Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chakkalathi
Chakkalathi
Chakkalathi
Ebook76 pages28 minutes

Chakkalathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுமதி செல்லமாக வளர்ந்த பெண். எதற்கும் பயப்படாத தைரியசாலி, யாராக இருந்தாலும் நேருக்குநேர் நின்று பேசிவிடும் ரகம் இவள், தன்னுடைய கல்லூரி படிப்பை, அக்கா லஷ்மி வீட்டில் தங்கிப் படிக்கிறாள். அங்கு அவளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் என்ன? அதை அவள் எப்படி கையாண்டாள் என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateSep 4, 2023
ISBN6580100608141
Chakkalathi

Read more from Devibala

Related to Chakkalathi

Related ebooks

Reviews for Chakkalathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chakkalathi - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சக்களத்தி

    Chakkalathi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    சுமதி உள்ளே நுழையும்போது நந்தகோபால் நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்தான்.

    மடியில் வெற்றிலை பெட்டி! நிதானமாக வெற்றிலை கிள்ளி, மடியில் தடவி, மடித்துக் கொண்டிருந்தான்.

    நேரம் இரவு ஏழு!

    சுமதி உள்ளே போனாள்.

    நில்லு!

    திரும்பினாள்.

    என்னத்தான்?

    உனக்குக் காலேஜ் எத்தனை மணிக்கு முடியுது?

    நாலு மணிக்கு!

    இப்ப மணி ஏழு! நீ பத்தொம்பது வயசுப் பொண்ணு! எங்கே ஊரைச் சுத்திட்டு வர்றே?

    ஸ்நேகிதிகள்கூட சினிமா பார்த்துட்டு வர்றேன் அத்தான்!

    மேட்னி ஷோவா?

    ஆமாம்!

    க்ளாஸ் கட் பண்ணிட்டா?

    இல்லை! மத்தியானம் லீவு விட்டுட்டாங்க. அதான் போனோம்!

    உன்கூட வந்தது ஸ்நேகிதிகளா இல்லை... ஸ்நேகிதனா? சுமதி அருவெறுப்புடன் பார்த்தாள்.

    அரைக்கண்ணால் அதை கவனித்த நந்து, இதப்பாரு! இதுமாதிரி சினிமாவுக்குப் போறதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது. காலேஜ் விட்டா வீடுன்னு வந்து சேரணும்! நாளைக்கு நல்லபடியா ஒரு இடத்துல உன்னைக் கட்டிக் கொடுக்கவேண்டாம் நாங்க?

    சுமதி ஏதோ பேச வாய் திறந்தாள். தோளில் கைவிழுந்தது. திரும்பினாள், அக்கா நின்று கொண்டிருந்தாள்.

    ‘எதுவும் பேசாதே தயவுசெய்து’ என்ற சைகை இருந்தது. சுமதி உள்ளே வந்துவிட்டாள்,

    லக்ஷ்மி இங்க வா!

    என்னங்க?

    உன் தங்கச்சியைக் கொஞ்சம் அடக்கி வை! எனக்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்காது!

    ஒரு சினிமாவுக்குப் போனா தப்புங்களா?

    தப்புதான். இன்னிக்கு தோழிகள்கூடப் போவா! நாளைக்கு பசங்க சேருவாங்க! நான் என்ன பதில் சொல்றது உங்கப்பாவுக்கு? ம்? இதையெல்லாம் நீ கவனிக்கணும். புரியுதா?

    சரிங்க!

    நந்து எழுந்து வெளியே போனான்.

    லக்ஷ்மி கதவை சாத்திவிட்டு வந்தாள்.

    சுமதி கூடத்துக்கு வந்தாள்.

    அத்தான் போயாச்சா?

    ம்!

    அக்கா! எனக்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கலை!

    சுமதி

    எதுக்கெடுத்தாலும் விரட்டறார். நின்னாக் குத்தம். நடந்தா தப்பு. நான் என்ன அடிமையா?

    அப்படியில்லடி! உன்மேல உள்ள அக்கறையில்...!

    வேண்டாம்! அவருக்கு என்மேல அக்கறை அவசியமில்லை.! நான் தப்பான பொண்ணா இருந்தா, அவர் என்னைக் கண்டிக்கலாம். அதுல நியாயம் உண்டு. நான் ஒழுங்கா இருக்கும்போது ஏன் விரட்டறார்? நம்ம கிராமத்துல வசதி இல்லைனா அப்பா என்னை இங்கே அனுப்பினார். இதுக்கும் மேல என்னை விரட்டினா, பாதில படிப்பை விட்டுட்டு நான் ஓடிப்போயிடுவேன்!

    லக்ஷ்மி பதறிவிட்டாள்.

    அதெல்லாம் வேண்டாம் சுமதி

    அப்படீன்னா அத்தான்கிட்ட கொஞ்சம் சொல்லி வை, நான் அவருக்கு அடிமை இல்லைனு!

    சரிடீ

    இனிமேலும் அவர் வாயைத் தொறந்தா, நான் நேருக்குநேர் மோத வேண்டிவரும். இத்தனை நாள் அக்கா புருஷன்னு நான் குடுத்த மரியாதை ரத்தாகும்!

    Enjoying the preview?
    Page 1 of 1