Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rudhra Thaandavam
Rudhra Thaandavam
Rudhra Thaandavam
Ebook123 pages2 hours

Rudhra Thaandavam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வது என்பது கதிர்வேலின் பழக்கமாகி விட்டது. கம்பெனியில் உயர்பதவி வகிப்பவர் கதிர்வேல். கதிர்வேல் சொல்லுக்கு மறுவார்த்தை யாரும் பேசவே மாட்டார்கள். அந்த அளவுக்கு கதிரின் அரசாங்கம் கொடி கட்டி பறந்தது. இவருடைய மகள்தான் கனகா. மகளுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580100610245
Rudhra Thaandavam

Read more from Devibala

Related to Rudhra Thaandavam

Related ebooks

Reviews for Rudhra Thaandavam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rudhra Thaandavam - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ருத்ர தாண்டவம்

    Rudhra Thaandavam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம்: 01.

    அத்தியாயம்: 02.

    அத்தியாயம்: 03.

    அத்தியாயம்: 04.

    அத்தியாயம்: 05.

    அத்தியாயம்: 06.

    அத்தியாயம்: 07.

    அத்தியாயம்: 08.

    அத்தியாயம்: 09.

    அத்தியாயம்: 10.

    அத்தியாயம்: 11.

    அத்தியாயம்: 12.

    அத்தியாயம்: 13.

    அத்தியாயம்: 14.

    அத்தியாயம்: 15.

    அத்தியாயம்: 16.

    அத்தியாயம்: 17.

    அத்தியாயம்: 18.

    அத்தியாயம்: 19.

    அத்தியாயம்: 20.

    அத்தியாயம்: 21.

    அத்தியாயம்: 01.

    எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வது என்பது அப்பா கதிர்வேலின் பழக்கமாகி விட்டது. கம்பெனியில் உயர் பதவி வகிப்பவர் கதிர்வேல். மனைவி விசாலம் பட்டதாரி. ஆனால் குடும்ப தலைவி. அவளும் வேலை பார்த்தவர் தான். கதிர் வேலுக்கு விசாலாட்சி நிச்சயமானதுமே, அவர் வேலையை ராஜினமா செய்ய சொல்லி விட்டார். விசாலம் முதலில் மறுத்தாள். அரசாங்க உத்யோகத்தை ஏன் விட வேண்டும் எனக்கேட்க, அம்மா, அப்பா அவளிடம் பேசினார்கள்.

    இதப்பாரு விசாலம்! நல்ல படிப்பும் உத்யோகமும் உள்ள மாப்ளை கிடைக்கறது கஷ்டம். இப்ப விட்ரு. அப்புறமா அவரை உன் வழிக்கு கொண்டு வந்த பிறகு வேலைக்கு போ.

    அதெல்லாம் நடக்காதுப்பா. இருக்கும் போது இழுத்து புடிச்சாத்தான் பெண்களால வேலையை தக்க வச்சுக்க முடியும். கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷ காலம் விட்டா, அப்புறமா குழந்தை குட்டினு ஆயிடும்.

    விசாலத்தை கட்டாயப்படுத்தி, நாலு திசைகளிலும் பிரஷர் தந்து, வேலையை விட வைத்தார்கள். அதுவும் கதிர்வேல் கடுமையான ஈகோயிஸ்ட். தன்னை மிஞ்சி குடும்பத்தில் யாரும் இருக்கக்கூடாது என நினைக்கும் ஆசாமி. மூத்தவர். தம்பி, தங்கைகளுக்கு நல்ல எதிர் காலத்தை காட்டியவர். அதனால் அவர் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை அனைவருக்கும் குடும்பத்தில் உண்டு. விசாலத்தை மணந்த ஆறு வருஷங்களில் மூன்று குழந்தைகள். முதலில் ஒரு பெண் கனகா. அடுத்தது பையன் கலையரசன். மூன்றாவது பெண் காஞ்சனா. மூன்று பெற விசாலத்துக்கு விருப்பமில்லை. உடம்பில் தெம்பும் இல்லை. கதிர்வேலின் கட்டாயம் தான். கல்யாணம் ஆன முதலே விசாலத்துக்கு அவரது பல குணங்கள் பிடிக்கவில்லை. ஆனாலும் எதிர்த்தால் அவருக்கு பிடிக்காது என்பதால் அடங்கியே போனாள். மாமனார், மாமியார், கல்யாணம் ஆகாத நாத்தனார்கள், படிக்கும் கொழுந்தனார் என பெரிய கூட்டம். ஒவ்வொன்றும் ஒரு குணாதிசயம். ஆனால் பெற்றவர்கள் உட்பட கதிர்வேல் சொல்லுக்கு மறு வார்த்தை பேச மாட்டார்கள். அந்த அளவுக்கு கதிரின் அரசாங்கம் கொடி கட்டி பறந்தது அந்த வீட்டில்.

    (இதெல்லாம் எதற்கு? இந்த கதிர்வேலின் கடந்த காலம் பற்றி கொஞ்சம் எழுதினால் தான், அவரது குணாதிசயம் புரியும். வரும் கதைக்கு இது தான் சுவாரசியம். இது கற்பனை கதாபாத்திரம் அல்ல. நம்மிடையே கதிர்வேல்கள் வாழ்வதை நீங்களும் உணரலாம்).

    பெரிய குடும்பம் என வரும் போது எதிர்ப்பு இல்லாமல் ஒற்றுமையாக செயல் பட்டால் தான் குடும்பத்தில் நிம்மதி இருக்கும் என விசாலம் தெளிவாக புரிந்து கொண்டதால், குடும்பத்தில் குழப்பம் இல்லை. பெரியவர்கள் ஆரம்பத்தில் பந்தாவை காட்டினாலும் விசாலத்தை மனதார ஏற்றுக்கொண்டு விட்டார்கள். கதிர்வேலின் தம்பி, தங்கைகளும் அண்ணியை புரிந்து கொண்டு நேசித்தார்கள். கதிர்வேல் கடுமையாக நடந்து கொண்டாலும், குடும்பத்தாருக்கு எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. எதையும் தடை செய்யவில்லை. என்ன? அவரை கேட்காமல், கலக்காமல் எதையும் செய்யக்கூடாது. செய்யவும் மாட்டார்கள். நாளா வட்டத்தில் பெற்றவர்கள் இறந்து, தம்பி தங்கைகளுக்கு வாழ்க்கை அமைந்து குழந்தை குட்டிகள் எனஆகி, அவர்களும் கிளை பிரிய, கதிர் வேலின் மூன்று பிள்ளைகளும் வளர தொடங்கி விட்டார்கள். அவரும் அப்பா வாங்கிய நிலத்தில் வீடு கட்டி, கார் வாங்கி வசதிகளை பெருக்கி கொள்ள தொடங்கி விட்டார். ஒரு நாள் கிழமை என்றால், உடன் பிறப்புகள் வருவார்கள். ஒன்று கூடுவார்கள். அதுவே நாளா வட்டத்தில் தேய தொடங்கி விட்டது. ஒரு முறை அப்பாவின் திதிக்கு உடன் பிறப்புகள் ஒன்று கூட, கதிர்வேலின் ஸ்டைலில் அவர் தம்பியை கிண்டலடிக்க, அவர் தம்பி மனைவிக்கு கோபம் வந்து விட, தம்பி அடக்க,

    நிறுத்துங்க! உங்கண்ணன் எத்தனையோ முறை எங்களையெல்லாம் அவமானப்படுத்தியிருக்கார். நாங்களும் பொறுத்து போயிருக்கோம். எங்க சகிப்புத்தன்மைக்கு அளவிருக்கு.

    அண்ணன் எங்களை ஆளாக்கினவர். நீ பேசாம இரு.

    அண்ணன் உங்களை ஆளாக்கியிருக்கலாம். எங்களை ஆளாக்கலை. நாங்க அவர் கிட்ட அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் என் புள்ளைங்களை கூட்டிட்டு புறப்படறேன்.

    ஒரு தம்பி மனைவி தொடங்க, தங்கையின் வீட்டுக்காரர் பின்னால் வந்தார்.

    நாங்களும் மாப்ளைகளா இருந்தாலும் நிறைய அவமானப்பட்டாச்சு. இனி அதுக்கான அவசியம் இல்லை.

    வேண்டாம். யாரும் என்னை சகிச்சுக்க வேண்டாம்.உங்களுக்கெல்லாம் செஞ்ச காரணமாத்தான், நான் முப்பத்தஞ்சு கடந்தும் முழுமையா செட்டில் ஆகாம இருக்கேன். இல்லைன்னா என்னிக்கோ வீடு, வாசலோட வாழ்ந்திருப்பேன். இனி நீங்க யாரும் என்னை பொறுத்துக்க வேண்டாம். போகலாம்

    என்னங்க, ஏன் இப்படி பேசறீங்க?

    நீ பேசாதே விசாலம். நன்றி கெட்டவங்க இவங்கள்ளாம். தன் காரியம் முடிஞ்சதும் கையை உதர்றாங்க பார்த்தியா?

    அப்படியெல்லாம் சொல்லாதீங்க. உங்க உடன் பிறப்புகள் யாரும் தப்பானவங்க அல்ல. பாசமானவங்க தான்.

    அப்ப நான் தப்பானவனா?

    அண்ணி விட்ருங்க. போதும். நாங்க போகலாம். நீங்க போக முடியாது. இப்ப கொஞ்ச காலமாகவே நாங்கள்ளாம் வர்றதே உங்களுக்காகத்தான். அதுவும் இனி இல்லை. அண்ணனே போகலாம்னு சொல்லியாச்சு. இனி நாங்க வர மாட்டோம்.

    அழுது கொண்டே உடன் பிறப்புகள் போக, விசாலத்தால் அவர்களை தடுக்க முடியவில்லை. கண்ணீர் தான் மிஞ்சியது. இது நடக்கும் போது மூத்தவள் கனகாவுக்கு பத்து, கலையரசனுக்கு எட்டு. காஞ்சனாவுக்கு ஆறு. சித்தப்பா, அத்தைகளின் குழந்தைகள் மொத்தம் ஆறு பேர். அவர்களும் வந்தால் வீடு ரெண்டு படும். அத்தனை குதூகலமாக இருக்கும். ஒன்பது குழந்தைகளும் வித்யாசமில்லாமல் பழகி, ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக உறங்கி, விஷமத் தனங்களுக்கு வாங்கி கட்டிக்கொண்டு பாட்டும், கூத்தும், கேலி கிண்டலுமாக இருக்கும். அத்தனையும் இத்தனை சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும் என யாரும் நினைக்கவில்லை. கதிர் செய்வதில் குறைச்சல் இல்லை. ஆனால் அந்த ஈகோ, ஆணவம், முன் கோபம் என அத்தனை பேரையும் கடந்த பல வருஷங்களாக தன் காலடியில் வைத்து பழகியதால், தன் சொல்லுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால், அந்த அகங்காரம் உச்ச கட்டத்தை எட்டி விட்டது. அதை ஒரு தம்பி மனைவி தட்டி கேட்டதால் வெறி முற்றி விட்டது. ஒரு நொடியில் குடும்பமே மானசீகமாக அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி விட்டது. விசாலம் நொந்து போனாள்.

    அத்தியாயம்: 02.

    உறவுகள் வேதனையுடன் கலைய, வீட்டின் கலகலப்பு தொலைந்து, மயான அமைதி வந்து விட்டது. ஆளுக்கொரு பக்கம் விலக, விசாலம் இரவு உணவுக்கான ஆயத்தங்களில் ஈடுபட, மூத்தவள் கனகா அம்மாவிடம் வந்தாள்.

    அப்பா ஏம்மா இத்தனை மோசமா நடக்கறார்?

    விசுக்கென திரும்பினாள் விசாலம்.

    அப்பா வீட்ல தான் இருக்கார். அவர் காதுல விழப்போகுது கனகா. நீயெல்லாம் எதுவும் பேசாதே. நான் பாத்துக்கறேன்.

    "எப்படீம்மா இத்தனை பொறுமையா இருக்கே? சித்தப்பா, அத்தைகளை அப்பா,

    Enjoying the preview?
    Page 1 of 1