Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அதிரடி ஆட்டம்
அதிரடி ஆட்டம்
அதிரடி ஆட்டம்
Ebook139 pages32 minutes

அதிரடி ஆட்டம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நியூயார்க்.
 ஹோட்டல் கோல்ட் லோட்டஸ் இண்டர்நேஷனலின் முப்பத்திரண்டாவது மாடி.
 அந்த மிகப்பெரிய கான்ஃபரன்ஸ் ஹால் ஏ.ஸி.யின் ஜில்லிப்பில் உறைந்து போயிருக்க ஹாலில் இருந்த ஆயிரத்து ஐநூற்று எழுபத்தைந்து இருக்கைகளிலும் விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள் நிரம்பியிருந்தனர்.
 மேடை ஒரு நட்சத்திர மண்டலம் மாதிரி ஜொலித்துக் கொண்டிருக்க, மேடையின் மையத்தில் நான்கு நாற்காலிகள் போடப்பட்டு அதில் நான்கு பேர் ஒரே யூனிஃபார்ம் உடையில் உட்கார்ந்திருந்தார்கள்.
 மேடையின் இடது பக்க ஓரமாய் சாய்வான டைஸ் போடப்பட்டு அதில் நீட்டிக் கொண்டிருந்த சிறிய மைக்கில் நாஸா விண்வெளி டைரக்டர் கீட்ஸ் போர்டு நிதானமான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
 "விண்வெளி வரலாற்றில் இன்றைக்கு நினைவில் கொள்ள வேண்டிய நாளாக அமைந்துவிட்டது. விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் 'ப்ராக்ரஸ்' அமைத்து இன்றைக்கு ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. ஐந்தாண்டு காலம் ஓயாமல் உழைத்து வந்த 'ப்ராக்ரஸ்' விண்வெளி நிலையத்தில் இப்போது சில பிரச்னைகள் தோன்றியுள்ளன. இந்த பிரச்னைகளை சரி செய்து 'ப்ராக்ரஸ்' சர்வதேச விண்வெளி நிலையத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்க அடுத்த வாரம் நாஸாவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களை ராக்கெட் மூலமாக 'ப்ராக்ரஸ்' விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் போகிறோம். அந்த நான்கு பேரையும் உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தவே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நான்கு பேர்களும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். முதலாவதாக இருப்பவர் ரஷ்ய விண்வெளி வீரர். இவர் பெயர் நிக்கோவிக். 'ப்ராக்ரஸ்' விண்வெளி நிலையத்தை நிர்மாணம் செய்ததில் இவர்க்கும் மிகப் பெரியபங்கு உண்டு. விண்வெளியில் உள்ள சில சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட இவர்க்கு ரஷ்ய நாடு அந்த நாட்டின் உயரிய விருதான 'ஹீரோ ஆஃப் நேஷன்' என்ற விருது கொடுத்துள்ளது..."
 அரங்கில் அலையோசைபோல் கையொலி எழ ரஷ்ய விண்வெளி வீரர் நிக்கோவிக் ஆறேகால் அடி உயரத்தில் எழுந்து நின்றார். இரண்டு கைகளையும் உயரத் தூக்கி பாராட்டை ஏற்றுக் கொண்ட நிக்கோவிக் கைதட்டல் ஓய்ந்ததும் இருக்கைக்கு வந்து சாய நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய டைரக்டர் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
 "இரண்டாவதாக இருப்பவர் சீன நாட்டைச் சேர்ந்த ஸீவான் டட்லீ. மூன்றாவது நபர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டேவன் போர்ட். நான்காவதாக இருப்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பிலிப்ஸ். இந்த மூன்று பேருமே நாஸாவின் 'ஃபார் ஸ்பேஸ் ஃப்ளைட் அண்ட் ஃபார் சர்வீஸ் டூ சொசைட்டி' மெடல்கள் பெற்றவர்கள், எனர்ஜியா ராக்கெட் அண்ட் ஸ்பேஸ் கார்ப்பரேஷனிலும், மாஸ்கோ ஏவியேஷன் யுனிவர்ஸிட்டியிலும் பணிபுரிந்தவர்கள். இந்த நான்கு பேர் கொண்ட குழுவுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் பிலிப்ஸ் தலைவராக இருப்பார்."
 கைதட்டல் , மறுபடியும் ஹாலை அதிர வைத்தது. கைத்தட்டல் ஓயும் வரை காத்திருந்த நாஸா டைரக்டர் பிறகு சொன்னார்.
 "'ப்ராக்ரஸ்' விண்வெளி நிலைய செயல்பாடுகள் குறித்து லூயிஸ் பிலிப்ஸிடம் நீங்கள் ஏதாவது விளக்கங்கள் கேட்க விரும்பினால் இப்போது கேட்கலாம்."
 லூயிஸ் பிலிப்ஸ் தனக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த சிறிய உருண்டை மைக்கை கையில் எடுத்துக் கொண்டார். அரங்கிலிருந்து கேள்விகள் புறப்பட்டன.
 "பிராக்ரஸ் 'விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதம் நீங்கள் தங்கியிருந்தபோது என்னென்ன பிரச்னைகளை சந்தித்தீர்கள் என்பதை சொல்லமுடியுமா...?"
 லூயிஸ் பிலிப்ஸ் புன்னகை முகத்தோடு பேசினார்நான் 'பராக்ரஸ்' விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதகாலம் தங்கியிருந்தபோது என்னோடு இந்திய விண்வெளி வீரர்கள் இரண்டுபேரும், ஜப்பான் விண்வெளி வீரர்கள் மூன்று பேரும் உடன் இருந்தார்கள், விண்வெளி நிலைய 'ப்ராக்ரஸ்' முதல் முப்பது நாள் ஒழுங்காகவே செயல்பட்டு வந்தது. பின்புதான் பிரச்னைகள் தலை தூக்க ஆரம்பித்தன. விண்வெளி நிலையத்தின் உள்ளே திடீர் திடீரென்று விநோதமான அபாயங்கள் முளைத்தன. ஒரு முறை விண்வெளி நிலையத்தின் உள்ளே மின்சாரக் கசிவின் காரணமாக தீப்பற்றிக் கொண்டது. விண்வெளி நிலையத்துக்குள் தீப்பற்றிக் கொண்டால் ஒரு நிமிஷ நேரத்துக்குள் அதை அணைத்துவிட வேண்டும் என்பது கட்டாய விதி. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224303144
அதிரடி ஆட்டம்

Read more from Rajeshkumar

Related to அதிரடி ஆட்டம்

Related ebooks

Related categories

Reviews for அதிரடி ஆட்டம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அதிரடி ஆட்டம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    விவேக்கின் மாருதி ஜென் வி.எக்ஸ். வெள்ளை நிறக் கார் ஃபிப்த் கியரில் ஒரு பெரிய பஞ்சுத் துணுக்காய் மகாபலிபுரம் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் கோகுல்நாத் பின்சீட்டில் ரூபலா. வலதுபக்கம் சவுக்கு மரத்தோப்பும் இடது பக்கம் வங்கக்கடலின் நீலநிறப் பரப்பும் விடாப்பிடியாய் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

    நேரம்: மாலை ஆறுமணி. சூரியன் ஒரு சிவப்பு பந்தாக மாறி சவுக்கு மரங்களுக்கு மத்தியில் விட்டு விட்டு தெரிந்து கொண்டிருந்தான்.

    ரூபலா பின் சீட்டில் உட்கார்ந்தபடியே விவேக்கின் சட்டைக்காலர்ப் பகுதியை மெல்ல சுரண்டினாள்.

    என்னங்க...

    ம்...

    சென்னை சிட்டி லிமிட்டைத் தாண்டி மகாபலிபுரம் ரோட்டுக்கே வந்துட்டோம்... இப்பவாவது சொல்லுங்க. நாம எங்கே போய்க்கிட்டு இருக்கோம்...? நீங்க இவ்வளவு வேகமா காரை ஓட்டி நான் பார்த்தது கிடையாது. எங்கே போறோம் சொல்லுங்க...

    ஒரு பத்து நிமிஷம் பொறு ரூபி...

    நோ...! பொறுக்க முடியாது...! அங்கிள்! நீங்களாவது சொல்லுங்க.

    கோகுல்நாத் தோள்களைக் குலுக்கினார்.

    எனக்கே அது தெரியாதம்மா... உன்னை மாதிரிதான் நானும்.ஒருமணி நேரத்துக்கு முன்னாடி விவேக் போன் பண்ணி ரெடியா இருக்கும்படி சொன்னார். ரெடியா இருந்தேன். கார்ல வந்தார். ஏறிகிட்டேன்.

    விஷயம் என்னான்னு நீங்க கேட்கலையா?

    கேட்டேன்...

    என்ன சொன்னார்...?

    ட்ரிபிள் எக்ஸ்ன்னு சொன்னார்.

    அப்படீன்னா...?

    அது ஒரு கோட் வேர்ட்

    அந்த கோட் வேர்ட்டுக்கு என்ன அர்த்தம்?

    சொன்னா உனக்கு ஆச்சர்யமாயிருக்கும்.

    அங்கிள்...! இவர்கூட வாழ்க்கை நடத்தின பெரும்பாலான நாட்கள் ஆச்சர்யப்பட்டு ஆச்சர்யப்பட்டே அலுத்துப் போச்சு. புதுசா ஆச்சர்யப்பட ஒண்ணுமேயில்லை. சொல்லுங்க. அந்த ட்ரிபிள் எக்ஸ் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்...?

    இப்போ எங்கே போறோம்... யாரைப் பார்க்கப் போறோம்ன்னு விவேக்கிற்கே தெரியாது. இப்படி ஒரு நிலைமையைக் குறிப்பிட்டுச் சொல்ற வார்த்தைதான் ட்ரிப்ள் எக்ஸ்.

    இது என்ன புதுக்கதையா இருக்கு?

    விவேக் சிரித்தான். ஒரு சுற்றுலா பஸ்ஸை ஓவர் டேக் செய்துகொண்டே சொன்னான்.

    ரூபி...! இது புதுக்கதை கிடையாது...! கொஞ்சம் புதிரான கதை. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு கோகுல்நாத் அங்கிளும் நானும் எதைப் பண்ணினாலும் பார்த்துக்கிட்டு இரு. கேள்வி கேட்காதே...

    இதுக்கு நான் வீட்லேயே ரெண்டு பாக்கெட் நொறுக்குத் தீனியோடு டிஸ்கவரி சேனல் பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன்.

    ரூபி...! உன்னை எங்களோடு கூட்டிக்கிட்டு வந்ததுக்கு காரணம் இருக்கு. பேசாமே ஒரு பத்து நிமிஷத்துக்கு சமுத்திரத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு வா...

    சரி...! அந்த டேப் ரிக்கார்டரை 'ஆன்' பண்ணுங்க. கஜல் கேட்கலாம்...,

    விவேக் ஆடியோ ஸ்விட்ச்சைத் தட்டிவிட சுல்தானா பர்வீனின் கஜல் கொஞ்சியது. கடல் இப்போது நீலநிறம் இழந்து அழுக்கு க்ரே நிறமாய் மாறியிருக்க, கடற்கரையோர ஹோட்டல்களில் விளக்குகள் உயிர் பிடிக்க ஆரம்பித்து இருந்தன. தொலைதூரக் கடலில் ஒரு கப்பல் ஏதோ ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலைப் போல் வெளிச்சப் புள்ளிகளோடு தெரிந்தது.

    ரூபலா கஜலில் ஆழ்ந்து வெளியே வேடிக்கை பார்த்து பதினைந்து நிமிஷங்களைக் கழித்திருந்தபோது கார் வேகம் குறைந்து - ரோட்டோரத்தில் இருந்த அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தது.

    ரூபலா எட்டிப்பார்த்தாள்.

    "ஹோட்டல் ஹன்டிங் ப்ளஷர் வெல்கம்ஸ் யூ -என்கிற ரோஸ்நிற எழுத்துக்களோடு வெளிச்சமான நியான் போர்டு தெரிந்தது.

    கார் பார்க்கிங்கில் நிறைய கார்கள் தெரிய ரிவர்ஸ் எடுப்பதற்கு தோதான இடம் பார்த்து காரை நிறுத்தினான் விவேக்.

    என்னங்க... ஹோட்டலுக்கு வந்திருக்கோம்

    கேள்வி கேட்காமே வா...

    எனக்கு மூளையே குழம்பிடும் போலிருக்கே...

    உன்கிட்ட இல்லாத ஒண்ணு எப்படி குழம்பும்?

    பாருங்க அங்கிள்...!

    உனக்கு நான் சர்ட்டிபிகேட் தர்றேன்ம்மா... விவேக் இவ்வளவு ஆக்டீவா இருக்கிறதுக்கும் பேரும் புகழும் கிடைக்கிறதுக்கும் காரணம் நீதான்...

    தேங்க்யூ அங்கிள்...!

    கோகுல்நாத்...! ரொம்பவும் பொய் பேசறீங்க

    அந்த திறந்தவெளி ரெஸ்டாரெண்டில் கேண்டில்

    Enjoying the preview?
    Page 1 of 1