Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பழைய பாடம் தேவையில்லை!
பழைய பாடம் தேவையில்லை!
பழைய பாடம் தேவையில்லை!
Ebook96 pages1 hour

பழைய பாடம் தேவையில்லை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கூடத்தில் அட்சயா நடந்து கொண்டிருந்தாள்.
அம்மா அருகில் வந்தாள்.
“வந்த முதல் எதுவும் பேசலை. கோவமா இருக்கே! என்னடீ புது பிரச்னை?”
“உங்கிட்ட பேசி லாபமில்லை. அப்பா வரட்டும். பேசிக்கறேன்.”
“ஏதாவது வம்பா?”
பதிலே இல்லை.
“நிச்சயமா அடாவடிதான். இதப்பாரு அட்சயா! பணமும், அழகும், அந்தஸ்தும் இருக்கலாம். ஆனா, பொண்ணாப் பொறந்தவ அடக்கமா இருக்கணும். புரியுதா?”
அட்சயா முறைத்தாள்.
“இதப்பாரு. எப்பவும், எல்லா இடத்திலும் நீ சொல்றபடியே நடக்கும்னு எதிர்பார்க்காதே. மாறலாம். உனக்கு எதிராவும் நடக்கலாம். அதுக்கு ஆத்திரப்பட்டு லாபமில்லை.”
அப்பா ராமலிங்கம் உள்ளே நுழைந்தார்.
“என்ன நீ? குழந்தைக்கு உபதேசம் பண்ணி அவளை டென்ஷன் படுத்தறே?”
அருகில் வந்தார்.
“அட்சயா! என்னடா?”
“அப்பா, ‘கோல்டன் கிஃப்ட் சென்டர்’னு டவுன்ல ஒரு பெரிய கடை இருக்கில்லையா?”
“ஆமாம்!”அந்தக் கடையை நீங்க விலைக்கு வாங்கிடுங்க.”
“எதுக்கும்மா?”
“அந்தக் கடை நமக்கு சொந்தமாகணும். வேற சொத்துக்கள் எதையாவது வித்தாவது அதை வாங்குங்க.”
“நீ காரணத்தைச் சொல்லு.”
அட்சயா .... பொரிந்து தள்ளினாள்.
“ஏண்டீ! இதென்ன அடாவடி? யாரோ வாங்கின பொருளை நீ கேட்டு, அது கிடைக்கலைனு ஆனதும், போட்டு உடைச்சிட்டு வந்திருக்கியே! தப்புடி.”
“ஏய் இருடி. அவளுக்கு கிடைக்கலைனப்ப உடைச்சிட்டா. ரெண்டு மடங்கு பணத்தைக் குடுத்துட்டுத்தானே வந்திருக்கா!”
“தப்புங்க. பணத்தால எல்லாத்தையும் வாங்கிட முடியாதுங்க.”
“அட்சயா! கடைல உன்னை எதிர்த்தவனை நான் மன்னிப்பு கேட்க வைக்கறேன். போதுமா. அதுக்காக கடையை வாங்கி என்ன செய்யப் போறோம்?”
“இதப்பாருங்க! இவளுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை நடத்தி வீட்டை விட்டே துரத்துங்க.”
“அதெப்படி? என்னைக் கட்டிக்கறவன், இந்த வீட்டோட மாப்ளையா வரணும். நான் எங்கேயும் போக மாட்டேன்.”
“ஒரு அனாதை, அப்பாவி - பணம் மட்டுமே உசத்தினு நம்பி வர்றவன்தான் வீட்டோட மாப்ளையா வருவான்.”
“தேவையில்லை. நல்ல குடும்பத்துல பிறந்து, நல்லா படிச்சு, எல்லா தகுதிகளும் உள்ள ஒருத்தனை வீட்டு மாப்ளையா நான் கொண்டு வர்றேன். என்னப்பா? முடியுமா? முடியாதா?”
“நிச்சயமா முடியும்மா! நீ செய்!”
அட்சயா சிரித்தபடி உள்ளே போக,
அம்மா, அப்பாவிடம் வந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பழைய பாடம் தேவையில்லை!

Read more from தேவிபாலா

Related to பழைய பாடம் தேவையில்லை!

Related ebooks

Reviews for பழைய பாடம் தேவையில்லை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பழைய பாடம் தேவையில்லை! - தேவிபாலா

    1

    அந்தப் பெரிய கடை வாசலில் வெளிநாட்டுக் கார் வந்து நின்றது.

    அட்சயா அதிலிருந்து இறங்கினாள். உள்ளே நுழைய - கடைக்காரர் எழுந்து நின்று வணங்கினார்.

    அட்சயா பதிலுக்கு ஒரு வணக்கம் கூடச் சொல்லவில்லை. அலட்சியமாக அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு, கடைக்குள் போனாள்.

    அவளுடன் வந்த உதவியாளர்கள் இருவர் மெய்க்காப்பாளர்கள் போல அவளுடன் ஓடினார்கள்.

    பரிசுப் பொருட்களை விற்கும் கடை. நகரத்தில் அது மிகப் பெரிய கடை. எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அட்சயா தேடிக் கொண்டே வந்தாள். அவள் ரசனைக்குத் தக்க எதுவும் சிக்கவில்லை.

    சற்றே ஏமாற்றத்துடன் திரும்ப, பில் போடும் இடத்துக்குப் பக்கத்தில் ஒரு சுவர் கடிகாரம், மிக அழகான வேலைப்பாடுகளுடன் இருக்க, அட்சயாவை அது கவர்ந்தது.

    நேராக வந்தாள்.

    அதைக் கையில் எடுத்தாள். திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

    இதை நான் வாங்கிக்கறேன்.

    மேடம்! இதை ஏற்கனவே ஒருத்தர் செலக்ட் பண்ணி பில் கவுண்ட்டருக்கு அனுப்பியிருக்காங்க!

    அதனால என்ன? அவங்களுக்கு வேற பீஸ் குடுங்க. இது எனக்கு வேணும்.

    வேற இல்லீங்க!

    அதற்குள் அந்தப் பெண் வந்து விட்டாள். ஐம்பது கடந்த ஒரு வயதான பெண்மணி.

    இதை இவங்க கேக்கறாங்கம்மா.

    நான் ஏற்கெனவே செலக்ட் பண்ணி வச்சிட்டேனே!

    எனக்குக் குடுங்க. எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க வேற பாருங்க.

    இல்லீங்க! எனக்கு இதுதான் வேணும்.

    மன்னிக்கணும்! இது உங்க வீடு இல்லை. கடை. எல்லாருக்கும் பொதுவான இடம். எதுக்குமே ஒரு வரைமுறை இருக்கு. பிடிவாதம் சரியில்லை.

    அட்சயா திரும்பினாள்.

    இதுக்கு என்ன விலை?

    ஆயிரத்து ஐநூறும்மா!

    நான் மூவாயிரம் தர்றேன். எனக்கு பேக் பண்ணுங்க. சரியா?

    என்னங்க நீங்க? இது ஏலக் கம்பெனியா - நீங்க கேட்ட ரேட்டுக்கு விற்க? இவங்களும் ஒரு கஸ்டமர். நாளைக்கு இவங்களையும் நாங்க இழக்கக் கூடாது.

    நீங்க வியாபாரி. பணம் தானே முக்கியம்?

    நிறுத்துங்க! என்ன பேசறீங்க? உங்களுக்கு இந்தப் பொருளை தர முடியாதுங்க!

    அட்சயா சூடாகி விட்டாள்.

    மாறி மாறிப் பார்த்தாள்.

    அதைக் கையில் எடுத்தாள். படக்கென கீழே போட, அது நொறுங்கிச் சிதறியது.

    கடையில் அத்தனை பேரும் ஸ்தம்பிக்க,

    நான் போலீசுக்கு போன் பண்ணுவேன்!

    பண்ணு! பொருள் கை தவறிப் போச்சு. அதோட விலையைக் குடுத்துர்றேன்னு சொல்லுவேன். கோடீஸ்வரர் காளியப்பன் மகளை எந்தப் போலீஸ் இந்த ஊர்ல கேள்வி கேட்கும்? தைரியம் இருக்குதா? எனக்குப் பிடிச்ச பொருளை வேற யாரும் அனுபவிக்க விடமாட்டேன். புரியுதா?

    பேக் திறந்து பணம் எடுத்தாள்.

    இதோட விலைல ரெண்டு மடங்கு பணம் இருக்கு. பிடி! நான் வர்றேன்.

    வேகமாக நடந்து போய் காரில் ஏறினாள். கார் புறப்பட்டுப் போனது.

    அந்தம்மா மிரண்டு போய் நின்றாள்.

    ஸாரிம்மா! இப்படியெல்லாம் நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கலை.

    பரவாயில்லை! ஒரு நல்ல கலைப் பொருள் யாருக்கும் உபயோகப்படாம உடைஞ்சு போச்சே. என்ன பொண்ணு இவ? தனக்கு உபயோகப்படலைனா, அதை அழிக்கறதா? எந்த ஒரு பொண்ணுக்கும் வரக்கூடாத குணமாச்சே.

    முனகியபடி அந்தம்மா வெளியே வந்து ஆட்டோவில் ஏறினாள். இந்த சம்பவத்தால் மனசு கணிசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

    நேராக வீட்டுக்கு வந்து விட்டாள்.

    தேவா பழைய பாடலை உரக்க வைத்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

    அம்மா வந்து படக்கென அதை அணைத்தாள்.

    தேவா திரும்பினான்.

    ‘ஓசை அதிகமானால் குறைத்து விடுன்னு சொல்ற அம்மா, இப்படி படக்குனு அணைக்க மாட்டாங்களே!’

    தொப்பென அம்மா நாற்காலியில் உட்கார,

    என்னம்மா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?

    ஒண்ணுமில்லைப்பா.

    சொல்லும்மா! ஆமாம்... கிஃப்ட் வாங்கப் போனியே. வாங்கலியா?

    அம்மா நிமிர்ந்தாள்.

    நடந்ததைச் சொன்னாள். இப்படி ஒரு வெறிபுடிச்ச பொண்ணை நான் பார்த்ததே இல்லை. போட்டு உடைச்சிட்டாளே! இவளைச் சேர்ந்தவங்க எப்படி இவளை சகிச்சுக்கறாங்க?

    சரி! நீ ஏன் போட்டி போடப் போனே?

    எனக்கு அது புடிச்சு, நான் செலக்ட் பண்ணி வச்சிருந்தேண்டா.

    அம்மா! எதுவும் யாருக்கும் இங்கே சாசுவதமில்லை. இதை நீ நல்லா புரிஞ்சுக்கணும்.

    அவ செஞ்சது சரினு சொல்றியா?

    "இல்லைம்மா! ஆனா ஒரு இடத்துல போட்டியும், மோதலும் உருவாகுதுன்னா, கூடுமான வரைக்கும் விலகப் பாக்கணும். சண்டைல நியாயம் பிறக்கறதில்லைம்மா. கசப்புதான் வளருது;

    ஆச்சர்யமாக மகனைப் பார்த்தாள்.

    ஏம்மா அப்படி பாக்கற?

    தேவா! உன்னைப் பார்த்தா ஒரு சமயம் பெருமையா இருக்கு. ஒரு சமயம் கோவம் வருது.

    எதுக்குக் கோபம்?

    ஒரு ஆம்பிளைக்கு ஆவேசம் வரவேண்டாமா?

    "எதுக்கு வரணும்? அம்மா! ஆவேசமும், கோபமும் உடம்பைக் கெடுக்கும். தேவையில்லாத குழப்பத்தைக் கொண்டு வரும். அமைதியா இருந்து காரியத்தை சாதிச்சுக்கறவன்தான் புத்திசாலி. நான் எதை இழந்திருக்கேன்? எதுல தோத்துப் போயிருக்கேன்?

    Enjoying the preview?
    Page 1 of 1