Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punnagai Varaali
Punnagai Varaali
Punnagai Varaali
Ebook167 pages1 hour

Punnagai Varaali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.

வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.

தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..

Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.

தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580127204956
Punnagai Varaali

Read more from J.S. Raghavan

Related to Punnagai Varaali

Related ebooks

Related categories

Reviews for Punnagai Varaali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punnagai Varaali - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    புன்னகை வராளி

    Punnagai Varaali

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சப்பாத்திக் கட்டை சரோஜா!

    2. சின்ன சவுக்கு!

    3. ‘புன்னகை' வராளி!

    4. 'வெடி'காத்த குமரன்!

    5. ஜோதிடப் பூனை ரோ’மியாவ்'!

    6. 'நோட்டு' நடப்பு!

    7. ஃப்ரீயா வேலை செய்யணும் குமாரு!

    8. பெயருக்குத்தான் மாடர்ன்!

    9. சின்னத்திரி!

    10. அகாடமியில் முதல் நாள்

    11. ‘ரம்பா! ஸ்வாமி?’

    12. ராமன் எத்தனை ராமனடி?

    13. 'அட'ங்காநல்லூர் மாடு!

    14. ‘சைலண்ட்' சீனு!

    15. பெத்த டாக்டரு காரு!

    16. ‘ஜிலேபியா சுத்துவேனே!'

    17. ‘எம்மதம் தாமதம்!'

    18. ஹிட்லர் காபி!

    19. கதவு!

    20. 'சாமி யார் பேச்சைக் கேக்கும்?'

    21. மாமியார் தினம்!

    22. 'சார்! முகநூல் போஸ்ட்!'

    23. சீரியல் புரோகிதர்!

    24. காற்றுள்ளபோதே ‘தூங்கி’க்கொள்

    25. 'கதை கிதை எழுதறவர்!'

    26. ‘அதாவது, எனக்குப் பேச வராதே!'

    27. 'பஞ்ச்' கல்யாணி!

    28. சமையல் கட்டும், சமையல் கிட்டும்

    29. நகைச்சுவை சாம்ராட் - ஜ.ரா. சுந்தரேசன்

    30. ஸ்ரீதேவியும் டயானாவும்

    31. 'உனக்காக எல்லாம் உனக்காக!'

    32. ‘நான் வரலே! நான் வரலே!'

    33. ஜிங் சாக்! ஜிங், ஜிங் சாக்!

    34. பதில் சல்யூட்!

    1. சப்பாத்திக் கட்டை சரோஜா!

    (அருவா ஆதி, பிச்சுவா பிச்சை, பிளேடு பக்கிரி போன்ற பஞ்ச்சான பெயர்களைப் பெருமையுடன் சுமந்து, பேட்டையில் ரவுண்டு வரும் ஆண் தாதாக்கள் இருப்பதுபோல, 'டாய்ய்.... னு' குரல் கொடுத்து வலம் மற்றும் இடம் வந்த சப்பாத்திக் கட்டை சரோசாவைப் பற்றிய சிறு அறிமுகம்).

    கருவிலேயே திரு உடையவர்கள் உண்டு. ஆனால், திமிர் உடையவராக சப்பாத்திக் கட்டை சரோசா இருந்தாள் என்று, அவருடைய ஆத்தா புஸ்பா சலிப்புடனும், கடுப்புடனும் சொல்வார். கல்யாணம், கார்த்திகை, மஞ்சள் நீராட்டு விழா போன்ற கொண்டாட்டங்களில், இரண்டு லௌடு ஸ்பீக்கர்களை, தெற்கு பார்த்து ஒன்று, வடக்கு பார்த்து ஒன்று என்கிற கணக்கில் 'லோகு சௌண்டு சர்வீஸ்' பொருத்தி, பேட்டையையே காது கிழிய அலற வைத்துக்கொண்டு இருந்தபோது, அவளுக்குப் பிடிக்காத பாட்டாக இருந்தால், சிசுவாக இருந்த சரோசா வண்ணாந்துறை கோவேறு கழுதையின் மூர்க்கத்துடன் கர்பப்பையில் எட்டி ஒரு உதை விடுவாளாம். ‘அடிச் சனியனே' என்று வலியுடன் குரல் கொடுத்தால், மேலும் வீர்யமான அடுத்த உதை கிடைக்கும் என்பதால், புஸ்பா பற்களைக் கடித்துக்கொண்டு சகித்துக்கொள்வாராம். வேற வழி? அந்தக்காலப் பெண் குழந்தைகள் சொப்பு, மரப்பாச்சி, கிலுகிலுப்பை, கோலாட்டக்கழி போன்றவற்றை விரும்பி வாயால் சுவைக்க ஆசைப்படும். ஆனால், சரோசா தவழ்ந்து, தத்தக்கா பித்தக்கான்னு நடந்து சப்பாத்திக் கட்டையை எடுத்து, யாரைப் பார்த்து அசால்ட்டாகத் தாக்கலாம் என்று பயிற்சி பெற்ற தீவிரவாதியாகச் சிந்தித்து செயல்படுவாராம். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவள் சரோசாவின் தங்கை ரேணுதான்.

    சூலம், ஈட்டி, பட்டாக்கத்தி, வேல் என்று மகாகாளியாக கைக்கு ஒன்று என்ற கணக்கில் ஆயுதம் தாங்கி, நாக்கை நீட்டி அச்சுறுத்தும் லெவலுக்குப் போகாமல், மரத்தாலோ, எவர்சில்வராலோ தயாரான சப்பாத்திக் (பூரிக் கட்டை என்ற பாடபேதமும் உண்டு) கட்டையை, தேவைப்பட்டால் சரோசாவுக்கு ஆயுதமாக எடுத்தாள உதவும். நீண்டு தடித்து, மலையாளக்கரையோர நேந்திரங்காயாகக் காட்சி அளித்த செல்போன், பரிமாண வளர்ச்சியில் மெல்லிய 24 கேரட் தங்க பிஸ்கெட் லெவலுக்கு சுருங்கிக்கொண்டது போல, சப்பாத்திக் கட்டைகள் உருவத்தில் சிறுத்தாலும், சரோசாவின் சாய்ஸ் பிடிமானத்தில் அடிக்கமுடியாத, ஆனால் அடிக்கத் தோதான சப்பாத்திக் கட்டையே.

    அணுகுண்டை நாங்கள் எந்த நாட்டின் மீதும் வீசி சண்டையை ஆரம்பிக்க மாட்டோம். ஆனால், எங்கள் மீது வீசிப்பட்டால் ‘பதில் மரியாதை'யாக வீசத் தயங்கமாட்டோம் என்று வல்லரசு நாடுகள், சம்மிட் மீட்டிங்குகளில் ச்சும்மா உளவாக்காட்டிக்கு சூளுரை எடுத்துக்கொள்வது உண்டு. ஆனால், தேவைப்பட்ட எந்த சந்தர்ப்பத்திலும் சப்பாத்திக் கட்டையை உபயோகிக்க சரோசா தயங்க மாட்டார்.

    அவருடைய சிறப்பு ஆயுதத்தால் அடி வங்கியவர்களில் லோக்கல் ரோமியோ தீனா, டூவீலரை வாகனமாகக் கொண்டு வீதிப் புறப்பாடாக வலம் வரும் சங்கிலித் திருடர்களில் வித்தகனான செயின் சேகர், பாவாடை தாவணிப் பருவத்தில் இருந்த தங்கை ரேணுவுக்கு டியூஷன் எடுக்கவந்து, ஒரு கணம் உணர்ச்சிவசப்பட்டு தொடை மாறித் தாளம் போட்ட பாட்டு வாத்தியார் ரங்குபதி ஆகியோர் சிலர்.

    ஆசிரியர் கையில் இருக்கும் பிரம்பு, போலீஸ்காரார் கையில் இருக்கும் லத்தி, வேலைக்காரிகள் கையில் இருக்கும் வாருகோல் எல்லாம் ஒரு பய உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டியே என்னும் நியதியைப் போல, சப்பாத்திக்கட்டை உபயோகத்தில் இருந்தது என்றாலும், அந்த ஆயுதத்தை தோளிலிருந்து தொங்கும் ஜோல்னா பையில்தான் வைத்திருப்பாள். மிளகுத் துப்பாக்கி, மினி சைரன் போன்ற பெண்டிரின் தற்காப்பு ஆயுதங்கள் அந்தக் காலத்தில் இருந்திருந்தாலும், அவளுடைய ஓட்டு சப்பாத்திக்கட்டைக்கே!

    சரோசாவின் தாய்மாமன் பொன்னுரங்கம் ஏற்பாடு செய்த படி, சரோசாவைப் பெண் பார்க்க வந்த நிகழ்ச்சியில் சப்பாத்திக்கட்டை இடம் பெற்ற கதையைச் சொல்லியாக வேண்டும். எல்லோருக்கும் காப்பி தண்ணி குடுத்துவிட்டு, சரோசா மாப்பிள்ளைப் பையன் தங்கராசுவை ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்தவள் திடுக்கிட்டாள். தங்கராசுவின் பார்வை, அவளுடைய தங்கை ரேணு செல்லும் திக்கெல்லாம் தேடி வண்டாகத் தொடர்ந்து கொண்டு இருந்தது. 'டேய்..டேய்... பொண்ணு நான்டா. பட்டுப் புடைவை கட்டி பூ வெச்சிருக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலே? பொண்ணு பாவாடை மேலாக்கிலேயா வந்து நிக்கும்'ன்னு கருவிக்கொண்டவள், தாய்மாமான் பொன்னுரங்கத்தின் மீது வைத்திருந்த பெருமதிப்பினால் கம்முனு கிடந்தாள்.

    வந்தவர்களை அனுப்பிவிட்டு வந்த பொன்னுரங்கம், 'நான் அப்பவே சொன்னேனே. ரேணு அவங்க முன்னாலே வரக் கூடாதுன்னு. நீங்க கேக்கலையே. ரேணுன்னா தங்கராசுக்கு சம்மதமாம். அதோட, மரிக்கொழுந்து சென்ட் வாசனையோட வந்த தங்கராசுவின் மீஞ்சூர் மாமாக்கு, ரெண்டாம் தாரமா கட்டிக்க சரோசாவுக்கு சம்மதம்னா, ரெண்டு சம்பந்தத்துக்கும் வர வெள்ளிக்கிழமையே தட்டு மாத்திக்கலாமாம்.'

    'என்னது....?'ன்னு குரல் கொடுத்து, சரோசா சிலிர்த்து எழுந்தாள். பொன்னுரங்கத்துக்கு உடுக்கு, பம்பை போன்ற வாத்தியங்கள் முழங்கும் சத்தம் மியூட் மியூசிக்காகக் கேட்டது.

    ‘அவங்க கிளம்பிப் போயிட்டாங்களா, மாமா?'ன்னு சரோசா கேட்டதுக்கு, இப்பத்தான் இப்பத்தான் போறாப் போலேன்னு பொன்னுரங்கம் தயக்கத்துடன் சொன்னார்.

    'மாமா, ரேணுவைக்கட்டிக்க தங்கராசு ஆசைப்பட்டதிலே தப்பில்லே. ஆனா, அந்த அரைக்கிழ மாமங்காரனுக்கு ரெண்டாம் தாரமா நான்களுத்தை நீட்டணுமா? டேய், மீஞ்சூர் மாமா. கஸ்மாலம், சீமைக் கொறங்கு. நீ தொலைஞ்சேடா. தோ பார்.'

    சரோசா வாசலுக்கு புயலாக விரைந்து, 'டாய்ய்ய்ய்ய னு' குரல் கொடுத்து, சப்பாத்திக் கட்டையை சர்ரென்று வீசினாள். காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்த அந்த ஆயுதம், குறி தவறாமல் மாமங்காரனின் அரை வழுக்கைத் தலையை சொத்தென்று தாக்கியதை, இன்றும் தெருவாசிகள் ஆச்சரியத்துடன் பேசிக்கொள்கிறார்கள்.

    2. சின்ன சவுக்கு!

    மனைவியுடன் மூர்த்தியின் வீட்டுக்குள் சபேசன் நுழைகிறார்.

    ‘அடடே! என்ன அதிசயம். என்னிக்கும் இல்லாத திருநாளா, இன்னிக்கு என் வீடு தேடி வந்திருக்கீங்க மாமா. அதுவும், பார்வதி - பரமசிவனா?'

    'உன்னைப் பாக்கலாம்னு வந்தேன். அதென்னடா உன் வீட்டு வாசலிலே மலை மாதிரி அவ்வளவு குப்பை. ஒரு மாதிரி அழுகினவாசனை வேற வருது. கொசுப்பண்ணை ஏதான அமைச்சு, மலேரியா, ஃபைலேரியா, டெங்கு, சிக்குன்குனியாக்கு போஷகராக இருக்கியான்ன?'

    மூர்த்தியின் முகம் இருண்டது. ‘அதுவா? குப்பை லாரி நாலு நாளா வரலே. குப்பையை விடுங்க, மாமா. எப்படி இருக்கீங்க? உங்க ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு...'

    சபேசனின் கவனம் மோட்டுவளைக்குப் போனது. 'இதென்னடா, பேய் வீடு மாதிரி ஒட்டடை மண்டிக்கிடக்கே. உடம்புக்கு கெடுதலாச்சே. ஞாயிற்றுக்கிழமைலே வேட்டியை டப்பாகட்டு கட்டிண்டு, வீட்டை சுத்தம் செய்யமாட்டீங்களா? வௌவால்கள் கிழக்கேயும் மேற்கேயும் பறக்கிறதுதான் பாக்கி. நீ இன்னும் மாறவே இல்லே. அப்படியே இருக்கே. ஆமா, இது உன் பேத்தி தானே? என்ன இப்படி ஒல்லிப்பிச்சானா, மூங்கில் பிளாச்சு மாதிரி இருக்காளே. உன் பேரு என்னம்மா?'

    சபேசனின் பேத்தி நெளிந்து, தாத்தாவின் பின்னால் கிரகண சந்திரனாக ஒளிந்துகொள்கிறாள்.

    'குழந்தைகளை, தைரியமா பேசிப் பழக சொல்லித்தர வேண்டாமா? அதெல்லாம், தாத்தா பாட்டிக்களோட வேலை இல்லையா? அப்பா அம்மாக்களுக்கு எங்கே நேரமிருக்கு? ஏம்மா உன் பேரு என்ன? எந்த

    Enjoying the preview?
    Page 1 of 1