Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இரண்டு மனம் வேண்டும்
இரண்டு மனம் வேண்டும்
இரண்டு மனம் வேண்டும்
Ebook130 pages47 minutes

இரண்டு மனம் வேண்டும்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குட்மார்னிங் மேடம்"
 பியூன் கந்தசாமி சொல்ல, புன்னகையுடன் பதிலுக்கு சொன்னாள், தாரிணி.
 "விஷயம் தெரியுங்களா மேடம்? உங்க கேபினுக்கு புதுசா ஒருத்தர் இன்னைக்கு ஜாய்ன் பண்றாராம்"
 "இஸிட். எனக்குத் தெரியாதே. எங்கே வந்தாச்சா?" அவளுக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.
 "ம். காலை இந்த ஆபீசுக்கு வந்த மொத ஆளே அவர்தான். எம்.டி. ரூம்லதான் இருக்கார். நம்ம ஆபீஸ் ஸ்டாப் அத்தனை பேரும் அவரைப் பார்க்க துடிச்சிட்டிருக்காங்க. முக்கியமா ஆபரேட்டர் அகிலாவும், டைப்பிஸ்ட் லேகாவும்"
 அவனை ஊடுருவிப் பார்த்தாள்.
 "பர்ட்டிக்குலரா அவங்க ஏன் துடிக்கிறாங்க கந்தசாமி?''
 "அவர் இளவயசுக்காரராம். அதான். எல்லாம் நம்ம ஹெட் கிளார்க் கொடுத்த தகவல்தான்" என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.
 முகத்தில் கடுமை ஏற அவனை முறைத்துப் பார்த்தாள்.
 "சே. இப்படியெல்லாமா இல்லாததும், பொல்லாததும் பேசுவீங்க? வயசாச்சே ஒழிய இங்கிதம் தெரியாம அந்த பெரிய மனுஷன்தான் அப்படி பேசறார்னா, நீயுமா கந்தசாமி? வேதனைப்படறேன்"
 கந்தசாமி தலைகுனிந்துக் கொண்டான். தாரிணி மீது அவனுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அவள் அவனை திட்டினாலும், பாராட்டினாலும் அதற்கு நிச்சயம் உண்மையான, நியாயமான காரணம் இருக்கும் என்பது அவனறிந்த விஷயம்.மன்னிச்சிடுங்க மேடம். தெரியாம பேசிட்டேன். ஏதோ ஒரு ஜாலிக்காக...'' தலையை சொறிந்தான். நிஜமாய் வருத்தப்பட்டான்.
 "நாமெல்லாம் ஒரே ஆபீஸ்ல வேலை செய்றோம். ஆணும் பெண்ணும் சகஜமா பழகியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் இங்கே. நாம இருப்பது விஞ்ஞான யுகத்திலே. ஆனா இந்த விஷயத்தில் மட்டும் நாம இன்னும் மாத்திக்கலை. இல்லையா கந்தசாமி?
 இதையெல்லாம் தப்பா நினைச்சா நீயும், நானும் கூடப் பிறந்தவங்க மாதிரி பழகறது கூட தப்பாத் தெரியுமே. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். உன்னை என்னிக்கும் நான் தப்பா நினைக்க மாட்டேன். ஆனா... இனி எந்த விஷயம் பேசினாலும் ஒரு முறைக்கு ரெண்டு முறையா யோசிச்சு பேசு. சில வார்த்தைகள் நம்மையும் அறியாம அடுத்தவங்களை தாக்கிடும். புரியுதா? சரி போ"
 மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு போனான், கந்தசாமி.
 அவளுக்கு நேர் எதிர் அறையில் இருந்த அபிஷேக்கின் காதுகளில் இவையனைத்தும் விழுந்தது.
 அவளின் பேச்சை தனக்குத்தானே பாராட்டி, 'வெல் ஸெட் தாரிணி' என்றான்.
 மறுபடி ஃபைலில் மூழ்கிப் போனான், அபிஷேக்.
 கிரெடிட்டையும், டெபிட்டையும் சரிபார்த்துக் கொண்டு இருந்தவளின் டேபிளின் முன் நிழலாடியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223946076
இரண்டு மனம் வேண்டும்

Read more from R.Manimala

Related to இரண்டு மனம் வேண்டும்

Related ebooks

Related categories

Reviews for இரண்டு மனம் வேண்டும்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இரண்டு மனம் வேண்டும் - R.Manimala

    1

    மார்கழி குளிர் காதை கும்மென்று அடைத்தது. சில்லென்ற தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டு சிலிர்த்தாள் தாரிணி.

    "சரவண பொய்கையில் நீராடி... துணை தந்தருள் என்றேன் முருகனிடம்...’’

    தெருமுனையிலிருந்த கோலவிழி அம்மன் கோவிலிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது.

    சுசீலாவின் இனிமையான குரலும், மார்கழி குளிரும், சில்லென்ற தண்ணீர் குளியலும்... இதயம் லேசாகி பறப்பது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. சிறிது நேரம் அந்த இனிமையை கண்மூடி ரசித்து உள்ளுக்குள் தேக்கி வைத்தாள் தாரிணி.

    குளித்து முடித்து தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள். இளம்நீல மெட்டல் ஷிபான் உடலைத் தழுவியது. தன்னை முழுக்க ஒரு முறை கண்ணாடியில் பார்த்தாள்.

    இலேசான பவுடர் பூச்சு முகம்... சற்றே பெரிய பானுப்ரியா கண்கள்... வளைவான புருவம்... சிரிக்கும் ஈர உதடுகள்... மாநிறமென்றாலும் கவர்ச்சி யாய் யாரையும் ஒன்ஸ்மோர் சொல்லி மீண்டும் பார்க்கத் தூண்டும் உடல் அமைப்பு...

    தலையில் இருந்த டவலை உருவி நீளமான கூந்தலை பிரித்து ஃபேன் காற்றில் ஆற வைத்தாள்.

    இந்தா மொதல்ல காபியக் குடி தன்னருகே காபி தம்ளரோடு வந்து நின்ற வான்மதியை நன்றி ததும்பப் பார்த்தாள், தாரிணி.

    நானே வந்து குடிக்க மாட்டேனா? எதுக்கு நீ எடுத்துட்டு வர்றே? செல்லமாய் கடிந்துக் கொண்டாள்.

    அதுக்கென்ன? பரவாயில்லை என்றாள் அமைதியாக.

    ஃபில்டர் காபி சூடாக இதமாக இறங்கியது.

    தாரிணி அவளையே பார்த்தாள். விடிகாலையிலேயே குளித்திருப்பாள் போலும். கூந்தல் நுனியில் முடிச்சிட்ட கொண்டையிலிருந்து சொட்டிய நீர் பின்பக்கத்தை நனைத்து விட்டிருந்தது. நெற்றியில் சிறு தீற்றலாய் விபூதி. சிரிப்பை மீறி கண்களில் பளிச்சிட்ட சோகம். சாதாரண கைத்தறி சேலையில் தன் அழகு, இளமையெல்லாம் மூடி வைத்து இருந்தாள். தாரிணிக்கு நேரெதிர் நிறம். இளஞ்சிவப்பு,

    மங்கிய விளக்கொளியில் வைக்கப்பட்டு இருக்கும் ஓவியம் அவள். தம்ளரை வாங்கிக் கொண்டு சென்றவளை மனம் கசிய, நெஞ்சு விம்ம பார்த்தாள் தாரிணி.

    பழசெல்லாம் இதயத்தின் மூலையிலிருந்து எட்டிப் பார்க்க முயல... வலுக்கட்டாயமாய் அச்சிந்தனைக்கு விலங்குப் போட்டாள்.

    பொழுது நன்றாக புலர்ந்திருந்தது. தூரத்தில் தெரிந்த வீடுகளில் மனித நடமாட்டம் தெரிந்தது. இப்போதுதான் டெவலப் ஆகி வரும் ஏரியா அது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகள். இந்த வீட்டு குடியேறி இரண்டு வருடம் ஓடி விட்டது. இரண்டு வருடத்தில்தான் எத்தனை மாறுதல்கள்? விளையாட்டுப்பிள்ளை தாரிணியின் தலையில் எவ்வளவு பெரிய சுமை. குருவி தலையில் பனங்காய் மாதிரி. சுமையா அது? கடமையல்லவா?

    ஜன்னலருகே வந்து நின்றாள் தாரிணி. காற்று அவள் கூந்தலோடு விளையாடியது.

    வீட்டின் முன்புறம் சிறுதோட்டம். எல்லாமே பூச்செடிகள். இதற்கு முன்பிருந்த வீட்டுச் சொந்தக்காரரால் ரசனையோடு போடப்பட்டவை.

    இடது ஓரம் சாமந்தி, கனகாம்பரம் பூத்துக் குலுங்க, வலது ஓரம் ரோஜாவும், மல்லிகையும் பளிச்சென்று சிரித்துக் கொண்டு இருந்தன.

    பூத்துக் குலுங்கி வாடி உதிர்ந்து விடும்.

    வான்மதிக்கு பூக்கள் என்றால் கொள்ளைப் பிரியம். சரம் சரமாய் ஜாதியும், கனகாம்பரமும் சூடிக் கொள்வதில் அப்படியொரு ஆசை.

    ஆனால்... ஆனால்... இப்போது?

    ‘என்றைக்கு வான்மதியின் கூந்தலை இந்தப் பூக்கள் அலங்கரிக்கும்? அப்படியொரு நாள் மீண்டும் வருமா? வருமா என்று என்ன கேள்வி? வரணும். வரவழைக்கணும். அதுவரை உங்களை நானும் தொட மாட்டேன்’

    ‘அட... சுத்திச் சுத்தி திரும்ப பழைய சம்பவங்களிலேயே முட்டி மோதி நிற்கின்றதே நினைவுகள்’

    பெருமூச்சொன்றை உதிர்த்து சமையலறை நோக்கி நடந்தால் தாரிணி.

    ஆவி பறக்கும் இட்லியை வைத்து புதினா சட்னியை ஊற்றினாள் வான்மதி.

    மதி... ஈவ்னிங் பிக்சர் போலாமா? வரும்போது டிக்கெட் வாங்கிட்டு வந்திடறேன்

    ப்ச். வேணாம் தாரிணி. நான் வரலை

    ஏன் இப்படி இருக்கே மதி. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்து தான் இப்படியொரு நிலைக்கு ஆளானே. இப்படியே இருந்தா போனதெல்லாம் நமக்கு கெடைச்சிடுமா? அதையெல்லாம் கெட்ட கனவா நினைச்சி மறந்துடு. இந்த வயசில அவ்வையார் வேஷம் உனக்குத் தேவையா? போனவரையே நினைச்சி நினைச்சி நீ உருகற அளவுக்கு உன் புருஷன் உன்னை தலைமேல் வச்சு தாங்கினாரா? ஒண்ணு புரிஞ்சுக்கோ மதி. இப்போ நீ உன்னை மட்டும் காயப்படுத்திக்கலை. என்னையும் சேர்த்துதான். பிராக்டிகலா யோசி. எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வதுன்னு?

    தாரிணியை ஊடுருவிப் பார்த்தவள் மெதுவாய் கூறினாள். இதுக்கு நான் ஒரு நல்ல யோசனையை சொல்லட்டுமா?

    சொல்லு

    உனக்கும் கல்யாணமாகணும். எவ்வளவு நாளைக்கு நான் உனக்கு முட்டுக்கட்டையா இருப்பது? என்னை ஏதாவது ஹாஸ்டல்லே சேர்த்து விட்டுரு

    மதி. அலறி விட்டாள்,

    இதுதான் நல்ல யோசனையா? அவ்வளவு சுயநலக்காரியா நான்? உன்னை அப்படி அனாதை மாதிரி ஹாஸ்டல்ல சேர்த்துட்டு அப்படியொரு வாழ்க்கைய நான் ஏத்துக்குவேன்னு நினைக்கறியா? நெவர். இனி இப்படி கிறுக்குத்தனமா எதையாவது உளறிட்டு இருக்காதே

    இப்படியே பேசிட்டு இருந்தா பஸ் காத்துக்கிட்டு இருக்காது. கிளம்பு. ஆபீசுக்கு நேரமாச்சு சலனமின்றி சொன்னவளை பரிதாபமாய் பார்த்தாள், தாரிணி.

    ‘இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது? வாழ்க்கை சிறுகதையல்ல, தொடர்கதையென்று’

    தெருவில் இறங்கி நடந்தாள்.

    பஸ் ஸ்டாண்டில் கூட்டம் இருந்தது. நல்லவேளை அவள் செல்லும் பஸ் இன்னும் வரவில்லை.

    சாலை பரபரப்பாக இயங்க ஆரம்பித்து இருந்தது. சோம்பல் உதறி பெண்கள் மார்க்கெட் சென்றார்கள்

    வந்து நின்ற பஸ்சில் முண்டியடித்து ஏறினாள். கடைசியில் நெருக்கியடித்து உட்கார இடம் கிடைத்தது.

    எதிர்காற்று முகத்தில் மோதியது. வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தவளை ஒரு குழந்தையின் அழுகுரல் உசுப்பிற்று. ஒரு பெண் உட்கார இடம் கிடைக்காமல் குழந்தையை வைத்துக் கொண்டு தடுமாறினாள்.

    சட்டென்று எழுந்து அப்பெண்ணை உட்கார வைத்தாள். நன்றி. ததும்ப அப்பெண் இவளை பார்த்து புன்னகைத்தாள்.

    ‘மூர்த்தி உயிரோடு இருந்திருந்தால் இப்போது வான்மதியும் இப்படி குழந்தையும் கையுமாக இருந்திருப்பாளோ?’ நினைவே சுகமாக இருந்தது.

    ‘சே, போயும் போயும் வான்மதிக்கா இப்படியொரு நிலை வர வேண்டும்? வாயில்லா பூச்சி அவள். கோழை மனசு. அதனால்தான் வாழ்க்கையில் தோற்று விட்டாளோ? ஒருவேளை என்னைப் போல் அவளும் படித்திருந்தால்? முற்போக்காய் சிந்தித்து இருப்பாள். தன்னம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பெற்றிருப்பாள். அப்பா செய்த கிரேட் மிஸ்டேக், வான்மதியை எட்டாவதோடு படிப்பை நிறுத்தியதுதான்’

    அபரிமிதமான அழகும், வயதுக்கு மீறிய வளர்ச்சியும் ரங்கசாமிக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தது. விடலைகளின் பார்வை வான்மதியை வட்டமடிக்கத் தொடங்க... படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவளுக்கும் படிப்பில் அவ்வளவு ஆர்வமில்லை. ஆனால் வீட்டு நிர்வாகத்தில் கெட்டிக்காரியாக இருந்தாள். தாரிணி பிறந்தபோதே அவள் தாயும் கண்ணை மூடி விட்டாள். அம்மா முகம் அறியாத அவளுக்கு எல்லாமே வான்மதிதான். அத்தனை சிறிய வயதிலேயே வான்மதிக்கு பொறுப்பாகவும், கட்டுப்பாட்டுடனும் குடும்பத்தை நடத்தத் தெரிந்தது.

    அவள் வாழ்க்கையில் எல்லாமே அவசர அவசரமாகத்தான் நடந்தது.

    கண்டக்டரின் விசில் சத்தத்தில் திடுக்கிட்டு கலைந்தாள். தான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதை

    Enjoying the preview?
    Page 1 of 1