Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நான் கொல்லுவதெல்லாம் பெண்மை
நான் கொல்லுவதெல்லாம் பெண்மை
நான் கொல்லுவதெல்லாம் பெண்மை
Ebook88 pages26 minutes

நான் கொல்லுவதெல்லாம் பெண்மை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போர்டிகோவுக்குள் அந்த அம்பாஸடர் மெத் தென்று புதைந்து இரைச்சலை நிறுத்திக்கொண்டது. பின் சீட் கதவு திறக்கப்பட்டு உள்ளிருந்து இறங்கினாள் திவ்யா. மார்போடு அணைத்த புத்தகங்களோடு ஒரு மடிக்கப்பட்ட வெண்ணிற ஓவர் கோட்டும் தொங்கியது. சமீப காலமாய் தலையை மேல் நோக்கி வாரிக் கொண்ட திவ்யா ஒரு மெடிக்கல் காலேஜ் மாணவி.
 படிகளேறி மொசைக் வராந்தாவில் நடந்து - ஹாலுக்குள் நுழைந்தாள். குறுக்கே போன வேலைக்காரி பர்வதத்தைக் கூப்பிட்டாள்.
 "பர்வதம்."
 "என்னம்மா?"
 "அப்பா இருக்காங்களா?"
 "இருக்காங்கம்மா"
 பர்வதம் சொன்னதும் - கையிலிருந்த புத்தகங்களை சோபா மேல் வைத்து விட்டு - அப்பா சந்தானகிருஷ்ணனின் அறையை நோக்கி நடந்தாள். அறையை நெருங்கியதும் குரல் கொடுத்தாள்.
 "அப்பா."
 திவ்யாவின் குரலைக் கேட்டு வெளியே வந்தார் சந்தானகிருஷ்ணன்.
 "என்ன திவ்யா...? இப்பத்தான் வர்றியா?"
 "ஆமாப்பா."
 "உள்ளே நுழையறப்பவே என்னைக் கூப்பிட்டு வர்றே... என்னம்மா விஷயம்?கேட்ட சந்தானகிருஷ்ணன் சந்தன நிறத்திலிருந்தார். பளிச்சென்ற வேட்டி ஷர்ட்டில் திணிந்து இருந்தார். சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் இருக்கிற கெமிக்கல் ஃபாக்டரி அள்ளித் தருகிற பணம் அவர் உடம்பில் செழிப்பைத் தேய்த்திருந்தது.
 திவ்யா புன்னகைத்துச் சொன்னாள்.
 "ஒரு ரெண்டாயிரம் ரூபா இன்னும் ஒரு வாரத்தில் எனக்குத் தேவைப்படும்ப்பா."
 "எதுக்கு?"
 "காலேஜ்ல வர்ற மாசம் எஜுகேஷனல் டூர் ப்ரொக்ராம் ஒண்ணு இருக்கு. டூர் போறதுக்கு முன்னாடி எக்ஸிபிஷன் ஒண்ணு கண்டக்ட் பண்ணப் போறோம்..."
 'ப்ர்ர்ர்ர்.'
 அவள் சொல்லச் சொல்லவே –
 காலிங் பெல் வீறிட –
 திவ்யா முன் ஹாலுக்கு வந்தாள்.
 பர்வதம் போய்க் கதவைத் திறக்க –
 திவ்யா கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள்.
 ஒரு நாற்பத்தைந்து வயது மனிதரும் ஒரு இளம் பெண்ணும் தெரிந்தார்கள்.
 அந்தப் பெண் கிட்டத்தட்ட திவ்யாவின் வயதில் இருந்தாள். இளம் பச்சையில் புள்ளி தெளித்திருந்த புடவையை உடலுக்குச் சுற்றியிருந்தாள். கூட இருந்த மனிதர் அவளின் அப்பாவாய் இருக்க வேண்டும். இரண்டு பேர் முகங்களிலும் சோகம் உறைந்து போயிருந்தது.
 "யாரு வேணும்?"
 "மிஸ்டர் சந்தானகிருஷ்ணன் வீடு இதானே?"
 அவர் பவ்யமாய்க் கேட்டார்"ஆமா..."
 "இருக்காரா?"
 "இருக்கார்..."
 "நாங்க அவரைப் பார்க்கணும்மா."
 "உள்ளே வாங்க."
 திவ்யா திரும்பி நடக்க –
 அவர்கள் தயக்கத்துடன் பின்தொடர்ந்தார்கள்.
 ஹாலுக்கு வந்தபோது சந்தானகிருஷ்ணன் அவர்களிருவரையும் பார்த்து விட்டு - திவ்யாவிடம் கேட்டார்.
 "திவ்யா! யாரு இவங்க?"
 "தெரியலைப்பா, உங்களைப் பார்க்கணுமாம்."
 சந்தானகிருஷ்ணன் புருவங்களைச் சுருக்கி இரண்டு பேரையும் பார்க்க -
 வந்திருந்த அவர் சொன்னார்.
 "மிஸ்டர் சந்தானகிருஷ்ணன், எங்களை உங்களுக்குத் தெரியாது. ஆனா எங்களுக்கு உங்களைத் தெரியும். உங்ககூடக் கொஞ்சம் பேசணும்..."
 "ப்ளீஸ், உக்காருங்க..."
 சந்தானகிருஷ்ணன் இருக்கையைக் காட்ட –
 அவர்கள் உட்கார்ந்தார்கள்.
 "என்ன விஷயம்?"
 "என் பேர் தர்மலிங்கம். ஆர். டி. ஓ. ஆஃபீஸ்ல கிளார்க்கா இருக்கேன். இவ என்னோட மக ரேணுகா. இவளோட கல்யாணத்தைப் பத்திதான் உங்ககூடப் பேசணும்.ஒரு நிமிஷம் அவர்களைக் குழப்பமாய்ப் பார்த்த சந்தானகிருஷ்ணன் கேட்டார்.
 "உங்க மக கல்யாணத்தைப் பத்தி என்கிட்டே பேச என்ன இருக்கு?"
 "உங்ககிட்டே மட்டுமில்லே, உங்க மகன் சபரீஷ்கிட்டே கூடப் பேசணும்..."
 சந்தானகிருஷ்ணன் குழப்பமானார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223163718
நான் கொல்லுவதெல்லாம் பெண்மை

Read more from Rajeshkumar

Related to நான் கொல்லுவதெல்லாம் பெண்மை

Related ebooks

Related categories

Reviews for நான் கொல்லுவதெல்லாம் பெண்மை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நான் கொல்லுவதெல்லாம் பெண்மை - Rajeshkumar

    1

    அந்தத் தனியார் என்ஜினியரிங் கல்லூரியின் காம்பௌண்டுக்குள் நிழல் கொட்டிக் கொண்டிருக்கிற ஒரு ரெஜியா மரத்தின் கீழ்-யமஹா மேல் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் சபரீஷ். அவனைச் சுற்றி அவனுடைய சகாக்கள் ரத்னம், தியாகு, மூர்த்தி திருட்டு சிகரெட் புகையில் ஆழ்ந்திருந்தார்கள். சபரீஷுக்கு நல்ல வலுவான தேகப் பயிற்சி உடம்பு. சுருண்ட முடியைக் கச்சிதமாய் ட்ரிம் செய்து, முகத்திற்கு ஒரு கவர்ச்சியைக் கொண்டு வந்திருந்தான். சினி காஸ்ட்யூமருக்குக் கூடத் தோன்றாத புதுப்புது டிசைன்களில் புதுப்புது ஸ்டைலில் டிரஸ் பண்ணிக் கொள்பவன். ஒருமுறை அவனைப் பார்த்த ட்ரஸ் மறுமுறை பார்ப்பது ரொம்ப கஷ்டம்.

    மூர்த்தி சபரீஷைப் பார்த்து சிகரெட் புகையும் வாயோடு கேட்டான்.

    என்னம்மா... காலேஜ் முடிஞ்சு அரை மணி நேரம் ஆச்சு... இன்னும் வீட்டுக்குப் போக மனசு வரமாட்டேங்குதா?

    உங்களுக்கு அவசரம்னா நீங்க போங்கடா.

    சபரீஷ் சொல்லிக்கொண்டே பார்வையைச் சுழற்றினான்.

    ஏண்டா... நீ...?

    என் ஆளுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்.

    யாரு... தர்ட் செமஸ்டர் ஷகிலாவா?

    ஆமா.

    ராம்நகர் ரஞ்சனி பின்னாடி ரொம்ப நாள் சுத்திட்டிருந்தியேம்மா! என்னாச்சு?

    ப்ச்ச்...

    ஏண்டா?

    தெரியலை. அவ மூஞ்சிய திருப்பிக்கிட்டா. ஜாடையா பக்கத்திலிருந்த புனிதாகிட்டே, ‘புனிதா நான் சீக்கிரமே வேற ஸ்லிப்பர் வாங்க வேண்டியிருக்கும்’ன்னு சொன்னா... அவளுக்குச் செலவு வெப்பானேன்னு ஜகா வாங்கிட்டேன்.

    அவன் சொல்லிக் கொண்டிருக்கிறபோதே –

    காம்பௌண்ட் - கதவு அருகே வந்து நின்று காத்திருக்கிற ஷகிலா தெரிந்ததும் முகத்தைப் பிரகாசத்துக்குக் கொண்டு போனான். பைக்கின் கிக்கரை உதைத்தான்.

    "ஓகேடா... நான் வர்றேன். நம்ம ஆள் வந்தாச்சு.

    ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக்கொண்டு தட தடவென ஷகிலா இருந்த திசையில் பைக்கை விரட்டினான்.

    ஹாய் ஷகி!

    ஷகிலா கையசைத்தாள்.

    ஹலோ சபரீஷ்.

    ஷகிலா ஷிஃபான் சுற்றிய மெலிசான வெளிச்சத் தூண் மாதிரி நின்றிருந்தாள். நடிகை மாதவியிடம் கடன் வாங்கின் மாதிரி கண்கள். அரிசி அரிசியாய் பல் வரிசை. இரண்டு மாசமாய் சபரீஷை தீவிரமாய்க் காதலிக்கிறாள். வீட்டுக்கு விஷயம் தெரியாது. ஆனாலும் சபரீஷோடு பைக்கில் சுற்றப் பயப்படமாட்டாள்.

    ஏன் லேட் ஷகிலா?

    பிராக்டிகல் கிளாஸ். எக்ஸ்பரிமென்ட் ரிசல்ட் உதையோ உதைன்னு உதைச்சு செமத்தியாக் காய வச்சுடுச்சு... ஒரு வழியா ரிசல்ட்டைக் கொண்டு வர்றதுக்குள்ளே உயிரே போயிடுச்சு!

    சரி உக்காரு.

    எங்கே போகப் போறோம்?

    இப்ப மணி எவ்வளவு?

    மூணரை.

    நீ எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போகணும்?

    அஞ்சு மணிக்குப் போய்ச் சேர்ந்தா திட்டு இல்லாம வீட்டுக்குள் நுழையலாம். ஏழு மணிக்குன்னா ‘ஏண்டி லேட்?’ங்கற கேள்வியோட நுழையலாம். ஒன்பது மணிக்குன்னா ‘கொஞ்சம் கூட இவளுக்கு இன்னும் பொறுப்பு வரலை’ ங்கற டோஸோட நுழையலாம். அதுக்குமேல லேட்டா நான் இன்னும் போனதில்லை சபரீஷ்!

    சபரீஷ் சிரித்தான்.

    அப்படின்னா இன்னிக்கு எட்டு அம்பத்தஞ்சுக்குப் போறே... ஓகே?

    ஏன் அத்தனை நேரம்? நாம எங்கே போறோம்? - சினிமாவுக்கா?

    நோ... நோ... சினிமாவுக்குப் போய்ப் போய் சலிச்சுடுச்சு.

    பின்னே?

    சத்யா’ன்னு சொல்லி ஒரு டிரைவ் இன் ரெஸ்டாரென்ட் சிடி லிமிட்டைத் தாண்டி இருக்கு. சுற்றிலும் காட்டேஜ் ஃபெசிலிடிஸ் கூட இருக்கு.

    பில்லியனில் தொற்றினாள் ஷகிலா.

    அந்த அகலமான சாலையில் சைலன்சரில் புகையைப் பீச்சிக்கொண்டே சீறலாய்ப் பறத்தினான் சபரீஷ். எதிர்க் காற்று சலீரென்று அவர்களை அலம்பியது.

    சபரீஷ்.

    சபரீஷ் ரியர் வ்யூ மிர்ரரில் ஷகிலாவைப் பார்த்தான்.

    ‘என்ன?’ என்கிற மாதிரி தலையை ஆட்டிக் கேட்டான்.

    இப்ப மணி மூணரைதான்.

    சரி.

    நாலுமணி நேரத்துக்கு மேலே ரெஸ்டாரெண்ட்ல இருக்கப் போறோமா?

    சபரீஷ் சிரித்தான்.

    நான் ஒரு காட்டேஜ் புக் பண்ணியிருக்கேன்.

    எதுக்கு?

    "இதென்ன கேள்வி... எதுக்கு புக் பண்ணுவாங்க? ஜஸ்ட் ஒரு நாலு மணி

    Enjoying the preview?
    Page 1 of 1