Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வளர்ப்பு
வளர்ப்பு
வளர்ப்பு
Ebook105 pages51 minutes

வளர்ப்பு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிட்டத்தட்ட 2 வயது நெருங்குவதற்குள் குறும்பும் வன்முறையும் உச்ச கட்டத்துக்கு வந்து விட்டது!
வீட்டில் சரமாரியாக பொருட்கள் உடைந்தது! பூஜை அறை சாமி படங்களையும் விட்டு வைக்கவில்லை.
சேதாரம் அதிகமானது!
சாக்கடையில் கைவிடுவது! சுவரை சுரண்டுவது, மண் தின்னுவது என சகல சேட்டைகளும்!
ஒழுங்காக உடைகளை அணியமாட்டான்!
பிறந்த மேனியாக அவன் நிற்பதை ரசித்து சிரிப்பார்கள்.
ஒரு வாட்ஸ் அப் வீடியோவில் ஆண் குழந்தையின் பிறப்பு உறுப்பை நாய் கவ்வியதை படுபயங்கரமாக வெளியிட்டிருக்க, ரூபா அதை செல்வத்திடம் காட்டினாள்.
“விட்ரு! அது தெருவுல உள்ள பிச்சைக்காரக் குழந்தை! நம்ம ஆதியோட ஏன் கம்பேர் பண்ற?”
“இல்லைப்பா! தொற்று நோய் எதுக்கும் ஆளாகக் கூடாதில்லையா?”
கேட்கவில்லை!
ரூபாவின் பெற்றோரும், தம்பியும் உள்ளூர்தான்.
அவர்களும் இவனது அடிக்குத் தப்பவில்லை.
ரூபா வீட்டுக்கு வந்த சமயம், அப்பா கேட்டே விட்டார்.
“என்ன ரூபா? இப்பிடி வளர்க்கிறாங்க? தர்ஷினி கவனிக்க வேண்டாமா?”அவ எந்த ஒரு பொறுப்பையும் சுமக்கமாட்டா! நான் பேசிப் பாத்துட்டேன்! பேரனைச் சொன்னா, அவங்களுக்குப் புடிக்காது! சாரதி அண்ணனோட குடும்பம் முதல் பிறந்த நாளுக்கு வந்துட்டு, வேதனையோட திரும்பினாங்க!”
“அடடா! குழந்தை பிறந்து 2 வருஷமாச்சு! இவ எதுக்கு பிறந்த வீட்லயே இருக்கா?”
“அம்மா! எங்கிட்ட பேசற மாதிரி அவங்ககிட்டப் பேசாதே! உறவே கெட்டுப் போயிடும்!”
“நீ மாப்ளைகிட்டப் பேசு!”
“உபயோகமில்லைம்மா! அவர் எதிலும் தலையிடமாட்டார்! வெளில அடி பட்டா சரியாகும்! என் குடும்பமாச்சே! அது கூடாதுனு நான் பாக்கறேன். கேக்கறதில்லை! நீங்க யாரும் பேசிடாதீங்க!”
அடுத்த வாரமே, உறவுக்காரர்கள் வீட்டில் குழந்தையின் பேர் சூட்டு விழாவுக்கு போகும்படி இருந்தது!
குழந்தை பிறந்த 27-வது நாள் அவர் பெயரிட அத்தனை பேரும் போயிருந்தார்கள்.
அது பொம்மை போலிருக்க, ஆதி நெருங்கி, அதைத் தொட்டுப் பார்த்து படக்கென கிள்ளி விட
அது வீரிட்டு அழ,
அதன் கைகளில் ஆதியின் நகம்பட்டு ரத்தத் துளிகள்.
“என்ன விசாலம்? உன் பேரனைக் கவனிக்கமாட்டியா? பிஞ்சுக் குழந்தையைக் கிள்ளிட்டான்!”
“தர்ஷினி! பெத்துட்டாப் போதாது! அதும்மேல கண் வச்சு கவனிக்கணும்!”
குடும்பம் கொதித்து அம்மா, மகளை விளாசத் தொடங்க, பதிலே பேச முடியவில்லை.
ஒரு மாதிரி ரசாபாசம் ஆகிவிட்டது!
வாசுதேவனுக்கு லீவு இல்லை என்பதால், வர முடியவில்லை.
மாலை வீடு திரும்பி விட்டார்கள்.
“ஏண்டா ராஜா, அந்த மாதிரி செஞ்சே? அது குட்டிப் பாப்பா இல்லையா! செய்யக்கூடாது!”குரலில் கனம் ஏற்றி விசாலம் சொல்ல,
பாட்டியை அடித்தான். கொலைப் பார்வை பார்த்தான்.
“அம்மா! அவனைத் திட்டாதே! நீ சொன்னா, அவனால தாங்கிக்க முடியாது!”
ரூபாவுக்கு பொறுக்க முடியவில்லை.
“தப்பு தர்ஷினி! இப்பக்கூட அத்தை கண்டிக்கலைனா, அது சரியில்லை. நீயும் அத்தையும் அங்கே வாங்கின பேச்சு போதாதா? இந்த அவமானம் உங்களுக்குத் தேவையா?”
“அண்ணி! இதுல என்ன அவமானம்! அவங்க பேசினா, நாங்க கரைஞ்சா போயிடுவோம்! அதுக்காக பச்சப் புள்ளையை அடிக்கச் சொல்றீங்களா?”
“இல்லை தர்ஷினி! கண்டிக்கலைனா தப்பாயிடும்! நாளைக்கு இவனைக் கூட்டிட்டு அந்த வீட்டுக்குப் போக முடியுமா?”
“வேண்டாம்! ஆதியைப் புடிக்காதவங்க எனக்கு வேண்டாம்!”
“இப்பிடி எல்லாரையும் உதற முடியுமா தர்ஷினி!”
விசாலம் கடுப்பாகி விட்டாள்.
“ரூபா! அவ, ஆதிக்கு அம்மா! அவன்தான் அவளுக்கு முதல்ல உசத்தி. அவனை யாரு வேண்டாம்னு சொன்னாலும், அவ உதறுவா! அதுதான் நியாயம்!”
“அத்தே! அது பிஞ்சுக் குழந்தை! இவனுக்கும் விவரம் தெரியாது! படாத இடத்துல பட்டு விபரீதமாயிருந்தா, நாம என்ன செய்ய முடியும் அத்தே?”
“எதுக்கு ஓவரா கற்பனை பண்ற? கொஞ்ச நாளா குழந்தை மேல வெளி ஆட்களை விட நீதான் அதிகமா புகார் படிக்கற!”
“அம்மா! 2 வருஷங்கள் கடந்தும் தனக்கு வரலைனு அண்ணிக்கு ஆதங்கம்! அதான் என் பிள்ளையைக் கழுவி ஊத்தறாங்க!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
வளர்ப்பு

Read more from தேவிபாலா

Related to வளர்ப்பு

Related ebooks

Reviews for வளர்ப்பு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வளர்ப்பு - தேவிபாலா

    1

    பக்கத்து வீட்டம்மா தலைதெறிக்க ஓடி வந்தாள்! வாஷிங் மெஷினில் துணிகளை போட்டுக் கொண்டிருந்தாள் ரூபா!

    ரூபா! எங்கே உன் மாமியார்?

    சமையல் கட்டுல இருக்காங்க! என்ன பிரச்னை?

    உன் நாத்தனார் குழந்தை ஆதி, என் பேரனை அடிச்சிட்டான். தலைல ரத்தம் கொட்டுது! உடனே வாங்க!

    ரூபாவின் மாமியார் விசாலம் வெளியே வந்தாள்.

    அந்தம்மா புலம்ப, இருவரும் வெளியே போக, ஒன்றரை வயசு ஆதி, கையில் தடித்த கொம்புடன் நிற்க, சற்றுத் தள்ளி தலையில் ரத்தத்துடன் அதே வயது எதிர் வீட்டுக் குழந்தை!

    கூட்டம் கூடி விட்டது!

    அதற்குள் அடிபட்ட குழந்தையின் அம்மா ஆவேசமாகி விட்டாள்.

    இவன் அமைதியா இருந்தாலும் உங்க பேரன் ஆதி வந்து அடித்தான்! நான் தடுத்துப் பார்த்தேன். அப்படியும் இப்ப அசந்த நேரத்துல அடிச்சிட்டான்!

    அந்தக் குழந்தைக்கு சமீபத்தில்தான் குலதெய்வம் கோயிலுக்குப் போய் மொட்டை போட்டு வந்திருந்தார்கள்.

    ஆதி கம்பால் அவனது மொட்டைத் தலையில் அடிக்க, நெற்றியின் மேல் பகுதியில் பட்டு ரத்தம்!

    குடும்பமே குமுறி விட்டது!

    அந்தக் குழந்தை அழுதாலும் விளையாட்டை நிறுத்தவில்லை!

    ஸாரிமா! இவனும் சின்னக் குழந்தை தெரியாம அடிச்சிருப்பான்!

    இது என்னங்க பேச்சு? அடிபட்ட எங்க குழந்தைக்குத்தானே கஷ்டம்?

    அதுக்குத்தான் நான் மன்னிப்பு கேக்கறேன்!

    கேட்டுட்டா, பட்ட காயம் இல்லனு ஆயிடுமா!

    இவனுக்கும் ஒன்றரை வயசுதானே ஆச்சு? விளைவுகள் தெரியற வயசு இல்லையே?

    "அது எங்களுக்குத் தெரியாதா! நீங்க ஜாக்ரதையா வளர்க்கணும்!

    கைல கம்பை எடுத்தா பறிக்கணும். முரட்டுக் குழந்தையை வெளில விடக் கூடாது!"

    முரட்டுக் குழந்தையெல்லாம் இல்லீங்க! விபரம் புரியல!

    புரியாம செஞ்சா, நீங்க கூடவே இருந்து பாக்கணும்!

    அம்மா விடு! நம்ம புள்ளைக்கு நேரம் சரியில்ல! இனி வெளில விடாதே! உள்ளாற அடக்க நம்மால முடியாது! குழந்தையை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகலாம்!

    அவர்கள் கதவை அடித்துச் சாத்த, ஆதியை தூக்கிக்கொண்டு விசாலமும், ரூபாவும் உள்ளே வந்தார்கள்.

    உள்ளே வந்து கதவைச் சாத்த,

    நான் விளையாட போகணும்!

    மழலையில் ஆதி பிடிவாதம் பிடிக்க,

    வேண்டாம் ராஜா! நீ அடிச்ச காரணமா, பக்கத்து வீட்டுப் பாப்பாவுக்கு உவ்வா வந்துடுச்சு! அப்படி செய்யலாமா?

    பாட்டி விசாலம் கேட்க,

    வெளையாடணும்! கதவைத் திற!

    வேண்டாம் தங்கம்!

    உடனே பாட்டியை அடித்தான்!

    தப்பு ஆதி! பாட்டியை அடிக்கக்கூடாது! லேசாக குரலை உயர்த்தி ரூபா சொல்ல,

    நீ போ! வராதே! பாய்ந்து வந்து அவளையும் அடிக்க,

    அத்தே! இங்க அவனைக் கண்டிக்கணும்!

    குழந்தைதானே ரூபா! திட்டினா அவனுக்குப் புடிக்காது! முரட்டுத்தனம் அதிகமாகும்!

    அப்படி விட முடியாது அத்தே!

    அதுக்காக குழந்தையை திட்டணும்னு சொல்றியா? அப்படியெலலாம் முடியாது! எம் பொண்ணு மூணு வருஷம் தவமா தவமிருந்து பெற்ற புள்ள! அதோட அருமை உனக்குத் தெரியாது! எங்களுக்குத்தான் தெரியும்!

    ரூபாவின் முகம் மாறிவிட்டது.

    "அத்தே! நான் அதுக்குச் சொல்லல. ஆதி - ஒன்றைரை வயசுக் குழந்தை! அவனுக்கு எதுவும் புரியாது! ஆனா பெரியவங்க நாம கவனிக்க வேண்டாமா? வீட்டுக்குள்ள நம்ம குழந்தைனு பொறுத்துக்கலாம்.

    மத்தவங்களுக்கு அந்த அவசியம் இல்லையே அத்தே!"

    எனக்கது தெரியாதா? நானும் புள்ளைங்களைப் பெத்து வளர்த்தவதான். நீ சொல்ல வேண்டாம். உன்னை விட எனக்கு அவன் மேல அக்கறை உண்டு. நாளைக்கு உனக்குப் பிறந்து, உன் குழந்தையை மத்தவங்க பேசினா, தாங்கிப்பியா?

    ரூபா நொந்து போனாள்.

    இதற்கு மேல பேசுவது தப்பு என்று தோன்றி விட்டது!

    ஆதி இவள் கண்டித்ததால இவள் மேல் ஒரு பொம்மையைத் தூக்கி வீசினான்.

    பாத்தியா! நீ இந்த மாதிரி பேசினா, உன்னை அவனுக்குப் புடிக்காம போயிடும்!

    அதற்குள் ஆதி, வெளியே போக வேண்டும் என்று கதவைத் தட்டி

    ஆர்ப்பாட்டம் செய்ய,

    விசாலம் தூக்கிக்கொண்டு வெளியே போனாள்.

    ரூபா உள்ளே வந்து துணி தோய்க்கும் வேலையில் இறங்கினாள்.

    இது அழகான குடும்பம்.

    வாசுதேவனுக்கு ரயில்வேயில் வேலை. ரிடையராக மூன்றே வருடங்கள். அவரது மனைவி விசாலம். குடும்பத்தலைவி!

    இரண்டே பிள்ளைகள்.

    மூத்தவன் செல்வம்! தனியாரில் அதிகாரி. நல்ல சம்பளம். அவனுக்கு கல்யாணமாகி இரண்டே வருடங்கள் அவன் மனைவி ரூபா! அரசாங்க பள்ளியில் டீச்சர்!

    அடுத்தது மகள் - தர்ஷினி! செல்வத்தின் தங்கை! அவளது கணவன் சாரதி!

    சாரதியின் பெற்றோர் அவனது அண்ணனுடன் வெளி நாட்டு வாசம். சகோதரிகளும் வெளியூரில்! சாரதி - தர்ஷினி இங்கே தனிக் குடித்தனம்!

    ஆனாலும் பாதி நாட்கள் அம்மா வீட்டில்தான் தர்ஷினி இருப்பாள்.

    விசாலம் ஒரு நல்ல தாய் - நல்ல மாமியார் - மருமகள் தலையில் சகலமும் சுமத்தி வேலை வாங்கும் கொடுமைக்கார மாமியார் அல்ல - ரூபா சுதிந்திரமாக வாழும் பெண்.

    அதே நேரம் மகள் மேல் வெறி கொண்ட தாய் விசாலம்!

    அவளுக்காக புருஷனை வெட்டிப் போடச் சொன்னால்கூடத் தயங்கமாட்டாள். மகளின் மேல் பைத்தியம்.

    இது குடும்பத்தார் மத்தியில் பெரிய சர்ச்சைக்கு ஆளாகி, விசாலம் பல உறவுகளை இழக்க வேண்டி வந்தது.

    அதைப் பற்றி விசாலம் கவலைப்படவில்லை.

    எனக்கு என் மகள் தான் உசத்தி!

    இது ரூபாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மகள் மேல் வெறியிருந்தாலும் மருமகளை விசாலம் நன்றாகவே நடத்தினாள்.

    மகள் தர்ஷினி மாநில அரசாங்க உத்யோகம் - கணவன் சாரதி ஐ.டியில வேலை.

    மூன்று வருடங்களாக தர்ஷினிக்கு பிள்ளையில்லாமல் தவமிருந்து, பல கோயில்களைச் சுற்றி ஒன்றுக்கு மூன்று டாக்டரைப் பார்த்து, சகல சிகிச்சைகளையும் தொட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1