Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எங்கிருந்தோ ஆசைகள்!
எங்கிருந்தோ ஆசைகள்!
எங்கிருந்தோ ஆசைகள்!
Ebook79 pages24 minutes

எங்கிருந்தோ ஆசைகள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோயமுத்தூர்,
 ஹோட்டல் யாஸ்மின். எல்லா ஃப்ளோர்களும் வெளிச்ச நிறையலோடு இருந்தது. நமக்குத் தேவை ஏழாவது ஃப்ளோர்.
 அறை எண் 123.
 கதவு உட்தாளிடப்பட்டிருக்க –
 உள்ளே சிவப்பு நிற ஜீரோ வாட் வெளிச்சம் மங்களாய் வழிந்து கொண்டிருந்தது. ஏசியின் கும்மென்று சுருதிலயம் பிசகாமல் ரீங்கரித்துக் கொண்டிருந்தது. சுவரோடு பதித்த ஒரு டிஜிட்டல் ஸ்கிரீன் 9.20 என்று கண்சிமிட்டிக் கொண்டிருந்தது.
 கடல் மாதிரி பரந்து கிடந்த டபுள் காட்டின் போம் விரிப்பின் மேல் ரவீந்தரும் ஃபிலோமினாவும் உல்லன் போர்வைக்குள் கழுத்து வரை புதைந்திருந்தார்கள்.
 ஃபிலோமினா அந்தச் சிவப்பு வெளிச்சப் பின்னணியில் அவளின் கூந்தல் அடர்த்திக்கு நாசியின் வளைவுக்கு அளந்து செதுக்கின உதடுகளுக்கு பிரகாசிக்கின்ற கண்களுக்கு அசல் தேவதையாய் மின்னினாள். அவனின் பரந்த மார்பின் மேல் சரிந்து கொண்டு சிரத்தையாய் மார்பு ரோமத்தை விரல்களால் அளந்து கொண்டிருந்தாள்.
 ரவீந்தர் - அவளின் மானேஜிங் டைரக்டர் - கல்யாணமான ஆனால் சுதந்திரமிழக்காத முப்பது வயது இளைஞன். பெண்கள் அழகான பெண்கள் இவனைப் பொறுத்தவரை அன்றாடம் மாற்றிக் கொள்கிற சட்டை மாதிரி அல்லது தினசரி கிழிக்கிற காலண்டர்தாள் மாதிரி. அழகாகப் பேசிக் கவர்வான். முழுசுமாய் தொட்டு பின் உதறுவான். சில பேர் தற்கொலையில் இறங்கியிருக்கிறார்கள். சிலபேர் முடிந்தவரை மிரட்டிப்பார்த்து தோற்று ஒரு அப்பாவிப் புருஷனுக்கு ஒழுங்கான மனைவியாக போய்விட்டார்கள். அவமானத்துக்கு பயந்துகோர்ட்டின் அப்பட்டமான விசாரணைக்கு பயந்து ஒருத்தர் கூட துணிந்து இவனை எதிர்க்காதது அவன் அதிர்ஷ்டம். இந்த நிமிஷம் தன் கம்பெனி ஸ்டெனோ ஃபிலோமினாவை வீழ்த்திக் கொண்டிருக்கிறான்.
 "ரவி..."
 "ம்..."
 "என்னை மறந்துடமாட்டீங்களே?"
 "ம்ஹூம்..."
 "இன்னிக்கு துணிஞ்சு உங்ககிட்ட என் உடம்பையே முழுசா கொடுத்துட்டேன் ரவி."
 "ம்..."
 "என்ன... ம்..."
 "எல்லாத்துக்கும் ஒரு ம்... சொல்லுங்க! இவ்வளவு தூரம் நான் துணிஞ்சது எந்த தைரியத்தில் தெரியுமா?"
 "ம்..."
 "தைரியம்னு சொல்றதை விட நம்பிக்கைன்னு சொல்லலாம்..."
 "சொல்லு..."
 "நீங்க கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சும் நான் உங்ககிட்ட இவ்வளவு தூரம் வரை பழகினதுக்குக் காரணம்... நீங்க என்னை கடைசி வரைக்கும் கைவிடாம காப்பாத்துவீங்கங்கற நம்பிக்கைதான்."
 "ம்...!"
 "என்னைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் தொடமாட்டீங்கங்கறே நம்பிக்கைதான்."
 "ம்..."
 "என்ன, என் நம்பிக்கைகளை காப்பாத்துவீங்களா?"
 "ம்...""என்னைக் கடைசிவரை கைவிடமாட்டீங்களே...?"
 "மாட்டேன்."
 "என்னைத் தவிர வேற பொண்ணு யாரையும் தொடமாட்டீங்களே?"
 "ம்ஹும்"
 "ம்ஹும்னா?"
 "தொடமாட்டேன்?"
 "ப்ராமிஸ்?"
 "ப்ராமிஸ்..."
 "வெறும் வாயில் சொன்னா பத்தாது..."
 "ஒரு முத்தம் கொடுத்துட்டே சொல்லணுமா?"
 "யு... நாட்டி... ச்சீய்... தள்ளுங்க... கையில் அடிச்சு ப்ராமிஸ் பண்ணுங்க..."
 பண்ணினான்.
 "போதுமா?"
 "போதும்."
 "சத்தியத்தைக் காப்பாத்துவீங்களா?"
 "நிச்சயமா... இனி தொண தொணக்காதே! வா..." அவளை வாரினான்,

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223648451
எங்கிருந்தோ ஆசைகள்!

Read more from Rajeshkumar

Related to எங்கிருந்தோ ஆசைகள்!

Related ebooks

Related categories

Reviews for எங்கிருந்தோ ஆசைகள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எங்கிருந்தோ ஆசைகள்! - Rajeshkumar

    1

    பஸ் கொடைக்கானலுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாள் ‘ஹம்ம்ம்’மென்ற முனகலோடு திணறலாய் ஏறிக் கொண்டிருக்க, இந்த நாவலுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் பஸ்சின் மத்தியப் பகுதியில் இருக்கிற லாங் ஸீட் ஒன்றில் நிரம்பியிருந்தார்கள்.

    கார்த்திக்.

    வத்சலா.

    லாவண்யா.

    சீட்டின் கோடியிலிருக்கும் கார்த்திக்கிலிருந்து வரிசையாய் பார்ப்போம். கார்த்திக் நம் தேச சுதந்திரத்துக்கு ஐந்து வயது குறைவானவன். நடுத்தர குடும்பஸ்தன் என்பது அப்பட்டமாய் முகத்தில் தெரிந்தது. கறுப்பு பிரேம் கண்ணாடி பத்து வருஷமாய் அக்கெளண்ட் கிறுக்கியதன் பலனாக நாசியின் மேல் ஏறிக் கொண்டிருந்தது. ஹீரோ பர்சனாலிட்டிக்கு ஒரு மாற்றுக் குறைந்த தோற்றம்.

    அடுத்து –

    வத்சலா. உடம்பில் முப்பது வருஷங்களை நழுவவிடப்பட்டிருப்பவள். கார்த்திக் - ஒரு சுபயோக சுபலக்கினத்தில் புரோகிதர் மாங்கல்யம் தந்துநானே சொல்ல கைப் பிடித்தவள்; சட்டென நடிகை மாதுரியை நினைவுக்குக் கொண்டு வருகிற தோற்றம். தந்த நிறம். மனைவிக்கே உரித்தான எல்லாவற்றையும் அட்சரம் பிசகாமல் கார்த்திக்குக்கு செய்து வருபவள். (திடீர் திடீரென புதுப் புடவைக்கு நச்சரிப்பது உட்பட) இந்த நிமிஷம் ஊதா நிற ஆர்கன்ஸா புடவையை உடலுக்குச் சுற்றி இருந்தாள்.

    வத்சலாவுக்கு பக்கத்தில் நிரம்பியிருந்த லாவண்யாவின் தலைப்பிரதேசம் ஜன்னல் காற்றால் பின்னோக்கி சிலும்பிக் கொண்டு ஒரு விசேஷ அழகை அவள் மீது தூவியிருந்தது. விஸ்தாரமான கண்களிரண்டிலும் தூண்டில் கொக்கி பதுங்கியிருந்தது. பார்ப்பவர்களை சுண்டி இழுத்தன, கோட் சிவப்போடு உதடுகள். வரிசைப் பற்கள். குழந்தைத்தனமான ஆர்வத்தோடு வெளிப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த லாவண்யா கூப்பிட்டாள்.

    அண்ணி...

    லாவண்யாவின் அழைப்பாள் திரும்பினாள் வத்சலா.

    என்ன லாவண்யா?

    கொடைக்கானல் இந்த குளிர் குளிருது.

    உள்ளங்கைகளை தேய்த்து விட்டுக் கொண்டபடி கேட்டாள்,

    கார்த்திக் குறுக்கிட்டான்.

    அதான் புறப்படறதுக்கு முன்னமே சொன்னேன். இந்த சீசன்ல கொடைக்கானல் வந்தா சுத்திப் பாக்க மனசு வராது... கம்பளியைப் போர்த்திக்கிட்டுத் தூங்கத்தான் தோணும்... நீதானே நச்சரிச்சே!

    ஆரம்பிச்சிடுவியே... உன்கிட்டே நான் சொன்னேனா...? அண்ணிகிட்டேதான் சொன்னேன்...

    நல்லா அடிச்சுக்கறீங்க... ரெண்டு பேரும்...! எப்படியோ இப்போ வந்தாச்சு...! சுத்தி பாக்கறதோ, கம்பளியைப் போர்த்திட்டு படுக்கறதோ... ஏதோ ஒண்ணை செய்துதான் ஆகணும்...!

    ரெண்டாவது சொன்னதை நாம் செய்யலாம். லாவண்யா சுத்திப் பார்க்கட்டும்...?

    புன்னகையோடு கார்த்திக் சொல்ல...

    அவன் காதோரம் சாய்ந்து...

    கிசுகிசுப்பாய்ச் சொன்னாள் வத்சலா, ரெண்டு பேர்க்கும் ஒரே கம்பளி போதுமா?

    ச்சீ! பேசாம வா...

    பஸ் ஊர்ப் பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்க -

    வரிசையாய்க் கடைகள், வீடுகள், சாலையில் குறைவான வாகனங்கள், ஜன்னல்கள்.

    பனி ஆவி ரூபத்தில் பிராந்தியம் பூராவும் அலைந்து கொண்டிருந்தது. அங்கங்கே டூரிஸ்ட் பஸ்கள் ரோட்டோரம் இளைப்பாறிக் கொண்டிருந்தன.

    சில நிமிஷ ஓட்டத்தில் இவர்களின் பஸ் பஸ்ஸ்டாண்டுக்குள் பிரவேசித்தது.

    முன், பின் படிக்கட்டோரமாய்க் குழுமிக் கொண்டு அகலம் குறைவான படிக்கட்டுகளில் ஒவ்வொருத்தராய் சூட்கேசோடு, ப்ரீஃப்கேசோடு ஏர்பேக்கோடு, வெறும் கையோடு என்று இறங்கினார்கள். பெரும்பான்மையோர் குளிர் தாக்குதலை ஸ்வெட்டர் கேடயத்தால் தடுக்க முயற்சித்து பாதி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

    கார்த்திக், வத்சலா, லாவண்யா மூன்று பேரும் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

    அண்ணி... இதுக்கு முன்னாடி இங்கே வந்திருக்கீங்களா?

    ம். காலேஜ் ஃபைனல் படிக்கும்போது ஒரு தடவை வந்திருக்கேன்...?

    பேசிக் கொண்டே பஸ் ஸ்டாண்ட் சுற்றுப் புறத்தில் தேடி ஒரு நல்ல லாட்ஜைத் தொட்டார்கள். ஹோட்டல் ஸ்வர்ணாலயா என்று சைன் போர்டு தலையில் மாட்டப்பட்டிருந்த மூன்று ஃப்ளோர் கட்டிடம். புது டிஸ்டெம்பர் பூச்சு கண்ணை அடித்தது.

    ஹோட்டலின் முன்புற இடைவெளி

    Enjoying the preview?
    Page 1 of 1