Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மன்னிக்க மாட்டாயா...?
மன்னிக்க மாட்டாயா...?
மன்னிக்க மாட்டாயா...?
Ebook116 pages41 minutes

மன்னிக்க மாட்டாயா...?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கைகளை நெட்டி முறித்தபடி இருக்கையை விட்டு எழுந்தாள் நந்தனி. ஆயாசமாக இருந்தது. பேப்பர்களை பைலில் வைத்து கட்டி எடுத்துக் கொண்டு பரதனின் அறையை நோக்கி நடந்தாள்.
 "மே ஐ கமின் சார்!''
 "யெஸ்...!''
 பைலை நீட்டினாள்.
 "என்னங்க மிஸ் நந்தினி! கணக்கை தரோவா செக் பண்ணிட்டீங்களா? நாளைக்கு ஆடிட்டர் வர்றார்!''
 "பண்ணிட்டேன் சார். எல்லாம் சரியா இருக்கு" என்றவள் மனசு குறுகுறுத்தது.
 'இப்படி எத்தனை நாள்... எத்தனைபேரிடம் மூடி மறைக்கப் போகிறேன்? வெகு சிலரைத் தவிர... யாருக்குமே தெரியாதே... நான் மிஸஸ் நந்தினி என்பது?'
 "என்னங்க நந்தினி? கனவு காண்றீங்களா? மூணு முறை கூப்பிட்டும் சிலையா நின்னுட்டு இருக்கீங்க!" சிரித்தபடி கேட்டான்.
 திடுக்கிட்டு நிமிர்ந்தாள் நந்தினி. "ஓ வெரி சாரி சார்! ஏதோ நினைவு..."
 'என்னை பத்தியா?' என்று வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கினான்.
 "எனிஹவ்... நான் கேட்டுக் கிட்டதுக்காக சீக்கிரம் வந்து சின்ஸியரா வொர்க் பண்ணினதுக்கு தாங்க்யூ. ஷோ மச்!''
 "எதுக்கு சார் தாங்க்ஸெல்லாம்? திஸ் இஸ் மை ட்யூட்டி! ஓகே சார்... நான் கிளம்பட்டுமா?"
 "ஓ... நேரமாயிடுச்சி... கிளம்புங்க!'அறையை விட்டு வெளியே வந்தாள். கீதா அவளுக்காகக் காத்திருந்தாள்.
 "புறப்படலாமா நந்தினி?"
 "ம்" புடவையை சரிபண்ணி, மடிப்புகளை நீவிவிட்டபடி கிளம்பினாள்.
 "குழந்தைக்கு இப்ப எப்படி இருக்கு கீதா?"
 "பரவாயில்லை நந்தினி! நேத்திக்கு ரொம்ப பயந்தேப் போய்ட்டோம். பீவர் கொஞ்சமும் விடலை. மிட்நைட்ல சலைன் வாட்டர் ஏற்றினோம். குழந்தை காலையில் பார்த்து சிரிக்கிற அளவு தெளிவாயிட்டா. ஆடிட்டிங் டைமாச்சேன்னுதான் அபீஸ்க்கு லீவு போடாம வந்தேன். இல்லாட்டா... வந்தே இருக்கமாட்டேன்" ஒரு தாயின் பரிதவிப்போட்டு கூறினாள் கீதா. இரவெல்லாம் தூக்கமின்றி கண்கள் சிவந்திருந்தது.
 "ஏன் கீதா... உன் ஹஸ்பெண்டும் வேலைக்கு போயிடறார். குழந்தையை யார் பார்த்துக்கறாங்க?"
 "என் மாமியார்தான். எல்லா மாமியார் போல இல்லே இவங்க?! ஐயம் எ லக்கி! இப்படி ஒரு கணவனும், மாமியாரும் அமையறது ரொம்ப கஷ்டம்! கவலைப்படாதே... உனக்கும் இப்படிப்பட்ட நல்ல உறவுகள் அமைய வேண்டிக்கறேன்"
 சிரித்து வைத்தாள் நந்தினி.
 பஸ் ஸ்டாண்டை அடைந்தனர். ஆபீஸில் நிறையப் பெண்கள் வேலை செய்தாலும்... நந்தினிக்கு ஒரே தோழி கீதா மட்டுமே!
 "ஒரு நாளைக்கு எங்க வீட்டுக்கு வா நந்தினி!''
 "ம்... வர்றேன்!"
 "என்னை உன் வீட்டுக்கு கூப்பிட மாட்டியா?"
 பதில் கூறாமல் புன்னகைத்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223250609
மன்னிக்க மாட்டாயா...?

Read more from R.Manimala

Related to மன்னிக்க மாட்டாயா...?

Related ebooks

Related categories

Reviews for மன்னிக்க மாட்டாயா...?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மன்னிக்க மாட்டாயா...? - R.Manimala

    1

    அலாரம் ஓயாமல் கிணுகிணுக்க... உறக்கம் கலைந்து எழுந்தாள் நந்தினி.

    வானம் சாம்பல் நிறப் போர்வையைப் போர்த்திக் கொண்டு சிணுங்கி கொண்டிருந்தது. இரவுப் பெய்த மழையில் பளிச்சென்று குளித்திருந்த மரங்கள் அடித்த காற்றில் ஓங்காரமாய் கத்தி ஆடிக் கொண்டிருந்தன.

    ஈரக்காற்று முகத்தில் மோதி... வந்து விழுந்த அலைகேசத்தை தன் நீண்ட நளினமான விரல்களால் கோதிவிட்டாள் நந்தினி.

    ஊசியாய் பூமியைத் துளைத்த மழைக் கோடுகளை ஜன்னலில் நின்று ரசித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று கையை உதறிக் கொண்டாள்.

    ‘அடடா! மறந்துட்டேனே! எம்.டி. இன்னைக்கு சீக்கிரமா வரச் சொன்னாரே!’

    அவசர அவசரமாய் பல்தேய்த்தாள். பால் பவுடரில் காபி தயாரித்துக் குடித்தாள். தொண்டையில் சூடாய் இறங்கியதும்... சுறுசுறுப்பாய் குளித்தாள்.

    மூன்று ப்ரெட் ஸ்லைஸை வாட்டி சாப்பிட்டு... புடவை மாற்றி உடுத்தினாள். கண்ணாடியில் ஒட்டியிருந்த அந்த கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்து ஒட்டிக் கொள்ளும் போது உடம்பு தன்னிச்சையாய் சிலிர்க்க... சில விநாடிகள் அப்படியே அமர்ந்திருந்தாள். உதடுகள் துடித்தன.

    பேக்கை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.

    மழை நின்றுவிட்ட போதிலும்... வானம் கறுத்திருந்தது. எந்நேரமும் மழை வரலாம். இருக்கிற குடையும் ரிப்பேர். இந்த மாத சம்பளத்தில் எப்படியும் ஒரு குடை வாங்கிடனும்.

    அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

    ‘அவசியப்பட்டால்தானே அந்தப் பொருளோட அத்தியாவசிய தேவைப் புரிகிறது. அப்படித்தானே எனக்கும், அம்மாவின் அன்பு தேவைப்பட்டது? ஆனால்... விலை கொடுத்து குடை வாங்கிடலாம், தாயின் அன்பை வாங்க முடியுமா?’

    ‘காக்கைக் கூட தன் குஞ்சுகளைக் காப்பாற்ற அவைகளை அரவணைத்து... காத்து தான் நனனயும். ஆனால் அந்த பாசம் உன்னிடம் இல்லாமல் போனது ஏனம்மா?"

    ‘இந்த குஞ்சு மிதித்து அந்தக் கோழி முடமாகி விட்டதா? மனதில் தீராத காயம்! அது நான் செய்த பாவமோ?’

    மனதினுள் ஆயிரம் கேள்விகளை சுமந்து கொண்டு பஸ் ஸ்டாண்டை அடைந்தாள்.

    பலத்த மழைக்கு முன்னறிவிப்பாய் தோள்பட்டையில் பொட்டென்று விழுந்தது மழைத்துளி.

    சீக்கிரம் பஸ் வரணுமே! என்று தவித்தாள்.

    சொல்லி வைத்தாற்போல் அவள் போகும் பஸ் மட்டும் வரக் காணோம்.

    நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறேன். ஆடிட்டிங் டைம் சீக்கிரமா வாங்கன்னு எம்.டி. சொன்னார். கரெக்ட் டயத்துக்காவது போக முடியுமா?

    சரேலென்று ஒரு காண்டஸா கார் அவளது சிந்தனையைத் தடைப்படுத்தி உரசிக் கொண்டு நிற்க, பயந்து... பதறி பின் வாங்கினாள் நந்தினி.

    கார் கண்ணாடி இறக்கப்பட்டு... டிரைவிங் சீட்டிலிருந்த நபரைக் கண்டதும் ஆச்சர்யப்பட்டாள்.

    "சார் நீங்களா? நான் யாரோன்னு நெனச்சேன்! குட்மார்னிங் சார்!’’

    குட்மார்னிங் நந்தினி! கெட் இன்! புன்னகைத்தபடி காரின் கதவைத் திறந்து வைத்து அழைத்தார் நந்தினியின் எம்.டி. பரதன்.

    பரவாயில்லை சார்! நான் பஸ்ஸிலேயே வந்திடறேன் சங்கடத்தில் நெளிந்தாள்.

    "ஓஹ்... நோ! ஆல் ரெடி லேட்... கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் பஸ்ஸே காணோம். குய்க்! சீக்கிரம் கார்ல ஏறுங்க!’’

    அதற்கு மேல் பேசத் தோன்றாமல் ஏறி அமர்ந்தாள்.

    கார் வெண்ணையாக வழுக்கிக் கொண்டு சென்றது.

    காரினுள் ரம்மியமான மணம் இருந்தது.

    இந்த பாரதி நகர்லேயா உங்க வீடு இருக்கு? தன்னை நோக்கி கேட்டவனை புன்னகைத்தபடி "ஆமா சார்!’’ என்றாள்.

    நான் தினமும் இந்த வழியாகத்தானே ஆபீஸ்க்குப் போறேன். ஆனா ஒரு நாள் கூட உங்களைப் பார்த்ததேயில்லை. ஆமா... உங்க பேரன்ட்ஸ் என்ன பண்றாங்க?

    அவன் அப்படிக் கேட்டதும் ஆடிப் போனாள்.

    ‘என்ன பதிலை சொல்வது? உண்மையை சொல்லணும்னா... எல்லாமே சொல்லணும். அதன்பிறகு என் மேல் இவர் பரிதாபப்படுவார்! வேண்டாம்... யாரோட அனுதாபப் பார்வையும் என் மீதுப் பட வேண்டாம். உடைந்து போய் விடுவேன். என் மன உறுதி தகர்ந்து விடும்.’

    ‘இவர் யார்? ஆபீஸில் எனக்கு எம்.டி.! என் உழைப்பிற்கு சம்பளம் தருபவர். இவருக்கு ஏன் என் பர்ஸனல் விஷயங்கள் தெரிய வேண்டும்.’

    நிதானத்திற்கு வந்தாள். இல்ல சார்! எனக்கு இப்ப யாருமே கிடையாது!

    ஓ... ஐயம் வெரி ஸாரி! நீங்க தனியாகவா இருக்கீங்க?

    ‘இதென்ன கேள்வி? அடுத்தவங்க விஷயத்தில் அநாவசியமாக தலையிட்டுக் கொண்டு?’ உள்ளுக்குள் எரிச்சலாய் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆமாம் என்றாள்.

    அதன்பின் பரதன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் மனதினுள் ஒரு போராட்டம்!

    ‘நந்தினி... நீ அனாதையா? என்னால் நம்பவே முடியலை நந்தினி! இந்த மோசமான உலகில், இத்தனை அழகையும், இளமையையும் வைத்துக் கொண்டு தனியாக வாழ்கிறாயா? அத்தனை தன்னம்பிக்கையா? இனி நீ அனாதை அல்ல! உனக்கு எல்லாமுமாக நான் இருக்கிறேன் என்று உன் காதோரத்தில் உதடுகள் உரச சொல்ல துடிக்கிறேன். ஆனால் உன் பாரா முகம் என் வாயைக் கட்டிப் போட்டு விடுகிறதே! அலையலையாய் உன் மீதுள்ள அன்பு பொங்கி எழுந்து என்னைப் புரட்டிக் போடுகின்றதே! எப்போது எனக்கு தைரியம் வரும்?’

    ‘என் இதயத்தை எப்படித் திருடினாய் நந்தினி? உன் அழகா? அதுவும் தான். அதையும் விட... உன் அடக்கம், அமைதியான சுபாவம், அநாவசிய சிரிப்போ... அரட்டைப் பேச்சோ... ஆடம்பரமோ... இவை எதுவும் எனக்கு பிடிக்காதுன்னு உனக்கெப்படி தெரியும் கண்மணி? ஆல்விருட்சமாய் என் மனதில் பரவிவிட்டாய்! வேர் உடல் முழுக்க... பரவிவிட்டதுப் போல் என் உணர்வுகளில் நிறைந்து விட்டாய். எப்படி தெரியப்படுத்தப் போகிறேன் உனக்கு? பெருமூச்சொன்றை வெளியிட்டு சாலையில் கண்பதித்து கவனமாய் ஓட்டினான்.’

    அவனுக்கே வியப்பாக இருந்தது. இந்த முப்பது வயதிற்குள் எத்தனையோ பெண்களை சந்தித்திருக்கிறான். நந்தினியை விட அழகான பெண்களையும்தான்! ஆனால் அவர்கள் யாரிடமும் ஒட்டாத மனம்... நந்தினியைப் பார்த்ததும் பெவிகால் போல் ஒட்டிக் கொண்டு விட்டதே. பிரிக்க முடியாதபடி!

    ‘அம்மாவிடம் சொல்ல வேண்டும். இதுநாள் வரை திருமணப் பேச்சை எடுத்தாலே... பிடி கொடுக்காமல் நழுவி விடுவேன். நந்தினியைப் பற்றி நானேச் சொன்னால்... நிச்சயம் வானத்துக்கும், பூமிக்குமாய் குதிப்பாள். அந்தஸ்து பேதம் பார்க்கும் மற்ற பணக்கார அம்மாக்கள் போல் இல்லை அவள்! விரைவில் சொல்லிடணும்.’

    ஏதேதோ

    Enjoying the preview?
    Page 1 of 1