Oru Melliya Sikappu Kodu
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Melliya Sikappu Kodu
Related ebooks
Inimel Indira… Rating: 0 out of 5 stars0 ratingsXerox Kathali Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum Vivek Rating: 5 out of 5 stars5/525 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsPachai Kan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Lekha! En Lekha! Rating: 3 out of 5 stars3/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Pesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Innaley Rating: 0 out of 5 stars0 ratingsOru Melliya Sivappu Kodu Rating: 0 out of 5 stars0 ratingsVivek Vidivatharkul Vaa Rating: 5 out of 5 stars5/5Ellam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsOru Kodi Roobai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratings11 Mani 59 NImidangal 59 Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathai Varainthavan Rating: 5 out of 5 stars5/5Ondru Irandu Iranthu Vidu Rating: 3 out of 5 stars3/5Aayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Mottukkal Pookattum Rating: 5 out of 5 stars5/5Kaatrin Niram Karuppu Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Arai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsJulaiyil Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Oru Melliya Sikappu Kodu
1 rating0 reviews
Book preview
Oru Melliya Sikappu Kodu - Rajeshkumar
ராஜேஷ்குமார்
ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த அற்புத வரிகள்:
நம் வாழ்க்கையில் நிம்மதி தேவையென்றால்
நிச்சயம் ஞாபக மறதியும் தேவை.
1
மாறன்..!
சொல்லு.. தமயந்தி
இந்த ஹாஸ்பிடல் வேண்டாம்
ஏன்...?
ஹாஸ்பிடலோட அட்மாஸ்பியரே சரியில்லை. ஏதோ நாலாந்தர திருவல்லிக்கேணி லாட்ஜ் மாதிரி இருக்கு.
ஹாஸ்பிடல்தான் பார்க்க இப்படியிருக்கு. டாக்டர் திறமையானவர். நீ பார்க்கத்தானே போறே?
டாக்டர் பேர் என்ன சொன்னீங்க?
புண்ணிவதி.
பேரைக் கேட்டா ரொம்பவும் வயசானவர் மாதிரி தெரிது?
நாற்பதிலிருந்து நாற்பத்தஞ்சு வயசுக்குள்ளே இருக்கலாம்.
அந்த சுமாரான ஹாஸ்பிடலின் - ரொம்பவும் சுமாராயிருந்த - ரிசப்ஷன் அறையில் ஒரு சோபாவில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த 30 வயது மாறனையும் 25 வயது தமயந்தியையும் அந்த நர்ஸ் நெருங்கினாள்.
ஸார்..! டாக்டரை நீங்க பார்க்கப் போலாம்.
இருவரும் எழுந்து வராந்தாவின் கோடியிலிருந்த அந்தக் கண்ணாடித் தடுப்பு அறையை நோக்கிப் போனார்கள். ‘டாக்டர் ஈஸ் இன்’ என்று சொன்ன கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய, டாக்டர் புண்ணியவதி வெள்ளைக் கோட்டில் முன்னுச்சி நரைமுடியோடு பார்வைக்குத் தட்டுப்பட்டாள்.
குட் மார்னிங் டாக்டர்.
வாங்க.. மாறன்! எப்படியிருக்கீங்க...? அம்மாவும் அப்பாவும் எப்படியிருக்காங்க?
எல்லாரும் நல்லாயிருக்காங்க டாக்டர்.
உன்னோட சிஸ்டர் வேல்விழியோட ‘லா ப்ராக்டீஸ்’ எப்படி போயிட்டிருக்கு...?
வெரி வெல் கோயிங் டாக்டர். அவ இப்போ ஸ்ரீனிவாச அய்யங்கார்கிட்டே ஜூனியராய் சேர்ந்து இருக்கா. இதுவரைக்கும் நாலைஞ்சு கேஸ்களை தனியாவே டீல் பண்ணி ஜெயிச்சும் காட்டியிருக்கா.
குட்... எனக்கு வேல்விழியைப் பத்தி நல்லாவே தெரியும். ஷி ஈஸ் வெரி இன்டலிஜென்ட் அண்ட் ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட். இன்னும் ஒரு அஞ்சுவருஷ காலத்துக்குள்ளே வேல்விழி சிட்டியில் இருக்கிற டாப்-டென் லாயர்களில் ஒருத்தியாய் இருப்பா.
நிச்சயமாய் டாக்டர்... எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு...
உனக்குக் கல்யாணம்.. முடிவாயிட்டதாய் கேள்விப்பட்டேன். உண்மையா?
ஆமா டாக்டர்...! ஷி.. ஈஸ் தமயந்தி. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. கடந்த ஒரு வருஷ காலமாய் ஒருத்தரையொருத்தர்... விரும்பிட்டிருந்தோம். வீட்ல கல்யாணப் பேச்சை எடுத்ததும் என்னோட காதல் விவகாரத்தை அப்பாகிட்டேயும், அம்மாகிட்டேயும் சொன்னேன். எதிர்ப்பு தெரிவிப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா தமயந்தியோட போட்டோவைப் பார்த்ததும் அம்மா, அப்பா, தங்கச்சி வேல்விழி மூணு பேருமே ஓ.கே. சொல்லிட்டாங்க. தமயந்தியை அவளுடைய வீட்டுக்கே முறைப்படி போய்ப் பார்த்து அவளோட பேரண்ட்ஸ் சம்மதத்தோட நிச்சயதார்த்தத்தையும் முடிச்சுட்டோம். ஃபங்க்ஷன் ரொம்பவும் சிம்பிளாய் வெச்சுட்டதால யாரையும் கூப்பிட முடியலை.
பரவாயில்லை. என்னிக்குக் கல்யாணம்?
பிப்ரவரி ஏழாம் தேதி.
இன்னும் ஆறுமாசம் இருக்கே! ஏன் இவ்வளவு நாள் தள்ளி வெச்சிருக்காங்க?
இன்னும் ஆறுமாசத்துக்கு குரு பார்வை இல்லையாம்.
டாக்டர் புண்ணியவதி சிரித்தாள்.
இந்த ஜோசியர்களுக்கு வேற வேலையில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கல்யாணத்தைத் தள்ளிப்போடறது அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னோட பொண்ணுக்கு கல்யாணம் நடந்த போதும் அப்படித்தான் சொன்னாங்க.
சொல்லிவிட்டு சிரித்த புண்ணியவதி சில விநாடிகள் அமைதியாய் இருந்துவிட்டு கேட்டாள்.
ஸாரி மாறன்...! நீ என்னைப் பார்க்க வந்திருக்கேன்னா ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் இருக்கப் போய்த்தான் வந்து இருக்கணும். நான் பாட்டுக்கு கதை பேசிட்டிருக்கேன். எனிதிங்க் இம்பார்ட்டண்ட்?
எஸ்.. டாக்டர்...
என்ன?
ஒரு ப்ராப்ளம். அது சின்ன பிராப்ளமா இல்ல பெரிய ப்ராப்ளமான்னு நீங்கதான் சொல்லணும்.
மொதல்ல நீ பிராப்ளத்தை சொல்லு.
மாறன் தயங்கிவிட்டு சொன்னான்.
தமயந்தி இப்போ ரெண்டு மாச கர்ப்பம்.
புண்ணியவதி சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்குள்ளாகி பிறகு சுதாரித்துக் கொண்டு புன்னகைத்தாள்.
என்ன.. கழுத்துல தாலி ஏறுறதுக்கு முன்னாடியே வாரிசுக்கு ஆசைப்பட்டுட்டீங்க போலிருக்கு?
கொஞ்சம் எல்லை மீறிட்டோம். தப்புத்தான்!
எமோஷனல் எர்ரர்... நோ ப்ராப்ளம். இன்னும் ஒரு ஆறுமாசத்துக்குள்ளே உங்களுக்குத்தான் கல்யாணமே நடக்கப் போகுதே!
இருந்தாலும் டாக்டர்... இந்த விஷயம் வெளியே தெரியும் போது மத்தவங்களோட இளப்பமான பார்வையிலிருந்து தப்ப முடியாதே!
உன்னோட நிலைமை புரியுது. இப்ப என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறே..?
அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த தமயந்தி முதன் முதலாய் வாய் திறந்தாள்.
உடனடியாய் டீ அண்ட் ஸீ பண்ணனும் டாக்டர்.
எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு?
ரெண்டு மாசம்.
ஏன் இத்தனை நாள் விட்டு வெச்சே...? நீ கன்சீவ் ஆனது உனக்குத் தெரியலையா?
தெரியலை டாக்டர்.
அது எப்படி தெரியாமல் போகும்?
எனக்கு பீரியட்ஸ் இர்ரெகுலர் டாக்டர். அதான் கொஞ்சம் ஏமாந்துட்டேன்.
அறுபது நாள் கரு. டி.அண்ட் ஸீ பண்றது ஹைலி ரிஸ்க்.
நாங்க எங்கேயும் போகாமே இங்கே வந்ததுக்குக் காரணம் உங்களால இது முடியும் என்கிற நம்பிக்கையினால்தான் டாக்டர்.
சொன்ன மாறனை சற்றே கோபத்தோடு பார்த்தாள் புண்ணியவதி.
என்ன மாறன்...! நீயும் புரியாமே பேசிட்டு இருக்கே. இது ஒரு டீ அண்ட் ஸீ மேட்டர் கிடையாது. ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு நூலிழை பிசகினாலும் விபரீதமாயிடும்.
எனக்கும் உங்க பயம் புரியுது டாக்டர். இருந்தாலும் இன்னும் ஆறுமாசத்துல கல்யாணம் நடக்கப் போகிற எங்களோட நிலைமையையும் நீங்க கொஞ்சம் கன்ஸிடர் பண்ணனும்.
நெற்றியைப் பிடித்துக் கொண்டு சில விநாடிகள் யோசித்த புண்ணியவதி பிறகு ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தாள்.
இட்ஸ் ஓ.கே.. ஒரு நிபந்தனையின் பேரில்தான் இந்த டீ அண்ட் ஸீ யை என்னால பண்ண முடியும்.
என்ன நிபந்தனை டாக்டர்?
"மொதல்ல தமயந்தியோட கருவை ஸ்கேன் பண்ணி ‘க்ரோத்’ எப்படி டெவலப்பாகியிருக்குன்னு பார்க்கணும். அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை