Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னோடு ஒரு நாள்!
உன்னோடு ஒரு நாள்!
உன்னோடு ஒரு நாள்!
Ebook104 pages52 minutes

உன்னோடு ஒரு நாள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவனைப் போல பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் நாலு பேர் அந்த டீக்கடையில் கூடியிருந்தார்கள்.
சம்பத்தும் அவர்களுடன் இருந்தான்.
“உள்ளூர்ல ஏதாவது வாய்ப்பு இருக்காப்பா?”
“நிச்சயமா இல்லை. மற்ற தொழிற்சாலைகள்ல கணிப்பொறிகள் நிறைய வந்துட்ட காரணமா ஆட்குறைப்பு நடந்துகிட்டே இருக்கு. எப்படி புதுசா சேர்ப்பாங்க? மேலும், இளைஞர்கள் படிச்சிட்டு வரத்தொடங்கிட்டாங்க. நமக்கெல்லாம் எப்படி வாய்ப்பு வரும்?”
சம்பத் கலக்கத்துடன் பார்த்தான்.
“தொழிற்சங்கம், போராட்டம் இதையெல்லாம் பார்த்து கோவப்படுறாங்க. நம்மளமாதிரி ஆட்களை வேலைக்கு சேர்க்கவே யோசிப்பாங்க”
“என்ன செய்யறது? குடும்பம் நடக்கணுமே.”
“என் பொண்டாட்டி, புள்ளைங்களைக் கூட்டிட்டு பொறந்த வீட்டுக்கு போயிட்டா. நம்ம பொழைப்பு அனாதைப் பொழைப்பு.
தேநீர் குடித்தபடி ஆளாளுக்கு கதை பேசினார்கள்.
“வாப்பா ஒரு க்குவாட்டர் அடிச்சிட்டு, போய் கவுந்து படுக்கலாம்.”
‘தண்ணிக் கூட்டம்’ ஒன்று திசைமாறியது. ஆளாளுக்கு கலைந்து போக சம்பத் மட்டும் தனியானான்.
‘சுசிலா நம்பிக்கை வைத்திருக்கிறாள்.’
‘நாட்கள் சரசரவென ஓடிவிடும். கையிருப்பு கரைந்து விட்டால், குடும்பம் பட்டினி கிடக்குமே.‘பாவம் குழந்தை!?’
‘அதன் நிலைமை என்ன?’
மற்றவர்களைவிட குடும்ப பாசமும், கவலையும், பதட்டமும் சம்பத்துக்கு எப்போதுமே அதிகம்.
நினைத்தபடி நடக்காவிட்டால் சுருக்கென கோபமும், படபடப்பும் வந்துவிடும். ஆதங்கம் தெறிக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படும் மனிதன். அதனால் ஒரு ஆண் பிள்ளை என்ற திடம் கரைந்து அழுகை பீறிடும். விளைவு? ரத்த அழுத்தம் ஏறும்.
இரண்டு முறை ரத்த அழுத்தம் எகிறி, தொழிற்சாலையில் மயக்கம் போட்டு விழுந்து, கம்பெனி டாக்டர் பரிசோதித்து, பத்து நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருந்துகள் எழுதித் தந்து, சம்பத் வீட்டில் படுத்த கதை உண்டு.
குடும்பமே பதற, சுசிலாதான் படிப்படியாக அவனை இயல்பான நிலைக்கு கொண்டு வந்தாள்.
சம்பத் மெதுவாக நடக்க, ஏகாம்பரம் வந்து சேர்ந்து கொண்டார்.
ஓய்வுபெற ஒரு வருடமே உள்ள நிலையில், மகளின் கல்யாணத்தை முடிவு செய்திருக்கிறார்.
“சம்பத்! நிறையை பேர்கிட்ட கடன் கேட்டு வச்சிருந்தேன். அதுல தான் கல்யாணத்தை நடத்தணும்.”
சம்பத் அவரையே பார்த்தான்.
“தொழிற்சாலையை மூடின நிலையில பணம் எதுவும் வராது. நான் எப்படி கல்யாணத்தை நடத்துவேன்? இது நின்னுபோனா, என் மகளோட கதி என்ன?”
அழுதுவிட்டார்.
“கொஞ்சம் தள்ளிப் போடுங்கண்ணே. மாப்பிளை வீட்ல நிலைமையை விளக்கி, அனுமதி கேளுங்க.”
“அவங்க புரிஞ்சுக்கணுமே?”
“வேற வழியில்லையே?“சம்பத்! நடுத்தர வர்க்கத்துல பிறக்கவே கூடாது. அப்படி பிறந்தாலும், பெண் குழந்தையைப் பெத்துக்கக் கூடாது. நம்ம கண்ணுக்கு முன்னால அதுங்க வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் போது, நம்மால தாங்கிக்க முடியாது தம்பி.”
அவர் விலகிப் போனார்.
சம்பத்துக்கு தன் ஆறு வயது மகள் - சுஜியின் முகம் கண்ணுக்குள் வந்தது.
‘என் குழந்தைக்கும் நாளைக்கு இந்த நிலைதானா?’
கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்க, சம்பத்துக்கு பதட்டம் அதிகமானது. ரத்த அழுத்தம் ஏறத் தொடங்கியது. நடக்க நடக்க தலை சுற்றத் தொடங்கியது.
அப்படியே துவண்டு பாதையோரம் விழ, கூட்டம் சேர்ந்து விட்டது.
“சம்பத்துப்பா, ஒரு ஆட்டோல ஏத்தி வீட்ல கொண்டு போய் விடுங்க.”
தெரிந்த ஆட்கள் உதவிக்கு வர, பத்தாவது நிமிஷம் சம்பத் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டான்.
அம்மா அலற, குழந்தை அழ, சுசிலா அவனை படுக்க வைத்தாள்.
சம்பத் கண் விழித்து விட்டான்.
“அவனை முதல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டுப்போ. வேலை தேடுனு என் பிள்ளையை உசுப்பி விட்டுட்டே. அவனால முடியல. சுத்திக்களைச்சு மயக்கம் போட்டதுதான் மிச்சம். பொண்டாட்டி பணத்தைப் பார்ப்பா. தாய்தான் மனசைப் பார்ப்பா.”
தம்பி சசிக்கு கடுப்பாகி விட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
உன்னோடு ஒரு நாள்!

Read more from தேவிபாலா

Related to உன்னோடு ஒரு நாள்!

Related ebooks

Reviews for உன்னோடு ஒரு நாள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னோடு ஒரு நாள்! - தேவிபாலா

    1

    முதலாளியுடன் பேச்சுவார்த்தை முறிந்து விட்டது. கடந்த மூன்று மாதங்களாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மௌன யுத்தம் தொடர்கிறது.

    கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை உச்ச கட்டத்துக்கு வந்து எந்தவிதப் பலனும் இன்றி முறிந்து விட்டது.

    தொழிலாளிகள் போராட்டத்தை வாபஸ் வாங்கினாலும் முதலாளி மன்னிக்கத் தயாராக இல்லை.

    மூடத் தயாராகி விட்டது நிர்வாகம்.

    சின்ன முதலாளிகள் இருவர் தலைதூக்கியதும் தொழிற்சாலையை விற்று வெளிநாட்டில் குடியேற சகல விதமான ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள்.

    அந்த இடத்தை ஒரு வெளிநாட்டு நபருக்கு விற்று தொழிற்சாலையை இடித்து ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட முடிவாகி விட்டது. எல்லாமே முடிந்து விட்டது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள். இதை எதிர்பார்த்து சிலர் ஊரை விட்டே போய் விட்டார்கள்.

    சிலர் வெளியே வேலை தேடிக் கொண்டு விட்டார்கள். நாற்பது சதவீதம் பேர் ‘நாளை என்பது இருட்டு’ என்ற நிலையில் உடைந்து போயிருக்கிறார்கள்.

    சம்பத் தளர்ந்து போய் வீட்டுக்குள் நுழைந்தான்.

    சம்பத் அந்த கம்பெனியில் ஒரு சாதாரண சூப்பர்வைஸர். சுமார் சம்பளம் தான். சொத்து என்று எதுவும் இல்லை. சகோதரிகள் இருவரைக் கரையேற்ற ஏராளமாகக் கடன் வாங்கி... கையிருப்பு எதுவுமே இல்லை. இப்போது உடன் இருப்பவர்கள் ஒரு விதவைத் தாய், மனைவி சுசிலா, ஒரு பெண் குழந்தை, ஊனமான ஒரு தம்பி! இவர்களது எதிர்காலம் என்ன?

    சம்பத் உள்ளே நுழைந்ததும் சுசிலா ஓடிவந்தாள்.

    என்னங்க ஆச்சு?

    மூடிட்டாங்க சுசி! எதிர்பார்த்தது தானே? எல்லாமே முடிஞ்சு பேச்சு!

    அம்மா அருகில் வந்தாள்.

    பணம் ஏதாவது குடுப்பாங்களா தம்பி?

    தெரியல்லைம்மா. கஷ்டம்தான். பணம் கேட்டு லேபர் கோர்ட் மூலமா வழக்குத் தொடருவாங்க. அது இழுக்கும். சாதகமா தீர்ப்பு வர எத்தனை மாசங்கள் ஆகுமோ? அதுவரைக்கும் வயிறு தாங்குமா? அப்படியே வந்தாலும் நான் கம்பெனில வாங்கியிருக்கற கடன்கள் ஏராளம். அதைக் கழிச்சுப்பாங்க. என்ன மிஞ்சும் நமக்கு?

    நாளை முதல் வாழ்க்கை என்னப்பா?

    தெரியலைமா

    சுசிலா குடிக்கத் தண்ணீர் எடுத்து வந்தாள்.

    முகம் கழுவிட்டு சாப்பிட வாங்க

    பசிக்கலை சுசி

    பசிக்கணும். இதப்பாருங்க... உடம்புல தெம்பு இருக்கு. உழைக்கலாம். தைரியமா இருங்க. வேற வேலை கிடைக்கும். மனசு தளரவே கூடாது

    நான் வெறும் எஸ்எஸ்எல்சி படிப்பு. வேற எந்த திறமையையும் நான் வளர்த்துக்கலை. எப்படி சுசி? இந்த தொழிற்சாலை தவிர உலகமே தெரியாது. இப்ப வயசு முப்பத்தி நாலு. இன்னும் இளைஞர்கள் படிச்சிட்டுக் காத்துக்கிட்டு இருக்கும் போது எப்படி சுசி?

    இதப்பாருங்க. தன்னம்பிக்கை வேணும். நம்மால முடியும்னு தைரியம் வேணும். தளர்ந்து போய் உட்கார்ந்துட்டா, உத்வேகம் வராது. நமக்கொரு பெண் குழந்தை இருக்கு. அதை நீங்க மறக்கக் கூடாது

    அதுக்காக அவன் வெளில போய் மூட்டை தூக்க முடியுமா? அம்மா சுள்ளென விழ,

    இதப்பாருங்க அத்தே... தேவைனா அதையும் செஞ்சுதான் ஆகணும். எந்த தொழிலும் கேவலமில்லை.

    என் பிள்ளைக்கு வேலை இல்லைனு ஆனப்ப, நீயே அவனை அவமானப்படுத்தறியா?

    ஊனமான தம்பி அருகில் வந்தான்.

    அண்ணி எதுவும் தப்பாப் பேசலையேம்மா. நீ எதுக்காக பிரச்சினையை பெரிசுபடுத்தறே?

    சம்பத் எழுந்து போய் விட்டான்.

    விடுங்க தம்பி! பற்றாக்குறை வரும்போது தாழ்வு மனப்பான்மையும், கோபதாபங்களும் சண்டையும் வரத்தான் செய்யும். அதை பெரிசுபடுத்தக் கூடாது.

    கட்டாயப்படுத்தி சம்பத்தையும் சாப்பிட வைத்தாள். அன்று இரவு...

    இதப்பாருங்க கையிருப்பு மளிகையும் நான் சேர்த்து வச்ச பணமும் இருக்கு. ரெண்டு மாச காலம் ஓட்டலாம். அதுக்குள்ளே வேலை ஏதாவது கிடைக்கும். இல்லைனா, என் ரெண்டு வளையல்களும், தாலிச் செயினும் இருக்கு. அதை வித்தா, அடுத்த ரெண்டு மாசங்களுக்கு வண்டி ஓடும்

    தாலிச் செயினை விக்கறதா?

    நீங்களும், ஒரு மஞ்சள் கிழங்கும் இருந்தா அதை விட பலம் என்ன இருக்கு. மங்கலம் தங்கத்துல மட்டும் இல்லை.

    சம்பத் அவளையே பார்த்தான்.

    நீ எப்படி இத்தனை தைரியமா இருக்கே?

    இருந்துதாங்க ஆகணும். புருஷன் உடைஞ்சு போகும்போது, பொண்டாட்டி தாங்கிப் புடிச்சாத்தான் குடும்பம் நிலைக்கும். கூட சேர்ந்து கலங்கினா, குடும்பம் சிதறிப் போகும்

    என்ன செய்யலாம் சுசி?

    அப்படிக் கேளுங்க! உங்களுக்குள்ள தொழில் அறிவை வச்சுக்கிட்டு நாலு இடத்துல தேடுங்க

    சரி சுசி.

    அப்படியே அவள் மடியில் சரிந்தான்.

    இந்த அரவணைப்பு இருந்தா, எனக்குக் கவலையில்லை சுசி.

    இது எப்பவும் உண்டு.

    சுசிலா அவனது உச்சந்தலையில் முத்தமிட்டு மென்மையாக சிரித்தாள்.

    2

    இவனைப் போல பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் நாலு பேர் அந்த டீக்கடையில் கூடியிருந்தார்கள்.

    சம்பத்தும் அவர்களுடன் இருந்தான்.

    உள்ளூர்ல ஏதாவது வாய்ப்பு இருக்காப்பா?

    நிச்சயமா இல்லை. மற்ற தொழிற்சாலைகள்ல கணிப்பொறிகள் நிறைய வந்துட்ட காரணமா ஆட்குறைப்பு நடந்துகிட்டே இருக்கு. எப்படி புதுசா சேர்ப்பாங்க? மேலும், இளைஞர்கள் படிச்சிட்டு வரத்தொடங்கிட்டாங்க. நமக்கெல்லாம் எப்படி வாய்ப்பு வரும்?

    சம்பத் கலக்கத்துடன் பார்த்தான்.

    தொழிற்சங்கம், போராட்டம் இதையெல்லாம் பார்த்து கோவப்படுறாங்க. நம்மளமாதிரி ஆட்களை வேலைக்கு சேர்க்கவே யோசிப்பாங்க

    என்ன செய்யறது? குடும்பம் நடக்கணுமே.

    "என் பொண்டாட்டி, புள்ளைங்களைக் கூட்டிட்டு பொறந்த வீட்டுக்கு போயிட்டா. நம்ம பொழைப்பு அனாதைப் பொழைப்பு.

    தேநீர் குடித்தபடி ஆளாளுக்கு கதை பேசினார்கள்.

    "வாப்பா ஒரு க்குவாட்டர் அடிச்சிட்டு, போய்

    Enjoying the preview?
    Page 1 of 1