Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhage vaa... Aruke vaa...
Azhage vaa... Aruke vaa...
Azhage vaa... Aruke vaa...
Ebook92 pages56 minutes

Azhage vaa... Aruke vaa...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603190
Azhage vaa... Aruke vaa...

Read more from Devibala

Related to Azhage vaa... Aruke vaa...

Related ebooks

Reviews for Azhage vaa... Aruke vaa...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhage vaa... Aruke vaa... - Devibala

    http://www.pustaka.co.in

    அழகே வா... அருகே வா...

    Azhage vaa… Aruke vaa…

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ஒரு அடி எழும்பிவிட்டாள் வாசுகி. சந்தோஷத்தில் ஒரு மாதிரி மூச்சு முட்டியது.

    அந்தப் பதிவுத் தபால் அவளை ஒரு நிமிடம் சொர்க்கம் தொட வைத்த பின் மீட்டது.

    வேலைக்கான உத்தரவு!

    அம்மா ஓடி வந்தாள்!

    என்னடீ வாசுகி லெட்டர்?

    அம்மா! எனக்கு வேலை கிடைச்சிருக்கு!

    அப்படியா?

    அதுவும் சாதாரண வேலை இல்லை! உத்யோகம். எடுத்த எடுப்புல அதிகாரிப் பதவி! மாசச் சம்பளம் ஏழாயிரம் ரூபா.... கம்பெனி வீடு... கார் வசதி எல்லாம் கிடைக்கப் போகுது!

    நீ நிஜம்மாவா சொல்ற?

    ஆமாம்... அது ஒரு ஃபாரின் கொலா பரேட்டட் கம்பெனி. இண்டர்வ்யூ வந்ததே கஷ்டம். ஓரளவு நல்லா செஞ்சிட்டு வந்தேன். சிபாரிசு இருக்கும்... நமக்கெங்கே கிடைக்கப் போகுதுன்னு நினைச்சேன். சொர்க்கம் நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குதும்மா!

    உடனே உங்கப்பாவுக்கு போன் பண்ணு!

    வாசுகி வாசலில் இறங்கினாள்.

    தெருக்கோடிக்கு வந்தாள். மளிகைக் கடையை நோக்கி நடந்தாள்.

    எதிரே உள்ள டீக்கடையில் தோழர்களுடன் டீ அடித்துக் கொண்டிருந்தான் ரஞ்சன். வாயில் சிகரெட்.

    டேய்... உங்கள் போகுதுடா!

    ரஞ்சன் சட்டென சிகரெட்டைப் போட்டு அணைத்துவிட்டு வேகமாக டீயை உறிஞ்சி டம்ளரை வைத்தவன், அவசரமாக சாலையைக் கடந்தான்.

    வாசுகி மளிகைக் கடையில் டயல் செய்தாள்

    ரஞ்சன் நெருங்கி விட்டான்.

    அப்பா, நான் வாசுகி பேசறேன். அரை நாள் லீவுல வீட்டுக்கு வர்றிங்களா?

    லீவு இல்லைமா! எதுக்கு?

    ஒரு ஹேப்பி நியூஸ்.. எனக்கு வேலை கிடைச்சிருக்கு!

    அப்படியா?

    மெக்காலே க்ரூப்ல ஜுனியர் ஆபீசர் போஸ்ட்!

    மைகாட்! நான் மத்யானம் வீட்டுக்கு வர்றேன்மா ரிசிவரை வைத்து விட்டுத் திரும்ப, ரஞ்சன் விழிகளை விரித்தபடி நின்றான்.

    வாசுகி... நிஜம்மாவா?

    ஆமாம் ரஞ்சன், ஏழாயிரம் ரூபா சம்பளம்!

    மச்சம் உனக்கு

    சரி, இங்கே நின்னு பேசறது சரியில்லை. சாயங்காலம் வழக்கமான இடத்துல சந்திக்கலாம். இப்ப நான் போறேன்!

    எப்ப ட்யூட்டில் ஜாயின் பண்ணணும்?

    தெரியலை! நாளைக்கு அந்த ஆபீஸ்ல போய் கேட்டாத் தெரியும். வர்றேன்!

    வாசுகி போய்விட்டாள். ரஞ்சன் வாசுகியை மூன்று வருடங்களாகக் காதலித்து வருகிறான். அந்தத் தெருப் பையன்தான்.

    பிகாம் வரை திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன்.

    டிகிரி முடித்த பின்புதான் இங்கு வந்தான்.

    அதுவும் தங்கியிருப்பது அண்ணன்-அண்ணி வீட்டில். பெற்றவர்கள் இல்லை.

    டிகிரிக்குப் பிறகு ஸ்டெனோ கிராபி, அக்கவுண்ட்ஸ் என்று ஏதேதோ படித்தான்.

    ஐந்து வருடங்களாக ஏறி இறங்காத கம்பெனிகள் இல்லை. வேலை கிடைக்கவில்லை.

    இரண்டொரு கம்பெனிகளுக்கு வாசுகியும் வேலை தேடி வர, அப்போதுதான் தெரிந்தது அவள் அதே தெருக்காரி என்று.

    அவளும் மூன்று வருடங்களாக வேலை தேடிச் சலித்த பெண். சந்திப்பு ஒன்று நாலாகி மெல்லமெல்ல நட்பாக மாறி, இன்று காதலாகக் கனிந்துவிட்டது.

    ரெண்டு பேருக்கும் வேலையில்லை. மத்தவங்க தர்ற துட்ல லவ் பண்ணிட்டு அலையறம். எத்தனை நாளைக்கு வாசுகி?

    தெரியல! ஒடறவரைக்கும் ஓடட்டும்!

    எது? காதலா?

    நான் காதலைச் சொல்லலை!

    நீ பெண். உனக்குக் கிடைக்கலைனாக்கூட தப்பில்லை வாசுகி. பெத்தவங்களும் இருக்காங்க. என் கதை அதுவா? அண்ணி மறைமுகமா என்னை அவமானப்படுத்திட்டுத்தான் இருக்காங்க. அண்ணன் ஸ்ட்ராங்க். அதனால பேச வழியில்லை!

    பெண்ணா இருந்தாலும், வேலை இருந்தே ஆகணும் ரஞ்சன். இல்லைன்னா, யாரும் மதிக்கமாட்டாங்க. கல்யாண மார்க்கெட்ல என்னை எப்படி விக்கறதுன்னு அப்பா குழம்பி நிக்கறார்!

    நல்லது! நம்ம காதல் தொடரட்டும்!

    போதுமா!

    சரி! நீயும் நானும் காதலிக்கத் தொடங்கி பல மாசங்கள் ஆச்சு. இப்ப ஒரு ஒப்பந்தம் பண்ணிக்கலாம்!

    சொல்லுங்க!

    "நம்ம ரெண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1