Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீ காற்று... நான் மரம்..!
நீ காற்று... நான் மரம்..!
நீ காற்று... நான் மரம்..!
Ebook79 pages28 minutes

நீ காற்று... நான் மரம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தெரு என்றுதான் பெயர். ஆனால் குண்டும் குழியுமாய். கவனமாய் நடந்தால் கூட சிறு கீறலாவது உடலில் ஏற்படுத்தாமல் விடாது... அந்த சீர் செய்யப்படாத ரோடு.
சாதாரண நாளிலேயே ஆட்டோவோ, காரோ - எதுவுமே தெருவினுள் நுழையாது. தெரு - முனையிலேயே இறங்கிக் கொள்ள வேண்டியதுதான். ரோடு போடுகிறோம் பேர்வழி என்று பெரிய பெரிய சரளை கற்களை கார்ப்பரேஷன்காரன் கொண்டு வந்து கொட்டி மூன்று மாதமாகிறது. இன்னமும் ரோடு போடவில்லை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்க சிரமப்பட்டனர். இப்போது மழையில் அந்த தெரு இன்னும் பயமுறுத்தியது!
மழை தண்ணீர் வேறு தேங்கிடக்கிறது. மரங்கள் வேரோடு சாய்ந்து வழியை அடைத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்டோ நிச்சயமாய் உள்ளே வராது. பிரசன்னா தெருமுனையில்தான் இறங்கியாக வேண்டும். வீடு வந்து அடைவதற்குள் தெப்பமாய் நனைந்து விடுவாள். அதுவும் வீடு தெருவின் கடைகோடியில் உள்ளது. பிரசன்னாவிற்கு மழையில் நனைந்தாலே காய்ச்சல் வந்துவிடும்.
அனுசுயா ரெய்ன் கோட்டும் இரண்டு குடைகளும் எடுத்துக் கொண்டு கதவை பூட்டிவிட்டு நடந்தாள்.
சில்லென்ற குளிர்காற்று முகத்தில் மோதியது. தள்ளி மெடிக்கல் ஷாப் ஒன்றிருந்தது. அங்கே ஒதுங்கி நின்றாள்.
“என்ன டீச்சரம்மா... இங்கே நிக்கீறங்க?” என்றாள் குணவதி... அவள் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி இருப்பவள்...
“பிரசன்னாவுக்காக வெய்ட் பண்றேன்!”
“அவ என்ன சின்னக்குழந்தையா? தெரு முனையில் வந்து காத்திருக்கீங்க?” கிண்டலாய் சொல்லிவிட்டுப் போனாள்வயிற்றெரிச்சல் பொறாமை! என் பொண்ணுக்கு, அழகு, படிப்பு, வேலைன்னு கடவுள் எதிலேயும் குறைவைக்கலையேன்ற எரிச்சல். இது பொண்ணுக்கு எலிவால் பின்னலும், துருத்திய பல்லுமாய் இருக்குதேன்ற வயிற்றெரிச்சல்! பிரசன்னா என் பொண்ணு என்னைப் பொறுத்தவரை அவ கைக்குழந்தைதான்! முதல்ல பிரசன்னாவுக்கு சுத்திப் போடணும்!”
சற்று தூரத்தில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது. உற்றுப் பார்த்ததில் அதில் பிரசன்னா இருப்பது தெரிந்தது.
அனுசுயா அவசர அவசரமாய் குடையை விரித்து ஆட்டோவை நோக்கி ஓடினாள்.
ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்துவிட்டு இறங்கிய பிரசன்னா முகத்தில் ஆச்சர்யம்.
“அம்மா... நீ... ஏம்மா இங்கே வந்து காத்திருக்கிறே!”
“நனைஞ்சிடப்போறே... குடைக்குள்ளே வா மொதல்ல... இந்தா... இந்த ரெய்ன் கோட்டை போட்டுக்க!’
“அம்மா... என்ன இது ரெய்ன் கோட்டெல்லாம்? இதோ இருக்கிற வீட்டுக்கு போக எனக்கு இவ்வளவு பந்தோபஸ்து?” அலுப்பாய் கேட்டாள்.
“ப்ச்... முதல்ல போடு!” போட்டுக் கொண்டாள்.
“ம்... நட... வீட்டுக்குப் போகலாம்!”
அம்மாவை மிரட்சியாய் பார்த்தபடி நடந்தாள் பிரசன்னா. அம்மாவின் அதீத அன்பு அவளுள் ஒருவித பயத்தை உற்பத்தி செய்தது. வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்றனர்.
“அம்மா... ஏம்மா இப்படி நடந்துக்கறே?”
“எப்படி நடந்துக்கறேன்?”
“எனக்கு இருபது வயசு முடிஞ்சாச்சு! ஆனா... அஞ்சு வயது குழந்தை மாதிரி நடத்தறே!”
“நீ எனக்கு எப்பவும் குழந்தைதான்!”
“அதுக்காக மத்தவங்க கிண்டல் பண்ற அளவுக்கு நடந்துக்கணுமா?”இதுல கிண்டல் பண்றதுக்கு என்னடி இருக்கு? என் பொண்ணுமேல நான் அன்போட... அக்கறையோட நடந்துகறதுக்கு கூட கிண்டல் பண்ணுவாங்களா என்ன?”
“உனக்குச் சொன்னாப் புரியாதும்மா! பத்துவீடு தாண்டி நடந்தா நம்ம வீடு! எனக்கு வரத் தெரியாதா? தெரு முனையிலே நீ காத்திருக்கணுமா?”
“நீ நனைஞ்சிடுவியே பிரசன்னா?”
“நனைஞ்சா என்ன? செத்தா போயிடுவேன்?”
“பிரசன்னா...!” என்று அவள் வாயைப் பொத்தினாள் அனுசுயா.
“என்ன பேச்சு பேசறே? உனக்கு அம்மா மேல கோபம்னா... ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடு. இப்படியெல்லாம் பேசாதே!” குரல் பிசிறியது.
“அம்மா...! என்றலறினாள்.
“நீ என்னம்மா பேசறே? உன் மேல எனக்கு கோபமா? அதுக்காக நான் அடிக்கணுமா? நெருப்புல சூடு வச்ச மாதிரி இருக்கும்மா நீ பேசறது”
“பின்னே என்னடி? என் அன்பை விமர்சிக்கறதும் கேலி பேசறதும் தப்பில்லையா? அது எனக்கு வலிக்காதா?”
“சரி... நான் அப்படி பேசினது தப்புதான்! ஆனா, நான் கோபப்பட்டது அதுக்காக மட்டும் இல்லேம்மா! மழையிலே எனக்காக வந்து நீயும் அல்லாடனுமா? எனக்கு ஏதும் ஆகிடக் கூடாதுன்னுதானே... இப்படி வந்து காத்திருக்கிறே? அதே மாதிரி உனக்கும் ஏதாவது வந்து படுத்துடக்கூடாதுன்னு நான் நினைக்கமாட்டேனா? எனக்கு அந்த அக்கறை இல்லையா? பாசம் இல்லையா?”
அனுசுயா மகளை பாசத்தோடு அணைத்துக் கொண்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
நீ காற்று... நான் மரம்..!

Read more from ஆர்.மணிமாலா

Related to நீ காற்று... நான் மரம்..!

Related ebooks

Reviews for நீ காற்று... நான் மரம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீ காற்று... நான் மரம்..! - ஆர்.மணிமாலா

    1

    சூரியனை ஒளித்து வைத்துவிட்டு துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தன, கரிய நிற மேகங்கள்.

    எங்கும் மழைபெய்யத் தொடங்கிவிட்டது போலும். காற்றோடு கலந்து வந்த மண்வாசனை - மூக்கைத் தொட்டது... வட்ட வட்டமாய் கட் பண்ணி வைத்திருந்த வெங்காயத்தை மாவில் தொட்டு தொட்டு எண்ணெய் சட்டியில் போட்டுக் கொண்டிருந்தாலும் அனுசுயாவின் கண்கள் அடிக்கடி கடிகாரத்தையே பார்த்தன.

    கடிகாரத்தையும், ஜன்னல் வழியே தெரிந்த மழைமேகங்களையும் மாறி மாறி பார்த்தவளின் கண்கள் கவலையில் சுருங்கின. மணி நான்குதான் ஆகிறது. பிரசன்னா ஆபிஸ் முடிந்து வீடு வந்து சேர ஆறு ஆறரை ஆகும்.

    அதுவரை மழை வராமல் இருக்க வேண்டும். மழை வருமுன் பிரசன்னா வீடு திரும்பி விடுவாளா? வெகுவாய் மகளுக்காக கவலைப்பட்டாள் அனுசுயா.

    மழையில் நனைந்தால் அவளுக்கு ஆகாது. இது மழைக்காலமாக இருந்திருந்தால்... முன்னெச்சரிக்கையாக குடையை எடுத்துச் சென்றிருப்பாள். ஆனால், இந்த கோடைமழை எப்போது வரும் என்று தெரியாதே! கடவுளே. அவள் வீடு வந்து சேரும்வரை மழை வராமல் இருக்க வேண்டும்.

    கடவுளிடம் வேண்டியபடியே... சூடான பஜ்ஜிகளை எடுத்து ஹாட்பேக்கில் போட்டு மூடினாள்.

    பிரசன்னாவிற்கு எல்லாமே சூடாக இருந்தால் தான் பிடிக்கும். ஆய்ந்து வைத்திருந்த புதினா இலைகளை வதக்கி புளியும், போட்டு மிக்ஸியில் அரைத்து தாளித்து வைத்து விட்டு மறுபடி வானத்தைப் பார்த்தாள். இன்னும் கறுத்துப்போய்... நகரமே இருட்டாக்கியிருந்தது. நேரம் சோம்பல்தனமாய் நகர்ந்து கொண்டிருந்தது. பேசாமல் பிரசன்னாவிற்கு போன் பண்ணி சீக்கிரமாய் ஆபிஸை விட்டு கிளம்பச் சொல்லலாமா? - வருவாளா? ஆபிஸில் ஏதோ ஆடிட்டிங் டைம் என்றாளே!

    ஒரு வாரமாய் அதன் காரணமாக காலையில் சீக்கிரமாய் கிளம்புகிறாளே! எப்படி வருவாள்?

    அனுசுயாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. யோசிக்க யோசிக்க தலையைதான் வலித்தது.

    ஃப்ளாஸ்கிலிருந்த காபியை ஊற்றி குடித்தாள். மனதை வேறு எதிலாவது திசை திருப்ப வேண்டும். பேசாமல் எக்ஸாம் பேப்பரை திருத்த வேண்டியதுதான்!

    டேபிள் மீது வைத்திருந்த காகித கட்டுக்களை பிரித்து திருத்த ஆரம்பித்தாள்.

    அனுசுயா! பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். கைநிறைய நான்கு இலக்க சம்பளம் வாங்குபவள். கண்டிப்புமிகுந்த ஆசிரியை! அவளைப் பார்த்தாலே பள்ளிப் பிள்ளைகள் கப்சிப்பென்று அடங்கிவிடுவார்கள். அந்தளவு பயம். யாரும் பொய் சொல்லக் கூடாது. சொல்லிவிட்டார்கள் என்று தெரிந்ததோ பின்னி எடுத்துவிடுவாள். அப்படியொரு - கண்டிப்பு.

    அப்படிப்பட்டவள் இந்த உலகில் அடிபணிந்துப் போகிறாள் என்றால் அது அவள் ஒரே மகள் பிரசன்னாவிற்குதான். அவள் உலகமே பிரசன்னாதான்.

    பிரசன்னா - பிரைவேட் கம்பெனி - ஒன்றில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரிறாள்.

    கறுப்பு பெயிண்ட்டை பூசியதுபோல் வானம் மேலும் கறுத்து பயமுறுத்த, அனுசுயாவிற்கு அதற்கு மேல் கை ஓடவில்லை. பேனாவை மூடிவைத்தாள். மனம் பதைக்க முணுமுணுத்தாள்.

    குழந்தைக்கு மழையில நனைஞ்சா ஆகாதே! இதோ... மழையும் தூற ஆரம்பித்து விட்டது.

    பேய் மாதிரி ஆர்ப்பரிச்சிட்டுதான் அடங்கும் சனியன் பிடித்த மழை! ஆனது ஆகட்டும் தலைபோகிற காரியமாய் இருந்தாலும் பரவாயில்லை. உடனே ஆபிஸை விட்டு கிளம்பு என்று அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. போனை நோக்கிப் போனாள்.

    ரிசீவரை எடுத்து காதில் வைத்தவள் முகம் காற்றிரங்கிய டயராய் தொங்கிப் போனது. பேச்சு மூச்சில்லை. போன் டெட்.

    பட்டென்று ரிசீவரை அதன் தலையில் வைத்தவள், ‘சே, மழை வந்தால் இது ஒரு தொந்தரவு என்று சலித்தபடி, வீட்டை ஒட்டியிருந்த மளிகைக் கடை நோக்கி சென்றாள்.

    அங்கு போன் இருந்தது. கடைகாரர் இவளைப் பார்த்ததும் சிரித்தார்.

    வாங்க டீச்சர்! பாதாம் பருப்பு. புதுசா வந்தா எடுத்து வைன்னு சொன்னீங்களே! வந்திருக்கு... அரை கிலோ போடவா!

    அண்ணாச்சி... அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கறேன்! நான் இப்ப ஒரு போன் பண்ணிக்கறேன்!

    உங்க வீட்டு போன் என்ன ஆச்சி?

    "வானம் கொஞ்சம் கர் புர்னு சத்தம் போட்டா... எங்க வீட்டு போனுக்கு தாங்காது. மயக்கம் வந்திரும். இதுக்கு வேற மயக்கம் தெளியவைக்க டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்கு நடையா நடக்கணும். ஹம்... எதுவும் சரியில்லை...

    Enjoying the preview?
    Page 1 of 1