Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Aval Urangattum
Ini Aval Urangattum
Ini Aval Urangattum
Ebook85 pages1 hour

Ini Aval Urangattum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சசி என்பவன் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக பணி புரிகிறான். இவன் மனைவி மது. 'ட்விங்கிள்' என்ற ஒரு பெண் குழந்தை உண்டு. மதுவின் கடந்த காலத்தை நினைவுபடுத்த ஸ்ரீராம் மதுவின் வாழ்வில் வருகிறான். யார் இந்த ஸ்ரீராம்? மதுவின் கண்ணோட்டத்தில் இவன் யார்? மதுவை வைத்து என்ன சாதிக்க நினைக்கிறான்? இதெல்லாம் சசிக்கு தெரிய வருமா? தெரிந்துவிட்டாலோ சசியின் முடிவு என்னவாக இருக்கும்? வாருங்கள் வாசிப்போம்...
Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580100607879
Ini Aval Urangattum

Read more from Devibala

Related to Ini Aval Urangattum

Related ebooks

Reviews for Ini Aval Urangattum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Aval Urangattum - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இனி அவள் உறங்கட்டும்

    Ini Aval Urangattum

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    பேச்சு வார்த்தை முடிந்து, பார்ட்டி தொடங்கி விட்டது. உயர்வகை மதுபானங்கள் சீருடை தரித்த பணியாளர்களால் எடுத்து வரப்பட்டது.

    துல்லிய கண்ணாடிக் கோப்பைகளில் பனிக்கட்டி கலந்து பொன்னிற மாக நிரம்பியது. வறுத்த அசைவ உணவுகளும், முந்திரி, வாதுமைப் பருப்புகளும் பீங்கான் தட்டுகளில் இடம் பிடித்தன.

    லோ-ஹிப் அணிந்து, பிடரி வர தலைமுடி தழைய, உதட்டுச் சாயத்தில் முங்கி எழுந்த உயர்ந்த மனிதரின் மனைவிகள், வேறு நபர் கரங்களுக்கு தங்கள் இடுப்புகளை தற்காலிகமாக வாடகைக்கு விட்டிருக்க, அந்த நட்சத்திர ஓட்டல் பார்ட்டி ஆரம்பமாகி விட்டது. புரியாத ஆங்கில இசையில் ஆபாசமாக ஒருத்தி இடையை அசைத்து ஆடிக் கொண்டிருக்க, அறுபதுகள் ‘ஜொள்’ விட்டுக் கொண்டிருந்தன.

    எதிலும் ஒட்டாமல் நின்று கொண்டிருந்தான் சசிகுமார்.

    அவன் உத்யோகம் பார்க்கும் கம்பெனி நடத்தும் பார்ட்டிதான் அது. அங்கே முதல்லேந்து உயர்தர அதிகாரிகளில் சசியும் ஒருவன். இருப்பதிலேயே இளையவன், அழகானவன், மெத்தப் படித்தவன்.

    வாங்க சசி! கம்பெனி குடுங்க!

    ஒரு ஐம்பது வந்து, அவன் கரத்தைப் பற்றியது. அவரது மனைவி சசியை நெருங்கி ஒரு பெட்ரூம் (?) பார்வை பார்த்தாள். முக்கலாக...

    வா... ங்... க ச... சி! என்றாள்.

    ஸாரி! டீல் முடிஞ்சாச்சு. நான் புறப்படறேன்!

    ஷ்! கொஞ்சம் லிக்கராவது எடுத்துக்குங்க!

    எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை!

    எம்.டி.க்கு இந்த ஒரு விஷயத்துலதான் கோபம். நீங்க சரியா இதுல ஈடுபடறதில்லைனு!

    உங்க மிஸஸ் இதுக்கெல்லாம் ஏன் வர்றதில்லை? அந்தக் கிழவி விகாரமாகச் சிரித்தபடி கேட்டபோது, பிணம் எழுந்து நின்றதுபோல இருந்தது.

    அவளுக்குப் பிடிக்காது!

    அங்கிருந்து நகர்ந்து எம்.டி.யை நெருங்கினான் சசி.

    நான் புறப்படறேன் சார்!

    இரண்டாவது லார்ஜில் இருந்த எம்.டி. அவனை கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார்.

    நோ! நீங்க போகக்கூடாது!

    சார்!

    இன்னிக்குக் கம்பெனி தராம நான் விடப் போறதில்லை உங்களை!

    சார் ப்ளீஸ்!

    சசி தர்ம சங்கடமாக நெளிந்தான்.

    எம்.டி. கை தட்டினார். நாலு பேர் முளைத்தார்கள். கூடவே ஒரு பேரரும்.

    இன்னிக்கு சசியை லிக்கர் எடுத்துக்க வைக்கப்போறம்! எல்லாரும் வேடிக்கையாகத் திரும்பிப் பார்த்தார்கள்.

    சடாரென சசியை நாலு பேர் பிடித்துக் கொள்ள, ஒருவன் சசியின் வாயில் ஜானி லிக்கரை ஊற்றினான்.

    சசி திமிறத் திமிற,

    மதுத் திவலைகள் ஸ்லோமோஷனில் சிதறிக் கொப்பளிக்க, சகலமும் கைதட்ட, ஜாஸ் இசை உச்சத்தில் முழங்க, பார்ட்டி இன்னும் களைகட்டியது.

    ஒரு கோப்பை மது சசியின் உள்ளே ஊடுருவ,

    தலையை சிலுப்பிக் கொண்டு, விஷம் குடித்தவன் போல துடித்தான் சசி.

    மறுபடியும் கைதட்டல்.

    உலகத்துல எல்லாம் அனுபவிக்கணும். மனுஷனாப் பிறந்து என்ன லாபம்?

    உன் தொண்டையில் அமிலமாக அது தகித்தாலும் அதன் இதமான சூடு, புதிய சுவை எல்லாமாக சசிக்கு கொஞ்சம் பிடித்தே இருந்தது அது. ஒஸ்ன் மோர்? எம்.டி. அவனிடம் மற்றொரு கோப்பையை நீட்ட, சற்று தயங்கிய பின் வாங்கிக் கொண்டான். குடித்தான்.

    ‘அப்... அப்... அப்!’

    மறுபடியும் கைதட்டல் காதை பிளந்தது.

    யாரோ ஒரு பெண் வந்து சசியின் கைகளை எடுத்து தன் இடுப்பில் கோர்த்துக் கொண்டாள்.

    ஆடத் தொடங்கினாள், மிதப்பது போல,

    அவளது செழுமையான பகுதிகள் அவன் உடலில் உரசி உரசி விலக. போதை இன்னும் அதிகமானது அவனுக்கு.

    அவனும் தாறுமாறாக ஆடத் தொடங்கினான்.

    வெகுநேரம் பார்ட்டி நடந்தது.

    நேரம் நள்ளிரவைக் கடந்தது.

    பல பேர் தவழ்ந்தார்கள். சிலர் மிதந்தார்கள். வேறு சிலர் துப்புரவாக மல்லாந்திருந்தார்கள்.

    சசி ஆடி ஆடி வெளியில் வந்தான். தன் காரை எப்படியோ அடையாளம் கண்டு நெருங்கி விட்டான். சாவி போட்டுத் திறந்து உள்ளே தன்னை நுழைத்துக் கொண்டான்.

    ஷட்டர் திறக்க பின் இரவின் குளிர்காற்று முகத்தில் ஜிலீரெனமோதி, போதை கலைந்து கணிசமாக...

    Enjoying the preview?
    Page 1 of 1