Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thullatha Manam
Thullatha Manam
Thullatha Manam
Ebook112 pages56 minutes

Thullatha Manam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணினி மயமான இவ்வுலகில் பிராக்டிக்கலாக யோசிக்கும் நிகிலா அதற்கு எதிர்முனையாக இருக்கும் அவளது கணவன் அஸ்வின். இவர்களின் வாழ்க்கையில் நிகிலா எவ்வித உணர்வை தெளிவு படுத்தினாள். நிகிலாவின் உறவுகளால் அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் என்ன? அவளது பிராக்டிக்கல் யோசனை அவளது வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்லுமா? கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 23, 2023
ISBN6580100610239
Thullatha Manam

Read more from Devibala

Related to Thullatha Manam

Related ebooks

Reviews for Thullatha Manam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thullatha Manam - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    துள்ளாத மனம்

    Thullatha Manam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 01

    நிகிலா அவசரமாக தயாராகி கொண்டிருந்தாள்.

    அஸ்வின், வர்றியா? இப்பவே மணி பத்து. ஷாப்பிங் முடிச்சு திரும்ப நாலு மணி தாண்டும். சீக்கிரம்.

    இரு நிகி. ஆஃபீஸ் மெயில் செக் பண்ணிட்டு இருக்கேன்.

    உனக்கு எப்பவும் ஆஃபீஸ் வேலைதான்.

    ஐ.டி. கம்பெனில வேலை செஞ்சா இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யும். நீ மத்திய அரசாங்க வேலை. எட்டு மணி நேரம் வேலை முடிஞ்சா, வீட்ல அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நாங்க அப்படியா?

    என் பிள்ளை, நாள் முழுக்க வேலை பார்த்தாலும் ஒண்ணரை லட்சம் சம்பளம் வாங்கறான். சும்மாவா?

    மாமியார் ஜானகி வரிந்து கட்டிக்கொண்டு வர,

    அத்தே! நானும் அதுல பாதிக்கு மேல வாங்குறேன். வீட்டுக்கு வந்தா எனக்கு பெண்டு கழலுது.

    செய்டி. குடும்பம்னா செய்யத்தான் வேணும். உங்க நாலு வயசு குழந்தையை நாள் முழுக்க நாந்தான் பாத்துக்கறேன். நட்டு கழண்டு போகுது எனக்கு. வாரக்கடைசில கடை கண்ணினு கிளம்புறீங்க. அப்பவும் பேரனை நான்தான் பாக்கணும். வயசான எனக்கு அக்கடான்னு படுத்து கிடக்க முடியுதா?

    அஸ்வின் அருகில் வந்தான்.

    அம்மா! குழந்தை விபினை பார்த்துக்க, பேபி சிட்டரை நியமிக்கறேன்னு நான் சொன்னேன். நீ ஒப்புக்கலை.

    அதெல்லாம் எனக்கு பிடிக்கலை. நம்ம குழந்தையை எவளோ ஒருத்தி, குளிப்பாட்டி, சோறு ஊட்டறதெல்லாம் எனக்கு பிடிக்கலை. நான் எதுக்கு இருக்கேன் பாட்டீன்னு?

    சமையலுக்கு ஆள் போட்டா அதுக்கும் வேண்டாம்னு சொல்றீங்க?

    வர்றவ கூலிக்கு மாரடிக்கறா. அவசரமா உப்பை கொட்டி கடனுக்கு பொங்கி வச்சிட்டு, இன்னொரு வீட்ல மீட்டர் போடறா. பொருட்களை ஆழும் பாழுமா பண்றாளுக. எனக்கு பிடிக்கலை. ருசியும் சரியா இல்லை. நான் சமைக்கறேன்னா, நீ கேக்கறதில்லை நிகிலா.

    நீங்க குழந்தையை பாத்துக்கறதே இந்த வயசுல அதிகம். சரி வாங்க. பேக்கிங் இருக்கு நிறைய.

    அடுத்த இரண்டு நாட்களில் இருவரும் குழந்தையுடன் சிம்லா, குலு, மணாலி என சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தான் அஸ்வின். விமான டிக்கெட், அங்கே தங்குமிடம், சுற்றிப் பார்க்க வாகனம், என சகல ஏற்பாடுகளும் நிகிலாதான். நேரம் தவறாமை, ஒரு பயணம் என்றால் அதற்கான முன்னேற்பாடுகள் என எல்லாமே நிகிலாதான். குடும்ப நிர்வாகமும் முழுமையாக அவள்தான். தேவைக்கு தாராளமாக செலவழிப்பாள். பட்ஜெட் போட்டு சிக்கனமாக நடத்த வேண்டுமென்றால் அதையும் செய்வாள். பத்திய சமையல் முதல் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் சமையல் வரை அத்துபடி. பண்டிகை நாட்களை குறை வைக்க மாட்டாள். இரண்டு நாத்தனார்களுக்கும் சீர் செய்வது போன்றவற்றில் குறை வைக்க மாட்டாள். ஆனால் தேவையில்லாத செலவுகளை ஆதரிக்க மாட்டாள். அவளை மீறி அஸ்வின் பத்து ரூபாய் செலவழிக்க முடியாது. இது மாமியார் ஜானகிக்கு பிடிக்காது. உள்ளூரில் இருக்கும் தன் பெண்களிடம் புகார் படிப்பாள்.

    அஸ்வின் லட்சத்தை தாண்டி சம்பாதிக்கறான். ராத்திரி பகலா உழைக்கறான். ஆஃபீஸ்ல அவனுக்கு அப்படியொரு மரியாதை. ஆனா வீட்டுக்கு வந்துட்டா, அவன் செல்லாக்காசு. இவதான் மகாராணி. ஆட்டி வைப்பா. இவளை மீறி எதுவும் செய்ய மாட்டான். பெட்டி பாம்பா அடங்கி கிடக்கான். எனக்கு சுத்தமா பிடிக்கலை.

    நாத்தனாரில் ஒருத்தி விவரம் தெரிந்தவள்.

    விடும்மா. அவ அழகாத்தானே குடும்பத்தை நடத்தறா. எதிலும் குறை வைக்கறதில்லை. உன்னை சமைக்க விடறதில்லை. குழந்தையை பராமரிக்க ஆள் போடவும் தயாரா இருக்காங்க ரெண்டுபேரும். வீட்டுக்கு வர்ற, நம்ம சொந்த பந்தங்களை முகம் கோணாம உபசரிக்கறா. அப்புறமா என்னம்மா? நீ ஏதாவது பேசி பேரை கெடுத்துக்காதே.

    இன்னொருத்தி, அம்மா பேச்சை கேட்டு நாட்டாமை செய்யப்போக நிகிலா அவளை கிழித்து தொங்கவிட, ஜானகி கடுப்பாகி, களேபரமாக, அஸ்வின் உள்ளே புகுந்து,

    இதப்பாரு கல்பனா! உன் குடும்பத்துல நிகிலா தலையிடறதில்லை. அதனால நீயும் அவ சங்கதில தலையிடறது முறையில்லை.

    இது என் பிறந்த வீடு. அம்மா இங்கேதானே இருக்காங்க.

    அதுக்காக? நீ புகுந்து அம்மா நிம்மதியையும் கெடுக்காதே.

    இந்த பிரச்சனை அவ்வப்போது வெடித்தாலும் நிகிலா அடக்கி விடுவாள். வெளியூர் போகும் போது பிரச்சனை பெரிதாகும். அம்மாவை கொண்டுபோய் யாராவது ஒரு சகோதரி வீட்டில் விட வேண்டும்.

    ஏன், அம்மாவையும் கூட்டிட்டு போங்களேன். அவங்களுக்கு செலவழிக்க மட்டும் பணமில்லையா?

    கல்பனா, அப்படி யாரும் சொல்லலை. குளிர் பிரதேசங்களுக்கு போனா, அவங்களால தாங்கிக்க முடியலை. வீசிங் வந்து ஒரு தடவை ஊட்டில ஆஸ்பத்திரில சேர்த்தோம். அவுட் சைட் உணவு கூடாதுன்னு டாக்டர் உத்தரவு. அலைச்சல் சுத்தமா ஒத்துக்கலை. கூட்டம் அலர்ஜி. திருப்பதிக்கு போயிட்டு, அந்த கூட்டத்துல சிக்கி அவங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. காலை தொங்க போட்டு, ரெண்டு மணி நேரம் ஃப்ளைட்ல ஒக்காந்தா, கால் வீங்குது.

    இத்தனை நியாயமான விளக்கங்களையும் நிகிலா தந்த பிறகும்,

    இப்பல்லாம் அவங்க பெத்த புள்ளைங்களை பார்த்துக்கவும், வீட்டை காபந்து பண்ணவும் பெத்தவங்க, பெரியவங்க வேணும். ஆனா இவங்க வெளியூர் போனா கழட்டி விட்டுட்டு போவாங்க. சுயநல பிசாசுங்க.

    கல்பனா விமர்சனம் செய்தது நிகிலா காதில் விழ,

    அதை மாமியாரிடம் சொல்ல,

    என் பொண்ணு அப்படியெல்லாம் ஒருக்காலும் பேச மாட்டா.

    இப்படி நீங்க சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன். இதை கேளுங்க.

    அஸ்வின், கல்பனா, அவள் கணவன் மூவரையும் வைத்து கொண்டு கல்பனா பேசியதை, செல்ஃபோனில் பதிவு செய்ததை போட்டு காண்பித்தாள் நிகிலா. ஜானகி முகம் செத்துப்போக,

    "கல்பனா! என்னை பேசற யோக்யதை உனக்கு இருக்கா.

    Enjoying the preview?
    Page 1 of 1