Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oonjal
Oonjal
Oonjal
Ebook74 pages36 minutes

Oonjal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'ஊஞ்சல்' கதையில், என்னுடைய சொந்தக் குழந்தைக் கால நினைவுகள் கை கொடுத்திருக்கின்றன.
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580126705427
Oonjal

Read more from Ra. Ki. Rangarajan

Related to Oonjal

Related ebooks

Reviews for Oonjal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oonjal - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    ஊஞ்சல்

    Oonjal

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    *****

    முன்னுரை

    'ஊஞ்சல்' கதையில், என்னுடைய சொந்தக் குழந்தைக் கால நினைவுகள் கை கொடுத்திருக்கின்றன.

    ரா. கி. ரங்கராஜன்

    *****

    அத்தியாயம் 1

    இந்த மாதிரி கத்தி முனையிலே கேட்கிறாயே, நியாயமா?

    அசோக்! என்று நான் ஒரு குரல் கொடுத்திருந்தால் போதும். திரும்பி என்னைப் பார்த்திருப்பான்; பார்த்து ஓடி வந்திருப்பான். ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றிக் கொண்டு, ஜமுனா! என்று குரலெல்லாம் ஆசையாகக் கூவியிருப்பான்.

    ஆனால் நான் அவனைக் கூப்பிடவில்லை. என் மனம், பத்தாண்டுகளுக்கு முன்னே கேட்ட அந்த வாக்கியத்துக்கு ஓடிவிட்டது - அசோகனுடன் அவளையும் கண்டதும்.

    தர்மாஸ் பிளாஸ்கின் அடியில் ஓட்டை விழுந்து விட்டதால் வேறு ‘கவர்' வாங்கிப் போட்டால் பத்து ரூபாய் மிச்சம் பிடிக்கலாமே என்று மூர்மார்க்கெட்டில் வேட்டையாட நுழைந்தவள் நான். தேடியது கிடைக்கவில்லை. பழைய புத்தகக் கடைகளை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு கடையில் மரப் பெஞ்சியில், பல வருடங்களுக்கு முன்பு அப்பா பதிப்பித்து வெளியிட்ட பழைய 'குண்டலகேசி' புத்தகமொன்றைக் கண்டு மீதொன்று ஏறிக் கொண்டாற்போன்ற நெருக்கடியுடன் ஒட்டிக் கொண்டிருந்த ஷாப்புகளில் ஒவ்வொரு விளக்காய் எரியத் தொடங்கின.

    எதிரே நோக்கினேன். ரிப்பன் கட்டிடமோ, சென்ட்ரல் ஸ்டேஷன் மணிக்கூண்டோ, வாகனகங்ளோ, தந்திக் கம்பங்களோ தெரியவில்லை.

    பத்து நீண்ட வருடங்களுக்கு முன்னே உள்ளத்தின் ஆழத்தில் நான் வரைந்து வைத்திருந்த ஓவியத் திரை விரிந்தது.

    அந்தத் திரையின் ஓரத்திலே காவிரிக் கன்னி குதித்தோடினாள், குளிர்ந்த தென்றலின் கையைப் பிடித்தவாறு. அகன்ற கருங்கல் படித்துறைகள், பசேலென்ற தோப்புகள், விஸ்தாரமான வீதிகள் - இத்தனையும் அங்கே இடம் பெற்றிருந்தன.

    மாதவையாவின் தோட்டத்திலே, நானும் அசோகனும் ஓடி விளையாடுகிறோம். அசோகனுடைய தோட்டம் என்றே சொல்லியிருக்கலாம் நான். மாதவையா அசோகனின் அப்பாதானே?

    மதிற் சுவருக்கு அப்பால் எம்பிப் பார்த்தால் காவிரி நீர் வெள்ளை நைலான் சேலைபோல் நளினமாக நழுவிக் கொண்டிருப்பதைக் காணலாம். மதிற்சுவரின் விளிம்பு அரையடி அகலம். என்னைப்போல் துணிச்சல்காரியானால் நீங்களும் அதன்மீது ஓடலாம். அசோகன் துரத்திக் கொண்டே ஓடி வருவான் கீழே. சரசரவென்று அவன் காலடியில் உலர்ந்த சருகுகள் அரைபடும் ‘வேண்டாம் ஜமுனா, வேண்டாம். அந்தப் பக்கம் ஆழம் ஜாஸ்தி, விழுந்துவிடப் போகிறாய்!' நான் சிரிப்பேன் அவன் பேச்சைக் கேட்டு. அப்படியொன்றும் ஆழமில்லை அவன் சொல்வதுபோல. எத்தனையோ தரம் நான் குதித்ததுண்டு. கழுத்துக்கு மேலே சிலுசிலுவென்றிருக்கும். தண்ணீருக்கடியில் உடம்பு வெதவெதக்கும். அப்படியே அமர்ந்திருப்பது அலுத்துவிட்டதா? ஓரமாக, படித்துறைக்குப் பக்கத்திலே கொஞ்சம் ஈர மணல் திட்டு இருக்கிறதே? அங்கே போய், முழ ஆழம் குடைந்தால், குபுக்கென்று தண்ணீர் ஊறிக்கொண்டு வருகிற காட்சியைப் பார்த்துப் பரவசமடையலாம்.

    அப்படித்தான் மதில் மேலே ஓடிக் கொண்டிருந்தேன் அன்றைக்கும். வழியெல்லாம் மரத்தின் கிளைகள். விலக்கிக் கொண்டே ஓடினேன்.

    இது பன்னீர் மரம். லேசாகக் குலுக்கினால் போதும். கொட்டும் வெள்ளைப் பூக்கள். 'குலுக்கேன் அசோக். குலுக்கேன் சொல்லுகிறேன்.' 'வேண்டாம் ஜமுனா, மரம் மொட்டையாக இருப்பதைப் பார்த்தால் எனக்கு என்னமோ போலிருக்கும்.'

    இது மா. கொத்துக் கொத்தான மாவடுவை வெடுக்கென்று கடித்துத் துப்பலாம் தண்ணீரில். இது பலா. இப்போது பழமில்லை. வேரிலே மூட்டை மூட்டையாக உட்கார்ந்திருக்கிற காலத்தில் மாதவையா அப்பாவுக்காக அனுப்புவார்.

    Enjoying the preview?
    Page 1 of 1