயிறு போட பொண்ணை வலைவீசி தேடறாங்க!”
“வெரிகுட் சிட்டியிலேயா? வில்லேஜ்லேயா?”
“வில்லேஜ்லேதான் பார்க்க சொல்லியிருக்கேன். அப்பதான் நம்ம வில்லங்கமெல்லாம் தெரியாமலிருக்கும் பாரு!”
“எனிவே... பெஸ்ட் ஆஃப் லக்”
“சரி... உனக்கெப்போ கல்யாணம்?”
“டெய்லி எங்க வீட்டு பெரிசுங்க தொல்லைப் பண்ணிக்கிட்டுதான் இருக்குதுங்க. எனக்கென்னவோ... கல்யாணம், மனைவின்னு புதுசா ஒரு பந்தத்துல மாட்டிக்க மனசு வரமாட்டேங்குது. குழந்தை, குடும்பம்னு ஒரு வட்டத்துக்குள்ளே சிக்கிக்கிட்டு, எல்லாத்துக்கும் கவலைப்பட்டுக்கிட்டு... வீண் பிரச்சனையத் விலை கொடுத்து வாங்கி... நம்ம சந்தோஷத்தை காத்தாடி மாதிரி பறக்க விட்ருவோமோன்னு கொஞ்சம் பயமாயிருக்கு!”
“நமக்கு வீட்டு சாப்பாடு பிடிக்காதுதான். தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டாலும் வீட்லே வைக்கிற காரமான மிளகு ரசத்துக்காக மனசு ஏங்கதான் செய்யுது. ரிஸ்க் எதிலே இல்லே மாப்பிள்ளே? லகானை எப்பவும் உன் கையிலேயே வச்சுக்கிட்டா எதுவும் பிரச்சனையில்லே!”
“இப்ப எதுக்கு அதெல்லாம்?”
போன் அலறியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
மனசே... மனசே!

Read more from ஆர்.மணிமாலா

Related to மனசே... மனசே!

Related ebooks

Reviews for மனசே... மனசே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனசே... மனசே! - ஆர்.மணிமாலா

    1

    காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி கண்மூடி, கை கூப்பி வணங்கினாள். ரேகா.

    ‘எல்லோருக்கும் எல்லாமே நல்லதே நடக்க வேண்டும். என் பெற்றோர்க்கு நோய் நொடியில்லாத நீண்ட ஆயுளைத் தரவேண்டும். என் தங்கைக்கு நிறைவான வாழ்க்கை அமைய வேண்டும். எனக்கு ராமனைப் போல நல்ல கணவனை கொடுக்கவேண்டும்!’

    ரேகா கூடத்திலிருந்து விசாலம் அழைத்தாள்.

    என்னம்மா... இதோ வந்துட்டேன்!

    ட்யூஷனுக்காக பசங்க வந்து காத்துக்கிட்டிருக்காங்க பார்!

    வந்துட்டேன்... வந்துட்டேன் தாவணியை இழுத்து செருகியபடி கூடத்திற்கு வந்தாள்.

    பத்து பனிரெண்டு பிள்ளைகள் அமர்ந்திருந்தனர். இவளைப் பார்த்ததும் வழக்கம் போல சங்கோஜத்துடன் சிரித்தனர்.

    அம்மா காலையிலே முறுக்கு சுட்டியே... எடுத்துட்டு வாம்மா... ஆளுக்கொன்று குடுக்கலாம்!

    எங்கே கிடைக்கும் இந்த சவுகர்யமெல்லாம் பிள்ளைகளுக்கு? இலவசமாய் ட்யூஷன் போதாதுக்கு அப்பப்ப நொறுக்குத்தீனி... ஹூம்...!

    சேச்சே... சாப்பிடறதையெல்லாம் சொல்லிக் காட்டாதேம்மா!

    அவ கிடக்கிறா கிராமத்து கழுதை! உன் அருமைத் தெரியுமா அவளுக்கு? தானத்திலேயே சிறந்த தானம் கல்விதானம்தான் என்றார் அங்கு வந்த கிருஷ்ணன்.

    ஆமா.. காலேஜிலே இவளுக்கு இலவசமாகவா சொல்லிக் கொடுத்தாங்க? ஆயிரமாயிரமா செலவுப் பண்ணலே? இவ மட்டும் இதுங்களுக்கு இலவசமா கத்துக் கொடுக்கணுமா? ஆளுக்கு ஒரு முப்பது, அம்பதுன்னாவது வாங்கலாமில்லே?

    அதிலே என்னம்மா திருப்தி இருக்கு? கல்வி என்ன கடைச்சரக்கா? அம்பது நூறுன்னு வியாபாரம் செய்ய?

    ஏன்டி சொல்ல மாட்டே? அப்பாவுக்கேத்தப் பொண்ணு! கண்டக்டரா வேலை செய்யறவங்களை எத்தனையோ பேரை நானும் பார்த்திருக்கிறேன் தினசரி வர்ற மேல் வருமானத்தை வச்சே நிலம், நீச்சுன்னு வாங்கிப்போட்டு வசதியா இருக்காங்க. ஆனா, உங்கப்பா இருக்கிறாரே... எவனாவது டிக்கட் வாங்காம, பர்ஸை மறந்து வச்சிட்டு வந்திட்டேன் சார், பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சிட்டான் சார்னு சொன்னாப்போதும், உடனே தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து டிக்கட் எடுத்திடுவார். இப்படியிருந்தா எப்படி உருப்பட முடியும்? ரெண்டு பொட்டைப் பிள்ளையை பெத்து வச்சிருக்கோமே... இப்படி கேனத்தனமா இருந்தா கரையேத்த முடியுமான்னு யோசிக்கறாரா மனுஷன்?

    உன்னை நினைச்சா ஆச்சர்யமா இருக்கும்மா. மனித நேயம் அசுர வேகத்துல அழிஞ்சுக்கிட்டு வர்ற இந்த விஞ்ஞானயுகத்துல அப்பா மனிதாபிமானத்தோட உதவறதை பெரிய குறையா சொல்றியே...!

    மனிதாபிமானம் நல்ல விஷயம் தான். ஆனா, அது மட்டுமே ரெண்டு பொண்ணுங்களை கரையேத்திடாதே!.

    அப்பாதான் எனக்கும் சுகந்திக்கும் கல்யாணத்துக்கென்றே பேங்க்லே பணம் போட்டிருக்கிறாரே... அது போதாதா?

    இன்னும் பணம் சேர்த்தா பெரிய இடத்திலே வரன் பார்க்கலாமில்லே?

    தகுதிக்கு மீறி ஆசைப்படாதே விசாலம்! ஏழையா இருந்தாலும் நல்லவனா இருக்கணும். நம்ம குழந்தைங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தணும். நீ சும்மாவே புலம்பிட்டிருக்காதே! ரேகாவோட ஜாதகத்தை தரகர்கிட்டே கொடுத்துட்டேன். ஒரு மாசத்துக்குள்ளே நல்ல வரனா கொண்டு வர்றேன்னு சொல்லியிருக்கார். அதனால், நீ இப்ப என்ன பண்றே? எனக்கும் இந்த பிள்ளைகளுக்கும் முறுக்கு எடுத்திட்டுவா...

    நிஜமாவா சொல்றீங்க? விசாலம் ஆச்சர்யமாக கேட்டாள்.

    அட நிஜமாதான் கேக்கறேன்... முறுக்கு எடுத்துக்கிட்டு வா!

    நான் அதை கேக்கலே. தரகர்கிட்டே ரேகாவோட ஜாதகம் கொடுத்ததா சொன்னீங்களே அதை!

    இதிலே என்ன பொய்? பொண்ணுங்க மேலே உனக்கு மட்டும்தான் அக்கறை இருக்கிறதா நினைச்சுக்காதே! அதைவிட அதிகமாகவே எனக்கு இருக்கு. இன்னும் நாலு வருஷ சர்வீஸ்தான் இருக்கு. சர்வீஸ் முடியறதுக்குள்ளே ரேகாவையும், சுகந்தியையும் கரையேத்தியாகணும்ங்கற பொறுப்புணர்ச்சி எனக்கிருக்காதா?

    ரேகா அப்பாவை நெக்குருக பார்த்துக் கொண்டிருந்தாள்.

    "ஷிவ்ராஜ் பைபர் க்ளாஸ் இன்டஸ்ட்ரீஸ்"

    சில்வர் கோட்டிங்கில் சூரிய ஒளிபட்டு பளபளத்தது. கட்டிடம் மிக பிரம்மாண்டமாய் இல்லாவிட்டாலும் கச்சிதமாய் இருந்தது.

    தன்னுடைய காரை விட்டு இறங்கினான் ஷிவ்ராஜ்.

    கம்பீரமாய், அழகாய் இருந்த அவனுக்கு முப்பது வயது. அந்த கம்பெனியின் நிர்வாகி.

    கார் சப்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்த வாட்ச்மேன் குப்புசாமி அவன் கையிலிருந்த ப்ரீப்கேஸை வாங்கிக் கொண்டு பின்னே நடந்தான்,

    ஆபீஸ் மொத்தமும் அவனைப் பார்த்ததும் எழுந்து நின்று ‘விஷ்’ பண்ணினர்.

    அனைவருக்கும் சேர்த்து ஒரு புன்னகையை பதிலாக்கிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

    ஷிவ்ராஜின் கண்கள் வியப்பால் விரிந்தன.

    காரணம்...

    அவனுக்கு முன்பே அவனின் அறைக்குள் அமர்ந்திருந்த ரிஷி.

    ஹேய் ரிஷி... எப்ப வந்தே?

    வாடா மாப்பிள்ளே... என்னதான் நீ முதலாளியா இருந்தாலும் ஆபீஸ்க்கு இவ்வளவு லேட்டாவா வர்றது?

    தூங்கறப்ப லேட் நைட்டாயிடுச்சு. அதான்!

    அவன் எதிரிலிருந்த தன் ரோலிங் சேரில் அமர்ந்தான்.

    யாரோட? கண்ணடித்து சிரித்தான்.

    மிருதுளா!

    யாரு... அந்த பெத்தடின் பார்ட்டியா? பார்த்து... உனக்கும் அவபழக்கம் தொத்திக்கப்போறது!

    அதெல்லாம் ரொம்ப கேர்ஃபுல்லாவே இருப்பேன். மத்தபடி நல்லா கம்பெனி குடுத்தா!

    எனக்குதான் தெரியுமே! அந்த விஷயத்திலே அவ எக்ஸ்பர்ட்!

    சரி... நீ எப்ப கொடைக்கானல்லேர்ந்து வந்தே?

    காலையிலேதான்! மாப்பிள்ளே... மறக்க முடியாத ட்ரிப்புடா. பத்து மிருதுளாவை தூக்கி சாப்பிட்ருவா நான்சி. சொல்லி வச்சிருக்கேன். அடுத்த வாரம் அவளோட டூர் போறியா?

    அவுட்டோரெல்லாம் ஒரு மாசத்துக்கு முடியாது. ஆபீஸ்லே வொர்க் இருக்கு. நிறைய ஆர்டர் வந்திருக்கு. சப்ளை பண்ணனும்

    ஆபீஸ்னு போரடிக்கிறியே மாப்பிள்ளே...!

    நீயென்னப்பா... ராஜா வீட்டு கன்னுக்குட்டி. பத்து தலைமுறைக்கு உங்கப்பா சொத்து – சேர்த்து வச்சிருக்கார். போதாதுக்கு உன்னோட ரெண்டு அண்ணன்களும் பிஸினஸை பார்த்துக்கிட்டு மாய்ஞ்சு, மாய்ஞ்சு பணத்தை சேர்க்கிறாங்க, செல்லப்பிள்ளை... நீ அதை எப்படி செலவழிக்கறதுன்னு திணறிக்கிட்டிருக்கே! நான் அப்படியா? எங்கப்பா கவர்ன்மெண்ட் எம்ப்ளாயி

    ஏன்டா புலம்பறே? ஆபீஸை நீயா தூக்கிப் பிடிச்சிட்டிருக்கே? சம்பளத்துக்கு வேலைப் பார்க்கிற நாய்ங்க பார்த்துக்கப் போவுதுங்க. ஆடாத ஆட்டமெல்லாம் இந்த வயசுலதான் ஆட முடியும். கடவுள் பணத்தைக் கொடுக்கறதே அனுபவிக்கறதுக்குதான். தத்துவம் பேசாம... நான்சியோட டூர் கிளம்பற வழியைப் பாரு!

    சொன்னா கேக்கமாட்டியே! சரி... சரி... ஏற்பாடு பண்ணு!

    என்னமோ அரைமனசா சொல்றா மாதிரி நடிக்கறான் பாரு!

    அடப் போப்பா! என்று வெட்கத்துடன் சிரித்தான் ஷிவ்ராஜ்! கூடவே அந்த சிரிப்பில் கலந்துக் கொண்டான் ரிஷி.

    Enjoying the preview?
    Page 1 of 1