Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

23 - m Padi
23 - m Padi
23 - m Padi
Ebook299 pages1 hour

23 - m Padi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

எப்படி எழுதினேனோ!
ஆஸ்துமா தொல்லை அதிகமாக இருந்த அந்த நாளில் இந்த நாவலைத் தொடர்கதையாக எப்படி எழுத முடிந்தது என்று இப்போது புரூப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு ஹோல்டால் மூட்டை, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு பெங்களூர் சென்று அங்கிருந்து ஹாசனுக்குப் போய், சிரவண பெலகோலா, ஹலிபேடு முதலிய ஊர்களில் அலைந்து திரிந்து கன்னிமரா நூலகத்தில் சித்தர் பாடல்களைச் சேகரித்து, எப்படி எப்படியோ கற்பனைகளைக் கூட்டி இதை எழுதி முடித்தேன்.
ரா. கி. ரங்கராஜன்
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580126705129
23 - m Padi

Read more from Ra. Ki. Rangarajan

Related to 23 - m Padi

Related ebooks

Related categories

Reviews for 23 - m Padi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    23 - m Padi - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    23 - ம் படி

    23 - m Padi

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    முன்னுரை

    எப்படி எழுதினேனோ!

    ஆஸ்துமா தொல்லை அதிகமாக இருந்த அந்த நாளில் இந்த நாவலைத் தொடர்கதையாக எப்படி எழுத முடிந்தது என்று இப்போது புரூப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு ஹோல்டால் மூட்டை, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு பெங்களூர் சென்று அங்கிருந்து ஹாசனுக்குப் போய், சிரவண பெலகோலா, ஹலிபேடு முதலிய ஊர்களில் அலைந்து திரிந்து கன்னிமரா நூலகத்தில் சித்தர் பாடல்களைச் சேகரித்து, எப்படி எப்படியோ கற்பனைகளைக் கூட்டி இதை எழுதி முடித்தேன்.

    ரா. கி. ரங்கராஜன்

    1

    பாவம் சிறுமி. அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் என்று வேணுவுக்குத் தோன்றவில்லை.

    நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த போதிலும் ராதை தூங்கக் காணோம். அடக்க முடியாத கேவல்களினால் அவளுடைய சிறிய தோள்களும் மார்பும் எழும்பி எழும்பித் தாழ்ந்தவாறிருந்தன. புரண்டு திரும்பியவள், ஈரம் ததும்பிய கண்களால் வேணுவை நோக்கினாள்.

    வாசல் வராந்தாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்த வேணு, எதிர் வீட்டுக்காரர் வீட்டு ரிப்பேருக்காகக் கொட்டியிருந்த கருங்கல் ஜல்லிக் குவியலிலிருந்து ஒவ்வொரு கல்லாய் எடுத்து எறிந்து கொண்டிருந்தான், வெறுப்புடன். ஒன்றிரண்டு கற்கள் விளக்குக் கம்பத்தின் மீது மோதி டங் டங் கென்று ஓசை எழுப்பின.

    மறுபடி கேவினாள் ராதை. சித்தப்பா... என்ற பரிதாபமான கெஞ்சல் புறப்பட்டது அவளது துடிக்கும் உதடுகளிலிருந்து.

    அவனுக்குப் பொறுக்கவில்லை.

    இரண்டு கைகளையும் அவள் இடுப்பில் கொடுத்து, முரட்டுத்தனமாய்த் தூக்கி உட்கார்த்தி வைத்தான்.

    பத்துப் பைசாவை எடுத்தாயென்று தானே அண்ணி - உன் அம்மா - உன்னை அடித்தாள்! என்று கேட்டான்.

    ஆமாம், சித்தப்பா.

    நீ எடுத்தாயா?

    காட் பிராமிசா நான் எடுக்கல்லே சித்தப்பா. நிஜம்மா நான் அந்தக் காசைப் பார்க்கவேயில்லை.

    பின்னே ஏன் அழுகிறாய்? தப்புப் பண்ணுகிறவர்கள்தான் அழணும், கண்ணைக் கசக்கணும், பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பணும், தப்புப் பண்ணாதவர்களுக்கு அப்படியில்லை. அவர்கள் நிமிர்ந்து இருக்கணும். உலகம் டோன்ட் கேர் என்று இருக்கணும். புரிகிறதா?

    அரண்டு போனாள் ராதை. பயத்துடன் தலையை அசைத்தாள். தூங்கு! என்று அதட்டினான் வேணு. நடுக்கத்துடன் படுத்துவிட்டாள்.

    வானத்தில் நிலா இறங்கிக் கொண்டிருந்தது. தெருவின் ஓசைகள் பூரா அடங்கிவிட்டன. எதிர் வீட்டுக் கிழவர் அன்றைய தினத்தின் கடைசித் தடவையாகப் புகையிலையைத் துப்பி விட்டு, பெரும் ஓசையுடன் நாலுமுறை கொப்புளித்துவிட்டுத் திரும்பினார்.

    'என்னை அடிக்க முடியவில்லை. குழந்தையை அடிக்கிறாள்!' என்று அண்ணியைப்பற்றிப் பொருமிக் கொண்டான் வேணு.

    குழாயடியில் டெரிலின் ஸ்லாக்கை அவன் அலசிக் கொண்டிருந்தபோது காப்பி மெஷினுக்குப் பக்கத்தில் வைத்திருந்த பத்துப் பைசாவைக் காணவில்லையென்று அண்ணி சத்தம் போட்டதும், பிறகு குழந்தை ராதையை அடி அடியென்று அடித்ததும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு நடந்த சம்பவங்கள் தான்.

    அண்ணாவே அதைக் கண்டு கொள்ளாமல் ஏதோ படத்துக்கு ஆணியடிப்பதில் ரொம்ப மும்முரமாக முனைந்திருக்கிற மாதிரி நடித்துக் கொண்டிருக்கும் போது நாம் தலையிடுவது கூடாது என்று பேசாதிருந்தான்.

    ஆனால் அதட்டல் சத்தத்தைத் தொடர்ந்து அடி சத்தங்கள் கேட்டன. இப்படியுமா ஒரு தாய் தன் குழந்தையைக் கொல்லுவாள்!

    சட்டையை உதறி எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தான். அண்ணிக்குக் கேட்கிற மாதிரி ஓசையுடன் உதறிக் கொடியில் உலர்த்தினான்.

    கேவலம் பத்துப் பைசாவுக்காகக் குழந்தையை இப்படி வதைத்தால், நாளைக்கு டாக்டருக்குப் பத்து ரூபாயாகத் தர வேண்டியிருக்கும். அது யாருக்குத் தெரிகிறது? என்றான்.

    அப்போதுதான் அண்ணி அந்த வார்த்தையைச் சொல்லி விட்டாள். என்றாவது ஒருநாள் அவள் சொல்லத்தான் போகிறாள் என்று அவன் எதிர்பார்த்த வார்த்தையைச் சொல்லியே விட்டாள்.

    ஓகோ! கேவலம் பத்துப் பைசாவா! ஏன், நாளை பகல் பூரா டயம் தருகிறேன். எங்கேயாவது வேலை செய்து பத்துப் பைசா சம்பாதித்துக் கொண்டு வந்து காட்டட்டுமே பார்க்கலாம்! இந்த வேலை வேண்டாம், அந்த வேலை நொள்ளை என்று தட்டிக் கழிக்கும்படி நானா சொல்கிறேன்? கிடைத்ததைச் சம்பாதிக்கிறதுதானே? அண்ணிக்கு ஒரு முழம் பூ வாங்கி வந்து தர வேண்டாம். தமையனாருக்கு ஒரு பொட்டலம் காராபூந்தி வாங்கிக் கொண்டு வந்து தரட்டுமே? நானும் கண்ணாரப் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.....

    வேணு பதில் கூறவில்லை. அண்ணியையே விழி கொட்டாமல் பார்த்தபடி நின்றிருந்தான். அந்தப் பார்வையைக் கண்டு பயம் வந்ததோ என்னவோ பேச்சை நிறுத்திக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.

    குழந்தை ராதை அவன் இடுப்பைக் கட்டிக் கொள்ள வந்தாள். அவளை விலக்கி விட்டு, ஜமுக்காளத்தை எடுத்துக் கொண்டு வாசல் வெராந்தாவுக்கு வந்தான். பிரித்துப் போட்டுக் கொண்டான். ஆனால் படுக்கவில்லை.

    ராதையும் அவன் கூடவே வந்து படுத்துக் கொண்டு விட்டாள்.

    கையாலாகாத அண்ணனின் மீது கோபம் வந்தது. 'நண்பர்களுடன் நான் ரூமில் இருந்து கொள்கிறேன். ஏதோ வேலை தேடிக் கொள்கிறேன்' என்று சொன்னவனை, அதெல்லாம் வேண்டாம், என்னுடன் வந்து இரு. என்று எதற்காக அழைக்க வேண்டும்? அழைத்து வைத்துக் கொண்டவர், இவன் என் தம்பி. இவனுக்குத் தேவையான வசதிகளை நீ செய்து கொடுக்க வேண்டும். ஏதாவது முணுமுணுத்தாயோ, பெல்ட் பிய்ந்துவிடும் உஷார்! என்று மனைவியை எச்சரித்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.

    தன் மீதும் அவன் கோபம் திரும்பியது.

    பி.எஸ்ஸி. பட்டம் வாங்கியிருப்பதால் என்ன பிரமாத கொம்பு முளைத்து விட்டது? அட்டெண்டர் வேலைக்கும் பியூன் வேலைக்கும் போகமாட்டேன் என்று ஏன் வீம்பு பிடித்திருக்க வேண்டும்? அதனால்தானே அண்ணி இந்தப் பேச்சுப் பேசுகிறாள்?

    எங்கேயாவது சற்று நடந்துவிட்டு வரலாம் போலிருந்தது. ராதையைப் பார்த்தான். நன்றாய்த் தூங்கிவிட்டாள், புரண்டு புரண்டு தெருவுக்கு வந்துவிடாதபடி வெராந்தாவின் உட்பக்கமாய் நகர்த்தி விட்டு, கழற்றி வைத்திருந்த சட்டையை அணிந்து கொண்டு புறப்பட்டான்.

    தெருக் கோடியிலிருந்த பிள்ளையார் கோவிலை அவன் நெருங்கியபோது

    எட்டத்தில் ஒரு காரின் ஹெட்லைட்டுகள் ஒளியை வெள்ளமாய்ப் பாய்ச்சின. சாலையில் நிழல்கள் விழுந்து மறைகிற கடும் வேகத்தைக் கணக்கிட்ட போது, தலை தெறிக்கும் ஸ்பீடில் அது வந்து கொண்டிருக்கிறது என்பது புலப்பட்டது. பிள்ளையார் கோவிலின் வாசற்படியில் ஒதுங்கிக் கொண்டான்.

    கார் அவனைத் தாண்டிச் சென்றது. ஆனால் ஐம்பதடி தூரம் செல்லுமுன் கிறீச்சென்ற ஒலியுடன் நின்றது. அதை ஓட்டிவந்த இளைஞன் ரிவர்ஸ் எடுத்து, காரைப் பின்னோக்கிச் செலுத்தினான்.

    வேணு! என்று வியப்புடன் அவனை அழைத்தான்.

    வேணுவுக்கும் முதலில் வியப்பேற்பட்டதென்றாலும், கூப்பிட்டவன் தன் கல்லூரித் தோழன் சிவசங்கரன் என்றறிந்ததும் அவனுடைய ஆச்சரியம் அடங்கியது. இந்த மாதிரிக் கார்களில், இந்த மாதிரி வேளைகளில், இந்த மாதிரி வேகங்களில் சுற்றக் கூடியவன்தான் அவன்.

    என்ன, இன்னும் பிள்ளையார் கோவில்களைப் பிரதட்சணம் செய்துகொண்டுதான் காலத்தை ஓட்டுகிறாயாக்கும்? என்றான் சிவசங்கரன் கேலியாக.

    தூக்கம் வரவில்லை. கொஞ்சம் நடக்கலாமென்று கிளம்பினேன்.

    ஹும்! ஒரு பெருமூச்சுடன் காரை ஸ்டார்ட் செய்தான் சிவசங்கரன். இன்னும் எத்தனை நாள்தான் இப்படித் தூக்கம் வராமல் தவிக்கப் போகிறாயோ?

    கியர் போடவிருந்த நண்பனின் கையைத் தடுத்தான் வேணு. சிவா! எனக்கு ஒரு வேலை கொடு.

    ஓ! வியப்புடன் ஒரு சீட்டியொலி எழுப்பினான் சிவசங்கரன். நீயா என்னிடம் வேலை கேட்கிறாய்? நீ? நான் பணம் சம்பாதிக்கிற முறைகளைப் பற்றி வண்டி வண்டியாய் ஆட்சேபம் செய்கிற நீ....

    நான் ஸீரியஸாய்த்தான் கேட்கிறேன். எந்த மாதிரியான வேலையானாலும் சரி.

    சிவசங்கரன் ஹெட் லைட்டுகளை அணைத்துவிட்டு, காருக்குள் விளக்குப் போட்டுக் கொண்டான். டாஷ்போர்டின் பக்கத்துப் பிறையிலிருந்து கைப்பையை எடுத்தான். லெட்டர் ஹெட்டிலிருந்து ஒரு தாள் கிழித்து, தங்க மூடியிட்ட பால் பாயிண்ட் பேனாவினால் சில வரிகளை எழுதினான்.

    நாளை சாயந்தரம் ஆறு மணிக்கு இந்த விலாசத்துக்கு வந்து, வாசலில் நில். ஒரு வேலை சொல்கிறேன், என்று கூறிக் காகிதத்தைக் கொடுத்தான்.

    சர் சி.பி.ராமசாமி ஐயர் சாலையிலுள்ள ஓர் அயல்நாட்டுத் தூதராலயம் அது என்பதைக் கண்டான் வேணு. இங்கே நீ இருப்பாயா?

    இருப்பேன். ஆனால் உன்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டேன். நீயும் காட்டிக் கொள்ளக் கூடாது. ஒரு பார்ட்டி நடைபெறவிருக்கிறது. அதில் கெஸ்ட்டுகளோடு கெஸ்ட்டாய் நீ சேர்ந்து விடு. குட்டு வெளிப்படாதபடி சும்மா மரியாதைக்கு இரண்டிரண்டு வார்த்தை பேசி நைஸாய்ச் சமாளித்துவிடு.

    ரைட்.

    இரு, என்றான் சிவசங்கரன். உன் பேச்சை நம்ப முடியாது. நாளைக்கே மாறி விடுவாய், என்றவன் தோல் பையிலிருந்து மேலும் சில காகிதங்களை எடுத்தான்.

    இங்கே கையெழுத்துப் போடு, என்று அவன் காட்டிய இடங்களில் அலட்சியமாய்க் கையெழுத்திட்டான் வேணு.

    ஆறு மணிக்கு மேலேயே ஐந்து பத்து நிமிடமாகிவிட்டது. குறிப்பிட்ட இடத்தை வேணு அடைந்தபோது, வாசலில் யார் நின்றிருப்பார்களோ என்ன விசாரிப்பார்களோ என்று சிறிது தயங்கினான். ஆனால் ஒருவரையும் காணவில்லை. எல்லா விருந்தினரும் உட்புறம் போய்விட்டார்கள்.

    காம்பவுண்டைக் கடந்து, ஃப்ளஷ் கதவைத் திறந்த போதும் யாரும் எதிர்ப்படவில்லை. வரவேற்பு ஹாலின் மொசைக் தரையின் வழுவழுப்பில் குழாய் விளக்குகளின் ஒளி மோதிக் கொண்டிருந்தது. பின்புறம் பேச்சுக் குரல்கள் கேட்டன. ஹாலின் இடப்பக்கமிருந்து கதவைத் திறந்து கொண்டு வெளிவந்த ஒரு வெள்ளைக்காரப் பெண், எஸ், யூ மே கோ தேர், என்று பின்புறத்தைக் காட்டினாள்.

    வேணு முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, பின் கதவைத் திறந்து கொண்டு பார்த்தான்.

    ஓரங்களில் மலர்ச் செடிகளின் நடுவில் பசேலென்றிருந்த புல் தரை தென்பட்டது. மொத்தம் முப்பது நாற்பது பேர்தான் கூடியிருந்தார்கள் அங்கே. நாலைந்து பேர் ஐரோப்பியர்கள், இரண்டு ஐரோப்பியப் பெண்மணிகள் புடவை கட்டிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் இந்தியர்கள் - தமிழர்கள். புல்வெளியின் கோடியில் பத்து வரிசைக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வரிசைக்கு ஐந்து நாற்காலிகள் இருக்கும். அவற்றுக்கு இருபது அடி தூரத்துக்கு முன்னால் சிறிய சினிமாத் திரை நிறுத்தப்பட்டிருந்தது.

    நாற்காலி வரிசைக்குப் பின்னே ஒரு புரொஜக்டர் வைக்கப் பட்டிருந்தது. அதனிடம் குனிந்து கண்களை வைத்துத் திரையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. ஒல்லியாய் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த அவளுக்கு வயது நாற்பது இருக்கும். முன்தலையில் இரண்டொரு முடி நரைத்திருந்தது. முதல் பார்வையிலேயே யாருடைய மதிப்பையும் கவரக்கூடிய வகையில் படிப்புக்களை அவள் வதனத்தில் தென்பட்டது. அவள் ஏதோ டாக்குமென்ட்டரி காட்டப் போகிறாள் என்று ஊகிக்க முடிந்தது.

    பிரமிப்புடன் வேணு நின்றான். இந்தப் பெண்மணியை எங்கேயோ எப்போதோ பார்த்திருக்கிறோம்... எங்கே?... நினைவு வரவில்லை.

    ஆங்காங்கே மூன்று நான்கு பேராகப் பேசிக் கொண்டிருந்த கும்பலில் சிவசங்கரனின் தலையும் தென்பட்டது. வேணு மட்டுமே கண்டு கொள்ளக்கூடிய வகையில் மிகமிகக் கொஞ்சமாகத் தலையை அசைத்துவிட்டுத் தன் சம்பாஷணையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தான் அவன்.

    வேணு புல்வெளியில் இறங்கினான். இரண்டொருவரைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு, உரையாடிக் கொண்டிருக்கும் கும்பல்களில் பட்டும் படாமலுமாக நின்று கொண்டான். ஒவ்வொருவர் கையிலும் கிளாஸ் டம்ளர்கள் இருந்தன. அவற்றில் வெளிர் மஞ்சளாயும் கருநீலமாயும், நிறமேயில்லாமலும் மதுவகைகள் நிரம்பி நுரைத்துக் கொண்டிருந்தன.

    கிளாஸ் டம்ளர்களும் புட்டியும் கொண்ட டிரேயுடன் வெள்ளை டை அணிந்த வெயிட்டர்கள் அங்குமிங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் வேணுவை நெருங்கிப் பணிவோடு தட்டை நீட்டினான்.

    வேணு ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டான். ஒரே ஒரு சொட்டு உறிஞ்சியதும், அது விஸ்கி என்று புரிந்துவிட்டது. அதன் கடுங் கசப்பையும் தலையில் அது கனமாக ஏறுவதையும் உணர்ந்தான்.

    விஸ்கி உங்களுக்குப் பழக்கமில்லை என்று நினைக்கிறேன், பின்பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.

    திரும்பிப் பார்த்தான். அவள் இளம்பெண். தனித்தனியே அவளை ஆராய்ந்தால் அழகில்லாதவள் என்றுகூடச் சொல்லத் தோன்றும். ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது எதை அழகு என்று சொல்கிறோமோ அந்த அழகு அவளிடம் பரிபூரணமாக நிரம்பியிருந்தது. அவள் நின்றிருந்த முறை, உயரம், குரலின் இனிமை, அலங்காரம் செய்து கொண்டிருந்த விதம் - இவையெல்லாமாகச் சேர்ந்து அவளுடைய அழகை உருவாக்கின.

    வெயிட்டர், என்று தாழ்ந்த குரலில் அவள் அழைத்தாள். வெயிட்டர் வந்ததும், வேணுவின் கையிலிருந்த கிளாஸை மெல்லத் திருப்பி வாங்க முயன்றாள்.

    மன்னியுங்கள், எதெது அருந்த வேண்டும் என்று எனக்கும் தெரியும், எனப் பதிலளித்து விட்டு விஸ்கியைச் சுவைத்தான் வேணு. அந்த முரட்டுத்தனத்தால் அவள் முகம் சுருங்கிவிட்டது.

    ஷோ ஆரம்பிக்கப் போகிறது. தயவு செய்து அனைவரும் இப்படி வரவேண்டும், என்று ஓர் ஐரோப்பியர் ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டார்.

    போகலாமா? என்றாள் அவள், வேணுவை மன்னித்து விட்டவள் போல்.

    அவளுக்குப் பதில் கூறாமல் முன்னே நடந்தவன், பின் வரிசை நாற்காலிகளிலொன்றில் அமர்ந்து கொண்டான். அந்தப் பெண்ணும் வலப்புறத்தில் அமர்ந்தாள். சிவசங்கரன் எங்கே என்று வேணுவின் கண்கள் துழாவத் தொடங்கின. தனக்குப் பின் வரிசையிலேயே அவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.

    அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வது நலமென்று தோன்றியது. எழுந்திருக்க முயன்றான்.

    ஏன்? என்ன? என்று கேட்டாள் அவள்.

    அவள் எடுத்துக் கொள்ளும் உரிமை அவனுக்குப் பிடிக்க வில்லை. நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிற ஸென்ட் எனக்குத் தலைவலிக்கிறது, என்று கூறிவிட்டு எழுந்தான்.

    அவள் உதடுகளைக் கடித்துக்கொண்டு முறைத்ததை அவன் பொருட்படுத்தவில்லை. எழுந்து சென்று சிவசங்கரனுக்கு அருகிலிருந்த காலி நாற்காலியில் அமர்ந்தான்.

    படக்காட்சி ஆரம்பமாகும் நேரம்.

    திரைக்கு அருகாகப் போய் நின்றுகொண்ட ஓர் இரட்டை நாடி மனிதர், 'நண்பர்களே! என்று கணீரென்ற குரலில் ஆரம்பித்தார். இந்தியாவின் தலைசிறந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான டாக்டர் நாகலட்சுமியை இன்று வரவேற்பதில் நாம் பெருமகிழ்ச்சி கொள்கிறோம், என்று அவர் கூறியதும், புரொஜக்டரின் அருகில் நின்றிருந்த அந்தப் பெண்மணியின் பக்கம் திரும்பிக் கைதட்டினார்கள் எல்லாரும். அவர் மேலும் சில வாக்கியங்கள் பேசிய பிறகு, டாக்டர் நாகலட்சுமி, புரொஜக்டரின் அருகில் நின்றபடியே சென்ற ஆண்டு தான் செய்த சில ஆராய்ச்சிகளைப் பற்றிக் கூறினாள். அவைகளைப் படக்காட்சி மூலம் விளக்கப்போவதாகவும் அறிவித்தாள்.

    இருட்டிவிட்டது. தோட்டத்திலிருந்த விளக்குகளை அணைத்துவிட்டார்கள். திறந்தவெளியின் சிறிய வெள்ளித் திரையில் படம் ஓடத் தொடங்கியது.

    இடிபாடுகளின் நடுவே புராதனச் சின்னங்கள், சிற்பங்கள், மண்பாண்டங்கள் முதலியவற்றைத் தோண்டியெடுக்கும் காட்சிகள் காட்டப்பட்டன. டாக்டர் நாகலட்சுமியின் குரல் இடைவிடாது கேட்டது.

    வேணு கண்ணை இமைக்காமல் திரையைப் பார்த்தான். மூச்சு நின்றுவிடும் போல ஒரு மனப் பிரமை அவனை உலுக்கியது. இதே இடங்களில் நாம் இருந்திருக்கிறோம்... இந்தப் பொருள்களைப் பார்த்திருக்கிறோம். எப்போது?

    சிவசங்கரன் எதற்காக இங்கே தன்னை வரவழைத்தான் என்று யோசிப்பதும் நின்றுவிட்டது.

    டாக்டர் நாகலட்சுமி சொல்லிக்கொண்டிருந்தாள்:

    பண்டைத் தமிழகத்தின் வரலாற்றில் ஓர் இருண்ட பகுதி உண்டென்றால், அது களப்பிரர்களின் காலம்தான். அவர்கள் பாண்டியர்களை வென்றார்கள் என்று தெரிகிறது. சுமார் முன்னூறு ஆண்டுகள் - அதாவது கி.பி. நாலாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை - தமிழ்நாடு அவர்கள் ஆட்சியில் சிக்கியிருந்தது என்று தெரிகிறது. பின்னர் சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னனும் கடுங்கோன் என்கிற பாண்டிய மன்னனும் அவர்களிடமிருந்து தங்கள் தங்கள் நாட்டை மீட்டார்கள் என்றும் தெரிகிறது. ஆனால் இந்தக் களப்பிரர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், எப்படி ஆட்சி நடத்தினார்கள் என்ற விவரம் கடுகத்தனையும் தெரியவில்லை. அதைக் கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சியில்தான் நான் சென்ற நாலு வருடமாக ஈடுபட்டிருக்கிறேன் என்று நண்பர்களுக்குத் தெரியும்...

    அந்தத் திறந்த வெளித் தியேட்டரெங்கும் நிசப்தம் நிலவியது. யாரோ சிகரெட்டுக்காக லைட்டரைத் தட்டும் ஓசை கூடப் பிரம்மாண்டமாக ஒலித்தது.

    வேணு தன்னை மறந்த நிலையில் உட்கார்ந்திருந்தான். டாக்டர் நாகலட்சுமி சொல்லிக் கொண்டிருந்தாள்:

    "களப்பிரர் காலத்தை ஏன் வரலாற்றின் இருண்ட பகுதி என்கிறோம்? ஏனென்றால் அவர்கள் காலத்தைச் சேர்ந்த செப்பேட்டுச் சாசனமோ, கல்வெட்டோ, நாணயங்களோ எதுவும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் விரைவில்

    Enjoying the preview?
    Page 1 of 1