Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mul Nilavu
Mul Nilavu
Mul Nilavu
Ebook136 pages1 hour

Mul Nilavu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404180
Mul Nilavu

Read more from Rajesh Kumar

Related to Mul Nilavu

Related ebooks

Related categories

Reviews for Mul Nilavu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mul Nilavu - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    முள் நிலவு

    Mul Nilavu

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நிலா கண்ணாடிக்கு முன்பாய் நின்று ஸ்டிக்கர் பொட்டை நெற்றியின் மையம் பார்த்துப் பொருத்திக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு ப்ரியா ஒரு கன்றுக்குட்டியின் துள்ளலோடு உள்ளே வந்தாள்.

    ஏய்... நிலா... நான் கேள்விப்பட்ட நியூஸ் உண்மையா...? இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னைப் பெண் பார்க்க வரப் போறாங்களாமே...?

    பட்டுப் புடவையில், நடமாடும் சொர்க்கம் போல் இருந்த நிலா, ஸ்டிக்கரைச் சரியாய்ப் பொருத்திக் கொண்டு கண்ணாடியினின்றும் திரும்பினாள்.

    ஆமா... ஆமா...

    மாப்பிள்ளைக்கு ஸ்டேட்ஸ்ல நல்ல வேலையாமே?

    ஆமா... ஆமா...

    மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும்தான் இன்னிக்கு உன்னைப் பார்க்க வரப் போறாங்களாமே...?

    ஆமா... ஆமா...

    உங்கம்மா வந்து சொல்லித்தான் எனக்கே தெரியும். பார்த்துட்டிருந்த வேலையை எல்லாம் அப்படியே போட்டுட்டு ஓடி வர்றேன்... ஏன்டி. விஷயம் என்னன்னு சொல்லி ஒரு குரல் கொடுக்கக் கூடாதா எனக்கு?

    ஸாரிடி... ப்ரியா...! கல்யாணத் தரகர் அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். எந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கிறதுன்னு யோசனை பண்ணி முடிவு எடுக்கவே பதினைஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு...

    மாப்பிள்ளைக்கு ஸ்டேட்ல என்ன வேலை...

    ஏதோ ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் சீஃப் ப்ரோக்ராமராம்.

    அப்படின்னா சம்பளம் எக்கச்சக்க டாலர்ல இருக்கும்!

    பின்னே...?

    அவர் பேர் என்னவாம்...?

    கிருஷ்ணகாந்த்...

    ஆள் எப்படி...? போட்டோவைப் பார்த்தியா...?

    இன்னும் பார்க்கலை...

    ஏய்... பொய் சொல்லாதே...

    அட... நிஜமாத்தான்... நிலா உதட்டைச் சுழித்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிலாவின் அம்மா பாக்யம் உள்ளே வந்தாள்.

    நிலா...! மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும் வந்துட்டாங்க... நீ ரெடியா...?

    நான் எப்பவோ ரெடி...

    இதோ பார்... உன்னோட வாய்த்துடுக்கை எல்லாம் மூட்டை கட்டிட்டு அவங்க கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லணும்.

    சரி...

    மாப்பிளையோட அப்பா கொஞ்சம் பழங்கால டைப். நீ அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான் அவங்களுக்கும் பிடிக்கும், தெரிஞ்சுக்கோ.

    சரி...

    நான் குரல் கொடுக்கும்போது நீ தாம்பூலத் தட்டை எடுத்துக்கிட்டு ஹாலுக்கு வந்தாப் போதும்...

    சரி...

    அம்மாக்காரி போய்விட -

    நிலா அறையில் அடுத்த ஜன்னல் பக்கமாய் போய் - ஓரமாய் நின்று க்ரில் கம்பிகளின் வழியே ஹாலுக்குப் பார்வையைத் துரத்தினாள்.

    மாப்பிள்ளையின் அப்பா வெங்கடேஷ்வரனும் அம்மா செளந்தரமும் சோபாவில் சாய்ந்திருக்க எதிரே நிலாவின் அப்பா சிவராஜன் உரத்த குரலில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

    ப்ரியா நிலாவின் தோளைத் தட்டினாள்.

    நிலா...

    ம்...

    என்னடி இது... மாப்பிள்ளையோட அப்பா எள்ளுருண்டை கலர்ல குண்டா இருக்கார். அந்தம்மா சிவப்பா ஒட்டடைக் குச்சியாட்டம் இருக்காங்க... மாப்பிள்ளை இவங்கள்ல யார் ஜாடையா இருப்பார்னு தெரியலையே! மொதல்ல போட்டோவை வாங்கிப்பாரு... திருவண்ணாமலை ஜோதி மாதிரி இருக்கிற உனக்கு எவனாவது கரிக்கட்டை மாதிரி வந்து வாய்ச்சுடப் போறான்...

    கொஞ்ச நேரம் புலம்பாம இருக்கியா...?

    சரி... நான் போய்ட்டு அப்புறமா வர்றேன். மாப்பிள்ளையோட போட்டோவைக் கேட்டு வாங்கிவை. நான் பார்த்துட்டு ஓ.கே. சொன்னாத்தான் கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லணும்...

    ம்... ம்...

    ப்ரியா பின்பக்க வழியாய் அவளுடைய வீட்டுக்குப் போய்விட, நிலா அம்மாவின் குரலுக்காகக் காத்திருந்தாள்.

    பத்து நிமிடம் கழித்து பாக்யத்தின் குரல் ஜன்னல் அருகே கேட்டது.

    தாம்பூலத் தட்டை எடுத்துக்கிட்டு வா நிலா...

    கனமான பட்டுப் புடவைக்குள் சிக்கியிருந்த நிலா தாம்பூலத் தட்டோடு மெல்ல நடந்து ஹாலுக்குள் நுழைந்தாள்.

    கையில் இருந்த தாம்பூலத் தட்டை டீப்பாயின் மேல் வைத்து விட்டு நமஸ்கரித்த பின்னர், பாக்யத்துக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

    மாப்பிள்ளையின் அப்பா வெங்கடேஷ்வரன் ஒரு பெரிய புன்னகையோடு நிலாவை ஏறிட்டார்.

    இதோ பாரம்மா, பெரியவங்க நாங்க இந்தக் கல்யாணத்தைப் பத்திப் பேசி முடிவு எடுக்கிறதுக்கு முந்தி உன்னோட முடிவைத் தெரிஞ்சுக்க நாங்க விரும்பறோம். என் பையன் கிருஷ்ணகாந்த் அடுத்த மாதம் தான் ஸ்டேட்ஸிலிருந்து வருவான். இப்போதைக்கு என் பையனை நீ போட்டோவில் தான் பார்க்க முடியும். அதே மாதிரி அவனும் உன்னைப் போட்டோவில்தான் பார்க்க முடியும். நேத்தைக்கு என் பையன்கிட்ட ஃபோன்ல பேசும் போது நிலாவோட போட்டோவை வாங்கி அனுப்பட்டுமான்னு கேட்டேன். அதுக்கு அவன் 'வேண்டாம்பா... நான் பொண்ணைக் கல்யாணத்தன்னிக்கு மன மேடையிலேயே முதல் முதலாப் பார்க்க ஆசைப்படறேன். அது எனக்கு த்ரில்லிங்காவும் இருக்கும். பொண்ணுக்கு வேண்டுமானால் என் போட்டோவைக் குடுங்க. நான் இருக்கிற வீடியோ காசட்டைக் குடுத்து டெக்கில் போட்டுப் பார்க்கச் சொல்லுங்க. என்னைப் பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா. கல்யாணத் தேதியை நிச்சயம் பண்ணுங்க... வர்றேன்னு சொன்னான்.

    நிலா வியப்போடு நிமிர அவர் ஒரு பையை நீட்டித் தொடர்ந்தார்...

    இந்தப் பைக்குள்ளே என் மகனோட போட்டோ ஆல்பமும் வீடியோ காஸட்டும் இருக்கு. ரெண்டையும் பாரம்மா, பார்த்துட்டு என் பையனைப் பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லு...

    நிலா தயக்கமாய் வெங்கடேஷ்வரனை ஏறிட்டாள்.

    வேண்டாங்க...

    அங்கே ஆச்சர்யப் பார்வைகள் கலந்தன.

    ஏம்மா வேண்டாங்கிறே...?

    உங்க மகன் என்னோட போட்டோவைப் பார்க்காமலேயே கல்யாணத்துக்கு சம்மதம் கொடுத்திருக்கார். என்னை மணமேடையில்தான் முதல் முதலாம் பார்க்கிறதுக்குப் பிரியப்பட்டிருக்கார். அதே பிரியம் எனக்கும் இருக்கக் கூடாதா என்ன? நானும் அவரைக் கல்யாண நாள் அன்னிக்கே மணமேடையில் பார்க்க ஆசைப்படறேன்.

    மாப்பிள்ளையின் அம்மா செளந்தரம் குறுக்கிட்டாள்.

    நீ சொல்றது சரியில்லேம்மா... எதுக்கும் என் பையனோட போட்டோவை ஒரு தடவை பார்த்துடு...

    நிலா புன்னகைத்தாள்.

    வேண்டியதில்லை...

    இது என்னம்மா பிடிவாதம்?

    உங்க மகனோட பிடிவாதத்தை மட்டும் ஒத்துக்கிட்டீங்களே?

    வெங்கடேஷ்வரன் பெருமிதம் கலந்த சிரிப்போடு சிவராஜனைப் பார்த்தார்.

    இனி உங்க பொண்ணுக்கு நீங்கதான் சொல்லணும்.

    சிவராஜன் மகளை ஏறிட்டார். "பாரம்மா, கல்யாணம்ங்கிறது சாதாரண விஷயமில்லை. ரெண்டு காதையும் கண்ணையும் அகலமா திறந்து வெச்சுக்கிட்டு யோசனை பண்ண வேண்டிய விஷயம். மாப்பிள்ளை உன்னோட

    Enjoying the preview?
    Page 1 of 1