Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நான் நளினா நள்ளிரவு
நான் நளினா நள்ளிரவு
நான் நளினா நள்ளிரவு
Ebook144 pages34 minutes

நான் நளினா நள்ளிரவு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெங்களூர்.
 கனகபுரா ஏரியாவில் 33வது மெயின்ரோடு. 16-வது க்ராஸ் கட் ரோட்டின் கோடியில் ஒரு ஏழு மாடிக் கட்டிடம். ஐந்தாவது ஃப்ளோரில் நளினாவின் அபார்ட்மெண்ட்.
 காலையில் எட்டுமணிக்கு கண் விழித்த நளினாவை தலைமாட்டில் இருந்த செல்போன் எஸ்.எம்.எஸ். வந்து இருப்பதாக 'பீப்' சவுண்ட் கொடுத்து எடுக்கச் சொன்னது.
 நளினா எடுத்துப் பார்த்தாள். இன் பாக்ஸ், மெஸேஜ்களால் நிரம்பியிருந்தது.
 ஒவ்வொன்றாய்த் தட்டிப் பார்த்தாள். டிஸ் ப்ளேயில் வாசகங்கள் தெரிந்தது.
 ஒரு சந்தேகம்
 மீன் பிடிக்கிறவன் மீனவனாக முடியும்.
 மான் பிடிக்கிறவன் மாணவனாக முடியுமா?
 ஒரு தத்துவம்புல் பின்னாடி போன ஆடும்
 பெண் பின்னாடி போன ஆணும்
 உயிர் வாழ்ந்ததாய்
 சரித்திரமே இல்லை.
 ஒரு ஜோக்.
 * அந்த வயர்ல கரண்ட் இருக்குன்னு தெரிஞ்சும் ஏன் கையை வெச்சே?
 * கட்டை விரல்தானே ஷாக் அடிக்காதுன்னு நினைச்சேன்.
 எல்லா எஸ்.எம்.எஸ்.களையும் அபிஷேக் அனுப்பியிருந்தான். அபிஷேக் அவளுடைய காதலன். பெங்களூர் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் இன்ட்டர்வியூக்காக வந்தபோது அடுத்தடுத்த நாற்காலியில் உட்கார்ந்தபோது ஏற்பட்ட பழக்கம் இரண்டே நாளில் நட்பாகவும், இரண்டே வாரத்தில் காதலாகவும் மாறிவிட்டது. இரண்டு வீடுகளுக்கு இன்னமும் விஷயம் தெரியாது என்பதால் காதலைப் பொத்தி பொத்தி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 "பீப்... பீப்...!"
 மறுபடியும் எஸ்.எம்.எஸ் கூப்பிட்டது. செல்லை ஆன் செய்ய அபிஷேக் எஸ்.எம்.எஸ்ஸில் இருந்தான்.
 "குளிரான வேளை. மிதமான சூரியன். சூடான காப்பி. இவைகளோடு என் குட்மார்னிங். என்ன பண்ணிட்டிருக்கே நளி!"
 நளினா பதிலுக்கு எஸ்.எம்.எஸ். செய்தாள்.
 "இப்பத்தான் கண் முழிச்சேன்!"
 "சோம்பேறி!""நேத்து கம்பெனியில் ப்ராஜக்ட் முடிக்கும்போது பனிரெண்டு மணி. கம்பெனி பஸ்ஸில் அபார்ட்மெண்ட் வந்து சேரும்போது ஒரு மணி. பெட்ல விழும்போது ஒன்றரை மணி. உன்னோட நினைப்பு வந்ததால எனக்கு தூக்கம் வரலை. தூங்கும்போது ரெண்டரை மணி."
 "அடேடே... அப்படியா! ஸாரி... ஸாரி."
 "நேத்து ராத்திரி நீ ஏண்டா எனக்கு போன் பண்ணவேயில்லை...?"
 "அதுவா! என்னோட செல்போனை கம்பெனியிலயே மறந்துபோய் வெச்சுட்டு வந்துட்டேன்...!"
 "சரி... இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?"
 "நீயே சொல்லு...!"
 "மத்தியானம் எம்.டி.ஆர்க்கு லஞ்ச் போறோம். அப்புறம் ஹிருத்திரோஷன் படத்துக்குப் போறோம். சாயந்தரம் ஜெயநகர் 'உ' ஜோன்ல பர்ச்சேஸ் பண்றோம்."
 "என்ன பர்ச்சேஸ்...?"
 "கையில லிஸ்ட் இருக்கு... நேர்ல சொல்றேன்."
 "சரி... ஒரு கவிதை அனுப்பட்டுமா...? நான் எழுதின கவிதை...!"
 "மொதல்ல கவிதையை அனுப்பு. எழுதினது யார்ன்னு நான் சொல்றேன்."
 "அவ்வளவு சுலபத்துல நீ என்னை நம்பமாட்டியே?"
 "அனுப்பு கவிதையை!"
 "அன்று காந்தி உழைத்தார்
 நாட்டுக்காக.
 இன்று மக்கள் உழைக்கிறார்கள்.
 காந்தி நோட்டுக்காக

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224830985
நான் நளினா நள்ளிரவு

Read more from Rajeshkumar

Related to நான் நளினா நள்ளிரவு

Related ebooks

Related categories

Reviews for நான் நளினா நள்ளிரவு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நான் நளினா நள்ளிரவு - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    மனிதனின் உடம்பில் நோய்கள் தோன்றுவதற்குக் காரணம், கிருமிகள்தான் என்கிற உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்த அறிஞர் யார்?

    கிரேக்க விஞ்ஞானி: ஹிப்போகிரேட்டஸ்.

    1

    டாக்டர் ஓம்பிரகாஷ் மேஜையின் மேல் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய்த் தண்ணீரைத் தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு அட்டெண்டர் ரகுராமிடம் கேட்டார்:

    பேஷண்ட்ஸ் இன்னும் எவ்வளவு பேர் இருக்காங்க?

    அஞ்சு பேர் டாக்டர்...

    நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்த ஓம்பிரகாஷ், தன் மணிக்கட்டில் நேரம் பார்த்தார். ராத்திரி மணி பத்தரை. வயிறு பசித்து, உடல் களைத்து கண்கள் தூக்கத்திற்காக கெஞ்சின. இப்போது புறப்பட்டால்தான் அவுட்டரில் இருக்கும் தன்னுடைய பங்களாவுக்குப் போய் பதினோரு மணிக்குள் சேர முடியும். பேஷண்ட்ஸ் இன்னமும் நான்கு பேர் இருக்கிறார்கள். ஒரு நபர்க்கு பத்து நிமிஷம் என்று கணக்கிட்டால் கூட முக்கால் மணி நேரம் ஓடிப்போகும். அட்டெண்டரை மறுபடியும் ஏறிட்டார்:

    ரகுராம்...!

    டாக்டர்...

    அந்த பேஷண்ட்ஸ் புதுசா... இல்ல... பழசா...?

    புதுசுதான் டாக்டர்... நாலு பேர்களில் மூணு ஆண்கள். ஒரு பெண்...

    சரி... எல்லாரையும் நாளைக்குக் காலையில் பார்த்துடலாம். இப்ப போகச் சொல்லிடு... நான் வீட்டுக்குக் கிளம்பறேன்... நீயும் க்ளீனிக்கைப் பூட்டிகிட்டு புறப்படு...

    அட்டெண்டர் ரகுராமன் தலையாட்டிவிட்டு அறையினின்றும் வெளியேற ஓம்பிரகாஷ் தன்னுடைய எக்ஸிக்யூடிவ் நாற்காலியினின்றும் தன்னை உருவிக் கொண்டு எழுந்தார். வாஷ்பேசினில் முகம் கழுவி, கண்ணாடியில் முகம் பார்த்து ஈரத்தை டவலால் ஒற்றிக் கொண்டிருந்தபோது ரகுராமன் உள்ளே வந்தான்.

    டாக்டர்...!

    என்ன... சொல்லிட்டியா...? அந்த நாலு பேரும் போயிட்டாங்க...?

    ஜெண்ட்ஸ் மூணு பேரும் போயிட்டாங்க டாக்டர். அந்தப் பொண்ணு மட்டு போகாமே உட்கார்ந்துட்டிருக்கு... உங்களைப் பார்த்துட்டுத்தான் போவேன்னு அடம்பிடிக்குது...!

    ஓம் பிரகாஷ் சில விநாடிகள் யோசிப்பாய் இருந்துவிட்டு பக்கவாட்டு ஜன்னலுக்குப் போய் அதை மெல்லத் திறந்து பார்வையை மட்டும் துரத்தி வரவேற்பறையைப் பார்த்தார்.

    அந்த இளம்பெண் பார்வைக்குக் கிடைத்தாள். நெற்றிப் பொட்டில் சின்னதாய் ஒரு காயம். அதன்மேல் எக்ஸ்குறியாய் ஒரு பிளாஸ்திரி. சேலைத்தலைப்பைத் திருகியபடி ஏதோ யோசனையில் இருந்தாள்.

    ரகுராமன்! அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பிவை...! நீ வீட்டுக்குக் கிளம்பு...! நான் க்ளீனிக்கைப் பூட்டிக்கிறேன்...

    ஓம்பிரகாஷ் சொல்லிவிட்டு மறுபடியும் தன்னுடைய எக்ஸிக்யூடிவ் நாற்காலிக்குப் போய் சாய்ந்தார்.

    ஒரு இளம்பெண் இந்த ராத்திரி வேளையில் தனியாய்... அதுவும் நெற்றியில் காயத்தோடு...

    ஏதோ பிரச்னை!

    டாக்டர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் உள்ளே வந்தாள். ட்யூப்லைட்டின் வெளிச்சத்தில் இப்போது அழகாய்த் தெரிந்தாள். பெரிய கண்களில் ஒரு பயமும் மிரட்சியும் தெரிந்தன.

    உட்கார்ம்மா...

    அவள் உட்கார்ந்தாள். உடம்பு மெலிதாய் நடுங்கிக் கொண்டு இருந்தது. டாக்டர் அதைக் கவனித்தவராய் சொன்னார்:

    "இதோ பாரம்மா...! நீ யார்க்காகவும் எதுக்காகவும் பயப்பட வேண்டியது இல்லை... பி... ரிலாக்ஸ்...! உன்னோட பிரச்னை என்ன...?

    அந்தப் பெண் மௌனமாமய் தலைகுனிந்து மேஜையின் ஓரத்தைக் கீறிக் கொண்டிருந்தாள்.

    சொல்லும்மா...! உன்னோட பிரச்னை என்ன...?

    சில விநாடிகள் கழித்து - அந்தப் பெண் நிமிர்ந்தாள். உதடுகள் துடித்தன.

    டா... க்... ட... ர்...! என்று பேச ஆரம்பித்தவளின் கண்களில் நீர் நிரம்பியது. தொண்டை அழுகையில் அடைத்துக் கொண்டது. டாக்டர் எழுந்தார் பதற்றமாய்.

    அடேடே! என்னம்மா நீ...! டோண்ட் பி எமோஷனல். பிரச்னை எதுவாயிருந்தாலும் பரவாயில்லை... சொல்லும்மா...!

    அவள் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்: டாக்டர்...! என்னோட பிரச்னை விசித்திரமானது. நான் யார்ன்னு எனக்கே தெரியலை. என்னோட பேர் என்ன... என்னோட ஊர் எது... என்னோட ரிலேட்டீவ்ஸ் யாரு... இது மாதிரியான எந்த ஒரு விபரமும் எனக்குத் தெரியலை... நான் யார்ன்னு யோசிச்சுப் பார்த்தா என்னோட மூளை குழம்புது. தொடர்ந்து யோசனை பண்ணினால் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு... நான் ஒரு பெண் என்கிற உண்மை மட்டும் தெரியுது. இந்த ஊர் சென்னைன்னு தெரியுது... ஆனால், இந்த ஊர் எனக்கு பழக்கப்பட்ட ஊர் மாதிரி தெரியலை...

    ஓம்பிரகாஷ் சற்றே அதிர்ந்து போனவராய் அந்தப் பெண்ணையே பார்த்தார்.

    நீ யார்ன்னு உனக்கே தெரியலையா...?

    தெரியலை...

    சரி...! உன்னோட நெற்றியில் இருக்கிற காயம் எப்படி ஏற்பட்டது...?

    "அதுவும் தெரியலை டாக்டர்... இந்த நெற்றிக் காயம் எப்படி ஏற்பட்டது... இந்த காயத்துக்கு யார் பிளாஸ்திரி போட்டாங்க... இது மாதிரியான

    Enjoying the preview?
    Page 1 of 1