Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanthana Avan Vanthana?
Vanthana Avan Vanthana?
Vanthana Avan Vanthana?
Ebook100 pages2 hours

Vanthana Avan Vanthana?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தசரதன், ராவ் இருவரும் நண்பர்கள். தசரதனின் அக்கா மகன் செந்தில்நாதனுக்கு, ராவ் அவரின் மகள் வந்தனாவை பெண் பார்க்கச் செல்ல முடிவு செய்கிறார்கள். செந்தில்நாதன் வந்தனாவை பார்த்தானா? இல்லையா? இறுதியில் நடந்தது என்ன? என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்..!

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580100607832
Vanthana Avan Vanthana?

Read more from Devibala

Related to Vanthana Avan Vanthana?

Related ebooks

Reviews for Vanthana Avan Vanthana?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanthana Avan Vanthana? - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வந்தானா அவன் வந்தானா?

    Vanthana Avan Vanthana?

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தான் இளங்கோ.

    நேரம் இரவு பதினொன்று. அந்தத் தியேட்டரில் இரவுக் காட்சிக்காக வந்திருந்த இளங்கோ, படம் பிடிக்காமல் பாதியில் எழுந்துவிட்டான். வெளியில் வந்து மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தான்.

    போக்குவரத்து ஏறத்தாழ முடிந்து, மனித நடமாட்டத்தையும் தொலைத்துவிட்டு சோடியம் விளக்குகளை மட்டும் துணைக்கு வைத்திருந்தது சாலை.

    இடம் - திருநெல்வேலி டவுன்.

    இளங்கோ போக வேண்டிய இடம் கோவில்பட்டி.

    புறப்பட்டுவிட்டான்.

    லேசான பசி, அடிவயிற்றில் சின்ன சங்கீதமாக ஆரம்பமாகியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைகள் மூடும் நிலையில் இருக்க, ராஜஸ்தான் ஓட்டலின் வாசலில் வண்டியை நிறுத்தினான்.

    சூடாக சுக்கா சப்பாத்தியும், சால்னாவும் கிடைத்தது. பாலையும் பருகிவிட்டு மறுபடியும் ராஜ்தூத்தை ஸ்டார்ட் செய்தபோது பதினொன்று முப்பது.

    கோவில்பட்டி செல்லும் சாலையில் வண்டியைத் திருப்பி படிப்படியாக வேகம் பிடித்தான். டவுனை விட்டு சற்று விலகி வந்துவிட்டபடியால் சாலை ஏகாந்தமாக இருந்தது. அறுபதில் வேகத்தை அமைத்துக்கொண்டு சீறிப்பாயத் தொடங்கினான்.

    படுவேகமாக வண்டியை ஓட்டுவது இளங்கோவுக்குப் பிடிக்கும். நண்பர்கள் பலமுறை எச்சரித்தும், பேச்சைக் கேளாமல் இப்போதும் அதைச் செய்துகொண்டு தானிருக்கிறான்.

    சாலையின் இருபுற மரங்களும் ‘சர் சர்’ என்று பின்னுக்குத் தேய, இதமான குளிரும், இரவுப் பூச்சிகளின் சங்கீதமும், அவ்வப்போது எதிர்ப்படும் இரவு வாகனங்களும் இன்பமாக இருந்தது.

    சுமார் பதினைந்து நிமிடப் பயணம் முடிந்திருக்கலாம். அங்கங்கே முணுக் முணுக்கென தூரத்தில் விளக்குகள் தெரிய,

    அது எந்த இடம் என்று தெரியவில்லை.

    திடீரென சாலைக்குள் நுழைந்தான் அவன். எங்கிருந்து ஓடி வருகிறான் என்பது தெரியவில்லை. கண்மண் தெரியாமல் அசுர வேகத்தில் அவன் ஓடி வர, இளங்கோ வேகத்தைக் குறைப்பதற்குள் அது நிகழ்ந்துவிட்டது.

    அவன் சாலையின் குறுக்கே அசுர கதியில் பாய்ந்துவிட, இளங்கோ கட்டுப்படுத்த முடியாமல் சிதற, மோட்டார் சைக்கிள் அவனை மோதித் தூக்கி வீச, இளங்கோவும் அதிலிருந்து எழும்பி, ஸ்லோமோஷனில் பறந்து ‘தொப்’பென்று தரை தொட்டான்.

    ஆனால் இளங்கோ விழுந்த இடம் சாலையோரம் குவிந்திருந்த வைக்கோல் போர். ஒரு கீறல்கூட விழாமல் காப்பாற்றிவிட்டது.

    அதிர்ச்சியிலிருந்து இளங்கோ விடுபட, ஐந்து நிமிடம் போல ஆகிவிட்டது. சடாரென எழுந்தான். சாலையை கவனித்தான்.

    ஒரு சரிவில் ராஜ்தூத்தும், சாலையின் மத்தியில் ரத்த வெள்ளத்தில் அவனும் கிடப்பது தெளிவாகத் தெரிந்தது.

    ‘கடவுளே, மோதிவிட்டேனா?’

    ‘நான் எங்கே மோதினேன்? அவன் காட்டுத்தனமாக ஓடி வந்தால் யார் பொறுப்பு?’

    ‘ஆள் உயிருடன் இருப்பானா?’

    நெஞ்சு படபடக்க எழுந்த இளங்கோ, அவன் கிடந்த பகுதியை அணுகினான்.

    தலை பிளந்து, உடம்பு சிதைந்து ரத்தச் சகதியில் கூழாகியிருந்தான் அவன்.

    ‘நிச்சயம் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை!’

    அருகில் நெருங்கினான்.

    அவனை விட்டு விலகி ஒரு பர்ஸ் கிடந்தது. அதை எடுத்தான் இளங்கோ. பிரித்தபோது கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்களும், வேறு பல காகிதங்களும்...

    ‘ஓ... இனி இங்கு நிற்பது ஆபத்து!’

    ‘மோதியவன் நான் என்பார்கள். இவன் தாறுமாறாக ஓடி வந்ததை எடுத்துச்சொல்ல சாட்சி இல்லை!’

    ‘போலீஸ் என்னைப் பிடிக்கும்!’

    ராஜ்தூத்தை நிமிர்த்தி, ஸ்டாண்ட் போட்டு ஸ்டார்ட் செய்தான்.

    உடனே புறப்பட்டுவிட்டது.

    ‘என்னை மன்னிச்சிடு தோழா! உன்னை நான் கொல்லலை. நான் வேகமா ஓட்டினது தப்புதான். ஆனா நீ தாறுமாறா ஓடி வந்தது அதைவிடத் தப்பில்லையா?’

    வேகம் பிடித்தான்.

    கோவில்பட்டியில் தான் தங்கியிருந்த லாட்ஜின்முன் நிறுத்திப் பூட்டினான்.

    கல்லாவில் முதலாளி உறங்கிக் கொண்டிருக்க, மாடியேறி தன்னறையை அணுகினான்.

    பூட்டு திறந்து, விளக்கு போட்டான்.

    இந்த நேரம் இளங்கோவைப் பற்றி தெரிந்துகொண்டு விடுங்களேன்.

    போன மாதம் முப்பது வயதை முடித்துக்கொண்ட இளங்கோ, தனியார் நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீஷியன். உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லாதவன். பிடித்தம் போக கையில் மிஞ்சும் ஆயிரத்து அறுநூத்தி நாப்பத்தி ஏழு ரூபாயை சந்தோஷமாகச் செலவழிப்பவன். ஒருநாளைக்கு எட்டே ரூபாய் என்று வசூலிக்கும் ஒரு லாட்ஜ் முதலாளி யாருக்குக் கிடைப்பார்கள்?

    அழகன் என்று சொல்ல முடியாது. சற்று வசீகரமானவன் என்பதை அவனது நல்ல உயரமும், வளமான உடலும் அவ்வப்போது நினைவுபடுத்தும்.

    கடந்த ஆறுமாதமாக டவுனில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் காந்திமதியை காதலிக்கிறான். அதனால், அவளை சந்திக்கவே வாரத்துக்கு மூன்று நாள்

    Enjoying the preview?
    Page 1 of 1