Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mothers Touch!
Mothers Touch!
Mothers Touch!
Ebook83 pages31 minutes

Mothers Touch!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பத்தின் பொறுப்புகளை உணர்ந்து அமைதியான, ஒழுக்கமான பெண்ணாக வாழும் மஞ்சு. மஞ்சுவுக்கு காதல் வலை வீசியது யார்? பக்திமானாக திகழும் சந்திரனின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் உறைந்து போய் நிற்கும் மஞ்சு, அலமேலுவின் மன்நிலையை நாமும் காணலாம்.

Languageதமிழ்
Release dateNov 19, 2022
ISBN6580100608145
Mothers Touch!

Read more from Devibala

Related to Mothers Touch!

Related ebooks

Reviews for Mothers Touch!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mothers Touch! - Devibala

    http://www.pustaka.co.in

    மதர்ஸ் டச்!

    Mothers Touch!

    Author :

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அண்ணி இரைந்துக் கத்திக் கொண்டிருந்தாள்.

    மாசக் கடைசி! கையில் பத்து ரூபா பணமில்லை! காஸ் தீர்ந்தாச்சு! காய்கறி இல்லை! நான் எங்கே போவேன்? எப்படி சமாளிப்பேன்?

    மஞ்சு அப்போதுதான் எழுந்து வந்தாள்.

    அண்ணி கத்திக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

    பொருட்படுத்தாமல் பாத்ரூமுக்குப் போய் பல் தேய்த்தாள். முகம் கழுவிக்கொண்டாள்.

    சமையல் கட்டுக்கு வந்தாள்.

    இந்தா காபி!

    அண்ணி தந்த காபியை வாங்கி நிதானமாக உறிஞ்சத் தொடங்கினாள்.

    நேத்திக்கு ராத்திரி உங்கண்ணா வரும்போது பதினோரு மணி. வந்ததும் கொஞ்சம் மோரைக் குடிச்சிட்டு, படுத்தாச்சு! கையில் சல்லிக் காசு இல்லை! நான் சொல்லியாச்சு! எதையும் காதுல போட்டுக்காம காலைல எழுந்து குளிச்சிட்டு, கோயிலுக்குப் போயாச்சு! பக்தி தேவைதான். அதுக்காக குடும்பத்தை கவனிக்காம கோயிலுக்குப் போனா, அந்த தெய்வம் கூட மன்னிக்காது!

    மஞ்சு திரும்பி டம்ளரை கீழே வைத்தாள்.

    எழுந்து உள்ளே போனாள்.

    நான் கத்திக்கிட்டே இருக்கேன். உனக்குக்கூட பெண் கஷ்டம் புரியலையா? எழுந்து போறியே!

    மஞ்சு திரும்பி வந்தாள்!

    இதுல முன்னூறு ரூபா இருக்கு. போதுமா?

    நிமிர்ந்து மஞ்சுவைப் பார்த்தாள் அலமேலு.

    ஏதுடி பணம்?

    ஆபிஸ் கேஷ்! நாளைக்குக் கட்டணும்! நான் அட்ஜஸ்ட் பண்ணிக் கட்டிக்கறேன்!

    உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?

    நான் என்ன கையாடலா பண்ணியிருக்கேன். கலெக்ஷன் காசு தாண்ணி லேட்டாக் கடினாத் தப்பில்லை!

    நீயே பாரு! குடும்பத் தலைவர் அவர். இப்படி பொறுப்பில்லாம இருந்தா நியாயமா? நான் ஒருத்திதான் கத்தணுமா? நீ எடுத்துச் சொல்லக்கூடாதா?

    மஞ்சு பதிலே பேசாமல் குளிக்கப் போய்விட்டாள்.

    என்ன எழவுக் குடும்பம்டி! என்ன கூச்சல் போட்டாலும், தானமாக அண்ணனும் சரி, தங்கையும் சரி வாங்கிப் பேச மாட்டாங்க! மஞ்சு தேவலாம்! கஷ்டம்னா ஏதோ தர்றா. செய்யணும்-னு இருக்கு. அவருக்கு அதுவும் இல்லை!

    மஞ்சு கனகாம்பர நிற சுடிதாரை அணிந்துகொண்டாள். ஷாம்புவில் கழுவிய கூந்தலை, டிரையரைகொண்டு உலர்த்தினாள்.

    மெலிதாக தன் மேக்கப்பை முடித்துக்கொண்டாள்.

    மஞ்சு! டிபன் ரெடி!

    எழுந்து வந்தாள்.

    வெங்காய ரவா உப்புமா, சட்னி!"

    மௌனமாகச் சாப்பிட்டாள்.

    சட்னி சரியா இருக்கா மஞ்சு? கேட்டபடி கொஞ்சம் ருசி பார்த்தாள் அலமேலு.

    கால் உப்புகூட இல்லை!

    என்னடி இது சப்புன்னு இருக்கு, உப்பே போடலையா நான்? எழுந்து வந்து போட்டாள்.

    ஏண்டீ, உப்பு இல்லை அண்ணினு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? சப்புனு இதையும் அள்ளிப் போட்டுக்கறியே!

    அண்ணி புலம்பி முடிப்பதற்குள் மஞ்சு சாப்பிட்டாகி விட்டது.

    நான் வர்றேன் அண்ணி!

    "மஞ்சு! சீக்கிரம் வந்துடு! நவராத்திரி நேரம். கோயிலுக்குப் போகலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1