Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதலால் தவிக்கிறேன்!
காதலால் தவிக்கிறேன்!
காதலால் தவிக்கிறேன்!
Ebook136 pages50 minutes

காதலால் தவிக்கிறேன்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏதோ ஒரு ஹிந்திப் பாடலை ஹம் செய்தபடி உடம்பிற்கு பியர்ஸ் சோப் போட்டு டி.வி.யில் வரும் மாடலிங் பெண் போல் நளினமாய்க் குளித்துக் கொண்டிருந்த மஞ்சுளாவை இப்போது வர்ணிப்பது அநாகரிகம். அவள் குளித்து முடித்து வெளியே வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்.
 இப்போது புஷ்பாவைக் கவனிப்போம்.
 மளமளவென வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்த புஷ்பா புடவைத் தலைப்பால் வியர்த்த முகத்தைத் துடைத்துக் கொண்டாள். முகம் நிலவில்லாத வானம்போல் பொட்டின்றி வெறுமையாய் இருந்தது. அன்பு ததும்பும் முகம். ஒற்றை நாடி சரீரம். அவள் ஒரு ஹார்ட் பேஷண்ட்...
 ஐந்து வருடத்திற்கு முன்பு புஷ்பாவின் கணவர் விபத்தில் பலியான பின்பு அவளுக்கு எல்லாமே மஞ்சுளாதான். அவள் முகம் கசங்கினால் இவள் இதயம் சுருங்கி விடும். மகள் மீது உயிரையே வைத்திருந்தாள். ஆனால் அவளிடம் பிடிக்காத ஒரே விஷயம்... முகம் தெரியாத நபர்களுக்குப் போன் செய்து கதிகலங்க வைப்பதுதான்.
 ஆஹா, ஓஹோ என்றில்லா விட்டாலும் கட்டு செட்டான குடும்பம். தேவையான வாழ்க்கை வசதிகள் அத்தனையும் அந்த வீட்டில் இருந்தன. சொந்த வீடுதான். கணவர் ராமநாதன் அவர்களுக்கு எந்தக் குறையும் வைத்துவிட்டுப் போகவில்லை. அவர் இல்லாதது மட்டும்தான் குறை. மஞ்சுளாவின் திருமணத்திற்கு வேண்டிய பணம், நகைகள் அத்தனையும் வங்கியில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டே போனார். அவருக்கும் மஞ்சுளா என்றால் உயிர். தனக்கு மகன் இல்லாத குறையை மஞ்சுளா மூலமாகத்தான் தீர்த்துக் கொண்டார்.
 அவளை ஒரு ஆண் பிள்ளை போலவே வளர்த்தார். நடை, உடை, பேச்சு, தைரியம் அத்தனையும் ஆண் பிள்ளைத்தனம். மஞ்சுளாவிடம் பயம் என்பது இம்மி அளவும் இல்லைராமனாதனுக்கும், புஷ்பாவுக்கும் ஒரே ஒரு விஷயம் குறித்துதான் சண்டை வரும்.
 "என்னங்க... எப்பப் பார்த்தாலும் பேண்ட், சட்டையே எடுத்துட்டு வர்றீங்க? இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல பெரியவளாயிடுவா... இன்னும் இப்படியே டிரஸ் மாட்டி விட்டுட்டு இருந்தா... சரியா வராதுங்க!"
 "மஞ்சு... உங்கம்மாவுக்கு உன்னைப் பார்த்துப் பொறாமை, அவளால இப்படியெல்லாம் டிரஸ் பண்ண முடியலைன்னு."
 "ம்க்கும்... பார்க்கவே கண்றாவியா இருக்கு. இதைப் பார்த்துப் பொறாமைப் படறேனா? நீங்க பண்றது சரியில்லேங்க! அவள் நாளைக்கு ஒரு வீட்டுக்கு மருமகளா போக வேண்டியவ... போற வீட்லே என்னைத்தான் காறித் துப்பப் போறாங்க... 'என்னடி பொண்ணை வளர்த்து வச்சிருக்கே'ன்னு..."
 "ஏன்... என் பொண்ணுக்கென்ன? அவ ஆம்பளைக்கு ஆம்பளை... பொம்பளைக்குப் பொம்பளை! அவளைப் பார்த்து இந்த ஊரே பயப்படணும். அப்படித்தான் வளர்க்கப் போறேன். மஞ்சு கண்ணா... சொல்லு... நீ பெரியவளா ஆனா... என்னவாகப் போறே?"
 "இன்ஸ்பெக்டர்."
 "போச்சு... எல்லாம் போச்சு! இதையும் அவ மனசிலே விதைச்சிட்டீங்களா? போங்க... நீங்களாச்சு, உங்க பொண்ணாச்சு... எனக்கென்ன வந்தது?" உதடுகள் துடிக்க, கண்கள் பனிக்க அங்கிருந்து அகன்று விடுவாள் புஷ்பா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798215561737
காதலால் தவிக்கிறேன்!

Read more from R.Manimala

Related to காதலால் தவிக்கிறேன்!

Related ebooks

Related categories

Reviews for காதலால் தவிக்கிறேன்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதலால் தவிக்கிறேன்! - R.Manimala

    1

    சந்தன ஊதுபத்தியின் மணம் வீடெங்கும் தவழ்ந்து வந்தது. தலை வரை இழுத்துப் போர்த்தி இருந்தாலும் அந்த வாசத்தை மஞ்சுளாவின் மூக்கும் சுவாசித்தது. தூக்கம் கலைந்தது.

    பாம்புபோல் உடம்பை முறுக்கி நெளிந்தவள் பூஜை மணியின் ஒலி கேட்டு எழுந்தமர்ந்தாள். டேபிள் மீதிருந்த டைம்பீஸ் ஏழரை என்றது. பளீரென மின்னியபடி சதைப்பிடிப்பான கால்களைக் காட்டி நைட்டி விலகியிருந்தது. சரிபண்ணி இழுத்துவிட்ட மஞ்சுளா கொட்டாவி விட்டாள்.

    என்ன மஞ்சு... இன்னுமா தூக்கம் தெளியலே.... நேரமாகுதுல்லே? - புஷ்பாவின் குரல் கேட்டது.

    அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள். அம்மா... இவளைக் கவனித்துக் கொண்டுதானிருந்தாள். மஞ்சுளாவின் அறைக்கு நேர் எதிரே பூஜையறை. வரிசையாய் வீற்றிருந்த சுவாமிப் படங்களுக்கு மாலை மாலையாய் கதம்பப் பூக்களைச் சூட்டி... விளக்கேற்றி, சூடத்தைத் தட்டில் வைத்து மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் புஷ்பா!

    மனுஷன் ஒரு நாளைக்குக் கண்டிப்பா எட்டு மணி நேரம் தூங்கணும். அப்பத்தான் உடம்புக்கு நல்லது! அந்தக் கணக்குப்படி பார்த்தா... இப்ப விழிச்சதே சீக்கிரம்தான்... தெரியுமா?

    டி.வி.யில கண்ட படத்தையும் ராப்பேய் மாதிரி கொட்டக் கொட்ட விழிச்சிருந்து யார் பார்க்கச் சொன்னது?

    சரஸ்வதி சபதம், திருவிளையாடலெல்லாம் போட்டா, நீ மட்டும் விழிச்சிருந்து பார்க்கலையா? அதுபோலத்தான்.

    உன்கிட்டே பேசி முன்னுக்கு வரமுடியுமா? திமுதிமுன்னு நிலைப்படிதலையிலே இடிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கியே தவிர... கொஞ்சம்கூடப் பொறுப்பு இல்லே...

    அதுக்கேன் கவலைப்படறே? இந்த உயரமும், உடம்பும் ஆண்டவன் கொடுத்த வரம். இதை வச்சே நான் போலீஸ் வேலைக்குப் போறேனா, இல்லியா பார்!

    வாயை மூடுடி! போலீஸ் வேலைக்குப் போறாளாம்! ஊர்ல ஆயிரத்தெட்டு வேலை இருக்கறப்ப...

    ஏம்மா... அப்பாவும் ஒரு போலீஸ்காரரா இருந்தவர்தானே? அவரை நீ பெருமையா வாசல் வரைக்கும் வந்து வேலைக்கு வழியனுப்பி வைப்பியே...! ஏம்மா... அந்த வேலை மேல உனக்குக் கசப்பு?

    அதெல்லாம் ஆம்பிளைக்கு ஏத்த உத்தியோகம் மஞ்சு. இப்ப பேப்பர்ல பொம்பளை போலீசுங்களைப் பத்தி ரொம்ப கேவலமா எழுதறாங்களே... படிக்கலியா?

    ஏம்மா... ஒருத்தர் தப்பு செஞ்சா... எல்லாரும் செய்வாங்களா என்ன? போலீஸ்காரங்கன்னாலே லஞ்சம் வாங்கறவங்கன்னு முகம் சுளிக்கறவங்க நிறைய பேர் உண்டு. ஆனா அப்பா கடைசி வரைக்கும் யார் கிட்டேயாவது கை நீட்டி லஞ்சம்னு ஒத்தை ரூபா வாங்கியிருப்பாரா? அப்பா மாதிரி நிறைய பேர் இருக்காங்கம்மா!

    நீ என்ன சமாதானம் சொன்னாலும் சரி! இப்படியொரு ஆசையை முதல்ல உன் மனசிலேர்ந்து வழிச்செறி!

    அதான்... ஏன்னு கேக்கறேன்! - மஞ்சுளா வியப்பாய்ப் பார்த்தாள்.

    வெயில்லேயும், மழையிலேயும் வாடணும், வதங்கணும். ஜாதிக்கலவரம், அந்தக் கலவரம், இந்தக் கலவரம்னு தினத்துக்கு ஒரு பிரச்சனை நடக்கும். வெடிகுண்டெல்லாம் வீசுவாங்க. அங்கெல்லாம் உன்னை அனுப்புவாங்களே?

    அனுப்பட்டுமே!

    வேணாம் மஞ்சு! என்னால் எதையும் கற்பனை பண்ணிப் பார்க்கக்கூட முடியல. பகீர்னு இருக்கு. உன்மேல ஒரு சின்னக் கீறல் விழுந்தாக்கூட அதை என்னால தாங்கிக்க முடியாது! நீ எனக்கு ஒரே பொண்ணு! தவிர, நீ இந்த வேலைக்குப் போறது, எப்படி எனக்குப் பிடிக்கலையோ, அதே போலத்தான் பிரபாகரனுக்கும் பிடிக்கலே! எங்களுக்குப் பிடிக்காததை செய்யாதே மஞ்சு!

    மஞ்சுளா உதட்டைச் சுளித்துச் சிரித்தது அழகாய் இருந்தது. அம்மா... ரொம்ப நேரமா சூடத்தைத் தட்டிலே வச்சுக்கிட்டு கொளுத்தாம வச்சிருக்கியே! முருகன் உன்னையே கோபமா முறைக்கிறார் பார்... முதல்ல அவரை கவனி!

    முருகா... நீதான் அவளுக்கு நல்ல புத்திய தரணும்! புஷ்பா பெருமூச்சு விட்டபடி கற்பூர ஆராதனையைக் காட்டி கண்மூடி வேண்டிக் கொண்டாள்.

    மஞ்சுளா பாத்ரூம் நோக்கிப் போகையில் கால்கள் கட்டிப் போட்டது போல் நின்றன. ஹாலின் மூலையில் ரோஸ் நிறத்தில் பூனைக் குட்டியாய் அமர்ந்திருந்த போனைப் பார்த்ததும் கை பரபரத்தது. கால்கள் தன்னிச்சையாய் அதை நோக்கி நடந்தன.

    டெலிபோன் டைரக்டரியைப் பிரித்தாள். கண்களை மூடி விரலை ஒரு வட்டம் போட்டு நிறுத்தினாள். கண்களைத் திறந்து பார்த்தாள்.

    கபிலன் என்ற பெயரின் மீது விரல் வீற்றிருந்தது. பெயருக்கு நேர் எதிரே இருந்த நம்பரை மனதுள் வாங்கி நம்பரைப் போட்டாள். எதிர் முனையில் ரிங் போய்க் கொண்டிருந்தது. மஞ்சுளாவின் மனசு சந்தோஷத்தில் படபடத்தது.

    ஹலோ! ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.

    ஹலோ... கபிலன் இருக்காரா? - மஞ்சுளா கேட்டாள்.

    நீங்க யாரு? எதிர்முனைப் பெண்மணியின் குரல் பதட்டமாய் ஒலித்தது.

    அவருக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் தான். மஞ்சுன்னு சொன்னாலே தெரியும். கூப்பிடுங்க.

    மஞ்சுவா? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க! ஏய் குமார்... உங்கப்பாவைக் கூப்பிட்றா?

    சற்று நேரத்தில் வேறொரு ஆண் குரல் கேட்டது. ஹலோ... கபிலன்!

    ஹாய் டியர்... எப்படியிருக்கீங்க?

    வாட்? - எதிர்முனை அதிர்ந்தது.

    முதல்ல போனை எடுத்த அம்மா யார்? உங்க வொய்ஃபா பிசாசு, மூதேவின்னு செல்லமா சொல்வீங்களே... அவங்கதானா?

    ஏய்... யார் நீ? உனக்கு எந்த நம்பர் வேணும்?

    ஐ’ம் மஞ்சு! மறந்துட்டிங்களா டார்லிங்? பக்கத்துல பிசாசு இருக்கறதால... தெரியாத மாதிரி நடிக்கறீங்களா? - மஞ்சுளா சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

    சட்டென்று தொடர்பு துண்டிக்கப்பட்டது. மஞ்சுளா திடுக்கிட்டுப் பார்த்தாள். பக்கத்தில் புஷ்பா நின்றிருந்தாள். அவள்தான் துண்டித்தாள்…

    என்னம்மா நீ? நல்ல நேரத்திலே வந்து கட் பண்ணிட்டியே! எரிச்சலாய்ப் பார்த்தாள்.

    மஞ்சு... நீ தெரிஞ்சுதான் இதையெல்லாம் செய்யறியா, இல்லே... விபரீதம் புரியாம செய்யறியா?

    இதிலென்ன விபரீதம்?

    இது தப்புன்னு தெரியலியா? யாரோ முன்பின் அறிமுகமில்லாதவங்களுக்குப் போன் பண்ணி இஷ்டத்துக்குப் பேசறியே... அந்த குடும்பத்துல உன்னால பிரச்சனை உண்டாகாதா?

    அதெல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா!

    ஐயோ... கடவுளே! உனக்கு எப்படித்தான் புரிய வைக்கப் போறேனோ? வேணாம் மஞ்சு! இந்த விபரீத விளையாட்டெல்லாம் இனி வேண்டாம்! நம்மால ஒரு குடும்பத்துல பிரச்சனை வரக்கூடாது. நீ வாழ வேண்டிய பொண்ணு! பலரோட வயித்தெரிச்சல் உனக்கு வேண்டாம்!

    நான்தான் யாருன்னே அவங்களுக்குத் தெரியாதே!

    தெரியலேன்னா மட்டும்... நீ செய்யறது பாவமில்லையா?

    போர் அடிக்குதேம்மா... என்னதான் பண்றது? கூடப் பொறந்தவங்கன்னு யாராச்சும் இருந்தாலாவது பரவாயில்லே! இதுலகூட கஞ்சத்தனம் பண்ணி... என் ஒருத்திய மட்டும் பெத்துப் போட்டுட்டீங்க!

    உன் ஒருத்தியையே என்னால சமாளிக்க முடியலியே! பேசற பேச்சைப் பார்... கொஞ்சம் கூட வெட்கமில்லாம! ஆணாகப் பிறக்க வேண்டியது, பொண்ணா பொறந்துட்டே? செய்யறதெல்லாம் தப்பு... அப்புறம் எப்படி போலீஸ் வேலைக்குப் போறேன்ற... மனசாட்சி உறுத்தாது?

    காக்கி உடுப்பை மாட்டிக்கிட்டா... இந்த விளையாட்டு அத்தனையும் மூட்டை கட்டி பரண்மேலே போட்ருவேன்.

    அதை இப்பவே கட்டிப் போட்டுட்டு போய் குளி! நீ எந்த வேலைக்கும் போக வேண்டாம் தாயி! காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டு... கொஞ்சறதுக்கு ஒரு பேரப்பிள்ளையை பெத்துக் குடு!

    ஒண்ணென்ன? நாலு பெத்துத் தர்றேன்... இதிலென்ன கஞ்சத்தனம்? ப்ளீஸ்ம்மா... அந்த ஃப்ளக்கைக் கொடேன்!

    ஏன்... போன் பண்றதுக்கா? உதை விழும். காலையிலே எழுந்ததிலேர்ந்து... முகத்துக்குச் சொட்டு தண்ணி காட்டலே... வம்புக்கு அலையறியே... வரட்டும்! பிரபாகரன் கிட்டே சொல்றேன்!

    "அம்மா தாயே! அந்த வயரை நீயே பத்திரமா வச்சுக்க அடடடா! என்ன வீடு! இது! காலைலேர்ந்து ஒரே அட்வைஸ். இந்தம்மா பேசினது போதாம... அந்த டாக்டர் வேற வந்து வாழைப்பழத்திலே ஊசி ஏத்தற மாதிரி பேசி வறுத்தெடுக்கணுமா? போம்மா... நீயும்... உன் போனும்! டவல்

    Enjoying the preview?
    Page 1 of 1