Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் அன்பே!
என் அன்பே!
என் அன்பே!
Ebook115 pages41 minutes

என் அன்பே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரேவதி ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தாள், ஃப்ரிட்ஜின் கதவை திறந்ததும் கும்மென்று குளிர் காற்று முகத்தில் மோதுமே… அதேபோல், சிலிர்ப்பான மழைக் காற்று உடலை துளைத்து அசைத்துப் பார்த்தது.
 காற்று வீசியதால் கூடியிருந்த கருமேகங்கள் திசைக்கொன்றாய் கலைந்துப் போய்க் கொண்டிருந்தது. தினேஷ் பயங்காட்டியதைப் போல் மழையில் நனைந்து அவதிப்படப் போவதில்லை.
 'வழக்கமாய் வெள்ளை காண்டஸா நிற்குமிடம் காலியாய் இருந்தது.'
 'சீஃப் அதற்குள்ளா போய்விட்டார்?' ஆச்சர்யம் மேலோங்கியது ரேவதிக்கு.
 அவசரமில்லை என்பதால் மெதுவாகவே பஸ்ஸ்டான்ட் நோக்கி நடந்தாள்.
 சில அடி தூரம் கூட நடந்திருக்க மாட்டாள்... பட்... பட்டென்று உறுமியபடி ஒரு புல்லட் அவளருகில் வந்து நின்றது.
 "ஹலோ... ரேவதி!" என்றதும்... பதறி திரும்பினாள்.
 புன்னகை பூத்த முகமாய் டாக்டர் தினேஷ்.
 "ஹலோ... டாக்டர்!'' என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
 "ரொம்ப லேட்டாயிடுச்சி போலிருக்கே...!''
 "இல்லே டாக்டர்... அப்படியொன்றும் லேட்டாகிவிடவில்லை!"
 என்ன இருந்தாலும் ஒரு திருமணமாகாத இளம் பெண்... இவ்வளவு லேட்டாய் வீட்டிற்குப் போனால்... பெற்றவர்கள் பயப்படமாட்டார்களா?"
 "ம்... ஆமாம்... டாக்டர்!'' என்றாள் நெஞ்சையடைக்க"இஃப் யூ டோன்ட் மைன்ட் ரேவதி! நான் உங்கள் வீட்டில் ட்ராப் பண்ணிவிடுகிறேன்"
 "இருக்கட்டும் டாக்டர் பரவாயில்லை! நான் பஸ்ஸிலேயே போய் விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள் என்றாள் அவசரமாய்."
 "நோ... நோ... ஏன் தயங்கறீங்க? உங்க வீடு கொடுங்கையூர்ல இருக்கு. நான் மாதவரம் போய்க்கிட்டிருக்கேன். ஆன்... த... வே... ட்ராப் பண்ணிவிட்டுப் போகிறேன்!'' தினேஷ் விடாப்பிடியாய் வற்புறுத்தினான்.
 "இதேதடா வம்பு!" என்று திணறிப் போனாள் ரேவதி. "இருக்கட்டும் டாக்டர் பளீஸ்... நோ... தாங்க்ஸ்!'' என்றாள். சங்கடமாய்.
 அதற்கு மேல் வற்புறுத்துவது அநாகரிகம் என்பதால் மனதினுள் பொங்கிய ஏமாற்றத்தை முகத்திற்கு எழும்ப விடாமல் சாமர்த்தியமாய் மறைத்து சிரிப்பை படரவிட்டான்.
 "ரேவதி... நீங்க இந்தளவு ஷை டைப்பா? எனிவே... ஐ லைக் இட்! வரட்டுமா? பத்திரமா போய் சேருங்க...'' என்றவன் வண்டியை சீறவிட்டு அரைவட்டம் போட்டு ஸ்பீடாய் கிளப்பினான்.
 ரேவதி அவன் போனதும் நிம்மதியாய் மூச்சுவிட்டாள்.
 அவளுக்குப் புரியாமலில்லை... தினேஷ் அவளை காதலிக்கிறான் என்பது! தெருவிற்குள் நுழைந்தாள்.
 தெருக்கோடியில் வீடு! இங்கிருந்து பார்க்கையிலேயே வாசலில் பளீரென்று விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
 ஏனோ, அந்த வெளிச்சத்தில் வீட்டிற்குள் நுழைய சங்கடமாய் இருந்தது.
 வாசலில் ஜோடி ஜோடியாய் ஏழெட்டு வகை செருப்புகள்.
 'மணி எட்டரையைத் தாண்டி விட்டதே! வந்தவர்கள் இன்னுமா கிளம்பவில்லை?'
 ஆச்சரியமும், தயக்கமுமாய் வாசலிலேயே நின்று விட்டாள் ரேவதி, உள்ளிருந்து பேச்சுக் குரல்கள் சிரிப்போடு வெளிப்பட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223246619
என் அன்பே!

Read more from R.Manimala

Related to என் அன்பே!

Related ebooks

Related categories

Reviews for என் அன்பே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் அன்பே! - R.Manimala

    1

    அந்திமாலைப் பொழுது! அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டம் பஸ்ஸிலும், பைக்கிலும், ஸ்கூட்டர்களிலுமாய் பறந்தோடிக் கொண்டிருந்தது.

    பிதுங்கி வழிந்த பஸ்ஸிலிருந்து எப்படியோ தன்னை பிய்த்துக் கொண்டு இறங்கிய பொன்னி வியர்வையினால் முழுக்க நனைந்து விட்டிருந்தாள்.

    மணிக்கட்டை திருப்பி நேரத்தைப் பார்த்தவள்... பதறி... வேக வேகமாய் நடந்தாள்.

    சற்று தூரத்தில் விஸ்தாரமாய், உயரமாய் பல மாடி கட்டிடங்களைக் கொண்டு கம்பீரமாய் நின்றிருந்த மருத்துவமனை. கண்களுக்கு தென்பட்டது.

    நவநீதன் மருத்துவமனை!

    அரசாங்க மருத்துவனைக்கு அடுத்த படியாய் பிரபலமாய் பெயர் பரப்பியிருந்து. மனநல மருத்துவமனையும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தனியான பிரிவும் கூட அங்கு செயல்பட்டு வந்தது.

    அஸ்தமிக்கும் சிவப்பு சூரியனின் செந்நிறக் கதிர்கள் பட்டு நவநீதன் மருத்துவமனை என்ற பித்தளை போர்டு நெருப்பாய் தகதகத்தது.

    பரபரப்பாய் உள்ளே நுழைந்தாள் பொன்னி.

    "குட் ஈவ்னிங் நர்ஸ்!’’ கேட்டிலிருந்த வாட்ச்மேன் சிரித்தபடி வரவேற்றான்.

    குட் ஈவ்னிங் பாண்டியன். பெரிய டாக்டர் வந்துட்டாரா?

    "இன்னும் வரலேம்மா! இன்னிக்கு நைட் ட்யூட்டியா?’’

    ஆமாம்! என்றபடி படியேறி உள்ளே நுழைந்தாள்.

    தரையில் முகம் பார்க்கலாம்! அந்தளவு சுத்தம். அதே சுத்தம் அங்கு பணிபுரியும் கடைநிலை பணியாளர்களிடமும் பரவியிருந்தது.

    உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தவள் சடுதியில் நர்ஸ் உடைக்கு மாறினாள்.

    ஒருமுறை எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று ஆராய்ந்தவள், பின்னர் கதவை திறந்து வெளியில் வந்தாள்.

    என்ன லேட்டா? கையில் குறிப்பேடுடன் எதிர்பட்ட தாட்சாயணி கேட்டாள்.

    ஆமாம்... பஸ் லேட்!

    தினமும் இதே பல்லவியைப் பாடறதுக்கு பதிலா ஒரு டூ வீலர் வாங்கிடலாம்!

    என் குடும்ப சூழ்நிலைக்கு த்ரீவீலர்தான் வாங்க முடியும். என்ன புரியலே? ரிக்ஷாவை சொல்றேன்! என்று கிண்டலாய் சொன்னாலும் அந்த பேச்சில் விரக்தி இருந்தது.

    பேசிக் கொண்டேயிருந்த பொன்னியின் கண்கள் சட்டென விரிந்தன.

    கண்ணாடி கதவை ஊடுருவி டாக்டர் ஆத்மராஜன் கம்பீரமாய் நடந்து வந்துக் கொண்டிருந்தது துல்லியமாய் தெரிய... பரபரப்பானாள்.

    தாட்சாயணி... சீஃப் வந்துட்டார்... ஓடு! என்றவள் ஓடாத குறையாய் மாடிப் படியேறி தன் ட்யூட்டி செக்ஷனில் சென்று கையெழுத்திட்டாள்.

    "கொஞ்சம் கூட வயித்து வலி குறையலியே நர்ஸ்...’’

    முப்பது வயது இளைஞன் வலிதாங்காத வேதனையோடு முகம் சுருக்கினான்.

    ரேவதி இடுப்பில் கைவைத்து செல்லமாய் முறைத்தாள்.

    "கொடுத்த மாத்திரையை ஒழுங்கா போட்டீங்களா இளங்கோ?’’

    ம்... போ... போட்டேனே?

    எங்கே ஜன்னல் வழியாதானே?"

    அவன் வயிற்றை மெல்ல அமுக்கி ஆராய்ந்தபடி கேட்டாள்.

    "ந... ர்... ஸ்...’’

    "எப்படித் தெரியும்னு பார்த்தீங்களா? இந்த ரேவதியை யாராலும் ஏமாத்த முடியாது. பாருங்க இளங்கோ... லிவர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு. கொடுக்கற மெடிஸின்ஸை ஒழுங்கா யூஸ் பண்ணாலே போதும்... சீக்கிரம் வீட்டுக்கு போகலாம். அதை விட்டுட்டு... நீங்க முரண்டு பண்ணிட்டிருந்தீங்கன்னா... டாக்டர் உங்களுக்கு ஆபரேஷன் பண்றதைத் தவிர வேற வழியே இல்லேன்னுட்டார்.’’

    இளங்கோவிற்கு பயத்தில் கண்கள் விரிந்தது.

    ஆபரேஷனா?

    பயம் இருக்கில்லே? அப்புறமென்ன பிடிவாதம்?

    நீங்க தர்ற டாப்லெட்ஸெல்லாம் ரொம்ப கசப்பாயிருக்கு நர்ஸ்...

    அப்ப பிராந்தி, விஸ்கியெல்லாம் ரொம்ப இனிப்பாயிருக்கோ?

    "...!’’ சங்கடமாய் பார்த்தான்.

    இந்த வயசில குடிச்சு லிவர் கெட்டுப் போச்சுன்னு ஹாஸ்பிடல் வாசலை மிதிக்கவே ரொம்ப வெட்கப்படணும் மிஸ்டர் இளங்கோ! உங்க. மதரும், வொய்ஃப்பும் எந்தளவு கவலைப்படறாங்க தெரியுமா? விஷம்னு தெரிஞ்சே குடிக்கிறது முட்டாள் தனம். வாயைத் திறங்க... கையில் இருந்த மாத்திரைகளைப் போட்டு தண்ணீரை குடிக்க வைத்தாள்.

    "இனிமே ஒழுங்கா மெடிஸின்ஸ் எடுத்துக்கறேன் நர்ஸ்...’’

    "பார்ப்போம். ரெண்டு நாள்ல எந்த ப்ரோக்ரஸ்ஸும் தெரியலேன்னா... டாக்டர் கத்தியை கையில் எடுக்கறதை தவிர வேற வழியில்லே...’’

    நர்ஸ்... ஆனாலும் நீங்க ரொம்ப பயமுறுத்தறீங்க?

    இதுவும் ஒரு ட்ரீட்மென்ட் தான்... என்று கூறி சிரித்தபடி அடுத்த பேஷன்டடை நோக்கிப் போனாள்.

    இளங்கோ போகும் அவளையே. அத்தனை வயிற்று வலியிலும் கூட பார்த்துக் கொண்டிருந்தான்.

    சராசரி உயரம். கறுப்பிற்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட புது நிறம். வெள்ளை உடை உடம்பை முழுக்க மூடியிருந்தாலும்... பிரம்மன் வஞ்சனை செய்யவில்லை என்பதை கச்சிதமான உடம்பு சொன்னது.

    திருத்தமான முகம்... ஆஹா... ஓஹோ என்று இல்லாவிட்டாலும்... சம் திங் ஸ்பெஷல் அவளிடம் இருந்தது. அது என்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சிலரால் அனுமானிக்கப்பட்ட கருத்து அவளின் புன்னகை!

    சத்தமின்றி உதடிற்குள் மென்று செல்லமாய் முறுவலிக்கும் அந்த சிரிப்பில் கண்ணியமும் இருக்கும். காந்தமும் இருக்கும். எல்லாவற்றையும் மீறி குழந்தைத் தனமும் இருக்கும்.

    அடர்த்தியான கூந்தல் அவளுக்கு. சுற்றி வளைத்து கொண்டை போட்டிருந்தாலும் காதோரமும், கழுத்தோரமும் சிலும்பி நிற்கும் சுருள் முடி அந்த முகத்திற்கு தனியான அழகை தந்தது.

    ஒரு நாளாவது அவளை மஃப்டியில் அதாவது சேலை, சுடிதார் போன்ற கலர் உடையில் பார்த்து விடவேண்டும் என்பது இளங்கோவின் தணியாத ஆசை. ஆனால் இந்த ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி பத்து நாளாகியும். அந்த ஆசை நிறைவேறவில்லை.

    கண்களை உருட்டி, இடுப்பில் கைவைத்தபடி செல்லமாய் மிரட்டும் அந்த காட்சிக்காகவே. அவன் மாத்திரைகளை ஜன்னல் வழியே எறிவதன் முழுமுதற்காரணம். அவளே மாத்திரை புகட்டி தண்ணீர் கொடுத்து வாயையும் துடைத்து விட்டு போவதற்காகவே... நிறைய குடிக்க வேண்டும் அடிக்கடி இங்கு வந்து படுத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

    பெருமூச்சு விட்டான் இளங்கோ.

    பத்து வயது சிறுவனுக்கு காலில் போட்டிருந்த கட்டைப் பிரித்து ட்ரெஸ்ஸிங் பண்ணிக் கொண்டிருந்தாள். சிறுவன் வலிதாளாமல் அழுதான். அந்த அழுகை அங்கிருந்த அவன் அம்மாவையும் தொற்றிக் கொண்டது.

    "ஏம்மா... பார்த்து செய்யும்மா! பிள்ளை எப்படி துடிக்கறான் பார்! நீ பாட்டுக்கு சடார் சடார்னு கட்டை பிரிச்சா... ரத்தம் வராதா?’’

    ரேவதி அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் பணியில் ஈடுபட்டாள். பஞ்சினால் ரத்தத்தையும் சீழையும் அழுத்தி எடுத்தாள். பையன் வீரிட்டலறினான்.

    ஏம்மா... சொல்ல சொல்ல... திரும்ப அடாவடித்தனமா பண்றியே... அழாதேடா கண்ணா! என்றவள் பெற்றால் தானே தெரியும் அருமை என்று முணுமுணுத்தாள்.

    ரேவதியின்

    Enjoying the preview?
    Page 1 of 1