Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சொர்க்கம் என் பக்கம்
சொர்க்கம் என் பக்கம்
சொர்க்கம் என் பக்கம்
Ebook292 pages1 hour

சொர்க்கம் என் பக்கம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கங்காதரன் ரெயில் பெட்டிக்கு வெளியே நின்றிருந்த அந்த சின்ன கும்பலில் கலந்து பெட்டிக்கு உள்ளே எட்டிப்பார்த்தார்.
 ஒரு பெண்ணின் உடல் குப்புற விழுந்து கிடந்தது.
 இதயத்துடிப்பு உச்சத்துக்குப் போயிற்று.
 'அது ஜமுனாவா?'
 'கடவுளே! அது ஜமுனாவாக இருக்கக்கூடாது!'
 மனதுக்குள் எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு பார்வையை இன்னமும் உன்னிப்பாக்கினார்.
 அந்தப் பெண்ணின் முகம் பக்கவாட்டில் தெரிந்ததும் இதயத்தில் துடிப்பு குறைந்து ஒரு நிம்மதி பரவியது.
 'இது ஜமுனா இல்லை. வேறு யாரோ!'
 கங்காதரன் பரபரவென்று மற்ற பெட்டிகளுக்குப் போய் பார்த்துவிட்டு தன் மனைவி அன்னபூரணியிடம் வந்தார்.
 அவள் பதட்டமாய்க் கேட்டாள்.
 "என்னங்க... இந்த டிரெயினில் ஜமுனா வரலை போலிருக்கே... ஒரு வேளை அடுத்த டிரெயினில் வர்றாளோ என்னவோ?"
 "அவள் இந்த டிரெயினை தவறவிட்டிருந்தா நமக்கு உடனே போன் பண்ணிச் சொல்லியிருப்பா. ஏன் போன் பண்ணிச் சொல்லலை...?""போன் பண்ண நேரம் இல்லாமல் போயிருந்தா...?"
 "இதுக்கு அடுத்த டிரெயின் நீலகிரி எக்ஸ்பிரஸ். அது சரியாக ஆறுமணிக்கு வந்துடும்..."
 "எனக்கென்னமோ ஜமுனா அந்த டிரெயினில்தான் வருவாள்னு என் மனசுக்குப் படுது..."
 "எனக்கொரு சந்தேகம் அன்னபூரணி..."
 "என்ன?"
 "இந்த டிரெயின் வட கோவை ஸ்டேஷனிலும் நிற்கும். ஒருவேளை ஜமுனா அந்த ஸ்டேஷன்ல இறங்கி வீட்டுக்குப் போயிருந்தா?"
 "அப்படியும் இருக்கலாமோ?"
 "எதுக்கும் நம்ம வீட்டுக்கு போன் பண்ணி கேட்டுடறேன்..."
 கங்காதரன் பிளாட்பாரத்தின் கோடியில் இருந்த எஸ்.டி.டி.பூத்தை நோக்கிப் போனார்.
 அந்தப் பெண்ணின் உடம்பை இப்போது பெட்டிக்கு வெளியே கொண்டு வந்து கிடத்தியிருந்தார்கள். முகத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.
 ஒரு கான்ஸ்டபிள் இன்னொரு கான்ஸ்டபிளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
 "இந்தப் பொம்பளைகளுக்கு எப்பத்தான் புத்தி வருமோ தெரியலை. எவனாவது ஷோக்கா இருந்தா அவனைக் காதலிக்க வேண்டியது. அவன் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்றதை நம்பி உடம்பைக் கொடுக்க வேண்டியது. வயித்தை ரொப்பிக்க வேண்டியது. இந்த ஷோக்கு பேர்வழி கைவிட்டதும் இப்படி பூச்சி மருந்தை குடிச்சு தற்கொலை பண்ணிக்க வேண்டியது. நல்ல வேளை கடிதம் எழுதி வைச்சுட்டு செத்துப் போயிருக்கா.
 இல்லேன்னா இவள் யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ளே வருஷம் ஓடிடும்."
 கங்காதரனின் காதுகளில் பேச்சுக்குரல் விழுந்து கொண்டிருக்க, அவர் ஸ்டேஷனில் வால் பகுதியில் இருந்த பூத்தை நோக்கிப் போனார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224455751
சொர்க்கம் என் பக்கம்

Read more from Rajeshkumar

Related to சொர்க்கம் என் பக்கம்

Related ebooks

Related categories

Reviews for சொர்க்கம் என் பக்கம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சொர்க்கம் என் பக்கம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    கோவை ரெயில் நிலையம்.

    விடியற்காலை ஐந்து மணி.

    உடம்புக்கு சால்வாயைப் போர்த்திக்கொண்டு கங்காதரனும் அன்னபூரணியும் ரெயிலில் வரப்போகும் ஜமுனாவை வரவேற்று அழைத்துப் போவதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். கேரளா பக்கம் போகும் ஒரு ரெயில் முதல் பிளாட்பாரத்தில் தயாராய் நின்றிருந்தது.

    அன்னபூரணி கேட்டாள்

    என்னங்க... சேரன் கரெக்ட் டயத்துக்கு வந்துடுமா?

    பத்து நிமிடம் லேட்ன்னு இப்பத்தான் மைக்ல சொன்னாங்க... எப்படியும் அஞ்சேகாலுக்குள்ளே வண்டி வந்துடும் சொன்ன கங்காதரன் பிளாட்பார கோடியை ரெயில் வருகிறதா என்று எட்டிப் பார்த்தார்... சிவப்பும் பச்சையுமாய் ரெயில்வே சிக்னல்கள் குழப்பமாய் இருந்தன.

    என்னங்க...!

    ஊம்...

    இந்த ஐ.ஏ.எஸ். வரன் நம்ம ஜமுனாவுக்கு முடியும்ன்னு நினைக்கிறீங்களா?

    கண்டிப்பா முடியும். பையனுக்கு ஜமுனாவை ரொம்பவும் பிடிச்சிருக்காம்... பெத்தவங்ககிட்ட டபுள் ஓ.கேன்னு சொல்லிட்டாராம் மாப்பிள்ளை... தரகர் சிவசைலம் சொன்னார்.

    இது மாதிரி இடம் இனி கிடைக்காது. எப்படியாவது பேசி முடிச்சுட வேண்டியதுதான்... பொண்ணுக்கு என்னென்ன பண்ணப் போறோம்ங்கிறதை தரகர்கிட்டேயே சொல்லி அனுப்பிச்சிடுங்க...

    அப்படியெல்லாம் அவங்க எதிர்பார்க்கிறவங்க இல்லையாம்.

    இருந்தாலும்...

    அன்னபூரணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சேரன் எக்ஸ்பிரஸ் 'பிரான்க்க்...' என்று பிளிறிக்கொண்டு பிரகாசமான முகப்பு விளக்கோடு இரண்டாவது பிளாட்பாரத்துக்குள் நுழைந்து நின்றது.

    எந்த பெட்டியில் வர்றதா சொன்னா?

    எஸ்-8

    ரெயில் பிளாட்பாரத்தையே அரைக்கிற மாதிரி பிரேக் போட்டுக் கொண்டு நிற்க - பயணிகள் இறங்க ஆரம்பித்தார்கள்.

    கங்காதரனும் அன்னபூரணியும் எட்டாம் எண் பெட்டியை தேடிக்கொண்டு போனார்கள்.

    எஸ்-8 என்று எழுதப்பட்ட பேட்டி சில விநாடி நடையிலேயே பார்வைக்குக் கிடைத்தது.

    பயணிகள் இறங்கி கொண்டிருந்தார்கள். இரண்டு பேர்களின் பார்வைகளும் ஜமுனாவைத் தேடியது. அவள் கிடைக்கவில்லை.

    பெட்டியின் ஒவ்வொரு ஜன்னலாய் எட்டிப் பார்த்தார்கள்.

    ஜமுனாவைக் காணோம்.

    பெட்டி இரண்டே நிமிடங்களில் காலியாகி விட்டிருக்க- அன்னபூரணி சற்றே கலக்கமாய் கணவரை ஏறிட்டாள்.

    என்னங்க... இந்த பெட்டிதானே?

    ஆமா! நேத்து டிக்கெட் ரிசர்வ் பண்ணியதும் சேர்ன்ல எஸ்-8 ல் வர்றேன்னுதானே போன் பண்ணிச் சொன்னா...

    வேற ஏதாவது பெட்டிக்கு மாறியிருப்பாளோ?

    நீ இங்கேயே நில்லு... நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்...

    கங்காதரன் நடந்தார்.

    வயிற்றில் அவஸ்தை.

    'ஜமுனா ரெயிலை தவறவிட்டிருந்தால் போன் செய்து விபரம் சொல்லியிருப்பாளே!'

    கங்காதரன் யோசித்துக்கொண்டே இரண்டு பெட்டிகளை தாண்ட, மூன்றாவது பெட்டிக்கு வெளியே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் சின்ன கும்பலுக்கு மத்தியில் தெரிந்தார்கள்.

    காற்றில் பேச்சுக் குரல்கள்.

    பொண்ணு அழகாயிருக்கா...

    வசதியான குடும்பம் மாதிரி தெரியுது...

    எப்படி செத்தான்னு தெரியலை. உடம்புல ஒரு பொட்டு ரத்தக் கறை இல்லை...

    கழுத்தை நெரிச்சிருப்பாங்கபோல தோணுது...

    பேச்சுக் குரல்கள் காதில் விழ-

    கங்காதரனுக்கு கால்கள் பின்னின. மார்பில் கடினமாய் எதுவோ அடைத்துக் கொண்டது.

    2

    கங்காதரன் ரெயில் பெட்டிக்கு வெளியே நின்றிருந்த அந்த சின்ன கும்பலில் கலந்து பெட்டிக்கு உள்ளே எட்டிப்பார்த்தார்.

    ஒரு பெண்ணின் உடல் குப்புற விழுந்து கிடந்தது.

    இதயத்துடிப்பு உச்சத்துக்குப் போயிற்று.

    'அது ஜமுனாவா?'

    'கடவுளே! அது ஜமுனாவாக இருக்கக்கூடாது!'

    மனதுக்குள் எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு பார்வையை இன்னமும் உன்னிப்பாக்கினார்.

    அந்தப் பெண்ணின் முகம் பக்கவாட்டில் தெரிந்ததும் இதயத்தில் துடிப்பு குறைந்து ஒரு நிம்மதி பரவியது.

    'இது ஜமுனா இல்லை. வேறு யாரோ!'

    கங்காதரன் பரபரவென்று மற்ற பெட்டிகளுக்குப் போய் பார்த்துவிட்டு தன் மனைவி அன்னபூரணியிடம் வந்தார்.

    அவள் பதட்டமாய்க் கேட்டாள்.

    என்னங்க... இந்த டிரெயினில் ஜமுனா வரலை போலிருக்கே... ஒரு வேளை அடுத்த டிரெயினில் வர்றாளோ என்னவோ?

    அவள் இந்த டிரெயினை தவறவிட்டிருந்தா நமக்கு உடனே போன் பண்ணிச் சொல்லியிருப்பா. ஏன் போன் பண்ணிச் சொல்லலை...?

    போன் பண்ண நேரம் இல்லாமல் போயிருந்தா...?

    இதுக்கு அடுத்த டிரெயின் நீலகிரி எக்ஸ்பிரஸ். அது சரியாக ஆறுமணிக்கு வந்துடும்...

    எனக்கென்னமோ ஜமுனா அந்த டிரெயினில்தான் வருவாள்னு என் மனசுக்குப் படுது...

    எனக்கொரு சந்தேகம் அன்னபூரணி...

    என்ன?

    இந்த டிரெயின் வட கோவை ஸ்டேஷனிலும் நிற்கும். ஒருவேளை ஜமுனா அந்த ஸ்டேஷன்ல இறங்கி வீட்டுக்குப் போயிருந்தா?

    அப்படியும் இருக்கலாமோ?

    எதுக்கும் நம்ம வீட்டுக்கு போன் பண்ணி கேட்டுடறேன்...

    கங்காதரன் பிளாட்பாரத்தின் கோடியில் இருந்த எஸ்.டி.டி.பூத்தை நோக்கிப் போனார்.

    அந்தப் பெண்ணின் உடம்பை இப்போது பெட்டிக்கு வெளியே கொண்டு வந்து கிடத்தியிருந்தார்கள். முகத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

    ஒரு கான்ஸ்டபிள் இன்னொரு கான்ஸ்டபிளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

    "இந்தப் பொம்பளைகளுக்கு எப்பத்தான் புத்தி வருமோ தெரியலை. எவனாவது ஷோக்கா இருந்தா அவனைக் காதலிக்க வேண்டியது. அவன் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்றதை நம்பி உடம்பைக் கொடுக்க வேண்டியது. வயித்தை ரொப்பிக்க வேண்டியது. இந்த ஷோக்கு பேர்வழி கைவிட்டதும் இப்படி பூச்சி மருந்தை குடிச்சு தற்கொலை பண்ணிக்க வேண்டியது. நல்ல வேளை கடிதம் எழுதி வைச்சுட்டு செத்துப் போயிருக்கா.

    இல்லேன்னா இவள் யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ளே வருஷம் ஓடிடும்."

    கங்காதரனின் காதுகளில் பேச்சுக்குரல் விழுந்து கொண்டிருக்க, அவர் ஸ்டேஷனில் வால் பகுதியில் இருந்த பூத்தை நோக்கிப் போனார்.

    டெலிபோன் செய்துவிட்டு வேக நடையில் அன்னபூரணியிடம் வந்தார் கங்காதரன். அவள் ஆர்வமாய் கேட்டாள்.

    "என்னங்க...?

    ஜமுனா வீட்ல இல்லை...

    நான்தான் சொன்னேனே... அவள் நிச்சயமா அடுத்த டிரெயினில் தான் வரப்போறா...

    சரி... வா... பயணிகள் அறையில் உட்கார்ந்துக்கலாம். அந்தப் பெட்டியில் யாரோ ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போயிருக்கா. பாடியை இந்தப் பக்கமா இன்னும் கொஞ்சம் நேரத்துல கொண்டு வருவாங்க போலிருக்கு... வா அப்படி போயிடலாம்.

    அதான் அங்கே அவ்வளவு கூட்டமா?

    ஆமா...

    எதுக்காக தற்கொலை...?

    எவனையோ காதலிச்சு ஏமாந்து போயிருக்கா.

    இப்படியுமா பொண்ணுங்க இருப்பாங்க. இதையெல்லாம் பார்த்தா பெத்தவங்க மனசு எப்படி துடிக்கும்...?

    இருவரும் மெல்ல நடந்து போய் - பிளாட்பார மையத்தில் இருந்த பயணிகள் அறைக்குள் நுழைந்து - அங்கேயிருந்த வண்ண நாற்காலிகளில் சாய்ந்தார்கள்.

    அன்னபூரணி...!

    ம்...

    எனக்கென்னவோ மனசுக்குள்ளே 'திக் திக்'ன்னு இருக்கு.

    நானே தைரியமாயிருக்கேன்! நீங்க ஏன் இப்படி பயப்படறீங்க...? அவள் என்ன பச்சக் குழந்தையா...?

    உனக்கு இருக்கிற தைரியம் எனக்கு இல்லை சேரன்ல வர்றேன்னு சொன்னவள் சேரன்ல வந்திருக்கணும். அந்த டிரெயினை மிஸ் பண்ணினியிருந்தா நமக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லியிருக்கணும்.

    நீலகிரி எக்ஸ்பிரஸ்ல வந்துடுவா பாருங்களேன்

    பார்க்கலாம்...

    காத்திருந்தார்கள். விநாடிகளும் நிமிடங்களும் காணாமல் போக கிழக்குதிசை லேசாய் சிவக்கத் தொடங்கியது. ஸ்டேஷனின் மேற்கூரையில் ஒளிந்திருந்த ஒலிபெருக்கி குரல் கொடுத்தது.

    பயணிகள் கவனிக்கவும். சென்னையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது பிளாட்பாரம் வந்து சேரும்.

    கங்காதரனும் அன்னபூரணியும் எழுந்து இரண்டாவது பிளாட்பாரத்திற்கு வந்தார்கள்.

    இட்லி, வடை, பூரி என்று நடமாடும் கடைகள் பிளாட்பாரம் பூராவும் முளைத்திருக்க, பிளாட்பாரம் இரைச்சலாய் இருந்தது. பார்சல்களோடு டிராலிகள் உருண்டன.

    குளிர்காற்று அடித்துக் கொண்டிருந்த அந்தக் காலை வேளையிலும் கங்காதரனுக்கு கழுத்துப் பகுதியில் வியர்த்துப் போயிருந்தது.

    ‘நீலகிரி எக்ஸ்பிரஸ்சில் ஜமுனா வருவாளா?’

    பிளாட்பாரத்தில் நின்றிருந்த யாரோ குரல் கொடுத்தார்கள்.

    டிரெயின் வந்தாச்சு.

    கங்காதரன் பிளாட்பாரக் கோடியை எட்டிப் பார்த்தார். நீலகிரி எக்ஸ்பிரசின் டீசல் என்ஜின் முகம் தெரிந்தது.

    'கடவுளே! ஜமுனா இந்த ரெயிலிலாவது வர வேண்டும்...!’

    மனம் விடாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க நீலகிரி எக்ஸ்பிரஸ் பெரிய இரைச்சலோடு பிளாட்பாரத்துக்குள் நுழைந்தது. வேகத்தைக் குறைத்துக் கொண்டு நின்றது.

    பயணிகள் இறங்கத் தொடங்க கங்காதரன் - அன்னபூரணி இரண்டு பேர்களின் பார்வைகளும் கூர்மையாயிற்று.

    என்னங்க...?

    ம்...

    நான் என்ஜின் பக்கமா போய் பார்க்கிறேன். நீங்க பின்பக்கமா போய்ப் பாருங்க...

    கங்காதரன் தலையாட்டி விட்டு பின்னால் இருந்த பெட்டிகளைப் பார்த்துக் கொண்டு நடந்தார்.

    இரண்டு பெட்டிகளைக் கடந்திருப்பார். பக்கவாட்டில் இருந்து அந்தக் குரல் கேட்டது.

    அங்கிள்...!

    கங்காதரன் திரும்பிப் பார்த்தார்.

    கையில் சூட்கேசோடு சல்வார் கம்மீஸ் அணிந்த அந்த இளம் பெண் நின்றிருந்தாள். பார்த்த முகமாக தெரிந்தது. குழப்ப முகத்தோடு அவளுக்குப் பக்கத்தில் வர அந்தப் பெண் புன்னகைத்தாள்.

    என்ன அங்கிள்...! என்னை அப்படி பார்க்கறீங்க? என்ன தெரியலையா...? நான் ஊர்மிளா. ஜமுனாவோட கல்லூரித் தோழி. போன வருஷம் உங்க வீட்டுக்கு வந்திருந்தேனே...?

    ஓ! நீயாம்மா...? அதான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு பார்த்துட்டு வர்றேன். சென்னையிலிருந்து வர்றியாம்மா...?

    ஆமா அங்கிள்...! இந்த டிரெய்ன்லதான் வந்தேன்... நீங்க ஏதாவது வெளியூருக்கு போறீங்களா அங்கிள்?

    இல்லேம்மா... ஜமுனாவை அழைச்சுட்டுப் போறதுக்காக நானும் அவளோட அம்மாவும் வந்திருக்கோம்...

    ஊர்மிளா லேசாய் முகம் மாறினாள். "ஜமுனா எனக்கு முன்னாடி சேரன் எக்ஸ்பிரஸ்சில் புறப்பட்டு வந்தாளே!

    என்னது...? சேரன்ல ஜமுனா புறப்பட்டாளா?

    ஆமா அங்கிள்!

    நீ பார்த்தியாம்மா?

    டாட்டா காட்டி அனுப்பி வைச்சதே நான்தான் அங்கிள்!

    என்னம்மா... நீ இப்படி சொல்றே? ஜமுனா சேரன்ல வரலையே...

    ஸ்டேஷன்ல மிஸ் பண்ணியிருப்பீங்க... உங்க பார்வையில் படாமல் அவள் வீட்டுக்கு போயிருக்கலாம்...

    வீட்டுக்கும் போன் பண்ணி பார்த்துட்டோம்மா. ஜமுனா வரலை...

    என்ன அங்கிள்...? நீங்க சொல்றது ஆச்சரியமா இருக்கு...! எஸ்-8 பெட்டியில் ஜமுனா டிராவல் பண்ணியிருக்கா. வழியில் ஈரோடு சேலம்ன்னு இறங்கி யாரையாவது பார்க்கப் போயிருப்பாளோ?

    "அந்த ஊர்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1