Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ரோஜா முள் துரோகம்!
ரோஜா முள் துரோகம்!
ரோஜா முள் துரோகம்!
Ebook246 pages1 hour

ரோஜா முள் துரோகம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யதுநந்தன் டாக்டர் மேத்தா சொன்னதைக் கேட்டு மெல்லச் சிரித்தான்.
 "டாக்டர்...! நான் இன்னும் ஆறு அல்லது ஏழுவருஷம் உயிரோடு இருக்கக்கூடிய சாத்தியம் இருக்குன்னு நீங்க சொல்லியிருக்கீங்க... அதுவரைக்கும் நான் சந்தோஷமா வாழ்க்கையை என்ஜாய் பண்றதுக்காகத்தான் இந்தக் கல்யாணமே... நா உயிரோடு இருக்கப் போகிற கடைசி நிமிஷம் வரைக்கும்கூட இந்த உண்மை வெளியே யார்க்கும் தெரியப்போறதில்லை. அதுக்கப்புறமும் தெரியப் போவதில்லை... என்னோட மரணத்துக்கான வேறு காரணத்தைச் சொல்லத்தான் நீங்க தயாராயிருக்கீங்களே...?"
 "இருந்தாலும் யது... இந்த விஷயத்தில் நீயும் சரி, நானும் சரி ஜாக்கிரதையா இருக்கணும். ஒரு எய்ட்ஸ் பேஷண்ட் தனக்கு இருக்கிற நோயை மறைச்சு கல்யாணம் பண்ணி ஒரு பெண்ணோட வாழ்க்கையைப் பாழாக்கி அவளையும் மரணத்துக்குக் கொண்டுபோறது கொலைக் குற்றத்தைக் காட்டிலும் கொடுமையான குற்றம்... விஷயம் வெளியே தெரிஞ்சா நீயும் நானும் உள்ளே போகவேண்டியதுதான்...!"
 "இது யார்க்கும் தெரியப் போறதில்லை. கவலையை விடுங்க டாக்டர்..."
 மேத்தா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு யதுநந்தனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
 "யது...!"
 "ம்..."
 "கடைசி நிமிஷம் வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கத் தயாராய் இருந்த வைஜெயந்தி திடீர்ன்னு லெட்டர் எழுதி வெச்சுட்டு ஓடிப்போக என்ன காரணம்?"
 "தெரியலையே... ராத்திரி ஒன்பது மணிக்குக்கூட டைனிங் ஹால்ல ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம்...பேசினாள?"
 "ம்..."
 "என்ன பேசினா?"
 "நான் போட்டிருக்கிற சஃபாரி ட்ரஸ் கலர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னா."
 "நீ ஏதாவது பேசினியா?"
 "ஆமா..."
 "என்ன பேசினே...?"
 "என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல நிஜமாவே உனக்கு இஷ்டமான்னு கேட்டேன்..."
 "அவ என்ன சொன்னா?"
 "நம்ம கல்யாணம், மண்டபம் வரைக்கும் வந்தாச்சு. இனியும் சந்தேகமான்னு கேட்டு சிரிச்சா..."
 "எல்லாம் நடிப்பு."
 "அது இப்பத்தானே தெரியுது."
 "ஒருவேளை உனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிற விஷயம் அவளுக்கு தெரிஞ்சிருக்குமோ...?"
 "நோ... நோ டாக்டர்... அப்படி அவளுக்குத் தெரிஞ்சிருந்தா அந்த உண்மையை லெட்டர்ல கொட்டியிருப்பா... இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றதுக்கு அது சரியான காரணமாச்சே..."
 "யது...! நான் உன்னோட ஃபேமிலி டாக்டர்ங்கிற முறையில் ஒரு புத்திமதியைச் சொல்லலாமா...?"
 "சொல்லுங்க டாக்டர்."
 "இந்த வைஜெயந்தி உனக்கு வேண்டாம்... விட்டுடு!"
 "ஏன் டாக்டர்?"அவ உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டப் படலை. அவளை நாளைக்கு போலீஸ் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்து கட்டாயமா கல்யானம் பண்ணினாலும் அவ மறுபடியும் ஓட மாட்டாள்ங்கறது என்ன நிச்சயம்?"
 "கழுத்துல தாலி விழுந்த பிறகு அவ ஓடமாட்டா டாக்டர். கல்யாணத்துக்கு முன்னாடி தான் இந்த மாதிரியான தைரியமெல்லாம் வரும்..."
 "உனக்கு வேற பெண்ணா கிடைக்க மாட்டா?"
 "இவ்வளவு அழகா கிடைக்க மாட்டாளே!" என்று சொல்லிப் புன்னகைத்த யதுநந்தன் தொடர்ந்தான்.
 "டாக்டர்...! என்னோட ஆயுளில் மிச்சம் இருக்கிற இந்த ஆறேழு வருஷங்களைச் சந்தோஷமா கழிக்கணும்ங்கிற எண்ணம் வந்ததுக்குக் காரணமே வைஜெயந்தியை நான் பார்த்ததுதான்... அவ எனக்கு வேணும் டாக்டர்... அட் எனி காஸ்ட் ஐ வாண்ட் டூ மேரீஹர்! அவளோட தாய்மாமனுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து சரிக்கட்டினது வீணாகப் போயிடக்கூடாது டாக்டர்..."
 "இட்ஸ் ஓ.கே. உன்னோட விருப்பம் அதுவாயிருந்தா, நா ஒண்ணும் சொல்லப் போறதில்லை." தாய்மாமன் சிகாமணி உள்ளே வந்தார். மேத்தா பேச்சை நிறுத்திக் கொள்ள வியர்த்துப் போயிருந்த தன் முகத்தை, தோளில் போட்டிருந்த துண்டால் ஒற்றிக் கொண்டே சிகாமணி சொன்னார்.
 "நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க மாப்பிள்ளை... அவளை போலீஸ் கண்டு பிடிக்கிறதுக்கு முந்தி நான் அனுப்பியிருக்கிற ஆட்கள் அவளை அமுக்கிக் கொண்டாந்துடுவாங்க... இப்படி ஆயிப்போச்சேன்னு நீங்க மனசுல எதையும் வெச்சுக்கக் கூடாது."
 யதுநந்தன் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு சொன்னான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223846154
ரோஜா முள் துரோகம்!

Read more from Rajeshkumar

Related to ரோஜா முள் துரோகம்!

Related ebooks

Related categories

Reviews for ரோஜா முள் துரோகம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ரோஜா முள் துரோகம்! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    அந்த கல்யாண மண்டபத்துக்கு முன்னால் போலீஸ் ஜீப் வந்து நின்றபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

    மண்டப வாசலில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் புகைந்து கொண்டிருக்க உள்ளே இருந்த சொற்ப கும்பல் போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் சலசலப்பை நிறுத்திக் கொண்டது.

    இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் பூட்ஸ் சத்தங்களோடு மண்டபத்துக்குள் நுழைய, ஒரு பெரியவர் எதிர்கொண்டார்; கைகூப்பினார்.

    வாங்க இன்ஸ்பெக்டர்...!

    நீங்க...?

    என் பேர் சிகாமணி. பொண்ணுக்கு தாய்மாமன்.

    போன்ல பேசி கம்ப்ளைண்ட் கொடுத்தது...?

    நான்தான்...

    பெரியவர் பேசிக் கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவர் நாற்காலியை எடுத்துப்போட, இன்ஸ்பெக்டர் சாய்ந்தார். தொப்பி கைக்கு வந்து மடியில் வசதியாய் உட்கார்ந்து கொண்டது.

    பெண்ணோட பேர் என்ன?

    வைஜெயந்தி.

    வயசு?

    இருபத்தி மூணு.

    படிச்சிருக்கா?

    பி.ஏ. பாஸ் பண்ணியிருக்குங்க...

    அந்த லெட்டர் எங்கே...?

    சிகாமணி தன் சட்டைப் பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்து நீட்டினார்.

    இன்ஸ்பெக்டர் வாங்கிப் பிரித்தார். சாய்வான கையெழுத்தில் அந்தப் பக்கம் முழுவதும் வரிகளாய் ஓடியிருந்தன.

    அன்புள்ள மாமா அவர்களுக்கு, வைஜெயந்தி எழுதிக் கொண்டது. எனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. கட்டாயமாக எனக்குத் திருமணம் செய்துவைக்க முயற்சி செய்தீர்கள். அதன் விளைவு...? இப்போது நான் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டியதாகி விட்டது. என் வாழ்க்கையை என் இஷ்டப்படி அமைத்துக் கொள்வதற்காகப் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். அம்மாவையும் அப்பாவையும் சின்ன வயதிலேயே இழந்து விட்ட என்னை வளர்த்துப் படிக்க வைத்த உங்களுடைய அன்பு உள்ளத்துக்கு என் நன்றி!

    - இப்படிக்கு

    வைஜெயந்தி.

    இன்ஸ்பெக்டர் கடிதத்தைப் பார்த்துவிட்டு சிகாமணியிடம் நிமிர்ந்தார். தன் மணிக்கட்டில் இருந்த வாட்சை ஒரு பார்வை பார்த்தபடி கேட்டார்...

    இப்ப மணி பன்னிரெண்டரை. வைஜெயந்தி காணாமே போனது எத்தனை மணிக்கு உங்களுக்குத் தெரிந்தது.....?

    பதினொன்றே முக்கால் மணியிருக்கும்...

    மண்டபத்துல கிட்டத்தட்ட நூறு பேர் சொந்த ஜனம் இருக்கீங்க... இத்தனை பேரோட பார்வையிலும் படாமே வைஜெயந்தி எப்படி மண்டபத்தை விட்டு வெளியே போயிருக்க முடியும்?

    அவ சாமர்த்தியமா ஒரு காரியம் பண்ணித்தான் மண்டபத்தைவிட்டு வெளியே போயிருக்கா இன்ஸ்பெக்டர்.

    என்ன காரியம்...?

    பதினோரு மணி சுமார்க்கு மண்டபத்துல திடீர்ன்னு கரண்ட் போயிடுச்சு. இந்த ஏரியாவில் அடிக்கடி கரண்ட் போறதும் கொஞ்ச நேரத்துல வர்றதும் சகஜம். கரண்ட் வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தோம். அந்த நேரத்துலதான் வைஜெயந்தி டாய்லட் போகணும்னு கூட இருக்கிற பெண்கள்கிட்ட சொல்லிட்டு மண்டபத்துக்குப் பின்னாடி பக்கம் இருக்கிற டாய்லட் அறைக்குப் போயிருக்கா. போனவ அரைமணி நேரமாகியும் வரலை. ஒரு பெண்ணை அனுப்பி டாய்லட்டுக்குள்ள பார்க்கச் சொன்னோம். வைஜெயந்தி டாய்லட்டுக்கே போகலைன்னு அப்பத்தான் தெரிஞ்சுது. அதுக்கப் புறம்தான் இன்னொரு விஷயமும் புரிஞ்சுது...

    என்ன...?

    மண்டபத்துக்குள்ளே கரண்ட் தானாக போகலை. யாரோ ஃப்யூஸ் காரியரை மெயின் ஸ்விட்ச் போர்டிலிருந்து உருவி எடுத்திருக்காங்க...

    அது யார்ன்னு தெரிஞ்சுதா?

    தெரியலை...

    வைஜெயந்திக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு அவ எழுதி வெச்சுட்டுப் போயிருக்கிற லெட்டரிலிருந்து தெரியுது... இஷ்டமில்லாத கல்யாணத்தை ஏன் பண்றீங்க...?

    இப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு எல்லாப் பெண்களும் சொல்றதுதானேன்னு நினைச்சு கல்யாண ஏற்பாடுகளை மளமளன்னு பண்ணிட்டேன்.

    இங்கே... மாப்பிள்ளை யாரு?

    பக்கத்து ரூம்லதான் இருக்கார். பாவம் இடிஞ்சு போயிட்டார்!

    சிகாமணி இன்ஸ்பெக்டரைக் கூட்டிக்கொண்டு பக்கத்து அறைக்குப் போக, கட்டிலில் சாய்ந்து கண்களை மூடியிருந்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்தார்.

    கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வயது இருக்கலாம். பாதி வழுக்கையான தலை. பட்டு வேஷ்டியும் ஷர்ட்டும் ஒரு மாப்பிள்ளைக்குரிய தோற்றத்தை வேண்டா வெறுப்பாக கொடுத்திருந்தன..

    இன்ஸ்பெக்டரின் கண்களில் அதிர்ச்சி.

    இவராமாப்பிள்ளை...? சிகாமணி தயக்கமாய் தலையாட்டினார்.

    ஆ... ஆமா... ஸார்...

    இன்ஸ்பெக்டர் கோபமானார்.

    என்னய்யா... ஆமா...? மாப்பிள்ளைக்கு வயசு அதிகமாயிருக்கும் போலிருக்கே...? ரொம்ப அதிகமில்லை ஸார்... நாற்பத்திரெண்டுதான்.

    ரெண்டாந்தாரமா...?

    ஆமா ஸார்...

    இன்ஸ்பெக்டர் எரிச்சலானார்.

    இப்படியொரு மாப்பிள்ளையை ஏற்பாடு பண்ணினா எந்தப் பொண்ணுதான் ஒடிப்போக மாட்டா...? வைஜெயந்தி ஓடிப்போனது நியாயம்தான். அவ எங்கேயாவது போய் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சந்தோஷமா இருக்கட்டும்...

    ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர்... மாப்பிள்ளை கையமர்த்திவிட்டு புன்னகைத்தான்; கேட்டான்.

    நான் யார்ன்னு உங்களுக்குத் தெரியுதா?

    இன்ஸ்பெக்டர் தலையாட்டினார்.

    தெரியலையே...?

    முகர்ஜி க்ரூப்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்க...

    அதைக் கேள்விப்படாமே இருக்க முடியுமா...? இண்டஸ்ட்ரியல் ஃபீல்டுல அது பிரசித்தமான பேராச்சே...

    அந்த க்ரூப்புக்கு நான் ஜி.எம். ஜெனரல் மேனேஜர். பெயர் யதுநந்தன். சொன்னவன் தன் ப்ரீப்கேஸைத் திறந்து வெண்ணெயால் செய்த மாதிரி இருந்த விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து இன்ஸ்பெக்டரிடம் நீட்டினான்.

    அதை அவர் வாங்கிப் பார்த்துவிட்டு குரலில் கணிசமாய் மரியாதையையும் பணிவையும் கலந்து கொண்டார்.

    ஸார்... பெரிய பதவியில் இருக்கிற நீங்களே இப்படி ஒரு பொண்ணோட விருப்பத்துக்கு எதிரா...

    யதுநந்தன் சிரித்தான். யூ... ஸீ... மிஸ்டர் இன்ஸ்பெக்டர். நான் ஒண்ணும் வயசான கிழவன் இல்லை. அயாம் ஒன்லி ஃபார்ட்டிடூ... ஆரோக்கியமா இருக்கேன். நான் நினைச்சிருந்தா ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து என்னோட ஸ்டேட்டஸுக்குத் தகுந்த மாதிரி பெண் எடுத்திருப்பேன். பட்... எனக்குப் புடிக்கலை. என்னோட கம்பெனிக்கு ஒரு இண்ட்டர்வ்யூவுக்காக வந்த வைஜெயந்தியைப் பார்த்தேன், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். முறைப்படி அவளோட தாய் மாமன்கிட்ட வந்து பெண் கேட்டேன்.

    யூ மே பி கரெக்ட் ஸார்... பட், வைஜெயந்திக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையே...?

    சிகாமணி குறுக்கிட்டார். அவளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது. யாரோ அவ மனசைக் கலைச்சிருக்காங்க இன்ஸ்பெக்டர்... வைஜெயந்திக்கு இப்பேர்ப்பட்ட இடம் கிடைக்கக் கொடுத்து வெச்சிருக்கணும். ரெண்டாந்தாரமா ஒருத்தர்க்கு வாழ்க்கைப்படறது ஒண்ணும் பாவமான காரியம் இல்லை.

    இருந்தாலும்...

    இன்ஸ்பெக்டர் குரலை இழுத்துக் கொண்டிருக்கும் போதே யதுநந்தன் அறைக் கதவைச் சாத்திவிட்டு பக்கத்தில் வந்தான்.

    இன்ஸ்பெக்டர்...! ஐ வான்ட் ஹர். நாளைக்குக் காலையில் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளே முகூர்த்தம். அந்த முகூர்த்த நேரத்துக்குள்ளே நான் அவ கழுத்துல தாலி கட்டியாகணும்! வைஜெயந்தி இந்த மெட்ராஸ் எல்லையை விட்டு அதுக்குள்ளே எங்கேயும் போயிருக்க முடியாது. நீங்க கொஞ்சம் விகரஸா ஸ்டெப்ஸ் எடுத்தா... அவளை மடக்கிடலாம். இன்னும் ஆறு மணி நேரம் டயம் இருக்கு. இந்த அவகாசத்துக்குள்ளே நீங்க மட்டும் வைஜெயந்தியை கண்டுபிடிச்சு என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டா... உங்களுக்கு அந்த நிமிஷமே அஞ்சுலட்ச ரூபாய் தாறேன்...

    இன்ஸ்பெக்டர் அயர்ந்தார். அ... அஞ்சு லட்சம்...!

    எஸ்... இது உங்களுக்கும் எனக்கும் இருக்கிற டீல். இப்பவே நீங்க அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை வாங்கிக்கலாம் சொன்ன யதுநந்தன், மறுபடியும் ப்ரீப் கேஸைத் திறந்து உள்ளே மறைத்துவைக்கப்பட்டிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எடுத்து இன்ஸ்பெக்டரின் கையில் திணித்தான்.

    இன்ஸ்பெக்டரின் சிரிப்பு 70 எம்.எம். திரையாய் விரிந்தது. பணத்தை வாங்கி காக்கிச்சட்டையின் மார்புப் பகுதிக்குள் நுழைத்தபடி சொன்னார்:

    யூ டோன்ட் வொர்ரி மிஸ்டர் யதுநந்தன்! இப்பவே போலீஸ் கண்ட்ரோல் ரூம் மூலமா தமிழ்நாட்டு எல்லையில் இருக்கிற எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் செக் போஸ்ட்களுக்கும் தகவல் கொடுத்துடறேன். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஈவன் ஏர்போர்ட்டுக்குக்கூட மெஸேஜை கன்வே பண்ணிடறேன். வைஜெயந்தியோட போட்டோ இருக்கா...?

    இருக்கு...

    குடுங்க... அப்படியே அடையாளங்களையும் சொல்லுங்க. காலையில ஆறு மணிக்குள்ளே மடக்கிக் கொண்டாந்துரலாம்.

    முடியுமா...?

    முடியுமாவா...? இந்த இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் வலையை வீசினா எந்த மீனும் மாட்டியாகணும். இது போலிஸோட விதியில் புதுவிதி.

    சிகாமணி வைஜெயந்தியின் நான்கைந்து போட்டோக்களைக் கொண்டு வந்து கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு கண்களை வியப்பில் விரித்தார்.

    பொண்ணு ரொம்பவும் அழகாயிருக்காங்களே! போட்டோவைப் பார்க்கும்போதே ரோஜா நிறம்ன்னு தெரியுது. சுருட்டை முடி, பெரிய கண்கள், சிரிக்கும்போது கன்னத்துல விழற குழி. எல்லாமே நோட்டபிள் ஐடென்டிஃபிகேஷன்ஸ். ரொம்ப ஈஸியா மடக்கிடலாம்.

    ப்ளீஸ்... டூ இட் இன்ஸ்பெக்டர்!

    ஐந்து லட்ச ரூபாய் சந்தோஷத்தில் இன்ஸ்பெக்டர் நகர்ந்தார். சிகாமணியும் அவரைத் தொடர்ந்து நடக்க –

    Enjoying the preview?
    Page 1 of 1